ஊழலை ஒழிக்க வலுவான மக்கள் லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் வருகின்ற 30-ம் தேதிக்குள் நிறைவேற்றக்கோரி பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசாரே மீண்டும் டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். வலுவான லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்த பிரதமர் மன்மோகன் சிங் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றார். அதேசமயத்தில் இந்த பிரச்சினையில் நீக்கப்போக்குடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிய அவர், அனைத்து தரப்பினர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றவும் தயார் என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தார். இந்தநிலையில் நேற்று 6-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே,தன்னுடன் சேர்ந்து உண்ணாவிரதம் இருக்கும் ஆயிரக்கணக்கானோர் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில் மக்கள் லோக்பால் மசோதா குறித்து மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று கூறினார். பேச்சுவார்த்தைக்கு தயார் என்று மத்திய அரசும் அறிவித்திருந்தாலும் இது தொடர்பாக எங்களுடன் யாரும் தொடர்பு கொள்ளவில்லை என்றும் எங்கே, எப்போது பேச்சுவார்த்தை நடத்துவது, இதில் யார் யார் கலந்துகொள்வது தொடர்பாக மத்திய அரசு சார்பாக யாரும் எங்களுடன் இதுவரை தொடர்பு கொள்ளவில்லை என்றும் கூறினார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு ஆதரவு தரக்கோரி எம்.பி.க்கள் வீடுகள் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்த வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொண்டார்.
இதற்கிடையில் அண்ணாஹசாரே உடல்நிலையில் மத்திய அரசு அக்கறை கொள்வதாக தெரியவில்லை என்று ஹசாரேயின் ஆதரவாளர்களில் ஒருவரான கிரண்பேடி கடுமையாக குற்றஞ்சாட்டி உள்ளார். மக்கள் லோக்பால் மசோதாவுக்கு தீர்வுகாணுவதில் மத்திய காலம் தாழ்த்தி வருகிறது. உண்ணாவிரதம் இருக்கும் இடத்தில் சுகாதார வசதி எதுவும் இல்லை. குடிநீர் தட்டுப்பாடு உள்ளது என்றும் கிரண்பேடி கூறினார். அண்ணா ஹசாரேயின் இந்த உண்ணாவிரத போராட்டத்தால் நாட்டு மக்களிடையே குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது என்றும் கிரண்பேடி தெரிவித்துள்ளார். உண்ணாவிரதம் இருக்கும் ராம்லீலா மைதானத்தில் மழைவெள்ளம் தேங்கி கிடப்பதாகவும் சுத்தம் செய்யப்படாததால் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்றும் கிரண்பேடி கூறினார்.
அண்ணா ஹசாரேயுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துமா? அப்படி நடத்தினால் அரசின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். அண்மைய தகவல்:
பேச்சு வார்த்தைக்கு பிரதமர் அவர்கள் சம்மதம் தெரிவித்ததாக தொலைக்காட்சிகள் செய்திகள் வெளியிட்டு உள்ளது.
23 கருத்துரைகள்:
50 வருசமா பாகிஸ்தான் கிட்ட பேசிக்கிட்டு தான் இருக்கோம். ஹசாரே கிட்ட அவர் உயிரோட இருக்கிற வரைக்குமாவாது பேசாம விட்டுடுவோமா!!?
எங்க போனாலும் இதே பேச்சு தான் ஆனா ஒண்ணுமே நடக்கல
அண்ணா ஹசாரேயுடன் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துமா? அப்படி நடத்தினால் அரசின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
...... தொடரும்......
மாப்ள....நானும் இந்த பார்டர தாண்ட மாட்டேன் நீங்களும் தாண்டக்கூடாது....பேச்சி பேச்சா இருக்கணும்.....ஏன்னா எங்களுக்கு சுருக்கு போட நாங்க விட்ருவோமா....இப்படிக்கு ரிமோட் அரசியல்வாதிகள்(!)
என்னதான் நடக்கப் போகுதுன்னு பாக்கத்தானே போறோம்..
நல்லதே நடந்தால் சரி தான்...
இவர் இப்படியொரு மக்கள் கிளர்ச்சி செய்வார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை!!
கொதித்த மக்களின் மொத்த அடையாளமாகவே அன்னா தெரிகிறார்.
நல்ல மனுசன்..காப்பாத்துவாங்களா?
தமிழ்வாசி, நீங்க ஏன் மத்திய அரசிக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்கக்கூடாது?
:-)
செங்கோவி said... 9
தமிழ்வாசி, நீங்க ஏன் மத்திய அரசிக் கண்டிச்சு உண்ணாவிரதம் இருக்கக்கூடாது?//
நல்ல கேள்வி தல!
ஏதோ அரசியல் பதிவு போல இருக்கு, நான் எஸ்கேப்
நல்லது நடக்கட்டும்!
புலவர் சா இராமாநுசம்
பிரதமர்-நான் சரியா பேசுறனா?
எஸ்.எம்.கே-திரும்ப திரும்ப பேசுற நீ.
அசாரேவுக்கு எதிராக அருந்ததி ராய், அருணா ராய்: சுற்றுலா போராளிகளுக்கு உண்மை போராளிகள் எதிர்ப்பு!
http://arulgreen.blogspot.com/2011/08/blog-post_22.html
என்னதான் நடக்குதெண்டு பார்ப்போம்
நான் தயார்...நீங்க?
ஒண்ணும் நடக்க போறதில்ல, உண்ணாவிரத்ததுக்கு ஸ்பான்சர் பண்ண டீவி கம்பேனிகள் நல்லா அறுவடை பண்ணுவாங்க (பண்ணிட்டாங்க....), அவ்வளவுதான்.... (அட ஜன்லோக்பால் நிறைவேறுனாக்கூட ஒண்ணும் ஆகிட போறதில்லேங்கிறேன்.....!)
எங்கு பார்த்தாலும் போராட்டம் பற்றிய பேச்சு என்பதால் நம்பிக்கை துளிர்க்க ஆரம்பிக்கிறது நண்பா...
thamilmanam 16
எந்தபக்கம் போனாலும் இதே
பேச்சுத்தான். ஆனா இது
வரை எதுவும் உருப்படியா
நடந்ததா தெரியல்லே.
வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
மகிழ்ச்சிக்குரிய விடயமகாக இருக்கிறது, பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு தயாராக இருப்பது.