கடந்த மாதம் 14ம் தேதி காலை எனக்கு ஒரு நம்பர்ல இருந்து போன் வந்துச்சு. ஹலோ சொன்னேன்... ஹேய்... பிரகாஷ் எப்படி இருக்க? சவுக்கியமா? வொய்ப் சவுக்கியமா? என ஒரு பெண் குரல். அடிக்கடி சாட்டிங்கில் பேசியிருப்பதால் அவரின் குரலை கேட்டவுடன் நான் கண்டுபிடித்து விட்டேன் யாரென்று? அம்மா, வணக்கம் எப்படி இருக்கீங்க? இங்க எல்லோரும் சவுக்கியமா இருக்கோம் என வழக்கமான நலம் விசாரிப்புக்கு பின்னர் அம்மா சொன்னாங்க, உங்க ஊருக்கு வரேன்... சொந்தகாரங்க வீட்டுக்கு நெல்லை போறேன். நெல்லை போற வழியில மதுரையில ட்ரெயின் நிக்கும்ல அந்த அஞ்சு நிமிஷம் தான். உன்ன பாக்கணும் போல இருக்கு வர முடியுமா? என கேட்டாங்க..
அம்மா கண்டிப்பா வரேன். அவங்க வர்ற ட்ரெயின், கோச், மதுரைக்கு வர்ற டைம் நைட் ரெண்டு மணின்னு சொன்னாங்க. அந்த வாரம் ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு நைட்12:30 க்கு வந்ததால் எனக்கு டைம் பிரச்சனையா இல்லை. ரெண்டு மாசத்துக்கு முன்னாடியே அவங்க தமிழ்நாடு வர்றதா சொல்லியிருந்தாங்க. நானும் சீனா ஐயாவும் அவங்க வர்றப்ப பார்க்க போகனும்னு ஏற்கனவே பிளான் பண்ணியிருந்தோம். சீனா அய்யாவிடம் சொன்னேன். இந்த மாதிரி அவங்க நைட் வராங்க. போகலாமா என கேட்டேன், அவர் ஓ எஸ் தாராளமா போகலாம். ரொம்ப தூரத்துல இருந்து வராங்க நாம போய் பார்த்துட்டு வரலாம்னு சொன்னார்.
நானும் ஷிப்ட் முடிஞ்சு வீட்டுக்கு வந்திட்டு ரெப்ரெஷ் ஆயிட்டு ஐயாவையும் பிக்கப் பண்ணிட்டு ரெண்டு மணின்னு சொல்லியிருந்ததால அரை மணி நேரம் முன்னதாகவே மதுரை ஜங்ஷன் வந்தோம். ஜங்ஷனில் ட்ரெயின் வரும் டைம் சார்ட்டில் அரைமணிநேர தாமதமாக வருவதாக போட்டிருந்தாங்க. நம்ம ரயில்வே எப்பதான் சரியா ஒர்க் ஆகியிருக்கு? ஒரு ட்ரெயின் வந்து நின்னினுச்சு. அந்த ட்ரெயின் கன்னியாகுமரி ட்ரெயின்னு நினைக்கிறன். அந்த நைட் நேரத்துல டிடிஆர் செக்கிங் என்னமோ தெரியல, ரெண்டு பேர் செக் பண்ணிட்டு இருந்தாங்க. ரெண்டு பசங்க அவங்ககிட்ட மாட்டிக்கிட்டாங்க. ஒருத்தன் கையில கொஞ்சம் பணத்த வச்சிக்கிட்டு அவங்களுக்கு தர முயற்சி பண்ணிட்டு இருந்தான். அவங்க அவனை திட்டி அவங்க கண்ட்ரோல் ரூமுக்கு கூட்டிட்டு போனாங்க. இன்னொருத்தன் திண்டுக்கல்ல இறங்க வேண்டியவனாம். தூக்கத்துல மதுரைக்கு வந்திட்டான். அதனால திண்டுக்கல் டு மதுரை டிக்கெட் இல்லாததால அவனுக்கு ஏதோ தொகை பைன் கட்டிட்டு போக சொன்னாங்க. அவனும் அவங்க கிட்ட ஏதோ மழுப்பிட்டு இருந்தான். அவனையும் கண்ட்ரோல் ரூமுக்கு கூட்டிட்டு போயிட்டாங்க.
இப்படியே எங்களுக்கு பொழுது போச்சு. இன்னும் ஒரு அரை மணிநேரம் ட்ரெயின் லேட்டுன்னு அறிவிப்பு வந்திச்சு. நாங்க சில விசயங்களை பேசிக்கிட்டே பொழுது போக்கினோம். தூரத்தில் ட்ரெயின் வருவதற்கான அறிகுறி தெரிந்தது. முகப்பு லைட் வெளிச்சம் தெரிஞ்சுச்சு. நாங்க அவங்க சொன்ன கோச் நம்பர் படி பிளாட்பாரத்தில் நின்னோம். ட்ரெயின் ஜங்க்சனில் நுழைந்தது. நாங்கள் அவரை பார்க்கும் ஆவலில் இருந்தோம். நாங்க நின்ன இடத்திற்கு கொஞ்சம் தள்ளி அவங்க சொன்ன கோச் நின்னுச்சு. ஒரு ஜன்னலில் எங்களை நோக்கி கைகளை ஆட்டியவாறே ஒருத்தர் இருந்தார். அவர் அருகில் சென்றோம். நாங்கள் அவரை அடையாளம் கண்டு கொண்டோம். அவர் ப்ளாக் ப்ரோபைலில் அவர் போட்டோ வைத்திருப்பதால் எங்களால் அவரை அடையாளம் காண முடிந்தது. அவரும் எங்களை அடையாளம் கண்டு கொண்டார்.
ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல....
தொடரும்...
44 கருத்துரைகள்:
பரவால்ல - பிரகாஷ் - நேரடி ஒளிபரப்பு தோத்துடும் போ - நல்வாழ்த்துகள் - நலமுடன் சீனா
மிகப் பிரமாதமாக நிகழ்வுகளை
வர்ணித்துப் போகிறீர்கள்
படிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது
தொடர்ந்து வருகிறோம்
தொடர வாழ்த்துக்கள்
போனோம்-பார்த்தோம்னு ஒரு வரில முடியற மேட்டரை வைச்சு தொடரா? எப்படிய்யா இப்படில்லாம் யோசிக்கிறீங்க?
@cheena (சீனா)
பரவால்ல - பிரகாஷ் - நேரடி ஒளிபரப்பு தோத்துடும் போ - நல்வாழ்த்துகள் - நலமுடன் சீனா>>>>
ஹா...ஹா... பாராட்டுக்கு நன்றி
@Ramani
வருகைக்கும், வாழ்த்துக்கும் நன்றி
@செங்கோவி
போனோம்-பார்த்தோம்னு ஒரு வரில முடியற மேட்டரை வைச்சு தொடரா? எப்படிய்யா இப்படில்லாம் யோசிக்கிறீங்க?>>>
இது நானா யோசிச்சேன் இல்லை...
லெட்சுமி அம்மாவ தானே சொல்றீங்க :))
தப்பா இருந்தா அடுத்த தொடர்ல கேட்ச் பண்ணிக்கிறேன்
குறை ஒன்றும் இல்லை -
லஷ்மி அம்மாதானே அவங்க.
சுவாரஸ்யமாக எழுதுகின்றீர்கள் தொடருங்கள் அடுத்த பதிவில் யாரென தெரிந்து கொள்கின்றொம்
வாழ்த்துக்கள் பிரகாஷ்.
தொடர்ந்து படிக்கிறேன்.
நடத்துங்க.... நடத்துங்க.... :-)
நல்லா கதை எழுதுறீங்க..
ஐ மீன்.. பதிவெழுதுறீங்க.
கலக்குங்க.
நல்ல நடத்துங்க ....
//ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல...//
உண்மையாகவே மறந்துட்டியா இல்ல அடுத்த பதிவு தேத்தலாமுன்னு மறச்சிட்டியா கேடி பயடா நீ...
ஆமாம் இவர் சொல்லலைன்னா எனக்கு தெரியவே தெரியாது பாரு பெரிய ராணுவ ரகசியம் ஹீ ஹீ
ஹே ஹே தமிழ்மணம் ஏழாவது ஓட்டு அண்ணன்'தேன்.....ஹி ஹி....
ஐயய்யோ என்னை காப்பி அடிச்சிட்டான் பிரகாஷ் ஹி ஹி.....
யோவ் அப்பிடியே விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை இங்கெல்லாம் இருக்கும் பதிவர்களுக்கும் சொல்ல வேண்டியதுதானே ஹே ஹே ஹே ஹே...
யோவ் அப்பிடியே விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, நெல்லை இங்கெல்லாம் இருக்கும் பதிவர்களுக்கும் சொல்ல வேண்டியதுதானே ஹே ஹே ஹே ஹே...
இன்னும் பத்து நாள்ல அண்ணனும் ஈரோடு, வழியா மதுரை வாரேன், என்னை பார்க்க வரலைன்னா அருவா நேரே வீட்டுக்கே வந்துரும் ஹி ஹி...
ஆகா... பாச இதயங்கள்! நானும் வரும் வாரம் மதுரை வருகின்றேன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு. உங்கள் அலை பேசி இலக்கம் தாங்கோ சகோதரா...மதுரை வந்து உங்களை சந்திக்கா விடில் என்ன பதிவு சகோதர்கள் நாம்.....சீனா சித்தாப்பாவிடமும் சொல்லிடுங்கோ..
பிரகாஷ் நல்லா சொல்லியிருக்கே. நீ முந்தி கிட்டே
வெளங்கிருச்சு, ம்ம்... தொடரட்டும்...!
நல்ல விஷயம்தான் .......பட் இன்னும் எத்தனை எப்பிசோடு வருமொன்கிற பயமும் இருக்கு ...!!!
?????????? ???????????? ?????????????எப்படிய்யா இப்படில்லாம் யோசிக்கிறீங்க
இப்படியா சஸ்பென்ஸ் வைப்பது ))
குறையொன்றும் இல்லை உங்களின் இந்தப்பதிவினில். வெகு அருமாயாகவே எழுதியுள்ளீர்கள். அதே தேதியில் நள்ளிரவு 12 மணிக்கு அவர்களை திருச்சி ஜங்ஷனில் மீட் பண்ணுவதாக திட்டமிட்டிருந்தும், வேறொரு முக்கிய வேலையாக நான் வெளியூர் போக நேர்ந்ததால், டெலிபோனில் மட்டும் பேசினோம்.
இரவு தூக்கம் போனாலும் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற உங்களுக்கும் சீனா ஐயாவுக்கும், பதிவர்கள் மேல் உங்களுக்குள்ள பாசத்திற்கும் அன்புக்கும் பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
யார் என்று சொல்லிவிடுங்கள் அடுத்தப் பதிவிலாவது. எல்லோருக்கும் இந்த தேவ ரகசியம் தெரியாமல் மண்டை வெடித்து விடப்போகிறது. அன்புடன் vgk
ஹலோ பிரகாஷ் ,நில்லுங்க அட நில்லுங்க ..
யாருன்னு சொல்லிட்டு போங்க .
அடடா காக்க வச்சிட்டு போய்ட்டாரே
சரி நாளைக்கு பார்ப்போம்
அருமையா கதை சொல்றீங்களே
என்ன இன்னும் ஒரு நாலு எபிசோட் போகுமா
நீங்க ரயிலுக்குக் காத்திருந்தீங்க,சரி! எங்களையும் காக்க வைக்கிறீங்களே, நியாயமா?
\\Lakshmi said..
பிரகாஷ் நல்லா சொல்லியிருக்கே. நீ முந்தி கிட்டே\\
விஷயம் வெளியில வந்திருச்சே....
அப்படியே நம்ம ஜங்கசனுக்கும் வந்து போங்க....
மாப்பிள நானும் இந்தியா வரும்போது உங்கள சந்திக்கிறேன்...
காட்டான் குழ போட்டான்..
மாப்பிள நானும் இந்தியா வரும்போது உங்கள சந்திக்கிறேன்...
காட்டான் குழ போட்டான்..
யாருங்க அந்த பதிவர்...அட சொல்லுங்க
மீட்டிங் எல்லாம் தொடரட்டும்..! :)
ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல.... //
ஓவர் குசும்பையா உமக்கு,
ak ak ak...hehe!
ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல....>
வர வர கஜினி ஆயிட்டு வர்றீங்க...
இரவு தூக்கம் போனாலும் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ...>
சஸ்பென்ஸ் வை கோ ...உடைச்ச மாதிரி தெரியுது...
ஓ... சாரி... அவங்க யாருன்னு சொல்ல மறந்துட்டேன்ல....>
வர வர கஜினி ஆயிட்டு வர்றீங்க...
இரவு தூக்கம் போனாலும் லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற ...>
சஸ்பென்ஸ் வை கோ ...உடைச்ச மாதிரி தெரியுது...
Nice.,
Mobilil comment poduvathaal template comment thaan. sorry.
குடந்தை அன்புமணி said... 33
\\Lakshmi said..
பிரகாஷ் நல்லா சொல்லியிருக்கே. நீ முந்தி கிட்டே\\
விஷயம் வெளியில வந்திருச்சே....
2 August 2011 4:37
achucho en appan kithirukkulla illiyee
ஆரம்பமே அசத்தலாக இருக்கே பாஸ்,
ப்ளான் பண்ணித் தான் மீட்டிங் வைச்சிருக்கிறீங்களோ.