இனி எந்தக் காலத்திலும் யாருடனும் பாமக கூட்டணி வைக்கப்போவதில்லை; பாமக தலைமையில் மாற்று அணியை அமைப்போம் என்று அக்கட்சியின் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். "தமிழகத்தை ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக பாமக தலைமையில் மாற்று அணியை உருவாக்கி அதன் தலைமையில் தமிழக மக்களின் உரிமைகளுக்காக போராடுவது என உறுதி பூண்டுள்ளது.
இந்தக் கொள்கையில் ஏற்புடைய கட்சிகள், இயக்கங்கள் ஆகியவற்றுக்கு அழைப்பு விடுக்கிறோம். தமிழக உள்ளாட்சித் தேர்தலிலும், அதன் பிறகு வரும் எல்லா தேர்தல்களிலும் பாமக தலைமையிலான அணியே தேர்தலைச் சந்திக்கும் என இப்பொதுக்குழு முடிவு செய்கிறது. பாமக தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.
- மக்களின் வாக்குகளுக்கு உண்மையான மதிப்பு வழங்கும் வகையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்காக சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும்.
- தமிழக அரசு பிடிவாதத்தைக் கைவிட்டு சமச்சீர் கல்வித் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
- 69 சதவீத ஒதுக்கீடை பாதுகாக்க உச்ச நீதிமன்றத்திடம் கால அவகாசம் பெற்று சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை தமிழக அரசு நடத்த வேண்டும்.
- இலங்கையில் தனி ஈழம் அமைக்க ஐ.நா. அமைப்பின் மூலமாக பொதுவாக்கெடுப்பு நடத்த இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
- பெரிய மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், சேலம், திருநெல்வேலி, மதுரை ஆகிய 5 மாவட்டங்களை இரண்டிரண்டு மாவட்டங்களாகப் பிரிக்க வேண்டும். இவ்வாறு மொத்தம் 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
23 கருத்துரைகள்:
ஹிஹி மறுபடி ஒரு தேர்தல் கூத்தா??
இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.//
அடுத்த தேர்தல் வரைக்கும்தான்.ஹிஹி!!
ஆஹா கேக்கும்போதே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே
இப்பவே நான் இந்த அறிக்கையை நான் அவர்கள் சார்பில் தண்ணீரில் போட்டு விடுகிறேன்.
எப்பா பிஸ்கோத்து.....மாப்ள இதான் நெனப்பு வருது அந்த படத்த பாக்கும்போது ஹிஹி!
அடங்கொய்யால போவ சொல்லும்ய்யா....!!!
பொறுத்திருந்து பார்ப்போம்
ராமதாஸ்: இன்னுமாடா இந்த ஊரு நம்மள நம்பிகிட்டு இருக்கு
அன்புமணி: நம்பி இருந்தா தான் நாம 10 தொகுதியிலாவது ஜெயித்து இருக்கலாமே இப்படி மூணோட முக்காடு போட்டுக்க வேண்டிய அவசியம் இல்லையே
ராமதாஸ்: அப்ப எந்த %^%&* க்கு டா இந்த பொதுக்குழுவ கூட்ட சொன்ன சரி இரு அம்மா கால்ல போய் விழுந்தாவது உனக்கு ஒரு ராஜ்யசபா சீட் வாங்கி தரேன்
அன்புமணி: அப்பா பொம்பள கால்ல விழறியே உனக்கு அசிங்கமா இருக்காதா
ராமதாஸ் : ஹீ ஹீ அதெல்லாம் மானம் ரோசம் உள்ளவனுக்கு நமக்கு அது போய் பல வருஷம் ஆச்சே ஹீ ஹீ
அன்புமணி : அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்
//இன்னும் எத்தனை நாட்களுக்கு இவர்களின் தனிக்கட்சி கொள்கையை கடைபிடிக்கிறார்கள் என பொறுத்திருந்து பார்ப்போம்.
இது என்ன கேள்வி அடுத்த எலெக்சன்ல அம்மா தாயேன்னோ யா சாமின்னோ எங்கேயாவது போயி விழுந்துடுவாரு இந்த மானஸ்தன்...
//பாமக தலைமையிலான அணியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்கள் மிக விரைவில் வெளியிடப்படும்.//பாமக க்கு கொள்கையாவது ஒன்றாவது. ஏங்க இப்படி ஜோக்கடிக்கிறீங்க....?????
ராம் தாஸ் = ராம் தேவ் = ஸ்டண்ட்
இது இவனுங்க எப்பவும் புலம்புறதுதான்
அடுத்த தேர்தல் வரும்வரை கூட்டணி இல்லை - ராம தாஸ்
என்று என் வலையில்
டி.வியாடா நடத்துறிங்க
இவிங்க ஒரு ஆளுக் ... இன்னும் இந்த உலகம் நம்புதே
ம்ம்ம் இவர்களின் காமெடி அரசியல் ..)))
இந்த முடிவு எந்தனை நாளைக்கு....
கூட்டணி வைச்சா சவுக்கால் அடிக்கலாமா?
இதெல்லாம் அரசியல்ல சகஜமப்ப
இன்னுமா இவங்கள இந்த உலகம் நம்புது .....
லேட் ஆனாலும் வருவோம்ல..
இதுக்கு பேர் தான் அரசியல்...
தங்களின் பதிவும் நண்பரின் சசியின் கருத்தும் ...இந்த அரசியல் வாதிகளை நினைத்து சிரிப்பு தான் வருகிறது