தி.மு.க.,வின் தேர்தல் தோல்வி பற்றி கருணாநிதி ஒரு அறிக்கையில் "என் மீதும், என் குடும்பத்தினர் மீதும், வஞ்சனையாளர்கள் பழி தீர்த்துக் கொண்டதன் விளைவு' என சொல்லியிருக்கிறார். "திராவிட இயக்கம் தழைத்த இடத்தில், தருப்பைப் புல்லை முளைக்கச் செய்யும் முயற்சி இது' என்கிறார். எழுபது ஆண்டு கால அரசியல் அனுபவத்தால் கலைஞர் கற்ற பாடம் இதுதானா?
ஓட்டுப் போட்டவர்கள் மக்கள். அவர்களா வஞ்சனையாளர்கள்? இவர் மீதும், இவர் குடும்பத்தினர் மீதும், வாக்காளர்களுக்கு அப்படி என்ன பகை, விரோதம் இருக்க முடியும்? நீங்களே சொல்லுங்கள் மக்களே... கலைஞருக்கு எதிராக ஓட்டு போட அவரின் இலவசங்கள் நம் கண்ணை திறக்க வில்லை. மின்சாரம் இல்லாத இருட்டு தான் நம் கண்ணை திறந்துள்ளது. விலை வாசி உயர்வு வேறு தலைமையை தேட சொல்லியது. அவர் குடும்பத்தார் செய்த ஊழல்கள் குக்கிராம மக்கள்களையும் விழிப்படைய செய்தது. இத்தனை வஞ்சனைகள் செய்தது கலைஞர் அரசு. நாம் அழிக்கவில்லை தி.மு.க வை, அவர்களின் அளவுகடந்த ஆசை அவர்களை அழிய வைத்தது.
உண்மையைச் சொன்னால், மகாத்மா காந்தியோடு, உண்மையான காங்கிரஸ் இயக்கம் அழிந்து விட்டது. ஈ.வெ.ரா.,வின் திராவிட இயக்கத்தின் உயிர் முச்சு அடங்கிப் போய்விட்டது. அண்ணாதுரையுடன் அறிவில், தமிழன் யாருக்கும் இளைத்தவன் அல்ல என்ற தத்துவம், மங்கி மடிந்து விட்டது.
இப்போது கலைஞருக்கு ஆதரவாக இருந்தது நியூட்டனின் மூன்றாவது விதி. "பார் எவ்வெரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ் ஆன் ஈக்குவெல் அண்ட் ஆப்போசிட் ரியாக்ஷன்' என்பது தான், நியூட்டனின் மூன்றாவது விதி. வினை விதைத்தவர் வினை அறுப்பர்; தினை விதைத்தவர் தினை அறுப்பர்; இது தான் இயற்கை நியதி.
23 கருத்துரைகள்:
மொத வட எனக்கா?
ரைட்டு..
அவர விடுங்கப்பா ரேஸ்டு எடுக்கட்டும்
இப்போது கலைஞருக்கு ஆதரவாக இருந்தது நியூட்டனின் மூன்றாவது விதி. "பார் எவ்வெரி ஆக்ஷன், தேர் இஸ் ஆல்வேஸ் ஆன் ஈக்குவெல் அண்ட் ஆப்போசிட் ரியாக்ஷன்' என்பது தான், நியூட்டனின் மூன்றாவது விதி. வினை விதைத்தவர் வினை அறுப்பர்; தினை விதைத்தவர் தினை அறுப்பர்; இது தான் இயற்கை நியதி..
ம் இயற்கையின் தீர்ப்புக்கு எவரும் தப்பமுடியாது!
எவ்வளவு ஊழல் செய்தாலும் அதிலிருந்து விடுப்படும் வழியையும் கலைஞர் அறிவார்...
தற்போது வயதாகி விட்டதால் எல்லாம் கைமீறிப் போய்விட்டது...
கடைசி காலத்தில் பாவங்க அவரு...
அது S.J. சூர்யா நடிச்ச படமாச்சே அதை தெரிஞ்சுக்குன்னு அவரு என்னங்க பண்ணப்போகிறார்...
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
ஓட்ட வடை உங்களுக்கே
@!* வேடந்தாங்கல் - கருன் *!
ரைட்டு...
@கவிதவீதி>
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..
தமிழ்வாசி ப்ரகாஷமாகச் சொல்லும் எந்தவிதியும் சரியாகத்தான் இருக்கும்.
இவ்வளவு பட்டும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே...
முடிந்தது முடிந்ததே. பாவம் விட்டுடுங்க. தமிழ்நாட்டிலும் டெல்லியிலும் நாம் கவனிக்க எவ்வளவோ விஷயம் இருக்கு. வயசானவரையே எத்தன அடிதான் அடிப்பீங்க. திமுக என்ற பலம் வாய்ந்த மிகப்பெரிய கட்சியையே இல்லாமல் போகச்செய்த பெருமை காங்கிரஸ், ஆற்காடு வீராசாமி , கனிமொழி 3வரையே சேரும்.
நல்ல அலசல்..
@வை.கோபாலகிருஷ்ணன்
ஐயா... உள்குத்து ஒன்னும் இல்லையே!
@NKS.ஹாஜா மைதீன்
இவ்வளவு பட்டும் சும்மா இருக்க மாட்டேங்குறாரே...>>>
அதெல்லாம் ரத்தத்துல ஊறினது
@கடம்பவன குயில்
ஆட்சியில இல்லைனாலும் நாம மறக்க கூடாது அண்ணி
@கடம்பவன குயில்
ஆட்சியில இல்லைனாலும் நாம மறக்க கூடாது அண்ணி
@செங்கோவி
வாய்யா செங்கோவி... பாஸ் கூட சுத்தினாயா? இல்லை உம் பையனோட சுத்தினாயா?
வினை அறுப்பர்; தினை விதைத்தவர் தினை அறுப்பர்; இது தான் இயற்கை நியதி//
அப்படிப் போடுங்க சகோ அருவாளை....
எவ்வளவு தான் ஆடினாலும், ஒரு நாளைக்கு அடங்கித் தானே தீரனும்.
கலைஞரின் பேச்சினை வைத்தே கலைஞருக்கு ஆப் அடிச்சிருக்கீங்க. அருமை பாஸ்.
இந்த விதியை அவர் படித்தாரா தெரியாது. படித்திருந்தால் இந்த தப்புகளை எல்லாம் செய்திருக்க மாட்டாரோ..!!!
இந்த விதியை அவர் படித்தாரா தெரியாது. படித்திருந்தால் இந்த தப்புகளை எல்லாம் செய்திருக்க மாட்டாரோ..!!!
மாப்ள என்னது காந்தி செத்துட்டாரா!
enough robbing public money.
\\அண்ணாதுரையுடன் அறிவில், தமிழன் யாருக்கும் இளைத்தவன் அல்ல என்ற தத்துவம், மங்கி மடிந்து விட்டது. \\இந்த ஆளோட யோக்க்யதையைத் தெரிந்து கொண்டு தான், இவர்களிடம் கட்சியை ஒப்படைத்த பெரியார், சாவியை திரும்பப் பெற்றார். பெரியார், கொள்கைப் பிடிப்பு உள்ளவர், மக்கள் நலனை மனதில் வைத்தவர், அண்ணா பதவி ஆசை பிடித்தவர், அவரால் தமிழ் நாட்டுக்கு நன்மை ஏதும் கிடைக்க வில்லை ஆனால், கருணாநிதி மாதிரி அயோக்கியத்தனம் நிறைந்த ஆளைக் கொண்டாந்து விட்டு, தமிழன் தலைமுறை தலைமுறைக்கும் சாகடித்தவர்.அந்த மாதிரி ரசியல் வாதி, தமிழன் செய்த பாவம்.