மாலை நேரம். சூரியன் மயங்கும் நேரம். உணவுக்காக தன் கூட்டையும், குஞ்சுகளையும் விட்டு உணவு தேடி நெடுந்தூரம் பயணித்த பறவைகள், தங்கள் வசிப்பிடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தன. பசியினாலும் பெற்றோரின் அரவனைப்பில்லாமல் ஏங்கிக் கொண்டிருந்த குஞ்சுகள் தத்தம் பெற்றோரை பார்த்த ஆனந்தத்தில் கி..கீ..கீச்..கீச்... என ஆராவாரித்து அவர்கள் கொண்டு வந்த உணவுகளை சந்தோசமாக கொத்திக் கொண்டிருந்தன. அக்காட்சியை பார்த்து நாளெல்லாம் இரையை தேடித் தேடி பறந்த களைப்பையும் மறந்து பேரானந்தம் அடைந்தன, பெற்றோர் பறவைகள்.
இந்தப் பறவைகளின் பாசத்தை பாண்டியம்மாள் ஏக்கத்தோடும், ஒரு வித ஏமாற்றத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தாள். பாண்டியம்மாள் பண்ணிரண்டு வயது நிரம்பிய சிறுமி. அவள் தினமும் வீட்டை விட்டு வெளியே செல்கிறாள். படிக்க அல்ல. வேலை பார்க்க, அவளை அரவணைக்கவும் அன்பைக் காட்டவும் அம்மா மட்டுமே இருக்கிறாள். அப்பா இல்லை. மணல் லாரி ஒட்டிக்கொண்டு இருந்த அவர் மணல் கொள்ளை முதலைகளின் போட்டியால் செயற்கையாக நடத்தப்பட்ட விபத்தில் கொல்லப்பட்டு நான்கு வருடங்கள் ஓடி விட்டது.
பாண்டியம்மாள் இன்று வேலைக்கு செல்லவில்லை. சளி, இருமலோடு காய்ச்சலும் சேர்ந்து அவளை வேலைக்கு செல்ல விடாமல் தடுத்திருந்தது. லொக்..லொக்.. என இருமிக் கொண்டே வீட்டு வாசலில் உட்கார்ந்து பறவைகளின் அன்பை ரசித்துக் கொண்டிருந்தாள். அவள் அம்மா வீட்டினுள் அடுப்பு புகையுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள். அந்த புகையும் அடுப்பில் ரேசன் அரிசியை அமிர்தமாக மாற்றிக் கொண்டிருந்தாள். அப்படியே மகளுக்கு கஷாயமும், கஞ்சியும் தயார் செய்து கொண்டிருந்தாள். அவள் வயக்காட்டு வேலைக்கு சென்று காசு பார்க்கிறாள். கடந்த ஒரு மாதமாக பண்டியம்மாளும் வேலைக்கு செல்கிறாள். இதனால் அவளின் படிப்பு பாதியில் நின்று போனது. வெறு வழியில்லை அவர்களுக்கு, வறுமையை வென்றாக வேண்டிய கட்டாயம்.
ஐஸ்,ஐஸ், பாலைஸ், கப்பைஸ் என ஐஸை கூவி கூவி விற்றுக் கொண்டு வந்தான் ஒருவன். நம் பாண்டியமாளுக்கு ஐஸ் சாப்பிட ஆசை வந்தது. ஆசையாக அம்மாவிடம், "அம்மா...அம்மா...ஐஸ் வாங்கிக் கொடும்மா... சாப்பிடனும் போல ஆசையா இருக்கும்மா" என்றாள். "கண்ணு, தாயி, எனக்கு ஒடம்பு சரியில்லம்மா, இன்னைக்கு வேணாம், இன்னொரு நாள் அம்மா வாங்கி தரேன்" என்றாள். வெறு வழியில்லாமல் பான்டியம்மாளும் " சரிம்மா" என்றாள். அம்மாவுக்கு ஆசைதான், மகளுக்கு ஐஸ் வாங்கி தர...ஆனாலும் அன்று அவள் வேலைக்கான கூலி கிடைக்கவில்லை. காரணம், போன மாதம் அவளுக்கு வயிற்று வலி வந்து உடம்புக்கு முடியாமல் வேலைக்கு செல்லாமல் ரெண்டு வாரமாக படுத்த படுக்கையாகி விட்டாள். இச்சூழ்நிலையில் தான் பாண்டியம்மாள் படிப்பை நிறுத்தி விட்டு வேலைக்கு போக ஆரம்பித்தாள்.
மகளுக்கு ஆக்கி போடவும், தன்னுடைய மருத்துவ செலவுக்கும் வயக்காட்டு மொதலாளியிடம் கொஞ்சம் பணம் வாங்கியிருந்தாள். அந்த பணத்தை தினமும் வேலை பார்த்து கடன் அடைத்துக் கொண்டிருந்தாள். அதோடு மகளை வைத்தியரிடம் காண்பித்து மருத்துவம் பார்த்து கொண்டிருந்தாள். வைதியரோ, அவளுக்கு குடிச்ச தண்ணில கிருமி மூலமா காய்ச்சல் வந்ததாக சொல்லியிருந்தார்.
அடுப்பிலிருந்த அமிர்தத்தை இறக்கி ஆற வைத்தாள். மகளுக்கு தேவையான கஷாயமும் தயார் செய்து மகளை," பாண்டியம்மா.... பாண்டியம்மா... வாம்மா...உனக்கு கஞ்சியும், கஷாயமும் செஞ்சிருக்கேன்...வாம்மா" என பாசத்துடன் அழைத்தாள். அவளும் அம்மா அருகில் அமர்ந்து மடியில் சாய்ந்து கஷயத்தையும், கஞ்சியையும் குடித்தாள். அவள் சாப்பிடுவதை ஆனந்தக் கண்ணீரோடு பார்த்து பெருமிதம் கொண்டாள். அவளும் கஞ்சியை வடித்து பழைய குழம்பு சேர்த்து சாப்பிட்டாள்.
மகளுக்கு கண் சொக்கியத்தை பார்த்ததும், "என்னம்மா? தூக்கம் வருதா? இரு பாயை விருச்சு விடுறேன்" நல்லா நிம்மதியா தூங்கு" என கிழிந்த பாயை விரித்து தன் பழைய சேலையை அதன் மேல் விரித்து மகளை தூங்க வைத்தாள். அவளுக்கு மகள் உடல்நிலையை நினைத்து கண் கலங்கினாள். எப்படி ஓடி ஆடி திரிந்தவள், இப்படி சோர்ந்து போனாளே! என நினைத்து வேதனை பட்டாள். சிறிது நேரத்தில் மகள் தலையை தொட்டு பார்த்தாள், காய்ச்சல் குறைந்திருந்தது. அந்த நிம்மதியில் அவளும் உறங்கிப் போனாள்.
மறுநாள் விடிந்தது. அம்மா சீக்கிரமே எழுந்து மகளை தொட்டு பார்த்தாள். அவள் முகத்தில் புன்னகை அரும்பியது. ஆம், அவளுக்கு காய்ச்சல் விட்டிருந்தது. " பாண்டியம்மா, எழுந்திரு..உனக்கு காய்ச்சல் குனமாயிருச்சு. உடம்புக்கு ஒன்னும் இல்லை" என அன்போடு தட்டி எழுப்பினாள். பாண்டியமாளும் எழுந்தாள். காய்ச்சல் இல்லாததால் அவளுக்குள்ளே ஒரு உற்சாகம் பிறந்திருந்தது. அவளும் விரைவாக பல் விளக்கி காலை கடன்களை முடித்து குளித்து முடித்திருந்தாள்.
"என்ன? பாண்டியம்மா... சுடு தண்ணி வச்சு தர்றதுக்குள்ள இப்படி பச்ச தண்ணில குளிச்சிட்டியே, திரும்ப காய்ச்சல் வந்துட போகுது" என மகளை செல்லமாக அதட்டினாள். இல்லைம்மா, நீ சுடு தண்ணி வச்சுக் கொடுத்தா லேட் ஆயிரும், ஆமாம்மா...இன்னைக்கு வேலைக்கு போறேன், அதான் ஒடம்பு சரியாரிச்சுள்ள" என்றாள். தாயும் " சரிம்மா... பார்த்து கவனமா வேலைக்கு போயிட்டு வா" என சோற்றையும் கட்டிக் கொடுத்தாள். ஆனால் அம்மாவுக்கு ஒடம்பு சரியான்ன இன்னைக்கே வேலைக்கு அனுப்பறோமே என உள்ளுக்குள் அழுதாள்.
பாண்டியம்மாள், காலை சாப்பாடை சாப்பிட்டு, தூக்கு சட்டியையும் தூக்கிக்கிட்டு கிளம்பினாள் பக்கத்து ஊரிலுள்ள ஐஸ் தயாரிக்கும் கம்பெனிக்கு கால்நடையாக....
மீள்பதிவாக ...
28 கருத்துரைகள்:
hai friends, pls connect tamil10, ulavu thirati
நண்பரே எப்படி சுகம்
பாண்டியாம்மா கண்கலன்க்க வைக்கிறாள்
Super story
Really I like this story
"என்ன? பாண்டியம்மா... சுடு தண்ணி வச்சு தர்றதுக்குள்ள இப்படி பச்ச தண்ணில குளிச்சிட்டியே, திரும்ப காய்ச்சல் வந்துட போகுது" என மகளை செல்லமாக அதட்டினாள்.
படித்ததில் பிடித்தது .ஏன் பிடித்ததென்று எங்கள் சகொவிர்க்குப் புரியும் .(பயபுள்ள அருமையாக் கதை எழுதுறானே இந்த விசயத்த வெளியில சொல்லக் கூடாது ம்ம்ம்ம் )
அப்பநான் வரட்டுமா கத குத்துமதிப்பா பறுவாயில்ல .சரி போடவேண்டியதப் போட்டுர்ரன் சகோ ........நன்றி பகிர்வுக்கு .
தண்டம் தமிழ்மணம் 5 ம்ம்ம்ம்.......
வலை வந்து கருத்துரை வழங்
கினிர் நன்றி
கடுமையான முதுகுவலி
காரணமாக அமர்ந்து கருத்துரை
வழங்க இயலவில்லை மன்னிக்க!
பின்னர் எழுதுகிறேன்
புலவர் சா இராமாநுசம்
நல்ல கதை. வாழ்த்துக்கள்.
கதை நல்ல இருக்குங்க..
நல்ல சிறுகதை. வாழ்த்துக்கள்.
நல்ல கதை
ரம்ஜான் வாழ்த்துகள்.. நண்பா..
மாப்ள கதைக்கு நன்றி!
Tamilmanam 6 to 7.
Indli 7 to 8.
கதை மிகவும் அருமை.
பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
vgk
பாரா பாராவா இருந்தா நாங்க பாடத்தையே படிக்க மாட்டோம் ஆனா கதையை படிப்போம் ம்ம்ம் கலக்கலான கதை ..... தமிழ் மணம் 9... all voted
அருமையான கதை, அப்பப்போ நேரங்கிடைக்கும் போது இப்படியும் எழுதலாமே.......
மீண்டும் படித்தேன் பாஸ்,
விமர்சனம் ஏற்கனவே வழங்கியதால் எஸ் ஆகிடுறேன்.
அருமையான பகிர்வு.
யோவ், இப்போ கொஞ்ச நாள் முன்ன தானே இதை எழுதினீங்க? அதுக்கு ஓட்டுப் போட்ட மை காயுமுன்ன மீள்பதிவாக்குனா எப்படிய்யா?
//அம்பாளடியாள் said...
தண்டம் தமிழ்மணம் 5 ம்ம்ம்ம்......//
ஹா..ஹா..முடியலை..ஹய்யோ..ஹயோ..ஹா..ஹா...
என்னய்ய தமிழ்மணத்தைக் காணோம்?..இண்ட்லியைக் காணோம்..
நல்ல கதை பிரகாஷ்.
ஏன் வேலைக்கு அனுப்புகிறீர்கள்? படிக்க அனுப்பவில்லையா?
வாழ்த்துக்கள்.
கதையாக இருந்தாலும் சில இடங்களில் இவ்வாறு நடைபெறுகிறது ...வாழ்த்துக்கள் !
மீண்டும் படித்தேன் ...நல்ல கதை பிரகாஷ்...
மீண்டும் படித்தேன் நல்ல கதை.
சோகம்
இப்படி, இன்று எத்தனையோ
பாண்டி யம்மாக்கள் நாட்டில்
வாழ்கிறார்களோ அட ஆணவா
சோகம் சொல்லில் ஆடங்கா
புலவர் சா இராமாநுசம்
கதை இயல்பாகவும் இருக்கு
சிறப்பாகவும் இருக்கு
தொடர்ந்து கதைகள் தர வாழ்த்துக்கள்