நண்பர்களே, நாம் நமது கருத்துகளை பகிர்ந்து கொள்ள வலைப்பூவை ஆரம்பித்திருக்கிறோம். நமது கருத்துகளுக்கு பலரும் வந்து கருத்து தெரிவிப்பார்கள். அதே போல நாமும் பலருடைய வலைப்பூக்களுக்கு சென்று கருத்துகள் தெரிவிப்போம். இப்ப நான் என்ன சொல்ல வரேன்னு நீங்க நெனக்கறிங்களா? நமது மெயில் ஐடியில் நாம் கவனம் செலுத்துகிறோமா? இல்லையா என பார்க்க போகிறோம்.
நமது மெயில் ஐடி எந்தெந்த வழிகளில் மற்றவர்களுக்கு தெரியும்? 1. நமது பிளாக்கின் மெயில் ஐடி-ஐ மற்றவர்கள் தெரிந்து கொள்ளட்டும் என நாம் நம் பிளாக்கில் ஒரு பக்கத்தில் போட்டு வைத்திருப்போம்.
2.இன்னும் சிலர் பிளாக்கில் போடாமல் தங்கள் ப்ரோபைல் பக்கத்தில் வருமாறு செய்திருப்பார்கள்.
3. மற்றவர்களின் வலைப்பூவில் நாம் கருத்து போடும் போது, அந்த பதிவர் EMAIL NOTIFICATION வசதியை வைத்திருந்தால் அவரது மெயில்க்கு உங்கள் மெயில் ஐடியுடன் உங்கள் கருத்தும் காட்டும். அப்போ அவருக்கு மெயில் ஐடி தெரிந்து விடும்.
நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு தெரியாமல் இருக்க என்ன செய்யலாம்னு கேட்கறிங்களா? ரொம்ப ஈசி தான். கீழே பார்ப்போம்.
1. உங்க பிளாக்கில் எங்காவது உங்கள் மெயில் ஐடி தெரியும் படி வச்சிருந்தா அந்த பகுதியை நீக்கிடுங்க.
2. இது தான் மிக முக்கியமானது. உங்க DASBOARDஇல் EDIT PROFILE SELECT செய்யுங்க.
செலக்ட் செய்த பின்னர் EDIT USER PROFILE PAGE ஓபன் ஆகும். அதில் PRIVACY என்ற பகுதியில் இரண்டாவதாக SHOW MY EMAIL ADDRESS என ஒரு ஆபசன் இருக்கும். அங்கு உள்ள கட்டத்தில் டிக் மார்க் இருந்தால் தான் உங்கள் மெயில் ஐடி எல்லோருக்கும் தெரியும்.
VIEW PROFILE பார்த்தால் அங்கே இடது பக்கம் CONTACTS பகுதியில் கீழே படத்தில் உள்ளவாறு காட்டும்.
VIEW PROFILE பார்த்தால் அங்கே இடது பக்கம் CONTACTS பகுதியில் கீழே படத்தில் உள்ளவாறு காட்டும்.
அப்போது உங்கள் ப்ரோபைல் பக்கத்தை பார்க்க வருபவர்கள் உங்கள் மெயில் ஐ டி தெரிந்து விடும். ஆகையால் EDIT PROFILE பக்கத்தில் SHOW MY EMAIL ADDRESS என்ற ஆப்ஷனில் உள்ள டிக் மார்க்கை எடுத்து விடவும். இப்போது உங்கள் மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டாது. பார்க்க படம்.
மேற்கண்ட முறையை நாம் செய்தாலே போதும். COMMENT NOTIFICATION EMAIL வசதி வைத்திருக்கும் பிளாக்கில் நாம் கமென்ட் போட்டாலும் அவர்களின் மெயில்க்கு SPAMக்கு போகும். அதோட நமது மெயில் ஐடி காட்டாது. கீழே படத்தில் உள்ளது போல NOREPLY-COMMENT@BLOGGER.COM என்றே காட்டும்.அவர்கள் அந்த மெயில்க்கு REPLY கொடுத்தாலும் நமது மெயில் ஐடி காட்டாது.
நாம் EDIT PROFILE பக்கத்தில் SHOW MY EMAIL ADDRESS என்ற ஆப்ஷனில் உள்ள டிக் மார்க் வைத்திருந்தால் நமது கமென்ட் COMMENT NOTIFICATION EMAIL வசதி வைத்திருக்கும் பிளாக்கில் நாம் கமென்ட் போட்டாலும் அவர்களின் மெயில்க்கு INBOXக்கு போகும். நமது மெயில் ஐடி காட்டும். அல்லது கீழே படத்தில் உள்ளது போல BLOGGER.BOUNCE.GOOGLE.COM என காட்டும். பார்க்க படம் கீழே..
ஆனாலும் அதற்கு REPLY கொடுத்து பார்த்தால் நமது மெயில் ஐடி காட்டும். பார்க்க படம் கீழே,
நண்பர்களே, ஒரே ஒரு டிக் மார்க் தான் நமது மெயில் ஐடியை காட்டவும், மறைக்கவும் உள்ளது.
அப்புறம், இந்த வழியில் தான் நமது மெயில் ஐடி மற்றவர்களுக்கு தெரிகிறது. இதனால் தான் தெரியாதவர்களிடமிருந்து நமக்கு மெயில் வர வாய்ப்பு உள்ளது. அதே போல நிறைய மெயில் ஐடிகளை கலெக்ட் செய்து BULK மெயில் அனுப்பவும் அவர்களுக்கு வசதியாக உள்ளது.
எனவே முடிவு பண்ணிக்கங்க. மெயில் ஐடி மற்றவர்களுக்கு காட்டணுமா? வேணாமான்னு?
உங்கள் பிளாக்கில் வரும் கருத்துக்கள் உங்கள் மெயில்க்கு(COMMENT NOTIFICATION EMAIL) வர என்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈசி தான்.
1. DASBOARD இல் SETTINGS கிளிக்கவும்.
2. SETTINGSஇல் COMMENTS கிளிக்கவும்.
3. Comment Notification Email என்பதை தேடவும். கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் உள்ள கட்டத்தில் நமக்கு தேவையான மெயில் ஐடி அங்கே கொடுத்து SAVE செய்யவும். அவ்ளோ தான்...
நான் வீட்டிலோ, அல்லது இணைய இணைப்பு இல்லாத சமயங்களில் இந்த வசதி மூலம் தான் மொபைலில் மெயிலில் வந்துள்ள கருத்துக்களை பார்ப்பேன். ஏனெனில் மொபைலில் ப்ளாக் லோடிங் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் மெயில் சீக்கிரம் லோட் ஆகி விடும்.
எனது பிளாக்குக்கு மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவேட் செய்யும் படி சில நண்பர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கவும். ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல.
உங்கள் பிளாக்கில் வரும் கருத்துக்கள் உங்கள் மெயில்க்கு(COMMENT NOTIFICATION EMAIL) வர என்ன செய்ய வேண்டும்? ரொம்ப ஈசி தான்.
1. DASBOARD இல் SETTINGS கிளிக்கவும்.
2. SETTINGSஇல் COMMENTS கிளிக்கவும்.
3. Comment Notification Email என்பதை தேடவும். கடைசி ஆப்சனாக இருக்கும். அதில் உள்ள கட்டத்தில் நமக்கு தேவையான மெயில் ஐடி அங்கே கொடுத்து SAVE செய்யவும். அவ்ளோ தான்...
நான் வீட்டிலோ, அல்லது இணைய இணைப்பு இல்லாத சமயங்களில் இந்த வசதி மூலம் தான் மொபைலில் மெயிலில் வந்துள்ள கருத்துக்களை பார்ப்பேன். ஏனெனில் மொபைலில் ப்ளாக் லோடிங் ஆக கொஞ்சம் நேரம் எடுக்கும். ஆனால் மெயில் சீக்கிரம் லோட் ஆகி விடும்.
எனது பிளாக்குக்கு மொபைல் டெம்ப்ளேட் ஆக்டிவேட் செய்யும் படி சில நண்பர்கள் வலியுறுத்தி இருக்கிறார்கள். அவர்களுக்கான பதிலை இந்த பதிவில் பார்க்கவும். ப்ளாக் ஓனர்களுக்கு ஓர் வேண்டுகோள். இது மொக்கை பதிவு அல்ல.
இன்றைய பொன்மொழி:
உள்ளூர் மாப்பிள்ளையும் உழுத மாடும் ஒண்ணுதான்!
இன்றைய விடுகதை:
முத்துக்கு உவமை
சொல்லுக்கு உரிமை. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: சேவல்
முந்தைய விடுகதைக்கான இடுகை: பேஸ்புக், டிவிட்டர், கூகிள் ப்ளஸ், RSS - நமது தளங்களில் வைப்பது எப்படி?
25 கருத்துரைகள்:
தகவலுக்கு நன்றி பாஸ்
Pakirvukku nanri....
இன்று என் வலையில்
தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?
பயன்படக்கூடிய தகவல்-ன்னே
தகவலுக்கு நன்றி பாஸ்
ஏற்கனவே வேலை ஆகீற்ருது.எனவே தகவலுக்கு மிக்க நன்றி சகோ
வாழ்த்துக்கள் ....
நன்றிங்க!
மிகவும் பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றிங்க சகோ
நல்ல தகவல்..
அதையும் பொருமையாக விளக்கி தெளிவாக சொன்னீர்கள்...
பகிர்வுக்கு நன்றி...
உபயோகமான பதிவு. நன்றி
பர்சனலா திட்டுகிரவனுககிட்டே இருந்து தப்பிக்க நல்லவழி ஹா ஹா ஹா ஹா சூப்பர் மக்கா நன்றி...!!!
நல்ல தகவல்
நன்றி...
இப்படி தான் எல்லோருக்கும் சொல்லி குடுக்கணும்.. குட்
தேவையான தகவல்.
பயனுள்ள தகவல் தகவலுக்கு நன்றி
உபயோகமான பதிவுக்கு நன்றி...!
தகவலுக்கு நன்றி மச்சி..
நல்ல தகவல் மிக்க நன்றி.
வணக்கம் மாப்பிள!
நல்ல தகவல்..! ஆனா இந்த டாஸ் போர்ட்டை பார்க்கவே மயக்கம் வருது இதில வேற அங்க போங்க இங்க கிளிக் பண்ணுங்கன்னா.. வேலைக்காகாது மாப்பிள நமக்கு!!!-:)
நல்லதகவலுக்கு நன்றி
ரைட்டுடு..டு
நன்றி சகோ...
எனது புளொக்கின் மெயில் வேறு என்பதால் எனது மெயிலை நான் திறந்த புத்தகமாகவே விட்டு விட்டேன்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution
விடை மெயிலில் வருகிறது...
விடயங்களுக்கு நன்றி.
தகவல் பகிர்வினிற்கு நன்றி - பிரகாஷ் - வாழ்க வளமுடன் - நட்புடன் சீனா