நேத்து கே டி வியில நம்ம தல படம் தீனா ஒளிபரப்புனாங்க. படத்தை பார்த்ததும் என் மனம் என் கல்லூரி நாட்களுக்கு பின்னோக்கி சென்றது. அப்போ எங்க காலேஜ்ஜே அஜித் ஃபேன்ஸ் தான். தல படம் ரிலீஸ் ஆன மொத நாள் மொத காட்சியில எங்க நண்பர்ஸ் கூட்டமும் தியேட்டருல தான் அட்டெண்டன்ஸ் போட்டோம். காலேஜ் பிகர்களும் அங்க வந்திருங்க. மத்த டிபார்ட்மென்ட் பசங்க அதுக கூட கடலை வறுத்துகிட்டு இருப்பானுக... ஹி...ஹி... நாங்க மெக்கானிகல், ஒரு பிகரும் எங்க டிபார்ட்மென்ட்ல இல்லை. வயித்தேரிச்சலோட அவிங்கள மொறைச்சோம். படத்துக்கு வந்த மத்த ஃபிகர்களை சைட் அடிச்சுட்டு கமென்ட் அடிச்சுகிட்டு இருப்போம். டிக்கெட் உள்ளே போயி எடத்த தேடி உட்கார்ந்து.... ம்ஹும்... அந்த காலமெல்லாம் வசந்த காலம் தான்.
லைலா பெப்ஸி உமாவாக அஜித்திடம்:
படம் ஆரம்பிச்சு தல என்ட்ரி சீன், தியேட்டரே அதிருச்சு எங்க கைத்தட்டல்ல... அடுத்து நக்மா கூட தல சாங், வத்திக்குச்சி பத்திக்காதுடா.... செம கலக்கல் சாங். அப்படியே லைலா என்ட்ரி... சுரேஷ்கோபி என்ட்ரி...ன்னு படம் விறுவிறு சுருசுருன்னு போகும். லைலா அஜித் மீட் ஒன்னோன்னும் ரசிக்கும் படியா இருக்கும். கடைக்காரர் காசை வாங்கி அவருக்கே தர்றது... துப்பட்டா உருவின ரவிடிகளை தல மிரட்டும் சீனில் அவருடைய டூல்ஸ்களை பார்த்து லைலா திகைத்தல், பெப்ஸி உமாவாக அஜித்தை கலாய்த்தல், அண்ணனாக தங்கையின் சிறு வயசு ஆசைகளை நிறைவேற்றுதல், லைலாவிடம் காதலை சொல்ல முடியாமல் தவிப்பதும், காதல் கனிந்த பின்னர் லைலாவின் கைவண்ணத்தை ரசித்தல்..... இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போலாம்.....
சாரி... மறந்துட்டேன், நான் படத்தின் விமர்சனம் எழுத வரல...
மொத தடவை படத்த பார்த்துட்டு மறுபடியும் பாக்கனும்னு எங்க நண்பர்ஸ் கூட்டத்துல முடிவு பண்ணினோம். ஹி...ஹி... தல படமாச்சே.....
திண்டுக்கல் சித்திரை திருவிழா ரொம்ப பேமசு. திருவிழாவில அங்கிங்கு இசைக்குழு நடத்தற மியூசிக் நிகழ்ச்சி அன்னிக்கு எங்க நண்பர்ஸ் கூட்டம் ஆஜரானது. திருவிழாவுல ராட்டணம், நொறுக்ஸ் என என்ஜாய் பண்ணிட்டு நைட் ஷோ மறுபடியும் தீனா படம் பாத்தோம். செம என்ஜாய் அப்பவும். அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு நண்பன் வீட்டில் சி டி யில பார்த்தோம். ஒரிஜினல் சி டி. பிரண்டோட ரிலேடிவ் பாரீன்ல இருந்து வாங்கிட்டு வந்திருந்தாரு. அப்புறம் அடிக்கடி டி வி ல இப்படி நிறைய முறை தீனா பார்த்தேன். மறுபடியும் நேத்தும்.... என்னமோ தெரியலைங்க தலயோட மத்த படங்களை விட தீனா படம் மேல ஒரு மோகம். அவ்வளவு தான்.
எனக்கு பிடித்த "சொல்லாமல் தொட்டு செல்லும் தென்றல்" சாங்:
தினக்கு... தினக்கு... தின தீனா... தினக்கு... தினக்கு... தின தீனா...
தினக்கு... தினக்கு... தின தீனா... தினக்கு... தினக்கு... தின தீனா...
17 கருத்துரைகள்:
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..
பிரகாசு - கொசு வத்தி சுத்தறயா - இப்பவும் தானே சாட்டில கடல போட்டுக்கீட்டு இருக்கெ - கவலய வுடு - நட்புடன் சீனா
ok!
அண்ணே பிரகாஷ் அண்ணே தீனா நல்ல படம்தாம்ன்னே....
சி.பி.செந்தில்குமார் said...
வத்திக்குச்சி பத்திக்காதுடா யாரும் வந்து உரசுற வரையில..//
அடிங் கொய்யால.......நீ பெரிய டுபுக்காடா ராஸ்கல் அங்கே வந்தேம்னா பிச்சிபுடுவேன் பிச்சி.....
விக்கியுலகம் said...
ok!//
அண்ணே விக்கி அண்ணே உங்களுக்கு சொம்பு கொஞ்சம் பலமா நசுங்கிருச்சுன்னு சொன்னாயிங்க உண்மையா...???
ம்.... நல்ல படம்....
தம்பி பட விமர்சனம் எழுதலாம் தப்பில்லை அனால் டிவியில பார்த்த படத்திற்கெல்லாம் விமர்சனம் எழுதிறியே இது கொஞ்சம் ஓவரா தெரியல ஹி ஹி
பதிவு நல்லாவே இருக்கு. இன்னும் தீனா
படம் கண்ல சிக்கலே.
நீங்களும் தல ரசிகரா?
சொல்லாமல் பாட்டு கலக்கல் மாப்ள.. எப்ப கேட்டாலும் சூப்பரா இருக்கும்..
நன்றி..
//நாங்க மெக்கானிகல், ஒரு பிகரும் எங்க டிபார்ட்மென்ட்ல இல்லை. வயித்தேரிச்சலோட அவிங்கள மொறைச்சோம்.// உலகம் முழுக்க மெக்கானிகல் பசங்க நிலைமை இதுதான் போல..ஒய் ப்ளட்..சேம் ப்ளட்.
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல்..என் காதல் தேவதையின் கண்கள்.....அடடா என்ன ஒரு வரிகள்!
என்னது அஜித் டூல்ஸைப் பார்த்த்யு லைலா மிரண்டாரா..உமக்கு லொல்லு ஓவர்ய்யா..
பதிவு நல்லாவே இருக்கு.
ஆஹா பிரகாஷ் த்லல ரசிகனா?
எனக்கும் தீனா படம் பிடிக்கும்! ஆனா நீங்க இம்புட்டு விரிவா சொல்லும்போது, நல்லாவே ரசிச்சுப் பார்த்திருக்கீங்கன்னு புரியுது!
தெளிவான வீடியோக்கள் போட்டமைக்கு நன்றி!
எனக்கு பிடித்த அஜித் படங்களில் தீனாவும் ஒன்று....
எனக்கும் தீனா பிடிக்கும்,
சொல்லாமல் தொட்டுச் செல்லும் தென்றல் பாடல்.......மிகவும் பிடிக்கும்.
நினைவு மீட்டலுக்கு நன்றி மச்சி.