நண்பர்களே,
எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?
எனது சொத்தை தருகிறேன். ஆனா ஒரு நிபந்தனை?
மேற்கண்ட இடுகையில் சில விடுகதைகள் போட்டிருந்தேன். அதற்கான விடைகள் அடுத்த இடுகையில் வரும் என சொல்லி இருந்தேன். ஆனால் நேரம் இல்லாமையால் அந்த இடுகையில் விடைகளை போட இயலவில்லை. இதோ இன்றைய இடுகையில் விடைகளை இட்டுள்ளேன். ஓரிரு விடுகதைகளுக்கு சரியாக பதிலளித்த சத்ரியன், ராஜி அவர்களுக்கு வாழ்த்துக்கள். இருவரும் பத்து விடைகள் சொல்லா விட்டாலும் ஓரிரு விடைகள் சரியாக சொன்னதால் அவர்களுக்கு பரிசாக ஒரு மின் புத்தகம் அனுப்பப்படும். விடைகளை முயற்சித்த பன்னிக்குட்டி ராமசாமிக்கும், மற்றும் பின்னூட்டமிட்ட அனைவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
இனி விடைகளை காண்போமா?
மலை ஏறி தாள் பறித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
மகிழ்ந்திருந்து தொன்னை பிடித்து
பத்தினியாள் இட்ட கஞ்சி
பற்றுமில்லை; உப்புமில்லை. அது என்ன?
விடை: பதநீர்
கழுத்துண்டு; கையில்லை
நாக்குண்டு; பேச்சில்லை
வாயுண்டு; அசைவில்லை
தொப்பி உண்டு; தலைமுடியில்லை. அது என்ன?
விடை: பேனா
சிமிழிலே தண்ணீர்
தண்ணீர் மேலே தனிக்கொடி
கோடி மேலே சூரியன். அது என்ன?
விடை: கைவிளக்கு
பூவாமல் காய்ப்பது என்ன காய்? அது
புண்ணின்றிப் புழு புழுக்கும். அது என்ன?
விடை: அத்திப்பழம்
வந்தாரு திரும்பி வந்தாரு
சொல்லுமிடம் வச்சாரு. அது என்ன?
விடை: பல்
நிறங்கறுத்த அழகி நான்;
நித்தம்நித்தம் வேண்டும் அழகி நான்;
ரச அழகி நான்; ருசி அழகி நான். அது என்ன?.
விடை: புளி
ஆட்டமும் பாட்டமும் அதனாலே
தோட்டமும் ஊட்டமும் அதனாலே
கூட்டமும் நாட்டமும் அதனாலே. அது என்ன?
விடை: காற்று
வாய் இல்லை; வார்த்தைகள் சொல்வேன்
உயிர் இல்லை; ஊருக்குப் போவேன்
கால இல்லை; வீட்டுக்கு வருவேன். அது என்ன?
விடை: கடிதம்
மூக்கனுக்கு மூன்று முழ நீளம்
மூக்கன் பொண்டாட்டிக்கு
முளைத்தது அகிலம் அதிகம். அது என்ன?
விடை: வாழைப்பழம், வாழை இலை
மஞ்சள் பூக்கையிலே
மாட்டேன் என்று சொன்னீரே
பிள்ளை பெற்று கையில் கொடுத்தால்
முத்தமிட வந்தீரே. அது என்ன?
விடை: வேர்கடலை
நண்பர்களே, விடுகதைகளுக்கான விடைகளை தெரிந்து கொண்டீர்களா? நேற்றைய இடுகையில் ஒரு அறிவிப்பு போட்டிருந்தேன். அதில் இந்த இடுகை முதல் ஒரு சவால் காத்திருக்கிறது என போட்டிருந்தேன். அது என்னான்னா இனி ஒவ்வொரு இடுகை முதல் ஒரு பொன்மொழியும், ஒரு விடுகதையும் சேர்ந்தே வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். விடுகதைக்கான விடைகள் வழக்கம் போல அடுத்த இடுகையில் வெளிவரும்.
இன்றைய பொன்மொழி:
நண்டைச் சுட்டு நரியை காவலுக்கு வைத்தது போல!
இன்றைய விடுகதை:
ஓஹோ மரத்திலே உச்சாணிக் கிளையிலே
டம்மார அம்மானுக்கு மகமாரி போட்டிருக்கு. அது என்ன?
டம்மார அம்மானுக்கு மகமாரி போட்டிருக்கு. அது என்ன?
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் இட வேண்டாம். எனக்கு மெயில்(thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
விடை அடுத்த இடுகையில்...
31 கருத்துரைகள்:
En vidai sariyana vidaiya?
En vidai sariyana vidaiya? Acharyamdhan. Min puththagathirku nanri sago
haa haa பழமொழியா? விடுகதையா? மீ எஸ்கேப்
ஹய் நான் நினைத்த மாதிரியே விடை சொல்லிட்டேங்க்களே ,ஹே ஹே எப்பிடி சமாளிப்பு
நீங்க சொத்து தரலேன்னாலும் பரவாயில்லைங்க ,நான் ஒட்டு போட்டுட்டேன் ,நன்றி
விடுகதைகள் என்பது நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொக்கிஷம். நன்றி நண்பரே.
//என் சொத்து யாருக்கும் அல்ல. //
வச்சிக்கோரும்.
உங்கள் விடுகதைகள் எம்மிடையே மறந்து வருகின்ற ஓரு விடயமாக இருக்கின்றது மேலே பாலா சொன்னமாதிரி நாம் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பொக்கிஷம்..
நன்றி பாஸ்
/////விடைகளை முயற்சித்த பன்னிக்குட்டி ராமசாமிக்கும், /////
அப்போ அதுவும் விடைகளா.....? அடங்கொன்னியா....... கலாய்க்கறதுக்கும் விடை சொல்றதுக்கும் வித்தியாசமே தெரியாத பச்சப் புள்ளையா இருக்காரே இந்தத் தமிழ்வாசி.....?
/////நண்டைச் சுட்டு நரியை காவலுக்கு வைத்தது போல!/////
சோத்துப்பானைக்குள் பெருசாளியை விட்டுவிட்டு போவது போல....
/////அது என்னான்னா இனி ஒவ்வொரு இடுகை முதல் ஒரு பொன்மொழியும், ஒரு விடுகதையும் சேர்ந்தே வரும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.////
கிழிஞ்சது..........
சரியா போச்சு, இனி ஒவ்வொரு பதிவும் லந்து தானா
விடைகள் எல்லாத்தையும் கண்டு பிடிச்சி வச்சிருந்தேன் ..அதுக்குள்ளே சொல்லிட்டீங்க ...பரவாயில்லை ...
ரைட்டு...
இனி தினம் ஒரு சவாலா...
இதுதான் விடைகளா...
இனி தொடரும் விடுகதைகளா... கலக்குங்க.
இதுதான் விடைகளா...
இனி தொடரும் விடுகதைகளா... கலக்குங்க.
நல்ல சவால்தான் மச்சி, இனி தினமுமா?
பிரகாஷ்,
மின்புத்தகம் தான் உம்ம சொத்தா ஓய்?
பேரப்பிள்ளைகளை எல்லாம் சுற்றிலும் அமர்த்தி விடுகதைகளைச் சொல்லி விடைகளையும் சொல்லி ஆர்வத்தை வளர்த்தது என் ”அம்மா” வழி பாட்டி.
இப்பொதெல்லாம் பாட்டிகள் தொலைகாட்சி பெட்டிகள் முன்.
இந்த விடுகதைகள் ஒரு புத்தகத்தில் படித்ததாக நினைவு .. சரியா ?
இன்று என் வலையில்
உங்களுக்கு மிகவும் பயனுள்ள இனையதளங்கள் பகுதி - 1
என்னய்யா கடையை பலமா விரிச்சிட்டீங்க ஹி ஹி...
விடுகதையா நான் அம்புட்டு ஒஸ்தி இல்லை, மண்டைக்குள்ளே ஒன்னுமில்லியே அவ்வ்வ்வ்...
நல்ல வேளை, விடையோட சேர்த்து படிச்சது..
இங்கே வந்தது தப்பாயிடுச்சோ....!
ada pongaya....
@ராஜி
உங்கள் மின்னஞ்சல் முகவரி தெரியப்படுத்தினால் மின்புத்தக இணைப்பு வழங்க எதுவாக இருக்கும்.
சொத்து யாருக்கும் போகக்கூடாதுன்னு கஷ்டமா கேட்டுடீங்க போலயிருக்கு.
முதல்துக்குதான் எனக்கு விடை தெரிந்தது.மீதி எல்லாம் எனக்கு புதுசு.
நல்ல முயற்சி.தொடருங்கள்.
சொத்து(வடை) போச்சே......
அறிவுக்கு வேலை கொடுக்க நினைக்கும் மாப்ளைக்கு வாழ்த்துக்கள்...பகிர்வுக்கு நன்றி!
good keep it up