CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label பெண்கள். Show all posts
Showing posts with label பெண்கள். Show all posts


தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை


வணக்கம் நண்பர்களே,

தீபாவளி நவம்பர் முதல் வாரம் வருது. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க.
மேலும் வாசிக்க... "தீபாவளியாமே - பொண்டாட்டிகள் ஜாக்கிரதை"



போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

       அனுபவத்தில், வயதில் மூத்த பெண் காரை மிக வேகமாக ஒட்டி போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக்கொண்ட போது நடந்த வேடிக்கையான உரையாடல் இது.
பெண்: என்னிடம் பிரச்சனையா?, என்ன சார் அது?
அதிகாரி: நீங்க காரை வேகமா ஓட்டிட்டு வந்திங்க. அதான் பிரச்சனை.


பெண்: ஓ... அப்படியா....
அதிகாரி: உங்க டிரைவிங் லைசன்ஸ் தயவு செஞ்சு நான் பார்க்கலாமா?


பெண்: நான் தந்திருவேன். ஆனா அது இப்போ என்கிட்டே இல்லை.
அதிகாரி: என்னது... இல்லையா? ஏன்?


பெண்: குடித்து விட்டு வாகனம் ஒட்டியதுக்காக நாலு வருசத்துக்கு முன்னாடியே அதை பறிமுதல் செஞ்சுட்டாங்க.
அதிகாரி: அப்படியா? அப்போ உங்க காரின் உரிமம், ரெஜிஸ்டர் பேப்பர்ஸ் இருக்கா? நான் பார்க்கலாமா?


பெண்: ஓ... அதுவா? அதுவும் என்கிட்டே இல்லை.
அதிகாரி: ஏன் இல்லை?


பெண்: இந்தக் காரே நான் ஒருவரிடமிருந்து திருடியது. அதான் இல்லை
அதிகாரி: என்ன? இது திருடிய காரா?


பெண்: ஆமா, இந்தக் காரோட ஓனரை நான் கடத்தி கொலை செய்துட்டேன்.
அதிகாரி: (அதிர்ந்து) நீங்க என்ன சொல்றிங்க?


பெண்: அவர நீங்க பாக்கணுமா? இந்த கார் டிக்கியில பிளாஸ்டிக் பையில அவரை கூறு போட்டு கட்டி வச்சிருக்கேன்.


(அந்த அதிகாரி அந்தப் பெண்ணுக்கு தெரியாமல் மற்ற போலீஸ் அதிகாரிகளை சைகை மூலம் கூப்பிடுகிறார். உடனே ஐந்து நிமிடத்தில் ஒரு போலீஸ் பட்டாளமே அவர்கள் பக்கத்தில் கூடுகிறது. அந்த போலீஸ் அதிகாரி நடந்த உரையாடலை மற்றொரு அதிகாரியிடம் சொல்கிறார். அவர் அந்தப் பெண்ணை நோக்கி வருகிறார்.)


அதிகாரி 2: அம்மா உங்கள் காரை நாங்க சந்தேகப் படறோம். அதனால சோதனை போடணும். வழி விடறிங்களா?
பெண்: சோதனை போடணுமா? என்ன பிரச்சனை சார்?


அதிகாரி 2: என் அதிகாரி ஒருத்தர், நீங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து, அவரை கூறு போட்டு பிளாஸ்டிக் பையில் கட்டி காரின் டிக்கியில் மறச்சு வச்சிருப்பதாக சொன்னார். அதான் சோதனை போடணும்.
பெண்: ஓ... தாராளமா நீங்க சோதனை போடலாம்.


( கார் டிக்கியை திறந்து காட்டுகிறார். அங்கே எதுவும் இல்லை. அதிகாரிகள் ஏமாற்றம் அடைகிறார்கள்.)


அதிகாரி 2: அம்மா, இது உங்கள் கார் தானா? எவிடன்ஸ் இருக்கா?
பெண்: ஆமா, என்னுடையது தான். இதோ காரின் ரெஜிஸ்டர் பேப்பர்ஸ். செக் பண்ணி பாருங்க.
(அதிகாரி பார்வையிடுகிறார். எல்லா பேப்பர்ஸ்ம் சரியாக இருந்தது)


அதிகாரி 2: உங்களிடம் டிரைவிங் லைசன்ஸ் இல்லை என அந்த அதிகாரி சொன்னார். அது உண்மையா?
(அந்தப் பெண் தன் கைப்பையில் சிறிது நேரம் தேடி அவரின் டிரைவிங் லைசன்ஸ்ஐ காட்டுகிறார். அந்த அதிகாரி அதை பார்க்கிறார். அதுவும் சரியாக இருந்தது.)


அதிகாரி 2: எனது அதிகாரி, தாங்கள் இந்தக் காரின் ஓனரை கொலை செய்து விட்டு காரை திருடிக் கொண்டு வந்ததாக சொன்னார். அதான் உங்களையும், காரையும் சோதனை செய்தோம். எல்லாமே சரியா இருக்கு. ஆனா, ஏன் அவர்கிட்ட பொய் சொன்னிங்க?
பெண்: நீங்க மட்டும் நான் வேகமா கார் ஓட்டறேன்னு பொய் சொன்னா எப்புடி ஏத்துக்க முடியும்?


       பாருங்க நண்பர்களே, வேகமா ஒட்டியதும் இல்லாம விவேகமா பேசி போலீஸ் அதிகாரிகள் கிட்டயிருந்து அந்தம்மா எஸ்கேப் ஆயிட்டாங்களே!
டிஸ்கி: 
இது ஆங்கில உரையாடல், உங்களுக்காக மொழி பெயர்த்துள்ளேன். படம் கூகிள் தேடல் மூலம் பெறப்பட்டது.

இன்றைய பொன்மொழி:
அணுகுண்டு ஒருமுறை தான் வெடிக்கும். நல்ல புத்தகங்கள் பக்கத்திற்கு பக்கம் வெடிக்கும்!

இன்றைய விடுகதை:
துடிதுடித்து இடி இடிக்கும்
சடசடவென்று படபடக்கும். அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
         மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.

முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: வாழைப்பழம்
முந்தைய விடுகதைக்கான இடுகை: 

ஷேர் ஆட்டோவும், ஹெல்மெட்டும்



மேலும் வாசிக்க... "போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)"



தீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்! - பாகம் 2

முதல் பாகம்: 

"தீபாவளி" வந்தாச்சு... கணவர்களே கவனம்!


        
சென்ற பாகத்தில்:

எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். அப்ப மனைவிகிட்ட இருந்து ஒரு வேண்டுகோள் வரும் பாருங்க, வேறென்ன வேண்டுகோள்?
நீங்க யூகிச்சதே தான்.... 

அதன் தொடர்ச்சி....
     "நல்ல ஹோட்டலா பார்த்து வண்டிய விடுங்க, ரொம்ப பசிக்குது. குழந்தைகள் பசியில வாடுது". இன்னும் வீட்டுக்கு போயி சமைச்சு சாப்பிட ரொம்ப நேரமாயிரும். டிபனுக்கு தேவையானது வீட்டுல வேற இல்லை. அதனால ஹோட்டலுக்கு போங்கன்னு சொல்லிருவாங்க. ம்ஹும், நமக்கு அப்படியே தூக்கி வாரிப்போடும். அப்புறம் என்னங்க? சொன்ன பட்ஜெட்டை தாண்டி ட்ரெஸ் எடுத்திருக்காங்க. அதுல இப்பிடி ஹோட்டலுக்கு போன கொறஞ்ச பட்சம் ஐநூறு ரூவா செலவாகும். அதெல்லாம் யோசிக்றதே இல்லை... ஹி...ஹி... நாம இப்ப யோசிச்சு என்ன பண்றது? வேற வழி இல்லாம ஹோட்டலுக்கு போனோம்னா ஆர்டர் பண்ணுவாங்க பாருங்க, விதவிதமான அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க, வீட்டுல இட்லி, தொசைன்னு சாப்பிடுறவங்க அந்த மாதிரி ஒரு அய்ட்டமே இல்லாத மாதிரி புதுசு புதுசு அய்ட்டமா ஆர்டர் பண்ணுவாங்க. எல்லாமே ரொம்ப காஸ்ட்லியா வேற இருக்கும். ம்ஹும், நாம ஜாடைமாடையா சொன்னாலும் அவங்க புரிஞ்சுக்க மாட்டாங்க. அவங்க சாப்பிடுறத பார்த்து நமக்கும் நல்லா பசிக்க ஆரம்பிச்சிரும். வேறவழி நாமளும் நிறையவே சாப்பிட்டருவோம். குழந்தைகளும் அவங்களுக்கு பிடிச்சதுன்னு நல்லா சாப்பிடுவாங்க. ஆக மொத்தம் எல்லோருமே காசை பற்றி கவலைப்படாம சாப்பிட்டருவோம். பில்லு வரும் பாருங்க ஆயிரத்தை தொட்டிருக்கும். ஆக இப்படியே தீபாவளி ட்ரெஸ் முதல் நைட் டிபன் வரை செலவு நாம போட்ட பட்ஜெட்டை தாண்டி இருக்கும். 
       வீட்டுக்கு வந்து எல்லோர் கிட்டயும் எடுத்த துணிகளை காட்டி பெருமை பட்டுக்கிருவாங்க. அப்புறம் சொல்வாங்க பாருங்க டயலாக், நான் வேணாம் வேணாம்னு தான் சொன்னேன், இவரு தான் நல்லா காஸ்ட்லியா எடுத்துக்க சொன்னாருன்னு நம்ம மேல பழியை போட்டிருவாங்க. நாமளும் அதை ஆமோதிச்சுதான் ஆகணும். 
    ரெண்டு மூணு நாள் போனதுக்கு அப்புறம் என்னங்க, என்னங்க அப்படின்னு நச்சரிக்க ஆரம்பிப்பாங்க. என்னன்னு கேட்டோம்ன்னா வீட்டுல இருக்கிறப்போ போட சாதா சேலையே இல்லை. கொஞ்சம் ரேட் கம்மியா ஒரு ரெண்டு மூணு சேலை வாங்கணும், அதனால கொஞ்சம் பணம் கொடுங்கன்னு கேட்பாங்க. வேறவழி, தந்துதான் ஆகணும் பணத்தை. அதுக்கு வேற ஒரு முறை கடைக்கு கூட்டிட்டு போகணும். அப்புறம் போன பாகத்தில் நான் சொன்னேனே, அதெல்லாம் தவறில்லாம நடக்கும். அந்த சாதா சேலைகள் எடுக்க ஒரு நாள் காலி தான்... 
          அப்பாடி ஒரு வழியா துணிமணிகள் எடுத்தாச்சு. இனி நிம்மதிதான்னு நெனச்சிட்டு இருப்போம். என்னங்க.... என்னங்க... அப்படின்னு ஒரு பீடிகை போடுவாங்க. நமக்கு இன்னும் என்ன செலவு வரப்போகுதோன்னு அடிவயிறு கலக்கும். ஆமாங்க, நம்ம வீட்டுக்கு தான் செலவு பண்றோம். தப்பில்லை. அதுக்காக ஒரு அளவு வேணும்ல... ஹி..ஹி... சரி.. சரி... என்ன பீடிகைன்னு கேட்கங்களா? வேறென்ன? சேலை சுடிதாருக்கு ஏற்ற மாதிரி வளையல், பொட்டு, கவரிங் டிஸைன் நகைகள் என வாங்கி தர்றதுக்கு தான் அந்த பீடிகையே... வேற வழி அவங்க கேட்குற எல்லாத்தையும் வாங்கித் தந்திரனும். இல்லையினா எப்படி எப்படியெல்லாம் பழி வாங்க முடியுமோ வாங்குவாங்க. ஹி..ஹி... நமக்கு நல்ல சாப்பாடு, சுத்தமான டிரஸ் போட்டுக்கிற வேணும்ல. அப்ப வாங்கிக் கொடுதிரனும். 
      அப்புறம் ஒரு வழியா எல்லாத்தையும் எடுத்துக் கொடுத்த நிம்மதியில இருப்போம். தீபாவளி வர நாலு நாள் இருக்கும் போது மறுபடியும் "என்னங்க" அப்படின்னு ஆரம்பிப்பாங்க. ஐயோ மறுபடியும் என்னங்கவா?என்ன செலவு வைக்க போறாங்களோன்னு மறுபடியும் உள்ளுக்குள்ள கலக்கம். என்ன "என்னங்கம்மா" என்ன விஷயம்னு கேட்ட உடனே அவங்க சொல்வாங்க. தீபாவளிக்கு ஸ்வீட் காரம் எல்லாம் செய்யணும். அதுக்கு மளிகை சாமான்கள் வாங்கணும். நான் லிஸ்ட் தரேன். கடைக்கு போய் வாங்கிட்டு வந்திருங்கனு சொல்வாங்க. வேற வழி அவங்க தர்ற லிஸ்ட்டை வாங்கி பொருட்கள் வாங்கித் தந்திரனும். அப்புறம் அவங்க சமையல் புக், பக்கத்து வீட்டு பெண்கள் சொன்ன பலகாரங்கள் என செலக்ட் பண்ணி இனிப்பு மற்றும் கார வகைகளை செஞ்சிருவாங்க. 
           அப்புறம் பட்டாசு வாங்கணும். நம்ம குழந்தைகளுக்கு பட்டாசு வெடிக்க பயம் இருக்கும். ஆனாலும் அதையும் காட்டிக்காம நிறைய பட்டாசுகள் வேணும்னு அடம் பிடிக்குங்க. மனைவியும் தீபாவளிக்கு இவ்ளோ செலவு செஞ்சீங்க. குழந்தைகளை அழ வைக்காதிங்க. அவங்க கேட்கறத வாங்கிக் கொடுங்கன்னு மனைவியும் சொல்வாங்க. நாம மனைவி பேச்சை தட்டாம இருப்போமா? குழந்தைகளை கூட்டிட்டு அவங்களுக்கு வேண்டியதை வாங்கி கொடுத்து அவங்களையும் சந்தோசப்படுத்தி நமக்கும் உள்ளுக்குள்ள ஒரு மகிழ்ச்சி.
     இப்படி எல்லோரையும் சந்தோஷப்படுத்தி பாக்றதுல நமக்கும் சந்தோசம் வரும் பாருங்க, அதான் உண்மையான தீபாவளி.

தொடர்ந்தாலும் தொடரும்...
டிஸ்கி: 
          மேற்கண்ட கருத்துக்களை என் பார்வையில் பதிவிட்டிருக்கிறேன். எதிர்மறையான கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பு.
மேலும் வாசிக்க... "தீபாவளி வந்தாச்சு... கணவர்களே கவனம்! - பாகம் 2"



"தீபாவளி" வந்தாச்சு... கணவர்களே கவனம்!

வணக்கம் நண்பர்களே,
       தீபாவளி இந்த மாசம் தான், இன்னும் மூணு வாரங்கள் தான் இருக்கு. இப்ப தான் சம்பளம் வாங்கி எப்பவும் போல செலவுகளை பட்ஜெட் போட்டுட்டு இருப்போம். எப்பவும் பட்ஜெட்க்கு துணையா இருக்கிற மனைவிமார்கள் இந்த மாசம் கொஞ்சம் கிராக்கி பண்ணுவாங்க. ஆமாங்க, தீபாவளிக்கு புது துணிமணிகள் வாங்கணும் தான். ஆனாலும் நம்ம வீட்டுல அதுக்குனே தனியா பட்ஜெட் போட்டு தருவாங்க. அந்த லிஸ்ட் பார்த்தாலே நமக்கு தலை சுத்திரும். அதுல பாத்திங்கனா, நமக்கு ஒரு சட்டை, ஒரு பேன்ட் அப்படின்னு லிஸ்ட் போட்டிருக்கும். ஆனா, மனைவி போட்டிருப்பாங்களே லிஸ்ட், சுடிதார், சேலை அப்படின்னு எண்ணிக்கையில ஒன்னுன்னு இருக்காது. அப்போதைக்கு மனசுல தோணின எண்ணிக்கை தான் போட்டிருப்பாங்க,  அதுலயும் ரேட் இவ்ளோல இருந்து தான் ஸ்டார்ட் பண்ணனும்னு போட்டிருப்பாங்க. அப்போ நெலமைக்கு நம்ம சம்பளமோ, வரிசையா இருக்கிற லோனோ அவங்களுக்கு தெரியாது. அவங்களுக்கு தெரிஞ்சதெல்லாம் தீபாவளி அன்னைக்கு மினுக்கணும். நம்ம மனைவி மினிக்கிரதுல நமக்கு உள்ளுக்குள்ள சந்தோசம் தான் என்றாலும், அவங்க வாங்க துணிகளை நெனச்சாத்தான் அந்த மிணுக்கள் அவசியமானு தோணுது..... 
    சரிங்க அவங்களோட பட்ஜெட்க்கு ஒத்து போயி கடைக்கு போனோம்னா, கடைக்காரன் சோர்ந்து போற அளவுக்கு தேடுவாங்க, தேடுவாங்க, தேடிட்டே இருப்பாங்க. ஒண்ணு கலர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, அப்புறம் கலர் அமைஞ்சா பார்டர் நல்லா இல்லைன்னு சொல்வாங்க, எல்லாமே அமைஞ்சா ரேட் கொறச்சலா இருக்குன்னு ஒதுக்கி தள்ளிருவாங்க. அப்புறம் ஒரு வழியா புடவை அமஞ்சிரும். அப்ப பாத்து பக்கத்துல நிக்கிற லேடி ஒரு சேலை நல்லா இருக்குன்னு சொல்லி எடுப்பாங்க, உடனே நம்ம வீடு கையில வச்சிருக்றத தூக்கி போட்டுட்டு அவங்க வச்சிருக்கிற மாதிரி இருக்கானு கடைக்காரரை கேட்பாங்க. அவரு ரெண்டு நிமிஷம் தேடிட்டு அதுமாதிரி இல்லைன்னு சொல்லிருவாரு. சரி, செலக்ட் பண்ணின புடவை எங்கேன்னு மறுபடியும் தேடினா இந்தப் பக்கத்து லேடி அதை தூக்கி பில்லு போட கொடுத்திருக்கும். அந்த நிமிஷம் நாமளும் டென்சன் ஆயிருவோம். சரிம்மா, வேற செலக்ட் பண்ணிக்கன்னு சொன்ன அடுத்த நொடி, இந்த கடையில ஒண்ணுமே இல்லை,   
       வாங்க வேற கடைக்கு போலாம்னு ஈசியா சொல்வாங்க. இப்படி பாதி நாளை ஒரு கடைக்கே செலவு பண்ணியிருப்பாங்க. சரி எனக்காவது புது துணி எடுத்துக்கலாம்னு சொன்னா போதும், எனக்கு அமையட்டும். உங்களுக்கென்ன ரெண்டு நிமிசத்துல எடுதுறலாம்னு சொல்லி நம்மள ஆப் பன்னிருவாங்க. அடுத்த கடை, மொத கடையில என்ன கூத்து நடந்துச்சோ, அதே கூத்து இங்கேயும் நடக்கும். அப்புறம் ஒரு வழியா தேடி தேடி களைச்சு போயி அதிக ரேட்டுல அரைகுறை மனசோட ரெண்டு மூணு எடுத்துக்கிருவாங்க. சரி அவ்ளோதானு நெனச்சோம்னா, அடுத்து சுடிதார் பக்கம் போயி நிப்பாங்க பாருங்க, நமக்கு தலையே சுத்தியிரும். அப்பிடி இப்பிடின்னு அதுலயும் ரெண்டு எடுத்துட்டு, அப்புறமா நம்மள பத்தி யோசிப்பாங்க. வாங்க. உங்களுக்கு டிரஸ் எடுக்கலாம்னு சொல்லி ஜென்ட்ஸ் பக்கம் கூட்டிட்டு போவாங்க. அப்புறம் செலக்ட் பண்றதுல இருந்து எல்லாமே அவங்க சாய்ஸ் தான். நாம அப்படியே எல்லாத்துக்கும் பொம்மை மாதிரி நிக்க வேண்டியது தான். எப்படியோ, நமக்கு ஒண்ணு செலக்ட் பன்னிருவாங்க. நமக்கு பிடிக்குதோ, இல்லையோ... அதெல்லாம் கேட்கவே மாட்டாங்க. ரைட்டுங்க, நமக்கு எப்படியோ ஒரு புது ட்ரெஸ் கிடச்ச திருப்தியில இருக்க வேண்டியது தான். 
     அடுத்து குழந்தைகளுக்கும் எடுக்கணும்ல? பெரியவங்களுக்கு கூட எடுத்திடலாம் போல, ஆனா குழந்தைகளுக்கு டிரஸ் ரேட் ரொம்ப அதிகமாவே இருக்கும். குழந்தைகள் விரும்பற மாதிரி எடுத்து தர்றதுக்குள்ள மனைவிக்கு ஒரு சேலையே வாங்கிரலாம், அம்புட்டு நேரம் ஆகும் பசங்களுக்கு எடுக்க. ஒரு வழியா ரெண்டு மூணு கடை ஏறி இறங்கி, கூட்ட நேரிசல்ல சிக்கி வேர்த்து விறுவிறுத்து எல்லோருக்கும் ட்ரெஸ் எடுத்துட்டு வீட்டுக்கு போலாம்னு வண்டிய ஸ்டார்ட் பண்ணுவோம். அப்ப மனைவிகிட்ட இருந்து ஒரு வேண்டுகோள் வரும் பாருங்க, வேறென்ன வேண்டுகோள்?
நீங்க யூகிச்சதே தான்.... 
தொடரும்...
டிஸ்கி: 
               மேற்கண்ட கருத்துக்களை என் பார்வையில் பதிவிட்டிருக்கிறேன். எதிர்மறையான கருத்துகளுக்கு நீங்களே பொறுப்பு.
மேலும் வாசிக்க... ""தீபாவளி" வந்தாச்சு... கணவர்களே கவனம்!"



நீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட்டிக் கொள்ள?

 அன்பே! நான் உன் அன்புக்காக மயங்குகிறேன்
அடிப்பாவி, நீயோ என் பணத்திற்காக மயங்குகிறாய்
ஆனாலும், நான் உன் மனதை மாற்றுவேன்,
ஏனெனில் உன்னை அவ்வளவு நேசித்து விட்டேன் பெண்ணே!

*************************************

மயங்கினேன் உன்னுடைய அழகில்,
இன்னும் மயங்கினேன் உன்னுடைய தங்கையின் பேச்சில்,
இன்னும் இன்னும் மயங்கினேன் உன்னுடைய அக்காவின் உபசரிப்பில்,
ஐயோ! யாரை நான் கைப்பிடிக்க?

****************************************************

பேருந்தில் ஏறினேன், என்னவள் இருக்கிறாள் என்பதால்
அடுத்த நிறுத்தத்தில் இறங்கினேன், அவள் தந்தை அருகில் இருந்ததால்
மாலையில் அவளிடமிருந்து கைபேசி அழைப்பு
வீட்டுக்கு அம்மா, அப்பாவோட வாங்க மாப்ளே என்றார் அவளின் அப்பா!

***************************************************

உன்னிடம் பேசுவதை தவிர்த்தேன்
உன்னைப் பார்ப்பதை தவிர்த்தேன்
உன்னிடம் பழகுவதையும் நிறுத்தினேன்
நீ வேண்டாமென்று, ஆனாலும்
ஏதோ, ஒன்று என்னை ஈர்க்கிறதடி பெண்ணே!

**********************************************************
இன்றைய மற்றொரு பதிவு: 

அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்



கொசுறு: இது மீள்பதிவாக மலர்ந்துள்ளது.
மேலும் வாசிக்க... "நீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட்டிக் கொள்ள?"



அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்


         தொலைக்காட்சிக்கு அடிமையானவர்கள் போதைப் பொருள்களுக்கும் அடிமையானவர்கள் போன்றுதான் நடந்துகொள்கிறார்கள். ஆனால் தொலைக்காட்சியானது போதைப்பொருளை விட கொடூரமானது என்று கண்டறியப்பட்டுள்ளது. மனிதனின் மனதை பாழாக்கி வன்முறை மீது நாட்டம் கொள்ளவைத்து நாட்டையும், சமுதாயத்தையும் அது அழிக்கின்றது. 

காலையில் "அழுது" கொண்டே தொடங்கும் பெண்களின் வாழ்க்கை இரவு உறங்கும் வரையும் முடிவதில்லை. அந்த அளவிற்கு தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நெடுந்தொடர்கள் பெண்களை கட்டிப் போட்டு, இல்லை இல்லை அடிமையாக்கி வைத்திருக்கிறது. 


   தொலைக்காட்சியானது வளர்ந்து வரும் தலைமுறையினர் மனநிலையை மட்டுமின்றி உடல் நலனையும் வெகுவாகப் பாதிக்கின்றது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் எடுத்த கணக்கெடுப்பு ஒன்றின்படி ஒரு குழந்தை ஒவ்வொருவாரமும் சராசரியாக 1680 நிமிடங்கள் தொலைக்காட்சியை பார்ப்பதில் செலவழிக்கிறது. ஆனால் தன்பெற்றோருடன் பயனுள்ள விஷயங்களைப் பேச வெறும் 40 நிமிடங்கள் மட்டுமே செலவிடுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. ஆண்டொன்றுக்கு 900 மணி நேரத்தை சிறுவர்கள் பள்ளிகளில் கழிக்கின்றனர். ஆனால் அவர்கள் 1023 மணி நேரங்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுகின்றனர். உயர்நிலைப்பள்ளியை முடிக்கும் முன்பு 19 ஆயிரம் மணி நேரத்தை அவர்கள் தொலைக்காட்சி முன்பு செலவிடுவதாக அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. 

      


இதயநோய் ஆபத்து 

        அளவுக்கதிகமாக தொலைக்காட்சி பார்ப்பதால் பள்ளி மாணவர்களால் குறைந்த பட்ச அளவு உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகளில் கூட ஈடுபட முடியவில்லை. தொலைக்காட்சிப் பெட்டியின் முன் தவம் கிடக்கும் 5 வயதில் இருந்து 8 வயதுக் குழந்தைகளுக்கு இதய நோய்களில் ஏதாவது ஒன்று தாக்கப்படும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளன. 1960 களில் இருந்த தொகையைவிட 1990 களில் மிதமிஞ்சிய உடல் பருமன் கொண்ட குழந்தைகளின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு உடல் ரீதியாக எவ்வித நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் தொலைக்காட்சிப் பெட்டிகளின் முன் முடங்கிக் கிடப்பது தான் முக்கிய காரணம் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். 


           தொலைக்காட்சியை பார்க்கும் சிறுவர்கள் தாங்கள் பார்க்கும் ஒவ்வொரு காட்சியையும் தமது ஆழ் மனதில் உள்வாங்கிக் கொள்கிறார்கள் என்றும் இதனடிப்படையில் அவர்கள் செயல்களில் இறங்குவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நிஜத்திற்கும், நிழலுக்கும் இடையே எவ்வித வேறுபாட்டையும் இவர்களால் காணமுடிவதில்லை என்றும், தொலைக்காட்சி ஏற்படுத்திய பாதிப்புகளால் வாழ்க்கை பயங்கரமானதாகவும் இருள் சூழ்ந்ததாகவும், கவலைக்குரியதாகவும் ஆகிவிடுவதாக பெருவாரியான குழந்தைகள் கருதுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 


பாதிக்கும் வன்முறை காட்சிகள் 

          18 வயதை அடைவதற்குள் ஒரு சிறுவன் தொலைக்காட்சி வழியாக இரண்டு இலட்சம் வன்முறைக் காட்சிகள் பார்த்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. சராசரியாக ஒரு குழந்தை 11 வயதை அடைவதற்குள் 8,000 கொலைகளையும் 10,000 வன்முறைகளையும் தொலைக்காட்சி வழியே பார்க்க நேரிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 36,000 பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளின்படி வன்முறையை தொலைக்காட்சியில் பார்ப்பதற்கும், செயலில் இறங்குவதற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

தவறான முன்னுதாரணம் 

                     பெரியவர்கள் சண்டை போட்டுக் கொள்வதையும், மனமுடைந்து கண்ணீர் விடுதல், கொலை, பாலியல் உறவு கொள்வது மற்றும் வன்முறைகள் போன்றவற்றை குழந்தைகள் தொலைக்காட்சிகளில் காண்கிறார்கள். பெரியவர்களின் பொறுப்பற்ற ஒழுக்கக் கேடான வாழ்க்கைகளை தொலைக்காட்சியில் மீண்டும் மீண்டும் பார்க்கும் குழந்தைகள் அவர்களை தவறுகளுக்கு முன்னுதாரணமாக்குகிறார்கள். தொலைக்காட்சியில் சித்தரிக்கப்படும் போலியான நிகழ்வுகள் உண்மையான வாழ்வில் நடப்புகளாக பசுமரத்து ஆணி போல பிஞ்சு நெஞ்சங்களில் பதிவாகின்றன. இதனால் குழந்தைகள் தங்களின் கள்ளம் கபடமற்ற தன்மையை இழக்கின்றனர். அவர்களின் எதிர்காலம் பாழ்படும் அளவிற்கு தொலைக்காட்சி வழியே நஞ்சு விதைகள் விதைக்கப்படுகின்றன என்பதே உண்மை.



      நண்பர்களே, இந்த அழுக்காட்சி தொடர்கள் பற்றி ஒரு பதிவு எழுதனும் என நிறைய நாட்கள் நினைத்திருக்கேன். ஆனால் குசும்பு டாட் காமில் தெளிவான கட்டுரையாக இருந்ததால் உங்களிடம் பகிர்கிறேன்.


இன்றைய மற்றொரு பதிவு: 

நீ, உன் அக்கா, தங்கை: அய்யோ, உங்களில் யாரை நான் கட்டிக் கொள்ள?

மேலும் வாசிக்க... "அழுக்காட்சி சீரியல்களால் போதைக்கு அடிமையாகும் குழந்தைகள்"



ASL PLEASE? யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ


      இணையத்தில் அரட்டை அடித்தல் இளையோர்களுக்கு மிகவும் பிடித்தமான விசயம். இணைய அரட்டை காரணமாக இளையோர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகி இருக்கின்ற மந்திர வார்த்தை asl plz என்பது. இதில் a என்பது age ஐயும், s என்பது sex ஐயும், l என்பது location ஐயும் குறிக்கின்றன. இளையோர்களின் இணைய அரட்டையை மையப்படுத்தி இந்தியாவில் குறும்படம் ஒன்று எடுக்கப்பட்டு உள்ளது. இதற்கு asl plz என்றுதான் பெயர் வைத்து உள்ளனர்.
     இணைய உலகில் இக்குறும்படம் பிரபலம் அடைந்து வருகின்றது. இளைஞன் ஒருவர் ஒன் லைனில் யுவதி ஒருவரை கண்டு பிடிக்கின்றார். பரஸ்பரம் இணையத்தில் கண்டு கொள்ளாமலேயே இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்து விடுகின்றது. இருவரும் இன்ரநெட் கபே ஒன்றில் சந்திக்க தீர்மானிக்கின்றனர். மிகுந்த ஆவலுடன் கபேயில் காத்து இருக்கின்றார் யுவதி.
         பல எதிர்பார்ப்புகளுடன் வந்து சேர்கின்றார் இளைஞன். ஒருவரை ஒருவர் சந்திக்கின்றமைக்கு முன்பாக இருவர் மனதிலும் எத்தனையோ எண்ணங்கள் அலை மோதுகின்றன. ஒருவரை ஒருவர் கண்டு கொள்கின்றார்கள். ஆனால் இருவரது இதயமும் சுக்கு நூறாக வெடித்து விடுகின்றது.ஏன்? என்று அறிய வேண்டுமானால் இக்குறும்படத்தை முழுமையாகப் பாருங்கள்.

Thanks: Youtube,
மேலும் வாசிக்க... "ASL PLEASE? யாரிடமும் ASL ஐ கேட்காதிங்க - வீடியோ"



பிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து? படிங்க...


         
      நொறுக்கு தீனிகள், எண்ணெய் பலகாரங்கள் அதிகமா சாப்பிட்டா என்னென்ன நோய்கள் வரும்னு சொல்லனும்னு அவசியமே இல்லை. ஆனா பெண்கள் பிஸ்கட் மற்றும் கேக்குகள் சாப்பிட்டா கருப்பை புற்று நோய் வரும் வாய்ப்பு அதிகம்னு ஒரு ஆராய்ச்சி சொல்லுது. ஒரு வாரத்துக்கு கொறஞ்ச பட்சம் மூணு தடவைக்கு மேல பிஸ்கட் மற்றும் கேக் வகைகளை சாப்பிட்டாலே புற்று நோய் வரும் அபாயம் இருபதாக இந்த ஆராய்ச்சி சொல்கிறது. 
           பிரிட்டனில் ஒரு ஆண்டுக்கு சுமார் 6400 பெண்களுக்கு கர்பப்பை புற்று நோய் வர்றதாகவும், அதுல சுமார் ஆயிரம் பெண்கள் மரணமடையரதாகவும் ஆய்வு சொல்கிறது. இந்த ஆய்வாளர்கள் பொதுவாக இனிப்புப் பண்டங்களுக்கும் புற்றுநோய் வாய்ப்பிற்கும் தொடர்புள்ளதா என கண்டறியவே ஆராய்ச்சியில் இறங்கியுள்ளார்கள். ஆனால் அதிக சர்க்கரை உள்ள இனிப்புப் பண்டங்கள், குளிர் பானங்கள், ஜாம்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளும் பெண்களுக்கு புற்று நோய் வாய்ப்பு தெரியவில்லையாம். பிஸ்கட்டுகள், பன்கள், இனிப்பு கேக்குகள் ஆகியவற்றை சாப்பிடுவதால் தான் புற்று நோய்க்கான ரிஸ்க் 42% அதிகமிருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.     
        வாரத்திற்கு 3 முறைக்கும் மேல் பிஸ்கட்டுகள் மற்றும் கேக்குகளை உண்பவர்களுக்கு புற்றுநோய்க் கட்டி ஏற்பட வாய்ப்பு அதிகமிருப்பதாகவும் இந்த ஆய்வில் கண்டு பிடிக்கபட்டுள்ளது. இன்னும் பல ஆய்வுகள் செய்ய இருப்பதாக சொல்கிறார்கள். அந்த ஆய்வின் முடிவுகள் இந்த ஆய்வுடன் ஒத்து போச்சுனா புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றே சொல்லலாம். ஆகவே பெண்களே, ஆராய்ச்சி முடிவு என்னவேனாலும் இருந்திட்டு போகட்டும். எதுக்கும் பிஸ்கட், கேக்குகள் சாப்பிடுவதை கொஞ்சம் கொறச்சுக்கங்க.
     ஸ்டாக்ஹோமில் உள்ள கரோலின்ஸ்கா இன்ஸ்டிட்யூட் ஆய்வாளர்கள் கடந்த 10 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் இந்த ஆய்வில் 60,000 த்திற்கும் மேற்பட்ட பெண்களை பரிசோதனை செய்து பார்த்ததில் இந்த உண்மை தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் வாசிக்க... "பிஸ்கட், கேக் சாப்பிட்டா பெண்களுக்கு ஆபத்து? படிங்க..."



ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)


மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.
ந்தப் பறவைகளின் பாசத்தை பாண்டியம்மாள் ஏக்கத்தோடும், ஒரு வித ஏமாற்றத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். பாண்டியம்மாள் பண்ணிரண்டு வயது நிரம்பிய சிறுமி. அவள் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். படிக்க அல்ல. வேலை பார்க்க, அவளை அரவணைக்கவும் அன்பைக் காட்டவும் அம்மா மட்டுமே இருக்கிறாள். அப்பா இல்லை. மணல் லாரி ஒட்டிக்கொண்டு இருந்த அவர் மணல் கொள்ளை முதலைகளின் போட்டியால் செயற்கையாக நடத்தப்பட்ட விபத்தில் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஓடி விட்டது.
பாண்டியம்மாள் இன்று வேலைக்கு செல்லவில்லை. சளி, இருமலோடு காய்ச்சலும் சேர்ந்து அவளை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்திருந்தது. லொக்..லொக்.. என இருமிக் கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து பறவைகளின் அன்பை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா வீட்டினுள் அடுப்பு புகையுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அந்த புகையும் அடுப்பில் ரேசன் அரிசியை அமிர்தமாக மாற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே மகளுக்கு கஷாயமும், கஞ்சியும் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள் வயக்காட்டு வேலைக்கு சென்று காசு பார்க்கிறாள். கடந்த ஒரு மாதமாக பண்டியம்மாளும் வேலைக்கு செல்கிறாள். இதனால் அவளின் படிப்பு பாதியில் நின்று போனது. வெறு வழியில்லை அவர்களுக்கு, வறுமையை வென்றாக வேண்டிய கட்டாயம்.
ஸ்,ஐஸ், பாலைஸ், கப்பைஸ் என ஐஸை கூவி கூவி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன். நம் பாண்டியமாளுக்கு ஐஸ் சாப்பிட ஆசை வந்தது. ஆசையாக அம்மாவிடம், "அம்மா...அம்மா...ஐஸ் வாங்கிக் கொடும்மா... சாப்பிடனும் போல ஆசையா இருக்கும்மா" என்றாள். "கண்ணு, தாயி, எனக்கு ஒடம்பு சரியில்லம்மா, இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் அம்மா வாங்கி தரேன்" என்றாள். வெறு வழியில்லாமல் பான்டியம்மாளும் " சரிம்மா" என்றாள். அம்மாவுக்கு ஆசைதான், மகளுக்கு ஐஸ் வாங்கி தர...ஆனாலும் அன்று அவள் வேலைக்கான கூலி கிடைக்கவில்லை. காரணம், போன மாதம் அவளுக்கு வயிற்று வலி வந்து உடம்புக்கு முடியாமல் வேலைக்கு செல்லாமல் ரெண்டு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டாள். இச்சூழ்நிலையில் தான் பாண்டியம்மாள் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தாள்.
களுக்கு ஆக்கி போடவும், தன்னுடைய மருத்துவ செலவுக்கும் வயக்காட்டு மொதலாளியிடம் கொஞ்சம் பணம் வாங்கியிருந்தாள். அந்த பணத்தை தினமும் வேலை பார்த்து கடன் அடைத்துக் கொண்டிருந்தாள். அதோடு மகளை வைத்தியரிடம் காண்பித்து மருத்துவம் பார்த்து கொண்டிருந்தாள். வைதியரோ, அவளுக்கு குடிச்ச தண்ணில கிருமி மூலமா காய்ச்சல் வந்ததாக சொல்லியிருந்தார்.
டுப்பிலிருந்த அமிர்தத்தை இறக்கி ஆற வைத்தாள். மகளுக்கு தேவையான கஷாயமும் தயார் செய்து மகளை," பாண்டியம்மா.... பாண்டியம்மா... வாம்மா...உனக்கு கஞ்சியும், கஷாயமும் செஞ்சிருக்கேன்...வாம்மா" என பாசத்துடன் அழைத்தாள். அவளும் அம்மா அருகில் அமர்ந்து மடியில் சாய்ந்து கஷயத்தையும், கஞ்சியையும் குடித்தாள். அவள் சாப்பிடுவதை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்து பெருமிதம் கொண்டாள். அவளும் கஞ்சியை வடித்து பழைய குழம்பு சேர்த்து சாப்பிட்டாள்.
களுக்கு கண் சொக்கியத்தை பார்த்ததும், "என்னம்மா? தூக்கம் வருதா? இரு பாயை விருச்சு விடுறேன்" நல்லா நிம்மதியா தூங்கு" என கிழிந்த பாயை விரித்து தன் பழைய சேலையை அதன் மேல் விரித்து மகளை தூங்க வைத்தாள். அவளுக்கு மகள் உடல்நிலையை நினைத்து கண் கலங்கினாள். எப்படி ஓடி ஆடி திரிந்தவள், இப்படி சோர்ந்து போனாளே! என நினைத்து வேதனை பட்டாள். சிறிது நேரத்தில் மகள் தலையை தொட்டு பார்த்தாள், காய்ச்சல் குறைந்திருந்தது. அந்த நிம்மதியில் அவளும் உறங்கிப் போனாள்.
றுநாள் விடிந்தது. அம்மா சீக்கிரமே எழுந்து மகளை தொட்டு பார்த்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ஆம், அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. " பாண்டியம்மா, எழுந்திரு..உனக்கு காய்ச்சல் குனமாயிருச்சு. உடம்புக்கு ஒன்னும் இல்லை" என அன்போடு தட்டி எழுப்பினாள். பாண்டியமாளும் எழுந்தாள். காய்ச்சல் இல்லாததால் அவளுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறந்திருந்தது. அவளும் விரைவாக பல் விளக்கி காலை கடன்களை முடித்து குளித்து முடித்திருந்தாள்.
"ன்ன? பாண்டியம்மா... சுடு தண்ணி வச்சு தர்றதுக்குள்ள இப்படி பச்ச தண்ணில குளிச்சிட்டியே, திரும்ப காய்ச்சல் வந்துட போகுது" என மகளை செல்லமாக அதட்டினாள். இல்லைம்மா, நீ சுடு தண்ணி வச்சுக் கொடுத்தா லேட் ஆயிரும், ஆமாம்மா...இன்னைக்கு வேலைக்கு போறேன், அதான் ஒடம்பு சரியாரிச்சுள்ள" என்றாள். தாயும் " சரிம்மா... பார்த்து கவனமா வேலைக்கு போயிட்டு வா" என சோற்றையும் கட்டிக் கொடுத்தாள். ஆனால் அம்மாவுக்கு ஒடம்பு சரியான்ன இன்னைக்கே வேலைக்கு அனுப்பறோமே என உள்ளுக்குள் அழுதாள். 
பாண்டியம்மாள், காலை சாப்பாடை சாப்பிட்டு, தூக்கு சட்டியையும் தூக்கிக்கிட்டு கிளம்பினாள் பக்கத்து ஊரிலுள்ள ஐஸ் தயாரிக்கும் கம்பெனிக்கு கால்நடையாக....
மீள்பதிவாக ...
மேலும் வாசிக்க... "ஏழ்மை - சிறுகதை (மீள்பதிவு)"



தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது...

              சூரியன் FM இல் மகளிர் மட்டும்னு பெண்கள் மட்டுமே பங்கு பெறும் நிகழ்ச்சி மதிய நேரத்தில் போடுவாங்க. அந்த நிகழ்ச்சியில் தினமும் ஏதாவது பிரச்னையை கேள்வியா பெண்கள்கிட்ட கேட்பாங்க. பெண்களும்  போன் பண்ணி அவங்களோட கருத்துக்களை சொல்வாங்க. நேத்து என்ன  பிரச்னையை எடுதுக்கிட்டாங்கனா, தங்கம் விலை இப்படி நெனச்சு பாக்க முடியாத அளவுக்கு ஏறிட்டே போகுதே? அதனால என்னென்ன விளைவுகள் வருதுன்னு டாபிக் எடுத்திருந்தாங்க, நிகழ்ச்சியில பேசியவங்க கல்யாண  சீர்வரிசை  மற்றும்  செய்முறை  செய்றதும்  பிரச்சனையா இருக்கு. அதுவுமில்லாம தங்கத்தில் முதலீடு செய்யலாம்னு நெனச்சாலும் அதன் விலையை பார்த்து மலைக்க வேண்டியதா இருக்கேன்னு பேச்சு ஓடிட்டு இருந்துச்சு. 
         ஒவோருத்தரா போன் பண்ணி ஒவ்வொரு யோசனையா சொல்லிட்டு இருந்தாங்க.  ஆனா ஒரு பெண் சொன்னாங்க தங்கம் விலையெல்லாம் ஏறிப்போச்சு. அதனால சீர்வரிசை நிறைய,  இல்லை கொஞ்சம் கொடுக்கிறது கூட கஷ்டம் தான், அதை தவிர்க்கனும்னா லவ் மேரேஜ் பண்ணிகிட்டாங்கன்னா அந்த பிரச்சனையே இல்லைன்னு சொன்னாங்க. ஆகா ஒரு பெண்ணிடமிருந்து இப்படி ஒரு கருத்தான்னு நிகழ்ச்சி தொகுப்பாளர் அசந்து போயிட்டாங்க. மறுபடியும் அவங்க சொன்னாங்க, இன்னைக்கு நிலைமையில ஒரு பொண்ணுக்கு பையனையோ, அல்லது பையனுக்கு ஒரு பொண்ணை பார்க்றதும் சிரமமான விசயமா இருக்கு. வரன் அமைந்தாலும் பொருத்தம் அமையறது இல்லை. அப்படியும் அமைஞ்சா ஏதாவது காரணம் சொல்லி தட்டிப் போயிருது. ஆக வரன் தேடுறதும் கஷ்டமான விஷயமாத்தான் இருக்கு. 
         அப்படியே கஷ்டப்பட்டு தேடி ஒரு வரன் கிடைச்சாலும் மண்டபத்தில் இருந்து சாப்பாடு, அழைப்பிதழ், பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் நகைகள் போட்டு, அப்பப்பா ஏகப்பட்ட பார்மாலிடிஸ் இருக்கு. அப்படியே செலவு செஞ்சு திருமணம் நடத்தினாலும் அதுல, இதுல என ஏகப்பட்ட குறை சொல்வாங்க... இப்படி எந்த இம்சையிலும் சிக்காம இருக்கணும்னா, தங்கம் விலையிலிருந்தும் தப்பிக்கனும்னா லவ் மேரேஜ் தான் கரெக்ட்னு அவங்க ஒரு விளக்கமே சொன்னாங்க. 
      ஹி... ஹி... தங்கம் விலையேற்றத்தை பார்த்தா ஒரு வகையில லவ் மேரேஜ்ம் ஓகே தான்னு நினைக்கத் தோணுது....



மேலும் வாசிக்க... "தங்கம் விலை ரொம்ப ஏறிருச்சா? அப்ப லவ் மேரேஜ் தான் கரெக்ட்! FM இல் ஒரு பெண் சொன்னது..."



இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!

            உங்கள் வாழ்நாளை நீட்டிக்க, ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்து கொள்வது ரொம்ப நல்லது. நோயை கண்டுபிடிக்க தாமதம் ஏற்படுவதால் தான் பல வியாதிகள் உயிருக்கு ஆபத்தை தருவதாக அமைகின்றன. ஆகவே தான் ஒவ்வொரு ஆண்டும் உடல் பரிசோதனை செய்வது தான் வருங்காலம் நலமானதாக இருக்க நீங்கள் செய்யும் முதலீடாகும்.

எந்த வயதில் என்னென்ன பரிசோதனை செய்யலாம்?

  • 2 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை பல் பரிசோதனை.
  • 3 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண் பரிசோதனை.
  • 18 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை.
  • 18 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை இரத்த அழுத்தம், இரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதனை மற்றும் பேப் ஸ்மியர் பரிசோதனை.
  • 30 வயது முதல்- ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை.
  • 30 வயது முதல் (பெண்கள்) - ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை பரிசோதனை மற்றும் மார்பக பரிசோதனை.
  • 40 வயது முதல் (ஆண்கள் மற்றும் பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கிட்னி மற்றும் லீவர் பரிசோதனை.
  • 50 வயது முதல் - ஆண்டுக்கு ஒரு முறை கண், காத்து, சிறுநீரியல் மற்றும் மூட்டு சிகிச்சை பரிசோதனை.
  • 50 வயது முதல் (பெண்கள்): ஆண்டுக்கு ஒரு முறை கண், காது, சிறுநீரியல், எலும்பு, மூட்டு. கருப்பை புற்றுநோய் பரிசோதனை.

எனவே நண்பர்களே, உங்கள் வயதுக்கேற்ற உடல் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். இதைவிட முழு உடல் பரிசோதனை செய்வது மிக மிக நல்லது.

இரத்தத்தில் உள்ள கொலஸ்டிரால் பற்றியும் தெரிஞ்சுக்கலாம்:

  • கொலஸ்ட்ரால் நமது இரத்தத்தின் ஒரு முக்கியமான பகுதி மேலும் நமது உடலுக்குள்ளேயே உற்பத்தி செய்யப்படுகிறது. உடலுக்கு தேவையான அளவை விட அதிகமாகும் போது தீங்கு விளைவிக்க கூடும்.
  • உங்கள் உடம்பில் மொத்த கொலஸ்டிரால் எவளவு உள்ளது என்பதையும் அது உங்கள் உடல்நலத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் நீங்கள் அறிய வேண்டும். அதிக அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் அதிக அளவிலும், குறை அடர்த்தி லைப்போ ப்ரோட்டின் குறைந்த அளவிலும் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
  • காய்கறிகளில் உள்ள கொழுப்புகளில் கொலஸ்டிரால் எப்போதும் இருப்பது இல்லை.
  • பல நிலை பூரிதக் கொழுப்பு, ஒரு நிலை பூரிதக் கொழுப்புகளும் கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கின்றன.

   நமது ரத்தத்தில் கொலஸ்டிரால் கூடுவதையும் கட்டுப்படுத்த வேண்டும்.
மேலும் வாசிக்க... "இந்த வயசுல நீங்க இதை செய்யலைன்னா உங்க வருங்காலம் அம்போதான்?!"



"ஐ லவ் யூ மம்மி"

   
    வீட்டுக்குள் நுழைந்த தாய்க்கு கோபம் தலைக்கேறியது. ஹால் முழுக்க வண்ண வண்ண காகிதங்கள், ரிப்பங்கள் சிதறி கிடக்கின்றன. எல்லாம் தன் ஆறு வயது மகனுடைய வேலை என்பது அவளுக்குத் தெரியும். அதற்குள் மகனே வந்து விட்டான். அம்மா இது உனக்காக நான் செஞ்சது என்று ஒரு அழகான பேட்டியை காட்டினான். என்னடா இது? என கோபமாய் கேட்டால் அம்மா. என்னோட பரிசு, பிரிச்சு பாருங்கம்மா, தாய் பிரித்தாள்.
   உள்ளே ஒண்ணுமே இல்லை. தாய்க்கு இன்னும் கோபம். பத்திரமா வைச்சுருந்த அத்தனை கலர் பேப்பர்களையும் வெட்டி வெட்டிப் போட்டிருக்க, தரையெல்லாம் குப்பை. பெட்டிக்குள்ளேயும் ஒண்ணுமே இல்லை. வெறும் பேட்டியை பரிசா கொடுப்பாங்களா? என பொரிந்து தள்ளினாள். மகன் முகம் வாடி விட்டது.
   அம்மா, அந்தப் பெட்டிக்குள் என் அன்பு அத்தனையும் வச்சிருக்கேன்மா, உன்னால கண்டுபிடிக்க முடியலையாம்மா? என அப்பாவியாய் கேட்டான். தவித்து போன தாய் மீன்டும் பெட்டிக்குள் பார்த்தாள். உள்ளே பேட்டியின் அடிப்பாகத்தில் "ஐ லவ் யூ மம்மி" என அழகாய் எழுதியிருந்தான் மகன்.
       கண் கலங்கிய தாய், மகனை கட்டியணைத்து உச்சி முகர்ந்தாள்.
எங்கோ படித்த கதை.
மேலும் வாசிக்க... ""ஐ லவ் யூ மம்மி""



விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை??



விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள். ந‌ள்‌ளிர‌வி‌ல் படு‌க்கையறை‌யி‌ல் கணவனை‌க் காணாம‌ல் ‌திகை‌க்‌கிறா‌ள் மனை‌வி.

எழு‌ந்து ‌விள‌க்கை‌ப் போ‌ட்டு‌வி‌ட்டு கணவனை ஒ‌வ்வொரு அறையாக‌த் தேடி‌க் கொ‌ண்டு வரு‌கிறா‌ள். கடை‌சியாக சமையலறை‌யி‌ல் உ‌ள்ள மேஜை‌யி‌ல் அம‌ர்‌ந்து கா‌பி அரு‌ந்‌தி‌க் கொ‌ண்டு கவலை தோ‌ய்‌ந்த முக‌த்துட‌ன் ஆ‌ழ்‌ந்த ‌‌சி‌ந்தனை‌யி‌ல் இரு‌க்‌கிறா‌ன் கணவ‌ன். 

அவனரு‌கி‌ல் செ‌ல்லு‌ம் மனை‌வி தோ‌ள்களை அழு‌த்‌தி, "எ‌ன்ன‌‌ங்க ஆ‌ச்சு. இ‌ந்த ந‌ள்‌ளிர‌வி‌ல் இ‌ங்க வ‌ந்து உ‌‌ட்கா‌ர்‌ந்‌திரு‌க்‌கி‌றீ‌ர்களே" எ‌ன்று வரு‌த்த‌த்துட‌ன் கே‌ள்‌வி கே‌ட்‌கிறா‌ள்.


அ‌ப்போது தனது மனை‌வியை ஏ‌றிட்டு‌ப் பா‌ர்‌த்த கணவ‌ன், ‌மீ‌ண்டு‌ம் தலையை கு‌னி‌ந்து கொ‌ண்டு கே‌ட்‌கிறா‌‌ன், "நா‌ம் காத‌லி‌த்து‌க் கொ‌ண்டி‌ரு‌ந்த போது ஒரு நா‌ள் உ‌ன் அ‌ப்பா‌விட‌ம் நா‌ம் மா‌ட்டி‌க் கொ‌ண்டது உன‌க்கு ‌நினை‌விரு‌க்‌கிறதா?" 

மனை‌வி, "ஆ‌ம், ந‌ன்றாக ஞாபக‌ம் உ‌ள்ளது" எ‌ன்று ‌சி‌ரி‌த்தபடி சொ‌ல்‌கிறா‌ள்.

"அ‌ப்போ அவரது கா‌ரு‌க்கு‌ள் அழை‌த்து அவரது து‌ப்பா‌க்‌கியை எ‌ன் ந‌ெ‌‌ற்‌றி‌ப் பொ‌‌ட்டு‌க்கு நேராக ‌பிடி‌த்தபடி உ‌ன் அ‌ப்பா எ‌ன்னை ‌மிர‌ட்டினாரே அது...?"

"‌ம்‌ம்‌ம் அதுவு‌ம் ‌நினை‌விரு‌க்‌கிறது..." எ‌ன்று சொ‌ல்‌லி‌க் கொ‌ண்டே நா‌ற்கா‌லி‌யி‌ல் அம‌ர்‌ந்தா‌ள் மனை‌வி. 

"ஒழு‌ங்கு ம‌ரியாதையாக எ‌ன் மகளை ‌திருமண‌ம் செ‌ய்து கொ‌ள். இ‌ல்லை எ‌ன்றா‌ல் உ‌ன்னை 20 வருஷ‌ம் ஜெ‌யி‌ல்ல போ‌ட்டுடுவே‌ன்" எ‌ன்று ‌மிர‌ட்டினாரே..

"ஆமா‌ம்.. ந‌ன்றாக ‌நினை‌விரு‌க்‌கிறது.. அத‌ற்கு எ‌ன்ன இ‌ப்போ?" எ‌ன்றா‌ள்.

நா‌ன் ஜெ‌யிலு‌க்கு‌ப் போ‌யிரு‌ந்தா‌ல் இ‌ன்று காலை‌யி‌ல் ‌‌விடுதலையா‌கி‌யிரு‌ப்பே‌ன்.

மனுஷன் எப்படியெல்லாம் யோசிக்கறாரு பாருங்க?


இன்றைய மற்றொரு பதிவு: வந்தேமாதரம் சசி-யின் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி - விரைவில்!



மேலும் வாசிக்க... "விடி‌ந்தா‌ல் ‌அ‌ந்த த‌ம்ப‌திக‌ளி‌ன் 20ஆ‌வது ‌திருமண நா‌ள்; கணவனை காணவில்லை??"



நயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது



நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.
இந்துவான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்.

இன்றைய மற்றொரு பதிவு:

அவசரகால முதலுதவி சிகிச்சைகள்! தெரிஞ்சுக்கலாமே

மேலும் வாசிக்க... "நயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது"



பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...


அடர்கூந்தலிலும், தோளிலும் தவழும்
மல்லிகையின் மனமும்....

சட்டென திரும்பி பார்க்கும் 
தாவணி உடுப்பும்....

சூரிய ஒளியில் பட்டுத் தெறிக்கும் 
வைர மூக்குத்தியும்....

நீ வரும் நேரத்தைக் காட்டும் 
கொலுசின் ஓசையும்....

நீண்ட கூந்தலில் பின்னி பிணைக்கப்பட்ட 
ஆடும் குஞ்சமும்....

உன் தோழிகளிடம் பேசும் போது 
காட்டும் முக பாவனைகளும்....

என்னை என்னவோ செய்கிறதடி...
பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி...


*********************************


அறிவிப்பு:
நாளை முதல் நம் தமிழ்வாசியில் ஒரு தொழில்நுட்ப தொடர் வர இருக்கிறது. எனது முயற்சிக்கு உங்கள் ஆதரவு கரத்தை கொடுங்கள்.

மேலும் வாசிக்க... "பெண்ணே! உன்னை காதலிக்க தூண்டுகிறதடி..."



மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு

முதல் பாகம்: மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - 1


         குறையொன்றுமில்லை ப்ளாக் லட்சுமி அம்மா தான் அவர்கள். எங்களை பார்த்ததும் அவருக்கு எல்லையில்லா மகிழ்ச்சி ஏற்பட்டது. அவருக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை. எங்களுக்கும் தான். அவரையும் சேர்த்து மூன்று பேர் வந்திருந்தார்கள். வழக்கமான் நலம் விசாரிப்புக்கு பின் அவர் தன் பிறந்த சொந்த ஊருக்கு செல்வதாக சொன்னார். நிறைய வருசங்களுக்கு பின் தமிழ்நாடு வந்திருப்பதாக சொன்னார். 
         நெல்லை பதிவர்கள் சந்திப்பு பற்றிய பதிவுகளில் வந்திருந்த போட்டோக்களை பார்த்து எங்களை அடையாளம் கண்டு கொண்டதாக சொன்னார். அந்த நேரத்திலும் அவர் தூங்காமல் முழிதிருந்ததாக சொன்னார். எப்போதும் இரவு பண்ணிரண்டு மணி ஆகுமாம் அவர் தூங்க. ஆனால் இங்கே தமிழ்நாட்டில் அவரின் சொந்தங்கள் ஒன்பது, பத்து மணிக்கே தூங்கி விடுவார்களாம். அம்மாவுக்கு தூக்கம் வராமல் கம்ப்யுட்டரும் இல்லாமல் முழிசுட்டே இருந்தாங்களாம். ஆனால் காலையில் எழுந்திருக்க கொஞ்சம் லேட் ஆகும்னு சொன்னாங்க. ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்த்தே பழக்கப்பட்டு இருந்த அவங்களுக்கு தமிழ் நிகழ்ச்சியை தவிர வேற ஹிந்தி நிகழ்ச்சிகள் பார்க்க முடியவில்லையாம். இந்த மாதிரி தன் தமிழக அனுபவங்களை சொன்னார்கள். 

      உங்கள் ப்ளாக் ரொம்ப நல்லா இருக்கு. உங்களோட எழுத்து நடை நல்லா இருக்கு என்று சொன்னோம். அதற்கு நான் பள்ளிக்கூடம் பக்கமே போனது கிடையாது. அனுபவத்தில் தெரிஞ்சதை வச்சு எழுதுவதாக சொன்னார். ஒவ்வொரு விசயத்தையும் மிக ரசிச்சு ஆச்சர்யப்பட்டு பேசினார். என்ன நண்பர்களே, ட்ரெயின் நிக்கிற ஐந்து நிமிடத்தில் இம்புட்டு பேச முடியுமான்னு நினைக்கறிங்களா? என்னமோ தெரியல் ட்ரெயின் கிளம்பான நின்னுட்டே இருந்துச்சு. அவங்க கூட வந்திருந்தவங்களும் லட்சுமி அம்மாவை ரொம்ப பெருமையா சொன்னாங்க. லட்சுமி இவ்ளோ எழுதறத எங்களால நம்பவே முடியல... என சொன்னார்கள். ட்ரெயின் சிக்னல் போட்டாங்க. அப்ப அவங்க சொன்னாங்க வரும் ஞாயிற்று கிழமை திரும்ப ரிடர்ன் வர்றதா சொன்னாங்க. நைட் 9:30 க்கு மதுரைக்கு வரும்னு சொன்னாங்க. அப்பவும் அவங்கள பார்க்க வருவதாக சொன்னோம். எங்க ரெண்டு பேருக்கும் ஒரு நினைவு பரிசு ஒண்ணு கொடுத்தாங்க. ட்ரெயின் மெல்ல நகர ஆரம்பித்தது. திரும்ப வரும் போது போன் செய்வதாக சொன்னாங்க. அவரும், நாங்களும் பார்வை மறையும் வரை கையசைத்து விடைபெற்றோம். 
       அடுத்து ஞாயிறு வந்தது. ஐயாவும் நானும் சரியா ஒன்பது மணிக்கு ஜங்சன் சென்றோம். ட்ரெயின் அப்பவும் அரை மணி நேரம் தாமதமாக வருவதாக சார்ட் போட்டிருந்தாங்க. அவனைக் சொன்ன கோச் வரும் இடத்தை யூகம் செய்து நின்றோம். சரியாய் பத்து மணிக்கு ட்ரெயின் வந்தது. அம்மாவை பார்த்து கையசைத்த படி சென்றோம். ஊரில் நன்றாக என்ஜாய் செய்ததாக சொன்னார். சிறு வயது நண்பிகளை அடையாளம் பார்த்து பேசியதாக சொன்னார். முதல் நாள் சந்திப்பில் புகைப்படம் எடுக்க மறந்து விட்டதாக சொன்னார். அட, நாங்களும் மறந்து விட்டோம். அப்புறம் மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டோம். கோயிலுக்கு போனதாக சொன்னார். எங்களை பார்த்து பேசியதில் மகிழ்ச்சி என சொன்னார். எங்களுக்கும் ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது. இவ்வளவு இன்ட்ரெஸ்ட் எடுத்து எங்களை அவர் சந்தித்ததில் ரொம்பவே நெகிழ்ச்சியாக இருந்தது. சென்னையில் ஒரு வாரம் இருந்துவிட்டு மும்பை செல்வதாக சொன்னார்.
         ஒரு மாசமா கம்ப்யுட்டர் தொடாமல் என்னவோ போல் இருப்பதாக சொன்னார். அப்புறம் ஓரிரு நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தோம். ட்ரெயின் சிக்னல் விழுந்தது. எங்களுக்கு என்னவோ போல இருந்தது. சந்திப்பு முடிய போகிறதே என... ட்ரெயின் ஏறினார். மெல்ல நகர்ந்தது. நாங்கள் மறையும் வரை கையசைத்து கொண்டே சென்றார். நாங்களும் அப்படித்தான். ஒரு இனிமையான, நினைவில் நீங்காத சந்திப்பு அது. ட்ரெயின் சென்றவுடன் நாங்கள் வீட்டிற்கு கிளம்பினோம்.

டிஸ்கி: ஆங்... ஒண்ணு சொல்ல மறந்திட்டேன்... அவங்க நெல்லை வந்துட்டு போறதால எங்க ரெண்டு பேருக்கும் அல்வா கொடுத்தாங்க. நெல்லை போனாலே இப்படித்தானா?

முடிந்தது...
மேலும் வாசிக்க... "மதுரை ஜங்க்ஷனில் நடந்த பதிவர்களின் மினி சந்திப்பு - இரண்டு"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1