CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கதை கேளு கதை கேளு... பாட்டி சொன்ன கதை கேளு! பாகம்-1

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
     
    ஒரு ஊருல  ஒரு சிற்பி  இருந்தானாம். அவன்  பாறைகளை  அழகான சிற்பமாக  மாற்றுவதில்  வல்லவன். அவன் வடிக்கும்  சிற்பங்களுக்கு  மக்கள்  மத்தியில்  நல்ல  வரவேற்பு  இருந்தது.  அன்னைக்கு  ஒரு நாள்  நல்லா வேலை  பார்த்துட்டு  இருந்தப்ப  சூரியன்  அவன்  மண்டைய  போளந்துசு. அவனால  சிலை  செதுக்க  முடியல. அப்ப அவன்  நெனச்சான், நாம  இந்த  பெரிய  மலையை  குடைஞ்சு  பாறைகள்  வெட்டி  அதை  கஷ்ட்டப்பட்டு  சிலையா  வடிக்குரோமே, நாம  தான்  பெரிய  ஆளுன்னு  நினைச்சா, இந்த  மண்டைய பொளக்கர சூரியன  பார்த்தா  அது  நம்மள  விட  பெரிய  ஆளா இருக்கும்  போல  அப்படின்னு  நெனச்சு  அவன்  யோசிக்க  ஆரம்பிச்சான். 
       அப்ப  அவனுக்கு  ஒரு  யோசனை  வந்துச்சு, நம்மள  விட  பெரிய  ஆளா  இருக்கற  சூரியன   போல  தானும்  மாறணும்னு  நெனச்சு  கடுமையா  தவம்  இருக்க  ஆரம்பிச்சான் . அவன்  கடும்  தவத்தை  பார்த்து  கடவுள்  மனசு  இறங்கி, சிற்பியே  உனக்கு  என்ன  வரம்  வேண்டும்  கேள்  என  கேட்க, அந்த  சிற்பி  சொன்னான், கடவுளே, என்னோட  தவத்தை  மெச்சி  வரம்  கொடுக்க  வந்ததுக்கு  நன்றி. என்  ஆசை என்னானா, நான்  அந்த  சூரியனா   மாறனும். அதுக்கு  நீங்க  வரம்  தரணும்னு கேட்டான்.  கடவுளும்  அவனோட  ஆசையை  நிறைவேற்றினார். சிற்பியும் சூரியனா  மாறி  வானத்துல  வலம் வந்தான். நம்மள  சுட்டெரிச்ச  சூரியனை  அவன்  மாறினதா நினைச்சு பெருமை  பட்டான். 
     ஒரு  நாள்  பெரிய  மேக கூட்டம்  அவனை  மறைச்சு  ரொம்ப  நேரமா  இருந்துச்சு. அவனால  மேகத்த  விட்டு  வெளியே  வர  முடியல. அப்பத்தான்  அவன்  யோசிச்சான், சூரியன்  தான்  பெரிசுன்னு  நெனச்சு  மாறினோம், இப்ப சூரியனையே  மறைக்கற  மேகம்  தான்  பெரிசு  போல  என  நெனச்சு, மறுபடியும்  தவம்  இருக்க  ஆரம்பிச்சான், கடவுளும்  மனமிறங்கி, சிற்பியே  உனக்கு  என்ன  வரம்  வேண்டும்  கேள், என  கேட்டார். அவனும்  கடவுளே  சூரியனையே  மறைக்கிற  சக்தி  மேகத்துக்கு  இருக்கு, அதனால  என்னை  மேகமா  மாத்திடுங்க  என  வரம்  கேட்டான், கடவுளும்  அவனை  மேகமா  மாத்திட்டார்.  அவனும்  மேகமா  மாறி வானத்துல  வலம்  வர  ஆரம்பிச்சான், அப்ப  ஒரு  நாள்  மேகமா இருந்த அவனை நாசமாக்க ஒரு பெரும் சக்தி வந்தது? அது என்னான்னா.......
தொடரும்...
டிஸ்கி: இந்த கதை என் சிறு வயதில் என் பாட்டி சொன்ன கதை. 


38 கருத்துரைகள்:

செங்கோவி said... Best Blogger Tips

முதல் வடை இனித்ததே..

செங்கோவி said... Best Blogger Tips

//ஒரு ஊருல ஒரு சிற்பி இருந்தானாம்.// பதிவோட சிற்பி நீங்க தானே.

செங்கோவி said... Best Blogger Tips

// சூரியன் அவன் மண்டைய போளந்துசு. // உதய சூரியனையா சொல்றீங்க? ஓஹோ, உங்களுக்கும் போன ஆட்சி பிடிக்கலியா..ரைட்டு.

செங்கோவி said... Best Blogger Tips

//சூரியன் தான் பெரிசுன்னு நெனச்சு மாறினோம், இப்ப சூரியனையே மறைக்கற மேகம் தான் பெரிசு போல என நெனச்சு...// மேகம் யாரு.....ஆங், சூப்பர் ஸ்டாரு. சரி, அப்புறம்?

செங்கோவி said... Best Blogger Tips

ஆனாலும் அவரு அரசியலுக்கு வரலை..பிரகாஷ் ஏமாந்துட்டாரு..அப்புறம் என்னாச்சுன்னா..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
ஓஹோ, உங்களுக்கும் போன ஆட்சி பிடிக்கலியா..ரைட்டு.>>>>

நீதிக்கதையில ஏன்யா அரசியலை நுழைக்கிறீர்...

செங்கோவி said... Best Blogger Tips

//அவனை நாசமாக்க ஒரு பெரும் சக்தி வந்தது?// அய்யய்யோ...புர்ச்சித் தலைவியைவா சொல்றீங்க? போச்சு..ஆட்டோ கன்ஃபார்ம்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
சூரியனையே மறைக்கற மேகம் தான் பெரிசு போல என நெனச்சு...// மேகம் யாரு.....ஆங், சூப்பர் ஸ்டாரு. சரி, அப்புறம்?>>>

பதிவை போட்டுட்டும் இன்னும் ரஜினியை மறக்கலியா?

செங்கோவி said... Best Blogger Tips

//டிஸ்கி: இந்த கதை என் சிறு வயதில் என் பாட்டி சொன்ன கதை. // அவன் அவன் எப்படில்லாம் டிஸ்கி போடறான், இவரைப் பாருங்க..18 வயசு ஃபிகருக படிக்க வேண்டாம், மீசை முளைக்காத ஆம்பிளைகளும் ஆசை நரைக்காத தாத்தாக்களும் படிக்க வேண்டாம்..--இப்படில்லாம் டிஸ்கி போடும்யா..நம்ம கூடச் சேர்ந்தும் பிரகாஷ் டெவலப் ஆகுற மாதிரி தெரியலியே.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
அவனை நாசமாக்க ஒரு பெரும் சக்தி வந்தது?// அய்யய்யோ...புர்ச்சித் தலைவியைவா சொல்றீங்க?>>>>

உங்க கதையை தனியா அரசியல் கதைன்னு எழுதிரலாம்.

செங்கோவி said... Best Blogger Tips

//நீதிக்கதையில ஏன்யா அரசியலை நுழைக்கிறீர்// பாஸ், நான் சீரியஸா குறியீடு கண்டுபிடிச்சுக்கிட்டு இருக்கேன்.டிஸ்டர்ப் பண்ணாதீங்க.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
சாரி... லீலைகளின் மன்னன் நீங்க... உங்களுக்கு இந்த கதை சரிபட்டு வராது.

செங்கோவி said... Best Blogger Tips

எதை வேணா பொறுத்துக்குவேன்..ஆனா எழுத்துப்பிழையை மட்டும் என்னால பொறுத்துக்க முடியாது..முதல்ல திருத்துங்க: Priyamudan - இதுல தேவையில்லாம ஒரு எம் சேர்ந்திருக்கு.

செங்கோவி said... Best Blogger Tips

//தொடரும்...// பார்றா..பார்றா..ஹூம், கலிகாலம்கிறது இதான்.

Anonymous said... Best Blogger Tips

என்னது...மழையா? இல்லை காற்றா?

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
Priyamudan - இதுல தேவையில்லாம ஒரு எம் சேர்ந்திருக்கு.>>>>

நீங்களா யோசிச்சிங்களா? உமக்கு இப்படிதான் தோணும்...

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் பாஸ், உங்களுக்கு தூக்கம் வராது நீங்க நைட் எல்லாம் விழித்திருக்கிறீங்க என்பதை அறிந்த பாட்டி....

இப்படிக் கதை சொல்லியா இப்போவெல்லாம் உங்களைத் தூங்க வைக்கிறா.

நிரூபன் said... Best Blogger Tips

அடடா, நம்ம பிரகாஷோட பாட்டி, நன்றாகத் தான் தத்துவக் கதை சொல்லி, யார் பெரிது என்பதை விளங்கப்படுத்தி. பிரகாஷை தூங்க வைக்கிறா என்று நினைக்கிறேன்.

J.P Josephine Baba said... Best Blogger Tips

கொடுமையடா சாமி.... என்ன சின்னத் திரைக்கு கதை எழுதுவதாக நினைப்போ??

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

>>செங்கோவி said...

//டிஸ்கி: இந்த கதை என் சிறு வயதில் என் பாட்டி சொன்ன கதை. // அவன் அவன் எப்படில்லாம் டிஸ்கி போடறான்,


அண்ணன் நம்ம மேல செம காண்டா இருக்கார் போல.. ஹி ஹி

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

யோவ் பிரகாஷ்.. ரொம்ப நல்லவரா நீரு?அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said... Best Blogger Tips

ஹிஹி பாட்டி கதையா???நானு தாத்தா கதை எழுதப்போறேன்!!

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

நீதிக்கதைக்குப் பாராட்டுக்கள்.

Unknown said... Best Blogger Tips

கதை சொல்லும் மாப்ளைக்கு..........................................................................நன்றி ஸ் ஸ் முடியல!

கடம்பவன குயில் said... Best Blogger Tips

எப்பவுமே அலைபாயுற மக்கள் மனசுக்கு ஒன்றைவிட ஒன்று பெட்டராகத்தான் தோன்றும். அதுதான் நிலையில்லாத மனித மனத்தின் பேராசை. தொடருங்கள்...

கவி அழகன் said... Best Blogger Tips

அது என்னென்னா காத்து தானே

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

nalla paati machchi unakku..
kathai yellaam solli irukkaanga..

Yaathoramani.blogspot.com said... Best Blogger Tips

கதை படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
இன்னும் கொஞ்சம் சேர்த்தே பதிவிட்டிருக்கலாம்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து...

சாகம்பரி said... Best Blogger Tips

பாட்டி கதைகள் எல்லாமே அருமையானவைதான். நினைவூட்டலுக்கு நன்றி (எனக்கு முடிவு தெரியுமே!)

cheena (சீனா) said... Best Blogger Tips

பிரகாசு - முப்பது மறுமொழிகளா - அது சரி - ஆமா மறு மொழி போட்டா ஏதாச்சும் கொடுக்கறியா என்னா ? பாட்டி நல்ல பாட்டி போல - கத எல்லாம் சொல்லிப் பேரனத் தூங்க வச்சிருக்கு

சசிகுமார் said... Best Blogger Tips

கதை சுவாரஸ்யமா இருந்தது அதுக்குள்ள தொடரும் போட்டுடீயே நண்பா. மீதி கதை இன்னிக்கி மாலையே போடு நாளை வர தாங்க முடியாது.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

பாட்டிக்கதை கேட்டாச்சி..

கோகுல் said... Best Blogger Tips

பாட்டி சொன்ன கதை பார்ட்-2 ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்

Unknown said... Best Blogger Tips

பாட்டி வடை சுட்ட கதை கேட்டிருக்கேன் இந்தகதை கேக்கல
ஆனா, மெகா தொடரா...?

புலவர் சா இராமாநுசம்

vidivelli said... Best Blogger Tips

ஆகா பாட்டிக்கதை இனிக்குது கருத்துக்களோடு....
அச்சாப்பாட்டி கதையெல்லாம் சொல்லுறா,,,,
அப்ப நீங்கலும் அச்சாதான்..எங்களுக்கு சொல்லுறதால,,,hahaha!!!!

Mahan.Thamesh said... Best Blogger Tips

அண்ணே அருமையான கதை . பாட்டி சொன்னத இவ்வளவு காலமா நினைவு வச்சிருக்கிங்க

Anonymous said... Best Blogger Tips

கதை சுவாரஸ்யமாக இருக்கிறது...பார்ட்-2 ஆவலுடன் எதிர் நோக்குகிறோம்

மாய உலகம் said... Best Blogger Tips

பாட்டி சொன்னத...இப்ப நீங்க சொல்லியிருக்கீங்க...
நல்லாருக்கு..

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1