நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவரது இயற்பெயர் டயானா மரியம். தந்தை குரியன். தாய் பெயர் ஓமணா. கேரளாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள். சினிமாவுக்காக நயன்தாரா என தனது பெயரை மாற்றிக் கொண்டு நடித்து வந்தார்.
இந்துவான பிரபுதேவாவுடன் நயன்தாராவுக்கு திடீர் காதல் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர். இதற்காக முதல் மனைவி ரம்லத்தை பிரபுதேவா விவகாரத்து செய்துள்ளார்.
பிரபுதேவாவை மணப்பதற்காக நயன்தாரா இந்து மதத்துக்கு மாறியுள்ளார். சென்னை வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஆரியசமாஜ் கோவிலுக்கு சென்று புரோகிதர்கள் முன்னிலையில் ஹோமம் வளர்த்து வேதமந்திரங்கள் சொல்லி இந்துவாக மாறினார். அவருக்கு இந்துவாக மாறியதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.
நயன்தாரா மதம் மாறிய தகவல் சொந்த ஊர் கிறிஸ்தவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. உள்ளூர் கிறிஸ்தவ கோவிலில் விமர்சனங்கள் கிளம்பின. இதனால் நயன்தாரா பெற்றோரை முற்றுகையிட்டு கண்டனம் தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
பிரபுதேவாவை திருமணம் செய்வதற்காக நயன்தாரா கிறிஸ்தவ மார்க்கத்தில் இருந்து இந்து மதத்துக்கு மாறினார் என்ற செய்தியை கேட்டபோது வருத்தமாகவும் வேதனையாகவும் இருந்தது. ஒரு உண்மையான கிறிஸ்தவர் அடுத்தவரின் எந்த பொருளுக்கும் ஆசைப்படக்கூடாது என்பது வேதாமகத்தின் ஆழ்ந்த கருத்து. அப்படி அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதும் அவற்றை அபகரிக்க நினைப்பதும் சாபத்தை விளைவிக்கக் கூடியது என்று பைபிள் தெளிவாக கூறுகிறது.
ஏற்கனவே ரம்லத் என்கிற இஸ்லாமிய சகோதரி பிரபுதேவாவை நம்பி மதம் மாறி திருமணம் செய்து கொண்டு தற்போது அவர் படுகிற வேதனைகளை நாட்டு மக்கள் நன்கறிவர்.
உபாகமம் 28-ம் அதிகாரம் 15 முதல் 68 வசனங்கள் வரை மொத்தம் 43 வசனங்களில் ஒருவன் கிறிஸ்தவத்தை விட்டு பின் மாற்றம் அடைந்தால் ஏற்படக்கூடிய சாபங்கள் குறித்து பைபிள் எச்சரிக்கை செய்கிறது.
பைபிளின் சாபம், ரம்லத்தின் வேதனை, ஒட்டு மொத்த நற்பெண்களின் கோபத்தை ஒருங்கே பெற்றிருக்கிறார் நயன்தாரா. அவரை பிரபுதேவா கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. இது ஒரு குற்றச்செயல் ஆகும்.
இன்றைய மற்றொரு பதிவு:
இன்றைய மற்றொரு பதிவு:
22 கருத்துரைகள்:
நன்பர்கள் யாராவது தமிழ்மணம் இணையுங்கள். நன்றி
அப்படியுமா செய்தி...
யாரை நல்லவர் கெட்டவரென்று சொல்ல..
இரண்டுபேருமே ஏமாறுக்காரர்கள்தானே...
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்..
இது அடுத்த பரபரப்பா...?
இவங்களை பொறுத்தவரை தலைக்குமேல வெள்ளம் போயாச்சு ...இனி எதுக்கும் கவலைப் பட மாட்டாங்க ..அப்புறம் ஒண்ணு சொல்ல மறந்துட்டேன்.. தமிழ் மணத்துல சேத்துட்டன்
கட்டாய மத மாற்ற தடை சட்டம் இன்னும் இருக்கா தெரியலியே!!??
ஆனா இந்தியாக்கு சுதந்திரம் கிடைச்சுடுச்சு தானே??
தமிழ் 10 ஐ காணவில்லை.. யாராவது பாத்தீங்களா?
இதுக்கெல்லாம் அஞ்சற ஆளா அவங்க?
எல்லாம் காதல் செய்யும் கோலம் ..
ஒரு இந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறலாம் (அ) இவர்களால் மாற்ற வைக்கப்படலாம். ஆனால் ஒரு கிறிஸ்தவன் மதம் மாறக் கூடாது. என்ன ஒரு நீதி?
எந்த மதமாக இருந்தால் என்ன ,நல்ல மனிதர்களாய் இருக்க வேண்டும் .
அது இருக்கா இவர்களிடம் ?
வணக்கம் சகோ,
மதமாற்றம் என்பது தேவையில்லை என்றாலும் ,ஒருவருக்கு பிடித்த மதத்திற்கு மாறும் உரிமையை ஆதரிக்கிறேன்.நயந்தாரா இந்து மதத்திற்கு மாறுவது என்பது அவ்ருடைய உரிமை.இதை தடுக்க யாருக்கும் உரிமை இல்லை.
****************
ஒருவேளை திருமணத்திற்காக மட்டும் மாறினார் என்றால் நம்து நாடு சட்டங்களின் படி இரு வெவ்வேறு மதம் சார்ந்த ஆண்,பெண் (பதிவு)திருமணம் செய்ய தடை இல்லை.ஆனால் மதம் சார்ந்த திருணம் செய்வது என்றால் இருவரும் ஒரே மதமாக் இருப்பது அவசியம்.
************
எப்படியோ நன்றாக இருந்தால் சரி.!!!!!!!!!!!!!!!!
நன்றி
இது மக்களின் அமைதியை சீர்குலைக்கும் சில வேலைவெட்டி இல்லாதோரின் கைங்கர்யம்...
விட்டுத்தள்ளுங்கள் பிரகாஸ்...
ஹே..ஹே..ஹே..தமாசு தமாசு.
நயந்தாரா மதம் மாறுனதால கிரிஸ்தவ மதம் புனிதம் அடைஞ்சதுன்னு சந்தோசப்படுறதை விட்டுட்டு, உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்காங்களே..
//செங்கோவி said... 14
நயந்தாரா மதம் மாறுனதால கிரிஸ்தவ மதம் புனிதம் அடைஞ்சதுன்னு சந்தோசப்படுறதை விட்டுட்டு, உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்காங்களே..//
அதே அதே!!
தலை தப்பினது தம்பிராண் புண்ணியம் என்று இருக்கிறத விட்டுட்டு பாயுறாங்க
சுதந்திரம்
மச்சி, தற்போது தூக்கம் கண்ணைக் கட்டுவதால்,
வருகையினை மட்டும் பதிந்து விட்டுப் போகிறேன்.
விடிகாலையில் கமெண்ட் தருகிறேன்.
நாசமாபோச்சி போங்க இனி இதுக்கு பெரிய விளம்பரம் நடக்கும்.....
எலேய் மக்கா தமிழ்மணம் இணச்சி ஒம்பதாவது ஓட்டும் போட்டுட்டேன் ஹி ஹி....எப்பூடீ.....
முதல்ல எல்லாரும் மனுசனா மாறட்டும்
//நயன்தாராவை கட்டாயப்படுத்தி மதம் மாற்றி இருப்பதாக கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த மக்கள் ஐக்கிய முன்னணி ஒருங்கிணைப்பாளரும், ஆராதனை கிறிஸ்தவ பொறுப்பாளருமான இனியன்ஜான் கண்டித்துள்ளார்.//
ஒரே ஒரு ஆள்தானே கண்டித்துள்ளார்.
//நயன்தாரா இந்துவாக மதம் மாற்றம் - கண்டனங்கள் குவிகிறது// எங்கிருந்து குவிகிறது?
சும்மா பரபரப்புக்காக எதையாவது எழுதவேண்டியது.
//செங்கோவி said... 14
நயந்தாரா மதம் மாறுனதால கிரிஸ்தவ மதம் புனிதம் அடைஞ்சதுன்னு சந்தோசப்படுறதை விட்டுட்டு, உட்கார்ந்து புலம்பிக்கிட்டு இருக்காங்களே// இதையேதான் நானும் நினைத்தேன் . நயன்தாரா மாதிரி ஆட்கள் கிறிஸ்தவ மதத்தைவிட்டு போவதுதான் நல்லது.
மதம் மாறுவது அவரவர் உரிமை... நாட்டில் எத்தனையோ பேர் மதம் மாறும் போது நயன் தாரா மட்டும் இங்கே விமர்சிக்கப்படுவது ஏன் என்று தெரியவில்லை...
மதம் எதுவாக இருந்தால் என்ன மனித நேயம் மட்டும் மாறாமல் இருக்கட்டும்.