CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கோடாலியும் பிறந்தநாள் பரிசும்!

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
மழுங்கிய கோடாரி
         ஒரு தடவ ஒரு மரவெட்டிக்கு ஊரிலே பெரிய முதலாளி கிட்ட வேல கெடச்சது. மொத நாள் காட்டுக்கு போயி பதினெட்டு பெரிய மரங்கள வெட்டிட்டு வந்தான். அதுல ஆச்சர்யப்பட்ட மொதலாளி மரவெட்டியை ரொம்ப பாராட்டி கொஞ்சம் காசு அதிகமாவே தந்தார். ஆனா அடுத்த நாள் பதினஞ்சு மரமே வெட்டினான். அப்புறம் ஒவ்வொரு நாளும் மரத்தோட எண்ணிக்கை கொறஞ்சுகிட்டே வந்துச்சு.
      இதனால நமக்கு தான் திறமை கொறஞ்சு போச்சோன்னு மரவெட்டி ரொம்ப கவலை பட்டான். மொதலாளி திட்டுவார்ன்னு பயத்தோட அவர பாக்க போனான். அவரும் அவன் புலம்பல கேட்டு ரொம்பவே கோவப்பட்டார். அப்புறமா அந்த மொதலாளி அவன் கோடாலிய வாங்கி பார்த்தார். அப்போ தான் அவருக்கு விசயமே புரிஞ்சுச்சு. அவன் கோடாலி தீட்டாம மழுங்கி இருந்துச்சு. அத பார்த்து அவன் கிட்ட இப்படி மழுங்கி இருந்தா எப்படி மரத்தை வெட்டும்? அதை தீட்ட வேணாமா? அப்படின்னு கேட்டார். மரவெட்டி வேலை செய்யும் ஆர்வத்துல தீட்ட மறந்துட்டேன் அப்படின்னு சொன்னான். அதோட மரம் வேட்டுறதுக்கே நாள் முழுசும் போயிருது. அதனால மறந்துட்டேன்னு சொன்னான். 
நீதி: புத்திசாலித்தனம் இல்லாத கடும் உழைப்பால் பலன் குறைவே!

பிறந்தநாள் பரிசு
       அப்பா... அப்பா... என ரொம்ப நேரமா கூப்பிடுட்டே இருந்தாள் மகள். வேலையில் இருந்த அப்பா எரிச்சலில் என்ன? என மகள் பக்கம் திரும்பினார். நாளைக்கு உங்களுக்கு பர்த் டே வருதுல... அதான் உங்களுக்கு ஒரு பரிசு தர போறேன் அப்படின்னு ஒரு பெட்டிய நீட்டினாள். அவளது பிஞ்சு கைகளால் தங்க பேப்பர் சுத்தி அந்த பேட்டி அழகாக இருந்துச்சு.
       பெட்டிய திறந்து பார்த்த அப்பாவுக்கு ரொம்ப கோவம் வந்துச்சு. பேட்டி காலியா இருக்கே, யாருக்காவது பரிசு தரும் போது பெட்டிக்குள்ள ஏதாவது வச்சு தரணும்னு உனக்கு தெரியாதா? என மகளை திட்டினார். இல்லைப்பா, உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.
நீதி: கண்களுக்குத் தெரியாத பலவும் விலைமதிப்பற்றதாகவே இருக்கும்!

இன்றைய பொன்மொழி:
புலன்களின் ஆளுகையால் வாழ்கிறவன் துன்பத்தில் சிக்குண்டு அழிவான்!

இன்றைய விடுகதை:
தம்பிக்கு எட்டுவது அண்ணனுக்கு எட்டாது. அது என்ன?
விடை அடுத்த இடுகையில்...       
       
    விடை தெரிந்தவர்கள் இங்கே கருத்துரையில் பகிர வேண்டாம். எனக்கு மெயில் (admin@tamilvaasi.com) அனுப்புங்கள். சரியாக சொல்பவர்களுக்கு ஒரு மின் புத்தக இணைப்பு அனுப்பப்படும்.
குறிப்பு: 
    மெயிலில் விடை அனுப்புகிறவர்கள் விடுகதை கேள்வியையும் சேர்த்தே அனுப்புங்கள். சிலர் வெறும் பதில் மட்டுமே அனுப்புவதால் எந்த விடுகதைக்கான பதிலை முயற்சித்து பார்த்திருக்கிறார்கள் என்பதில் சற்று குழப்பம் ஏற்படுகிறது.
முந்தைய இடுகையில் கேட்கப்பட்ட விடுகதைக்கான விடை: கரும்பு.


18 கருத்துரைகள்:

சம்பத்குமார் said... Best Blogger Tips

first wishes

happy birthday to you brother

சி.பி.செந்தில்குமார் said... Best Blogger Tips

ஹேப்பி பர்த்டே டே டேட்டேட்ட்டே ஹி ஹி ( இன்னா அர்த்தம் ? புரிஞ்சா மெயில் செய்யவும்)

நாய் நக்ஸ் said... Best Blogger Tips

Hi....
Happy
birthday...

Post nalla irukku

Unknown said... Best Blogger Tips

மாப்ள கதைகளா வருதே என்னா மேட்டரு!

ராஜி said... Best Blogger Tips

Happy Birth day brother

Admin said... Best Blogger Tips

நீதிக்கதைகள் அருமை..

சத்ரியன் said... Best Blogger Tips

பகிர்ந்திருக்கும் கதைகள் இரண்டும் சிறப்பானவைகள்.

பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் பிரகாஷ்.

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

உங்களுக்கு பரிசா பெட்டி புல்லா நூறு முத்தம் வச்சிருந்தேன், அப்பா என்றாள் மகள். பதிலைக் கேட்டு மனம் மகிழ்ந்து மகளின் பரிசை அன்போடு ஏற்றுக் கொண்டார்.//

ஆஹா பாசத்தின் வெளிப்பாடு முத்தமாக, சூப்பர்ய்யா...!!!

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

மாப்ள.. புதுமையான பதிவு..

வேரென்னத்த சொல்ல..

கோகுல் said... Best Blogger Tips

கத்தியை தீட்டாதே புத்தியை தீட்டு என்பார்கள்.இவருக்கு கத்தியை தீட்ட வேண்டும் என்ற புதியில்லாமல் போய் விட்டது.நல்ல நீதிக்கதை.

பிறந்தநாள் பரிசு நெகிழ்வுக்கதை.

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

இரண்டு லட்டு திண்ணாச்சி...

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

அன்பு மகளின் முத்தம் இந்த உலகிற்கு சமம்....

அம்பாளடியாள் said... Best Blogger Tips

வாழ்த்துக்கள் சகோ ..

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

நீதிக் கதைகள் சிறப்பாக இருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said... Best Blogger Tips

நல்ல மெசேஜ்கள்.

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம்,பிரகாஷ்! நீதிக் கதைகள் பிரமாதம்.நன்றி!

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நீதிக் கதைகள் அருமை!
பிறந்த நாள் வாழ்த்துக்கள். (சொல்லவே இல்லெ)
பகிர்விற்கு நன்றி நண்பரே!

aalunga said... Best Blogger Tips

பிறந்த நாள் பரிசு கதை ரொம்ப. அருமை....
பகிர்விற்கு நன்றி நண்பா!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1