ஜிமெயிலில் இத்தகைய இமெயில்களின் முகவரிகளுக்கென மற்ற தளங்கள் தருவது போல பிளாக் லிஸ்ட் வசதி இல்லை. இருப்பினும் அவற்றை எப்படி தடை செய்வது என இங்கு காண்போம். நீங்கள் இத்தகைய மெயில்களுக்கென ஒரு பில்டர் தயாரிக்க வேண்டும். இதற்கு உங்கள் அக்கவுண்ட் மூலம் ஜிமெயிலுக்குச் செல்லவும். நீங்கள் எந்த இமெயில் முகவரிகளிடமிருந்து, மின்னஞ்சல்களைப் பெற விரும்பவில்லையோ, அவற்றின் முன் ஒரு சிறிய டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அடுத்து திரையின் மேலாக உள்ள More Actions என்ற பகுதியில் கிளிக் செய்திடவும்.இங்கு Filter Messages like these என்ற இடத்தில் பின்னர் கிளிக் செய்திடவும். உடன் create filter என்ற விண்டோ காட்டப்படும். நீங்கள் தடை செய்திட விரும்பும் மின்னஞ்சல் முகவரிகள் அனைத்தும் From பீல்டில் இருப்பதனைப் பார்க்கலாம். அந்த மின்னஞ்சல் முகவரிகள் சரியாக உள்ளனவா என்று பார்க்கவும். நீங்கள் விரும்பினால், ஓர் இணைய தளத்திலிருந்து வரும் அனைத்து மெயில்களையும் தடை செய்திடலாம். அதற்கு @ என்ற அடையாளம் மட்டும் அமைத்து, அதன் பின்னர் தளத்தின் பெயரை அமைக்கவும். இத்துடன் மெயில் செய்தியில் சில சொற்கள் உள்ள மெயில்களையும் தடை செய்திடலாம். இதனை எல்லாம் முடித்தவுடன், அடுத்து Next Step என்ற பட்டனை அழுத்தவும். அடுத்து என்ன செயலை நீங்கள் மேற்கொள்ள விரும்புகிறீர்களோ, அந்த பாக்ஸ் முன் டிக் அடையாளத்தினை அமைக்கவும். எடுத்துக்காட்டாக, விரும்பாத இமெயில் வந்தால், உடனே அழிக்க வேண்டும் என எண்ணினால், Delete it என்பதில் டிக் அடையாளம் அமைக்கவும். இந்த முகவரிகளில் இருந்து வரும் அனைத்து மெயில்களும் உடன் ட்ரேஷ் பெட்டிக்குச் செல்லும். நீங்கள் தேர்ந்தெடுக்க Skip the Inbox, Archive it, Mark as read, Star it, Apply a label, Forward it, Send canned response, and Never send to spam என்ற பல ஆப்ஷன்கள் உள்ளன. சில வேளைகளில், சிலரிடமிருந்து வரும் இமெயில்களைப் பார்த்துவிட்ட பின்னர், அழிக்க எண்ணலாம். அத்தகைய இமெயில்கள் ட்ரேஷ் பெட்டியில் 30 நாட்கள் தங்கும். இவற்றை எல்லாம் முடித்தவுடன் Create Filter Button என்ற பட்டனை அழுத்தவும். உடனே பில்டர் செயல்படத் தொடங்கும். எவற்றை எல்லாம் தடுத்து வைத்திருக்கிறீர்கள் என்பது Settings – Filters என்ற இடத்தில் பட்டியலாகக் காட்டப்படும். உங்களுடைய விருப்பம் மாறும் போது, இந்த இமெயில் முகவரிகளில் மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
நாம் காணாமல் விட்ட பேதம் - ஆர். அபிலாஷ்
1 day ago
1 கருத்துரைகள்:
அன்பின் பிரகாஷ் - நான் ஏற்கனவே பயன்படுத்துகிறேன் - தகவலுக்கு நன்றி -= வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா