நண்பர்களே,
இந்த தலைப்பில் ஒரு சிறு தகவல் எழுத வேண்டும் என்ற யோசனை கடந்த வாரம் எனக்குள் உதித்தது. இரண்டு விபத்துகளை நான் கேள்விப்பட்டது தான் அதற்கு காரணம்.
கடந்த வாரம் தினமலரில் ஒரு விபத்து செய்தி படித்தேன். ஒரு இரு சக்கர வாகனத்தில் இரண்டு நண்பர்கள் பயணம் செய்கையில் வாகனத்தின் ஹேன்ட்பாரில் ஷேர் ஆட்டோவின் சைடு கம்பி மாட்டியதில் இரு சக்கர வாகனம் நிலை தடுமாறி நடு ரோட்டில் அந்த நண்பர்கள் விபத்துக்குள்ளானார்கள். அதில் பின் சீட்டில் அமர்ந்திருந்தவரின் தலையில் பின்னால் வந்த ஒரு பேருந்தின் சக்கரம் ஏறி அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த செய்தி படித்தவுடன் என் மனம் கலங்கியது. ஏனெனில் எவனோ ஒருத்தன் செய்த தவறால் ஒரு அப்பாவி பலியாவதை என்னால் பொறுக்க முடியவில்லை. அதோடு இந்த விபத்தை செய்தியாக போட்ட தினமலரில் அவர்கள் இருவரும் ஹெல்மெட் அணியவில்லை என்பதை அடைப்பு குறிக்குள் குறிப்பிட்டு இருந்தார்கள். ஏன் இவ்வாறு குறிப்பிடுகிறார்கள் என்றால், ஹெல்மெட் இல்லாமல் விபத்தில் உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என ஒரு சட்டம் இருக்கிறது. அந்த சட்டத்தின் ஆதாரத்துக்காக இரு சக்கர வாகன விபத்தில் உயிரிழப்போர் ஹெல்மெட் அணிந்திருந்தாரா இல்லையா என குறிப்பிடுகிறார்கள்.
மதுரையில் இந்த ஷேர் ஆட்டோக்களின் அராஜகம் ரொம்ப ஓவரா இருக்கு. முறையான உரிமம் இல்லாமை, விதிகளை மீறல், அதிக வேகம், அதிக பயணிகள், ஆடும் சீட்கள், அனுபவமில்லா ஓட்டுனர்கள் என சொல்லிக் கொண்டே போகலாம். அதிலும் ஷேர் ஆட்டோவின் ஸ்பெஷலே நினைத்த இடத்தில ஏறலாம், இறங்கலாம். இந்த காரணத்தினாலேயே ஷேர் ஆட்டோவை விரும்புகிறவர்கள் இருக்கிறார்கள். ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரோட்டை பார்த்து ஓட்டுவதை விட, சாலையோரத்தை பார்த்தே ஓட்டுகிறார்கள். யாராவது கை காட்டுகிறார்களா, ஷேர் ஆட்டோவை அழைக்கிறார்களா என பார்த்துக் கொண்டே ஓட்டுகிறார்கள். இந்த ஷேர் ஆட்டோக்கள் பெருக்கத்திற்கு அரசு டவுன்பஸ்களும் மறைமுகமாக உதவுகிறது. அது எப்படியெனில் இப்போது ஒரு சில பஸ்ஸை தவிர அனைத்து பஸ்களும் எல்எஸ்எஸ், எக்ஸ்ப்ரஸ், என ஒரு போர்டையும் போட்டு அதிக காசையும் வசூல் செய்து கொண்டு சில நிறுத்தங்கள் மட்டுமே நிற்கும் வகையில் இயக்கப்படுகிறது. இதனாலேயே அந்த பஸ்கள் நிற்காத இடங்களுக்காக ஷேர் ஆட்டோக்கள் முளைக்கின்றன. அதுவும் எண்ணிலடங்கா எண்ணிக்கையில். எல்லா ஊரிலும் இந்த ஷேர் ஆட்டோக்கள் இருக்கின்றன. இந்த ஷேர் ஆட்டோக்களை ஒரு முறைப்படுத்தி பயணிகள் எண்ணிக்கையில் கவனம் கொண்டு அனுபவமுள்ள ஓட்டுனர்களை வைத்து இயக்கினால் ஷேர் ஆட்டோக்களின் பயணம் பாதுகாப்பான பயணமாக இருக்கும். சாலையில் செல்லும் மற்ற வாகனங்களுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.
கடந்த வார இறுதியில் ஒரு விபத்து மதுரை அருகே நடந்தது. மகனும், தந்தையும் அவர்களின் இரு சக்கர வாகனத்தில் உறவினர் வீட்டுக்கு போய்விட்டு தங்கள் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்கள். அவர்கள் சென்றது சிறிய சாலை. ஒரு திருப்பம் அருகே ஒரு நான்கு சக்கர வாகனம் தாறுமாறாக வந்து கொண்டிருப்பதை பார்த்து அவர்கள் இரு சக்கர வாகனத்தை சாலையின் ஓரத்தில் நிறுத்தி விட்டார்கள். அப்படியும் நான்கு சக்கர வாகனம் அவர்களின் மேல் மோதி விபத்தை உண்டாக்கியது. இதில் வாகனம் ஓட்டி வந்த மகன் ஹெல்மெட் அணிந்திருந்தால் தலையில் அடிபடாமல் காலில் எலும்பு முறிவோடு உயிர் தப்பினார். ஆனால் பின்னால் உட்கார்ந்திருந்த தந்தை ஹெல்மெட் அணியாத காரணத்தால் தலையில் அடிபட்டு மருத்துவமனையில் இறந்து விட்டார். இந்த விபத்திற்கு காரணம் நான்கு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் நல்ல குடி போதையில் இருந்திருக்கிறார்கள். இதனாலேயே அந்த விபத்து நிகழ்ந்திருக்கிறது.
ஹெல்மெட் அணிந்திருந்தால் தலைக்காயம் ஏற்படாமல் தவிர்க்கலாம். ஏனெனில் தலைக்காயம் ஏற்பட்டால் உயிரிழப்பை தடுப்பது இயலாமல் போகிறது. எனவே இரு சக்கர வாகனத்தில் பயணிப்போர் ஹெல்மெட் அணிதல் மிக அவசியம். ஏதேனும் விபத்து நிகழ்ந்தால் தலைக் காயம் இன்றி தப்பி விடும். அதோடு சாதா ஹெல்மெட் அணியாமல் தரமான ஐஎஸ்ஐ சான்றிதழ் பெற்ற ஹெல்மெட் வாங்கி அணியவும். நமது தலைக்கு ஏற்ற சரியான அளவு பார்த்து ஹெல்மெட் வாங்க வேண்டும். லூசாக இருந்தால் ஹெல்மெட்டின் முக்கியத்துவம் குறைந்து விடும். ஹெல்மெட் அணிந்திருந்தால் மட்டுமே விபத்தில் ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டால் இன்சூரன்ஸ் பணம் முழுமையாக கிடைக்கும். ஹெல்மெட் இல்லையென்றால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என்பதையும் கவனத்தில் கொள்க.
ஆக நண்பர்களே, ஷேர் ஆட்டோக்கள் பெருகி விட்ட காரணத்தால் நாம் தான் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் தவறாமல் ஹெல்மெட் அணியுங்கள்.
படங்கள் கூகிள் தேடல் வழியில் பெறப்பட்டது
இன்றைய பொன்மொழி:
ஒரு காசு பேணின் இரு காசு சேரும்!
இன்றைய விடுகதை:
டாக்டர் வந்தாரு
சட்டையை கழட்டினாரு
கேணிக்குள் குதிச்சாரு. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...
விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (thaiprakash1@gmail.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு:
மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: பச்சைக்கிளி
முந்தைய விடுகதைக்கான இடுகை:
32 கருத்துரைகள்:
Manasa kalankadikkum thakaval
Manasa kalankadikkum thakaval
// ஷேர் ஆட்டோக்கள் பெருகி விட்ட காரணத்தால் நாம் தான் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள வேண்டும். இரு சக்கர வாகனம் பயன்படுத்துவோர் தவறாமல் ஹெல்மெட் அணியுங்கள். //
மிகச் சரியாய் சொன்னீர்கள் நண்பரே
தலைக்கவசம் உயிர்கவசம் தானே
//ஹெல்மெட் இல்லாமல் விபத்தில் உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என ஒரு சட்டம் இருக்கிறது.//
இது வேற இருக்கா?
ஷேர் ஆட்டோக்கள் பின்னால் வண்டியில்
போவது அதைவிட ஆபத்து. எப்ப, எங்க
நிப்பாட்டுவாங்கன்னு சொல்ல முடியாது.
விழிப்புணர்வு பதிவு நண்பரே .
நாம ஒழுங்கா போனாலும் எதிரில் வருபவன் ஒழுங்கா வரணுமே.
நல்ல தகவல் நண்பா ,பகிர்வுக்கு நன்றி
ஷேர் ஆட்டோக்களை வழிமுறைப்படுத்துவது மிக முக்கியம். எல்லாம் காவல்துறையின் கையிலேயே இருக்கிறது. ஆனால் சட்டங்கள் கடுமையாக, கடுமையாக அவர்கள் அதிக லஞ்சம் வாங்குவதிலேயே குறியாக இருந்தால் என்ன செய்வது?
அவசியமான பதிவு!
நல்ல விழிப்புணர்வுப் பதிவு பிரகாஷ்..
ஷேர் ஆட்டோக்கள் எல்லாம் பெரும்புள்ளிகளுடையவை..அவர்களை யார் கண்ட்ரோல் செய்வது?
மாப்ள மக்கள் தொகைய குறைக்க மக்களே முடிவு பண்ணிட்டாங்களா....எப்போ தான் திருந்துவாங்க....இவங்க சாவறது இல்லாமே இவங்கள நம்பிட்டு இருக்க குடும்பத்தையும் சாவடிக்கராங்களே
ஷேர் ஆட்டோ என்றால் எனக்கும் எரிச்சல்தான் ......
நல்ல விழிப்புனர்வு பதிவு பாஸ்
உசிர காப்பாத்துங்கப்பா முதலில!
ஹெல்மெட் இல்லாமல் விபத்தில் உயிரிழந்தால் இன்சூரன்ஸ் பணம் கிடைக்காது என ஒரு சட்டம் இருக்கிறது.//
இது எனக்கு புது தகவல், நன்றி...
கொய்யால, சைனாக்காரன், அமெரிக்கா'காரன்,ரஷ்யாகாரன், இன்னும் மேலைநாட்டுகாரனுக சைக்கிள்ல போனா கூட ஹெல்மெட் வச்சிட்டு போறான் நம்ம ஆளுங்கதான், பைக்குல போனா கூட ஹெல்மெட் வைக்காம உயிரை விடுராணுக அநியாயமாக....!!!
விழிப்புணர்வு பதிவு, இனியாவது திருந்துரானுகளா பார்ப்போம்...!!!
நல்ல ஒரு விழிப்புணர்வு பதிவு மக்கள்கொஞ்சம் யோசிக்கனும்.
நல்ல விழிப்புணர்வுப் பதிவு பிரகாஷ்.///(Templade)
சேலத்திலேயும் இதே அக்கபோர்தான் சாரே......முக்கா வாசி வண்டி கவர்மெண்ட்டு ஆளுங்கலோடது.....அதனால அவங்க பண்ற அழிச்சாட்டியம் இருக்கே......ஐயையையோ....சொல்லி மாளாது.
ஒரே விழிப்புணர்வுப் பகிர்வாப் போட்டுத் தாக்குங்க சகோ .வாழ்த்துக்கள் .உங்க நல்ல மனசுக்கும் பகிர்வுக்கும் ...........
சிறப்பான விழிப்புணர்வு பதிவுங்க பிரகாஷ்.
பாராட்டுக்கள்.
பிரகாஷ் நல்லாதான்யா இருந்தாரு? திடீர்னு விழிப்புணர்வுப்பதிவா போடறாரே? அவ்வ்வ்
இன்சுரன்ஸ் சமாச்சாரம் இல்ல நம்ம தமிழனுக்கு ஜுஜுபி மாட்டர்.. கொடுக்க வேண்டியவங்களுக்கு கொடுத்தா, லைசன்ஸ் இல்லாத ஆளுக்கு கூட செத்த பிறகு லைசன்ஸ் கொடுக்கும் தேசம் இது
வணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
விழிப்புணர்வு பதிவு நண்பரே ...
சரியாத்தான் சொல்லியிருக்கீங்க. ஆனால் எத்தனை பேர் இதை படிச்சுட்டு திருந்த போறாங்க.
விழிப்புணர்வுப் பதிவு
/ஷேர் ஆட்டோ ஓட்டுனர்கள் ரோட்டை பார்த்து ஓட்டுவதை விட, சாலையோரத்தை பார்த்தே ஓட்டுகிறார்கள். /
அருமையான பதிவு பாரட்ட வார்த்தைகள் இல்லை ..
சில பல தடவைகள் ஆக்சிடண்டில் பாதிக்கபட்டவன் என்னும் முறையில், உங்களின் மற்றும் கோகுலின் இது போன்ற விழிபுனர்வூட்டும் பதிவுகள் முக்கியமாக படுகின்றன. நன்றிகள்
அருமையானதொரு விழிப்புணர்வுப் பதிவு.
அன்பின் பிரகாஷ் - அருமையான விழிப்புணர்வுப் பதிவு - வாழ்க வளமுடன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பாதிக்கப்படுறது பாதி பேரு மத்தவங்க தவறால தான்..
ஹெல்மெட் தலையில் மாட்டுனா மட்டும் பத்தாது..அதுல இருக்குற பெல்டையும் போடணும்..இல்லேனா ஹெல்மெட் எகிறி விழுந்திடும்..
நல்ல பதிவிற்கு நன்றி சகோ.