நண்பர்களே, நாம் வீட்டிலோ, அலுவலகங்களிலோ கணினியுடன் பிரிண்டரையும் இணைத்து வைத்திருப்போம். கணினியில் நாம் தேவையற்ற பைல்களை நீக்கி நன்கு செயல்படும் திறனோடு வைத்திருப்போம். அதே போல பிரிண்டரையும் நன்கு பராமரித்தால் தான் நீண்ட உழைப்பு இருக்கும். பிரின்ட்டும் சரியாக வரும். பிரிண்டரை எப்படி கையாளலாம் என்பதை பற்றி காண்போம்.
- பவர் கேபிள் சரியாக பிரிண்டரில் பொருத்தப்பட்டுள்ளதா என்று சரி பார்க்கவும்.
- பிரிண்டர் சுவிட்ச் "ஆன்" செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
- பிரிண்டரில் குறித்ததை விட (பிரிண்ட் ஆகாமல்) அதிக வெற்று பேப்பர்கள் வெளியேறினால் கணினி துறைக்கு தெரியப்படுத்தவும்.
- ஒன்றுக்கு மேற்பட்ட பிரிண்டர்களை தொடர்ச்சியாக கொடுக்காமல், ஒன்று முடிந்த பின் அடுத்தடுத்து வரிசையாக கொடுத்தால் பிரிண்டர் ஜாம் ஆவதை தவிர்க்கலாம்.
- பேப்பரில் மை அதிகமாக கசிந்தால் கணினி துறைக்கு உடனே தெரிவித்து சரி செய்ய வேண்டும். இல்லையெனில் பேப்பர் வீணாகும்.
- பேப்பர் பிரிண்டரில் சிக்கிக் கொண்டால் பிரிண்டரை ஆஃப் செய்து கணினி துறைக்கு தெரியப்படுத்த வேண்டும்.
- பேப்பரை சரியாக அடுக்கி பேப்பர் ட்ரேயில் பொருத்தமாக வைக்க வேண்டும்.
- பிரின்ட்டுக்கு தேவையான பேப்பர்கள் பேப்பர் ட்ரேயில் சரியாக இருக்கிறதா என செக் செய்யவும்.
- தேவையற்ற பிரிண்டை முழுமையாக கேன்சல் செய்த பின்னரே அடுத்த பிரிண்ட் கொடுக்க வேண்டும்.
- பிரிண்டரை தொடர்ந்து உபயோகித்தால் விரைவில் வெப்பமாகி விடும். எனவே தேவைப்படும் போது மட்டும் "ஆன்" செய்து பின்னர் "ஆஃப்" செய்து விடலாம்.
- பிரின்டரின் மேலே அழகு பொருட்கள் மற்றும் இதர தேவையற்ற பொருட்களை வைக்க வேண்டாம்.
- ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினி (நெட்வொர்க்) மூலம் பிரிண்ட் கொடுக்கும் போது தடங்கல் வந்தால் கணினி நெட்வொர்க் பிரிவை அணுக வேண்டும்.
21 கருத்துரைகள்:
மாப்ள உதவிக்கு நன்றி!
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி.
தகவல் பகிர்வினிற்கு நன்றி - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பிரகாஷ்க்கு என்ன ஆச்சு? தொழில் நுட்ப்பப்பதிவா போடறாப்லயே.. ம் ம் நடக்கட்டும்
Print ...ok
எனக்கு மிகவும் பயன்படும் தகவல்கள் மிக்க நன்றி
அசத்து அசத்துலேய் மக்கா...!!!
thagavalukku nanri maapla..
marubadiyum oru hit padhivukku vaazththukkal..
கலக்கிட்டீங்க் மாப்பு..கலர் கலரா பிரிண்ட்.........
நல்ல தகவல் பிரகாஷ் தொடரவும்.
பயனுள்ள நல்ல தகவல் பகிர்ந்துகொண்டமைக்கு
நன்றி நானும் ஒரு சூடான செய்தி வைத்துள்ளேன்
உங்கள் கருத்தை தவறாமல் சொல்லிவிடுங்கள்.
நல்ல தகவல் நண்பா பேப்பரின் நிறையையும் கவனத்தில் கொள்ளவேண்டும் பிரிண்ட் எடுக்கும் போது
your blog is very useful. congrats. Venkat visit www.hellovenki.blogspot.com
good post.
பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க, சகோ.
நன்றி சகோ.
பயனுள்ள தகவலைப் பகிர்ந்திருக்கிறீங்க, சகோ.
நன்றி சகோ.
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் நண்பா...
நல்ல தகவல் சொல்லியிருக்கீங்க சகோ
கணினி பிரிண்டரை தவறில்லாமல் எவ்வாறு கையாளலாம்?
ப்ரிண்டர் வாங்கும் எண்ணம் இருந்ததால் நல்ல உபயோகமாகமான தகவல்....( ஒரு சந்தேகம்...கணிணி துறை என்று சொல்கிறீர்களே ... விளக்கம் pls)
frindly,
M.Rajesh
maayaulgam-4u.blogspot