கலைஞர்:
இந்த மஞ்சத் துண்டு ஐயாவோட நாற்காலி ஆடிக்கிட்டே இருக்கு.. அனேகமா அடுத்த தேர்தலில் ஆட்சிக்கு வருவது டவுட்டு தான்..
ஜெயலலிதா:
அடுத்த ஆட்சியில் உட்காரனும், கலைஞரின் இலவசக் கொள்கையை கடைபிடிக்கனும், வர்ற லாபத்துல சசிக்கலாவுக்கும் பங்கு கொடுக்கணும்...
ஸ்டாலின்:
இவருக்கு ஏக்கமே முதல்வர் பதவி தான், அடுத்த தேர்தலில் ஜெயிச்சா அப்பா விட்டுத்தருவாரா?
மன்மோகன் சிங்:
தலைவி சோனியா இருக்க பயம் ஏன்? என்னங்க சரி தானே?
விஜயகாந்த்:
ஜெயிட்சதோ ஒரு தொகுதி, ஆனால் கேட்பதோ ஐம்பதுக்கும் மேல், இதுல துணை முதல்வர் பதவி வேற வேணுமாம், இது இவருக்கே நியாயமா?
ராமதாஸ் ஐயா:
அனேகமா கட்சியை கலைத்து விட்டு ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து ஒரு சீட் எனக்கு, இன்னொரு சீட் என் மகனுக்கு கொடுங்க என்று கெஞ்சிக் கொண்டிருப்ப்பார்.
வைகோ:
இவரு தன் கட்சியை மறந்து, மிச்ச சொச்சம் இருக்குற தொண்டர்களையும் மறந்து, பிரபாகரன் உயிருடன் வருவார் என கனவு காண்பார்.
இளங்கோவன்:
அனேகமா இவரு காங்கிரசில் இருந்து பிரிந்து அகில இந்திய அண்ணா திராவிட காங்கிரஸ் கழகம் என கட்சி ஆரம்பிப்பார்.
ராகுல் காந்தி:
என் வழி தனி வழி, என தன் போக்கில் கட்சியை வழி நடத்துவார்.
ரஜினிகாந்த்:
அடுத்த வருஷத்திலும் சூப்பர் ஸ்டாரா ஜொலிப்பார்.
கமல்:
மருதநாயகம் படத்தை எடுப்பாரா? ஆஸ்கார் அவார்டு வாங்குவாரா? பார்க்கலாம்.
விஜய்:
அண்ணா! நானும் ஒரு கட்சித் தலைவர் தான்னு போஸ்டர் அடிச்சு ஊர் முழுதும் ஒட்டுவாரு
அஜித்:
ஐயா, சாமி... அடுத்த வருசமாவது இவரு படம் எப்படியாவது ஹிட் ஆகணும் சாமி...
விக்ரம்:
யாராவது இவர வச்சு ஒரு வெற்றிப் படம் எடுங்கப்பா என கெஞ்சுவார்.
சூர்யா:
அடுத்த வருசமாவது ஒரு இன்ச் வளருவோமா? அனுஸஷ்காவுக்கு பொருத்தமா இருப்போமா?
சீமான்:
தமிழ் மக்கள் என் உயிர் மூச்சு! ஈழ மக்கள் என் நாடித் துடிப்பு!!
குஷ்பூ:
தி மு க வின் மகளிர் அணித் தலைவியாகி, கொள்கைப் பிரச்சார திமிங்கலமாக இருப்பார்.
நித்தியானந்தா:
அடுத்த வருஷம் ஒரு படம் ரிலீஸ் பண்றாரு,. ஹீரோயின் யாரு தெரியுமா? ......ஐ! இப்ப சொல்ல மாட்டேனே, படத்தை பார்த்து தெரிஞ்சுக்கங்க..
தமிழ் திரைப்பட நடிகைகள்:
நான் தான் பர்ஸ்ட்! ........நான் தான் பர்ஸ்ட்! போடி லூசு நான் தான் பர்ஸ்ட்!...
இன்னும் நிறைய பிரபலங்கள் இருக்காங்க, இப்போதைக்கு இவர்கள் மட்டும் தான்!
இன்றைய பொன்மொழி:
உன்னால் முடியும் என்று எண்ணுவதையோ அல்லது முடியும் என்று கனவு காண்பதையோ துணிந்து தொடங்கு. உனது துணிவிலேயே அறிவும், ஆற்றலும், மந்திரமும் அடங்கியுள்ளன.
இன்றைய விடுகதை:விடை அடுத்த பதிவில்....
கொலுவிலும் இருக்கும், குழந்தையிடமும் இருக்கும். அது என்ன?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:
கடலைக்கலக்குது ஒரு குருவி, கடல் ஓரம் போகுது ஒரு குருவி, செடியைத்தின்பது ஒரு குருவி, செடியோரம் போகுது ஒரு குருவி, அவை யாவை?
விடை: நண்டு, ஆடு, பாம்பு
3 கருத்துரைகள்:
கார்ட்டூன்களும் ஓவியங்களும் செம அருமை... எங்கே இருந்து பிடிச்சீங்க...
@philosophy prabhakaranகார்ட்டூன்களும் ஓவியங்களும் செம அருமை... எங்கே இருந்து பிடிச்சீங்க...//
நம்ம google images இருக்க வேற எங்க போகணும்?
IVANGALAM SERNTHU TAMILNADE ILLAMA PANNPPORANGA