நம்ம தமிழ் சினிமா இன்னும் எத்தனை வருஷம் ஆனாலும், எவ்வளவு தொழில்நுட்ப விஷயங்களில் முன்னேறினாலும் கீழ்க்கண்ட விஷயங்களில் கண்டிப்பாக மாறாது.
போலிஸ் படத்துக்கு இடையிலே வரணும்ன்னா..?
ஹீரோ போலிஸ்-ஆ இருக்கணும்..
ஹீரோயின் அப்பா போலிஸ்-ஆ இருக்கணும்..
இல்லேன்னா ஹீரோ திருடனா இருக்கணும்..
ரெண்டு கதாநாயகி இருந்தா...?
ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
வெளிநாட்டுக்கு போயிடணும்..
இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.
ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...?
ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்..
ஹீரோவுக்கு தங்கச்சி இருந்தா...?
படம் ஆரம்பிச்சு 15 நிமிஷத்துலே கெட்டு போகணும்..
வில்லனை தான் லவ் பண்ணனும்..
எம்புருசன் என்னை அடிப்பார்..உதைப்பார்.. நீ யார் கேட்க அப்படின்னு
கொட்டங்கச்சி பாட்டுக்கு லீட் கொடுக்கணும்.
காமெடியன்னு ஒருத்தன் இருந்தா...?
அடி வாங்கணும்..
அடி கொடுக்கணும்..
இல்லேன்னா தத்துவமோ, மூடனம்பிக்கை ஒழிப்பு பிரசாரமோ செய்யணும்..
ஹீரோவோ ஹீரோயினோ போலிஸ்-ஆ இருந்தா..?
கையிலே பிரம்பு வச்சிருக்கணும்..
போஸ்டருக்கு போஸ் குடுக்கும் போது நம்ப கண்ண குத்தறது மாதிரி நீட்டி
காட்டணும்..
கட்டாயம் காமெடி பார்ட்டி ஏட்டாவோ கான்ஸ்டபிளாவோ இருக்கணும்.
கதாநாயகனோ, கியோ வக்கீலா இருந்தா...?
யுவர் ஆனர்.. அப்ஜெக்சன் னு சொன்னா நீதிபதி ஏத்துக்கணும்..
எதிர் வக்கீல் மரண பாயிண்ட் சொன்னா கூட தள்ளுபடி செஞ்சுடணும்..
இல்லேன்னா கோர்ட்லே முள்ளு உடஞ்ச கடிகாரம் இருக்கணும்.
கதாநாயகன் குள்ளமா இருந்தா..?
கூட ந்டிக்கிற கதாநாயகி உயரமா இருக்கணும்..
ஹை ஹீல்ஸ் போட்டுக்கணும்..
ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.
கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..?
ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்..
சக மாண்வர்களா ரெண்டு மூணு குட்டி காமெடியன்களும், வில்லனும் இருக்கணும்..
கட்டாயம் கதாநாயகியை ராகிங் பண்ற மாதிரி பாட்டு இருக்கணும்.
கதாநாயகி பணக்காரியா இருந்தா..?
திமிர் பிடிச்சவளா இருக்கணும்..
புடவையை தவிர மத்த எல்ல ட்ரெஸ்ஸும் போடணும்..
கடைசியிலே ஹீரோ கால்லே விழுந்து மன்னிப்பு கேட்கணும்..
31 கருத்துரைகள்:
சுடச்சுட வடை!
ஹீரோ பதிவரா இருந்தா?
செங்கோவி said...
சுடச்சுட வடை!//
அர்த்த இராத்திரியிலும் வருவமில்ல...
எனக்கு சுடச் சுட நெய் தோசை வேணும்.
@செங்கோவி
///சுடச்சுட வடை!///
எடுதுக்கய்யா உனக்கில்லாமலா
ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.//
அவ்......................முழங்கால் மடக்காமல் இருந்தால்.................
மேல சொல்ல வெட்கமா இருக்கு சகோ.
@செங்கோவி
//ஹீரோ பதிவரா இருந்தா?///
ஒவ்வொரு பதிவும் கவர்ச்சியா, பில்டப்போட இருக்கும்
எங்கள் தமிழ்ச் சினிமானின் எல்லாக் கோணங்களிலும் வெளியான படங்களையெல்லாம் அலசி ஆராய்ந்து, கடித்துக் குதறி விட்டீர்களே சகோ...
எப்போது தான் இவங்க எல்லாம் வித்தியாசமா சிந்திக்கப் போறங்களோ தெரியாது...
இன்னொரு மேட்டரைத் தவற விட்டிட்டீங்களே சகோ.
ஒரு படத்தில் ஐந்து பாடல்கள் இருக்க வேண்டும்.
ஒரு குத்துப் பாட்டு, ஒரு தத்துவப் பாட்டு..அப்புறமா டூயட் பாட்டு...
@நிரூபன்
///செங்கோவி said...
சுடச்சுட வடை!//
அர்த்த இராத்திரியிலும் வருவமில்ல...
எனக்கு சுடச் சுட நெய் தோசை வேணும்.///
நான் என்ன நைட்ல டிபன் கடையா தொறந்து வச்சிருக்கேன்...ஹி..ஹி..
தமிழ்வாசி - Prakash said...
@நிரூபன்
///செங்கோவி said...
சுடச்சுட வடை!//
அர்த்த இராத்திரியிலும் வருவமில்ல...
எனக்கு சுடச் சுட நெய் தோசை வேணும்.///
நான் என்ன நைட்ல டிபன் கடையா தொறந்து வச்சிருக்கேன்...ஹி..ஹி.//
அப்ப சூடா ஒரு டீ வேண்டும் சகோ.
@நிரூபன்
///ஆனா பாட்டு சீன் பூரா முழங்கால் மடக்கிக்கிட்டே ஆடணும்.//
அவ்......................முழங்கால் மடக்காமல் இருந்தால்.................
மேல சொல்ல வெட்கமா இருக்கு சகோ.///
அய்யே....வெட்கத்த பாரு
இப்போ மதுரையில் அழகர் திருவிழா தானே.. அப்போ எனக்கு கச்சான் வாங்கி பாக்கட் பண்னி அனுப்பி வையுங்க.
@தமிழ்வாசி - Prakash//ஒவ்வொரு பதிவும் கவர்ச்சியா, பில்டப்போட இருக்கும்// அவ்வ்..இன்னும் இருந்தா கும்மிருவாங்க..கிளம்புறேன்!
தமிழ் சினிமாவ BACKUP எடுத்து ஆராய்ந்து எழுதியுள்ளிர்கள் ;செம கலக்கல்
இவ்ளோ மேட்டரும் இருந்தே படம் ஓட மாட்டேங்குது.......!
நண்பா. பெயர்க்காரணம் தொடர் பதிவுக்கு அழைத்திருக்கேன்..பாத்திருப்பீங்கன்னு நினைக்கேன்..http://sengovi.blogspot.com/2011/04/blog-post_20.html
தமிழ் சினிமாவின் அடையாளமே இதுதான்..
19..
20.. வடை..
சக்சஸ் சக்சஸ்..........
ஹா ஹா ஹா ஹா ஹா ஹா தமிழ்மணத்தில் ஓட்டு போட்டுட்டேம்லேய் மக்கா...ஹா ஹா ஹா......சக்சஸ் சக்சஸ்....
இன்னைக்கு எல்லா மக்காவுக்கும் தமிழ்மணத்துல ஓட்டு போடுரதுதான் என் வேலை ஹே ஹே ஹே ஹே...
//கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..? ப்ரின்சியோ, லெக்சரரோ காமெடியனாத்தான் இருக்கணும்//
சின்னி ஜெயந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி கண்டிப்பா இருக்கணும்.
aஅருமையான ஆராய்ச்சிக்கு டாக்டர் பட்டம் கொடுக்க எந்த பல்கலைக்கழகம் காத்திருக்கிறதோ! பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும்.
காமெடி டாக்டர் பிரகாஷ் வாழ்க..
\\ஹீரோ ரெட்டை வேடமா இருந்தா...?
ரெண்டு பேரும் அடிச்சுக்கற மாதிரி சண்டை காட்சி இருக்கணும்..
ரெண்டு பேரும் கடைசியிலே வில்லனை வெளுக்கணும்..
இல்லேன்னா அதிலே ஒருத்தன் புண்ணாக்கா இருக்கணும்.. \\ இருவரும் எப்படியோ சிறு வயதிலேயே பிரிந்து போய் விடுவார்கள். அவங்களுக்குன்னு ஒரு குடும்ப பாட்டு இருக்கும், அதைப் பாடியதும் ஒண்ணா செர்ந்திடுவாங்க. இல்லைன்னா காணாமல் போன ஒருத்தனுடன் ஒரு கழுத்தில் அணியும் டாலரோ, அங்க அடையாளமோ இருக்கும், அதை வைத்து மற்றவன் கண்டுபிடித்து கட்டிப் பிடித்துக் கொள்வான்!!
//ரெண்டு கதாநாயகி இருந்தா...?
ஒருத்தி வில்லன் குண்டுக்கோ, கத்திக்கோ க்ளைமாக்ஸ்-லே இரையாகணும்..
வெளிநாட்டுக்கு போயிடணும்..
இல்லேன்னா சாமியாரா/துறவியா/ கன்னியாஸ்திரீயா போயிடணும்.// சமீபத்தில் வந்த உன்னாலே...உன்னாலே படத்தில் கூட சதா வேறு யாரையும் திருமணம் செய்துகொள்ள வில்லை. [எம்ஜிஆரு படங்களில் இரண்டு நாயகிகள் இருந்தால், ஒருத்தியுடன் நிஜத்தில் கட்டிப் பிடித்து காதலிப்பார், இன்னொருத்தியை கனவில் கட்டிப் பிடித்து அவள் இவரைக் காதலிப்பாள், இவர் நிஜத்தில் காதலிக்க மாட்டார், "எல்லாம்" பண்ணிவிட்டு படத்தின் கடைசியில் அண்ணா என்று கத்திக் கொண்டே ஓடி வந்து [அப்பவும்!] எம்ஜியாரைக் கட்டிப் பிடித்துக் கொள்வார். ]
\\கதாநாயகன் காலேஜ் மாணவனா இருந்தா..? \\ பெயிலாகி விட்டால் அடுத்த வருஷமும் அதே வகுப்பில் படிக்க வேண்டி வரும் என்ற அர்த்தத்தில் காமேடியனைக் கிண்டல் பண்ணிக் கொண்டிருப்பார் நாயகன்!! [இது எந்தக் கல்லூரியில் நடைக்கிறதோ தெரியவில்லை.
\\கதாநாயகி பணக்காரியா இருந்தா..? \\ கதாநாயகன் சைக்கிள் ரிக்க்ஷா ஒட்டுபவனாகவோ, மூட்டை தூக்குபவனாகவோ தான் இருப்பான், இருந்தும் கதாநாயகி அவனையே விரட்டி விரட்டி காதலிப்பாள்!!.
தமிழ் சினிமாவை புட்டு புட்டு வச்சிருக்கீங்க...!! உன்னிப்பா கவனிச்சிருக்கீங்க, அத்தனையும் சூப்பர்!!
செம காமெடி.
ya its absolutely correct.this is now the trend of tamil cinema
நல்லாத்தான் யோசிக்கிற தம்பி...குட்.......