
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
![]() |
இனிய நண்பர்களே,
எப்படி செய்வது?
dasboard--- settings ---- email&mobile பக்கத்திற்கு செல்லவும். அதில் show mobile template என்பதில் Yes. Show mobile template on mobile devices. என்ற option ஓகே செய்திருந்தால் அதை மாற்றி No. Show desktop template on mobile devices. என்பதை ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
கமெண்ட் பாக்ஸ் popup window எப்படி வைப்பது?
dasboard --- settings ---- comments ---- comment form placement --- popup window optionஐ ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
பார்க்க படம்.
இன்றைய காலகட்டத்தில் ப்ளாக் புதியதாக உருவாக்கவும், உருவாக்கிய ப்ளாக்கை இம்ப்ரூவ் செய்யவும் பல டிப்ஸ்கள் உள்ளன. இன்றைய நாளில் ப்ளாக்கை கம்பியூட்டரில் வாசிப்பதோடு, மொபைலில் வாசிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மொபைலில் வாசிப்பவர்களுக்கு ஏற்ற வகையில் உங்கள் ப்ளாக் இருக்கிறதா என ஒரு முறையாவது சோதனை செய்து பார்த்தது உண்டா? இல்லையென்றால் சில டிப்ஸ் சொல்றேன். அதன்படி உங்கள் ப்ளாக்கை மாற்றிக் கொள்ளுங்கள்.
1. முதலில் உங்கள் ப்ளாக்கை mobile view வசதியை enable செய்துள்ளீர்களா? முதலில் அதை disable செய்யுங்கள்.
எப்படி செய்வது?
dasboard--- settings ---- email&mobile பக்கத்திற்கு செல்லவும். அதில் show mobile template என்பதில் Yes. Show mobile template on mobile devices. என்ற option ஓகே செய்திருந்தால் அதை மாற்றி No. Show desktop template on mobile devices. என்பதை ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
இவ்வாறு மாற்றுவதால் என்ன பயன் என கேட்கறீர்களா? மொபைலில் உங்கள் ப்ளாக் கம்ப்யுட்டரில் ஓபன் ஆவது போல மொபைலிலும் ஓபன் ஆகும். மேலும் புதிய பதிவை தமிழ்மணம் மற்றும் இன்ட்லியில் எளிதாக இணைக்கலாம். அதோடு தமிழ்மணம் ஓட்டும் எளிதாக போடலாம். இந்த விஷயம் பற்றி ரஹீம் ஹசாலி ஏற்கனவே பதிவாக போட்டுள்ளார். அவர் குறிப்பிடாத விசயங்களையும் சொல்லத்தான் இந்த பதிவு.
2. comment box popup window
உங்கள் பதிவுக்கு கமென்ட் போடுவதற்கான கமென்ட் பாக்ஸ் பதிவுக்கு கீழே வைத்திருப்பீர்கள். இதனால் மொபைலில் இருந்து கமென்ட் போடுவது சற்று சிரமமான விஷயம் தான். எப்படியெனில், உங்கள் பதிவை ஓபன் செய்ய ஒரு முறை லோட் ஆகும். அப்புறம் கமென்ட் பாக்சில் கிளிக் செய்தால் இன்னொரு முறை reload ஆகும். அப்புறம் நம்முடைய கமெண்ட்டை டைப் செய்து முடித்து apply கொடுத்தால் இன்னொரு முறையும் reload ஆகும். மறுபடியும் apply கொடுத்த பின்னர் மறுபடியும் ஒருமுறை reload ஆன பின் பதிவிற்கு கீழே நம் கமென்ட் காட்டும். ஆக, மொபைலில் இருந்து ஒரு பதிவுக்கு கமென்ட் போட சுமார் நான்கு முறை அந்த பதிவு முழுமைக்குமே reload ஆகிறது. இதனால் உங்கள் பதிவுக்கு மொபைலிலிருந்து படிப்பவர்களிடமிருந்து கமென்ட் வருவது குறைய வாய்ப்பு இருக்கு. மொபைலில் இருப்பவர்களும் எளிமையாக கமென்ட் போட உங்கள் கமென்ட் பாக்ஸை popup window ஆக வைக்கவும். இதனால் மொபைலில் loading நேரம் குறையும். கமெண்ட்ஸ் நிறைய கிடைக்கும்.
கமெண்ட் பாக்ஸ் popup window எப்படி வைப்பது?
dasboard --- settings ---- comments ---- comment form placement --- popup window optionஐ ஓகே செய்யவும். பின்னர் save settings கொடுக்கவும்.
பார்க்க படம்.
இந்த முறையில் வைப்பதன் மூலம் கம்பியூட்டரில் கமெண்ட் போடுபவர்களுக்கும் எளிது. பதிவு அப்படியே இருக்கும். கமென்ட் பாக்ஸ் புது window ஆக ஓபன் ஆகும். இன்னொரு முக்கியமான விஷயம் கும்மி கமென்ட் போட இந்த முறைதான் எளிது.
3. உங்கள் ப்ளாக் template மொபைலுக்கு ஏற்றதா?
அடுத்ததா உங்க ப்ளாக் மொபைலில் முழுமையா ஓபன் ஆகுதான்னு template வைத்தவுடன் செக் பன்னி பாருங்கள். ஏனெனில் சிலரது ப்ளாக் மொபைலில் ஓபன் ஆகும், ஆனால் தமிழ் எழுத்துக்கள் தெரியாது. இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலமாக வாசிக்க இயலாது. இது ஒரு சில template பிரச்சனையாக இருக்கலாம். எனவே புதிய templateஐ உங்கள் பிளாக்கில் வைக்கும் போது மொபைலில் படிப்பவர்களுக்கும் பிரச்சனை இல்லாதவாறு கவனமாக தேர்ந்தெடுங்கள்.
நண்பர்களே, மேற்கண்ட மூன்று வழிகளையும் இன்றே செக் செய்து கொள்ளுங்கள். இதனால் உங்கள் ப்ளாக்கை மொபைல் மூலம் படிப்பவர்களின் எண்ணிக்கை கூடும். தமிழ்மணம் ஓட்டும் கிடைக்கும். கமென்ட்டுகளும் கிடைக்கும். வாசகர்களும் அதிகரிப்பார்கள்.
59 கருத்துரைகள்:
வணக்கம் நண்பர்களே, தமிழ்மணம் இணைக்கவும். நன்றி.
என் பதிவை உங்க புது மொபைல்ல பார்த்து ஓர் மொபைல் கமெண்ட் போடுங்க...:)
நன்றிங்க மாப்ள நீங்க சொன்னவைகளை செய்து விட்டேன்....பகிர்வுக்கு நன்றி!
அப்படியே ஒரு மொபைல் இங்க அனுப்புங்க...-:)
நல்ல பயனுள்ள பதிவு பிரகாஷ்.
எனது பதிவிற்கும் முயற்சி செய்கிறேன்.
வாழ்த்துக்கள்.
@ரெவெரி
என் பதிவை உங்க புது மொபைல்ல பார்த்து ஓர் மொபைல் கமெண்ட் போடுங்க...:)///
மொபைல்ல வாசிக்கறபோ போடறேன்...
@விக்கியுலகம்
நன்றிங்க மாப்ள நீங்க சொன்னவைகளை செய்து விட்டேன்....பகிர்வுக்கு நன்றி!///
உடனே செய்தமைக்கு நன்றி மாம்ஸ்.
@ரெவெரி
அப்படியே ஒரு மொபைல் இங்க அனுப்புங்க...-:)///
கூரியர்ல அனுப்பியிருக்கேன்... மறக்காம வாங்கிக்கங்க.
@Rathnavel
நல்ல பயனுள்ள பதிவு பிரகாஷ்.
எனது பதிவிற்கும் முயற்சி செய்கிறேன்.//
கண்டிப்பாக செய்யுங்கள்.
நன்றி பிரகாஷ்... மொபைல்ல வாறமாதிரி பண்ணிடுவோம்
@Real Santhanam Fanz
நன்றி பிரகாஷ்... மொபைல்ல வாறமாதிரி பண்ணிடுவோம்///
ஓகே.. தேங்க்ஸ்
நல்ல பயனுள்ள பதிவு
மொபைல் DESK TOP VIEW வச்சா
LOADING ஆகிறதுக்கு ரொம்ப லேட் ஆகும் ..DESK TOP PAGE மட்டும் 500 KB
அதற்கு மேல இருக்கும் இதனால சில நெட்வொர்க் SPEED ரொம்ப கம்மியா இருக்கும் . 3G USERS நீங்க சொல்லறது நல்லா வேலை செய்யும் ........
நன்றி ....
@stalin
மொபைல் DESK TOP VIEW வச்சா
LOADING ஆகிறதுக்கு ரொம்ப லேட் ஆகும் ..DESK TOP PAGE மட்டும் 500 KB //
நீங்க சொல்றது சரி தான்... இருந்தாலும் தமிழ்மணம் ஒட்டு, கமென்ட் இடுதல் என்ற பார்வையில் தொகுத்துள்ளேன்.
@stalin
நான் micromax Q7 யூஸ் பண்றேன்... 2G தான்...
எச்சரிக்கை பதிவர்களே! வார்னிங்http://pc-park.blogspot.com/2011/09/warning.html
நல்ல பதிவு..இதுவரை நான் முயற்சி செய்து பார்க்காதது..:-) செய்து பார்க்கிறேன்...பிறகு கருத்திடுவேன்.. :-) நன்றி !
நன்றி நண்பரே அப்பிடித்தான் வைத்திருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி
அல்லாத்திலையும் குத்தியாச்சு
@சின்னப்பயல்
நல்ல பதிவு..இதுவரை நான் முயற்சி செய்து பார்க்காதது..:-) செய்து பார்க்கிறேன்...பிறகு கருத்திடுவேன்.. :-) நன்றி !//
ஓகே... பிறகு கருத்திடுங்கள். விளக்கமாக...
@M.R
நன்றி நண்பரே அப்பிடித்தான் வைத்திருக்கிறேன்
பகிர்வுக்கு நன்றி///
அதான் நல்லது....
பயனுள்ள தகவலுக்கு நன்றி.
NANRI PRAKASH!!!
I WILL DO THESE THINGS IMMED.
IS IT POSSIBLE TO DO IT IN MOBILE ??E TO DO IT IN MOBILE ??
HE.....HE.....BY MOBILE !!!
Thanks for sharing
பிரகாஷ்,
எனக்கு மிகவும் பயனுள்ளதாய் இருந்தது. பகிர்வுக்கு மிக்க்க்க்க நன்றி.
ஒரு டவுட்டு. அதென்ன “ இது மொக்கை பதிவு அல்ல”.
பயனுள்ள பதிவு நண்பா.
நான் ஆல்ரெடி மொபைல் டெம்பிளேட்டிற்கு மாற்றி வைத்திருக்கிறேன்.
நன்றி.
டெக்னிக்கல் போஸ்ட் போடுவதால் இன்று முதல் நீங்கள் டெக்னிக் பிரகாஷ் என அழைக்க்கப்படுவீர்
aakaa - paravaalla - கம்பியூட்டர் பிளாக் டிப்ஸ் அருமை - பயனுள்ள தகவல் - பகிர்வினிற்கு நன்றி -நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
பதிவு எழுதிட்டீங்க.. மொபைல் எப்ப அனுப்பப்போறீங்க??
Dear Prakash,
Thanks for the information.
Do continue.
-Subramaniyan D
பயனுள்ள பதிவு
இன்று என் வலையில்
பெண்கள் எல்லாம் தெய்வமா ?
மாப்ள ரைட்டு..
மாப்ள ரைட்டு..
தம்பீ!
பயன்தரும் பதிவு!
த.ஓ13
புலவர் சா இராமாநுசம்
வணக்கம் ப்ரகாஷ் சார்! கும்புடுறேனுங்க! இனிய செவ்வாய்க்கிழமை வாழ்த்துக்கள்!
மிகவும் அவசியமான பதிவு சார்! ஏன்னா நான்கூட மொபைலிலும், ஐ பேட்டிலும் தான் அதிகம் ப்ளாக்குகள் படிக்குறேன்! ஸோ, எல்லோரும் அந்த செட்டிங் செஞ்சுகிட்டா, சூப்பரா இருக்கும்!
எல்லாமே அசத்தலான தகவல்கள்...
நன்றிப்பா
இது மொக்கைப் பதிவா இல்லையான்னு நாங்க தான்யா சொல்லணும்..
ஆமா, இது நல்ல பதிவு தான்.
நீங்க நூறு ஆண்டு நல்லா வாழனும்
நன்றி தகவழுக்கு
மொபைலுக்கு ஏற்ற டெம்ப்ளேட் எண்டு எப்படி செக் பண்ணுறது
ஓகோ அப்ப இனி எல்லாம் மொபைல் தானா
?
எலேய் தம்பி, அப்பிடியே அண்ணனுக்கு ஒரு மொபைலும் பாசல் அனுப்புலெய்...
பயனுள்ள தகவல் மக்கா..!
நல்ல டிப்ஸ் பாஸ், சமீபத்தில் என்னுடைய ப்லாகில் மொபைல் வசதிக்கு மாற்றியிருந்தேன், ஆனால் முன்பு விழுந்த ஓட்டுக்கள் இப்பொழுது வருவதில்லை. உங்களுடைய பதிவு எனக்கு பயனுள்ளதாக இருக்கும்.
பதிவர்களுக்கு அவசியமான பதிவு
மாற்றி விடுகிறேன், தேங்க்ஸ் பாஸ்
நன்றி
பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி சகோ.
விருப்பவாக்குகள் போட்டுவிட்டேன் ....
செய்து விடுகிறேன் நண்பா. நன்றி.
நல்லதொரு பகிர்வு சகோ
வாழ்த்துக்கள்
நல்ல தகவல் . பகிர்வுக்கு நன்றி
இன்றய அரசியல்வாதியில்
எமெர்ஜென்சி, எம்.ஜி.ஆர்.மரணம், ராஜீவ்கொலை, இமானுவேல் சேகரன்(அரசியல் கேள்வி பதில்கள் பாகம்-2)
ஒரு முறை வந்துதான் பாருங்க...உங்களுக்கும் பிடிக்கும்
நல்ல பயனுள்ள பதிவு!!!
அன்பரே மொபைல் template பயன்படுத்தினால் பதிவை எளிதில் படிக்க முடியும் .side bar இல் உள்ள gadgets வராது பதிவு மட்டுமே இருப்பதால்
எளிதாக படிக்கலாமே .டெஸ்க்டாப் view இல் இது சாத்தியமல்ல எனது சொந்த அனுபவம் இது ..அது மட்டுமில்லாமல் view web version என்று பதிவின் கீழ் இருக்கும் அதில் சுட்டி இன்ட்லி யில் வாக்கிட முடியும் ..
நல்ல தகவல் நண்பா :::
தமிழ் மணத்தில் உங்களுக்கு ஓட்டு போட்டு பாத்தேன்யா என்னுடைய டெலிபோன் மூலம் உண்மைதான்யா..!! கொமொன்ஸ் போடுறதும் ஈஸியா இருக்கையா..