CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சமையல்காரர் - சிறுகதை

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
"ஹலோ... ஹலோ.... அப்பாதுரை சமையல்காரர் இருக்காரா? நான் கேசவன் பேசறேன்....."


"சார் சொல்லுங்க நான் அப்பாதுரை தான் பேசறேன்... எப்படி சார் இருக்கீங்க, தம்பிக்கு கல்யாண ஏற்பாடு ஆயிருச்சுங்களா?....."


"ஆமா துரை... கல்யாணம் ஏற்பாடாயி தேதியும் குறிச்சாச்சு... சமையலுக்கு உன் தேதி தான் வேணும்....."


"சார் எந்த தேதின்னு சொல்லுங்க... நம்ம புள்ளைக்கு நான் செய்யாம வேற யார் செய்வா? வர்ற ஞாயிறு பிரீ தானே, வீட்டுக்கே வர்றேன். பேசிக்கலாம்....."


"சரி துரை, ஞாயிறு சாயிந்திரமா வந்திரு... தம்பியும் இருப்பான். சமையல் வகைகளை பேசிறலாம்....."


(கேசவன் வீட்டில்)
"வா அப்பாதுரை, உட்காரு... வீட்டுல தங்கச்சி சவுக்கியமா? கடைசி மகளுக்கு கல்யாணம் கூடி வருதா?......"


"இல்லைங்க சார், மொத ரெண்டு மகள்களையும் கஷ்டப்பட்டு கரை ஏத்திட்டேன். கடைசி மவ ஆசைப்பட்டான்னு பீஎட் வரை படிக்க வச்சேன். அதனால மாப்பிள்ளையும் அதுக்கேத்த மாதிரி பாக்கனும்ல. வர்ற வரங்களும் பவுன் அதிகமா எதிர்பாக்கறாங்க. என்ன செய்ய?....."


"சரி துரை, கவலைப்படாத.... சீக்கிரம் ஒரு வரன் அமையும்... அந்த ஆண்டவன் இருக்கான்... நம்பிக்கையை விட்டுடாதே....."


"ஆமாங்க சார் அந்த நம்பிக்கையில தான் இருக்கேன். நான் வேலை பாக்குற ஆபீசிலும் மொத ரெண்டு பொண்ணுங்களுக்காக லோன் மேல லோன் போட்டுட்டேன். அதனால கொஞ்சம் பணக்கஷ்டம் இருக்கு. இவளும் ஒரு ஸ்கூலுக்கு வேலைக்கு போயிட்டு தான் இருக்கா... என்ன சம்பளம் தான் கம்மியா இருக்கு. சரிங்க சார் என் கதையை பேசிட்டு இருக்கோம். நம்ம தம்பி கல்யாண விஷயத்துக்கு வருவோம். சொல்லுங்க சார் என்னென்ன செய்யணும்?......"


"முதல் நாள் நிச்சயதார்த்தம், அதுல இருந்து கல்யாணம் காலை டிபன் முதல் மதியம் சாப்பாடு வரை என்னென்ன செய்யணும்னு இதுல லிஸ்ட் இருக்கு துரை, இதுக்கு மொத்த காண்ட்ராக்ட் எடுத்துக்க. எவளவு செலவு ஆகும்னு கணக்கு போட்டு சொல்லு, அட்வான்ஸா இந்த பணத்தை இப்போ வச்சுக்க......" 


(கல்யாணத்துக்கு மொத்தம் எத்தன நபர்கள் வருவார்கள் என கேட்டு அதற்கான சமையல் சாமான்களையும் குறிப்பெடுத்துக் கொண்டு இறுதி சமையல் காண்ட்ராக்ட் கூலியை சொன்னார் துரை)


"ரொம்ப சந்தோஷம் துரை, ஓரளவு ரீசனபில்லா அமௌன்ட் வந்திருக்கு. அதுக்கு தான் நீ வேணும்னு சொல்றது. நம்ம வீட்டுக்கு நீ எத்தன விஷேசங்களுக்கு சமையல் செஞ்சிருக்க, எல்லோரும் வாயார புகழ்ந்து தான் பேசுவாங்க. எல்லாமே துரை உன்னைய தான் சேரும்......"


"சார் ரொம்ப புகழாதிங்க, நீங்க, நான் கேட்ட சாமான்களை சரியா வாங்கித் தர்றிங்க. என்னையும் உங்க குடும்பத்துல ஒருத்தனா மதிச்சு நடத்தறிங்க. உங்களுக்கு என்னால முடிஞ்சா அளவு செஞ்சு தர்றேன் அவ்வளோதான்......"


(கல்யாணம் சீரும் சிறப்பாக அறுசுவையோடு முடிந்தது. கேசவன் பெருமகிழ்ச்சி அடைந்து துரை கேட்ட தொகையை விட அதிகமாகவே கொடுத்தார்)


(அப்பாதுரை வீட்டில் இரவு...)
"ஊரார் கல்யாணமெல்லாம் சீரும் சிறப்புமா நடக்குது. இந்த மனுசனும் நல்லா ஆக்கிப் போட்டுட்டு வருது. எம் பிள்ளைக்கு ஒரு கல்யாணம் கூட மாட்டிங்குதே. அப்பவே சொன்னேன், அடியே படிச்சு கிழிச்சது போதும், வரன் அமையறது கஷ்டமாயிரும்ன்னு. கேட்டியாடி....." 


"அடியே, கண்ணம்மா, ஏண்டி இப்ப இப்படி அவகிட்ட கத்திட்டு இருக்க, சொல்றத என் மூஞ்சிக்கு முன்னாடி சொல்லத்தொலை...."


"ஆமாய்யா... என் ஆத்திரம் எனக்கு, புள்ளைக்கு வர்றவனையேல்லாம் அம்புட்டு நகை வேணும், இவ்வளவு சீர் வேணும்னு வரிசையா பெரிய லிஸ்ட் சொல்றாணுக. நீ வேலை பாக்குற ஆபீசு கவர்மென்ட்னாலும் அந்த கேண்டீன் சமையல் வேலைக்கு உன் சம்பளம் அந்த காலத்துல இருந்து என்னமோ கம்மியா தான் இருக்கு. அதுல மொத ரெண்டை கரையேத்த வாங்கின லோனு போக தெனம் பொழப்பு ஓட்ட மட்டுமே காசு மிஞ்சுது. இவளும் ஸ்கூலுல வேல பார்த்துட்டு கொண்டு வர்ற காச தான் சேத்து வச்சிட்டு வர்றேன். இப்ப விக்கிற விலைவாசிக்கு இன்னும் நாம நெறைய சேக்கணும் இவ கல்யாணத்துக்கு...."


சரிடி, இந்தா பிடி, கேசவன் ஐயா வீட்டு கல்யாணத்துக்கு சமையல் பணம்... வீட்டு செலவுக்கும், மிச்சத்த சேர்த்தும் வச்சுக்க"


(இரவு அப்பாத்துரைக்கு தூக்கம் வரவே இல்லை. பொண்டாட்டி பேசிய பேச்சு திரும்ப திரும்ப அவர் காதில் ஒலித்தது. கவர்மென்ட் வேலையா இருந்தாலும் வரவு கம்மியா இருக்கே எனவும் யோசித்தார். அப்படியே தூங்கிப் போனார்)


அடுத்த நாள் வழக்கம் போல வேலைக்கு கிளம்பி சென்றார் அப்பாதுரை. அவர் அந்த ஆபிஸ் கேண்டீனில் சமைக்க ஆரம்பித்தார். சிறிது நேரத்தில் அந்த சமையலறையில் கேஸ் வெடித்து சிதறியது, அப்பாதுரையும் தீயில் கருகினார். அங்கே இருந்தவர்கள் தீயணைப்பு வண்டிக்கு சொல்லிவிட்டு அப்பாத்துரையை ஒரு வழியாய் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர் குடும்பம் மொத்தமும் ஆஸ்பத்திரிக்கு வந்தது. ஒவ்வொருத்தரும் அவ்வொரு பக்கமாய் அழுத்த வண்ணம் இருந்தார்கள்.


விஷயம் கேள்விப்பட்டு கேசவன் ஓடி வந்தார். அப்பாதுரை குடும்பத்தாரிடம் பேசி விட்டு அப்பாத்துரை கிடத்தியிருந்த படுக்கைக்கு வந்தார். அப்பாத்துரைக்கு தீக்காயம் முழுதும் இருந்ததால் அவரால் யாரையும் சரியாக அடையாளம் காண முடியவில்லை. இருந்தும் தட்டுத்தடுமாறி கேசவனிடம் பேச முயற்சி செய்தார். கேசவனும் காதை அருகில் கொண்டு சென்றார். 


"ஐயா, எம் புள்ளைகள பாத்துக்கங்க. நான் செத்தா கவர்மேன்ட்டுல இருந்து இன்சூரன்ஸ் பணம், அந்த பணம், இந்தப்பணம் என எப்படியும் ரெண்டு மூணு லட்சம் வரும். அதை எப்படியாவது சீக்கிரம் வாங்கி எம்மக கல்யாணத்த நடத்தீருங்க. என்ன மன்னிச்சுக்கங்க ஐயா, சமைக்கும் போது கேஸ் லைனை பிடுங்கி விட்டுட்டேன் ஐயா"... சொல்லிக் கொண்டே அவர் குரல் விம்மி கண் மூடியது.
-முற்றும்-


(மேற்கண்ட கதையின் கரு உண்மை நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டது. கதாபாத்திரங்களும், சம்பவங்களும் சற்றே கற்பனை கலந்தது.)


20 கருத்துரைகள்:

காட்டான் said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஸ்!
சுருக்கமா அதேநேரம் மனதை கனக்க வைத்துவிட்டீர்கள்.. குடும்பத்துக்காக தியாகம் செய்யும் ஆண்களும் கவனிக்கப்படுவதில்லையோ?

Unknown said... Best Blogger Tips

நெய்பவனுக்கு கோவணம் கூட மிச்சமில்லை...உழுபவனுக்கு பழைய சோறும் கிடைக்காது....மனம் கனக்கும் சிறுகதை

எஸ்.எஸ்.பூங்கதிர் said... Best Blogger Tips

மிக அற்புதமான கதை. பாராட்டுகள்

துளசி கோபால் said... Best Blogger Tips

:-(

Anonymous said... Best Blogger Tips

சோகம்....

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் பிரகாஷ் - எதிர் பார்த்த சோக முடிவு. - இதுதான் நிதர்சன உண்மை. நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

ரைட்டு

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

கனமான கதை!

ராஜி said... Best Blogger Tips

நெஞ்சை கனக்க செய்துவிட்டது உங்கள் சிறு கதை

Yoga.S. said... Best Blogger Tips

வணக்கம் பிரகாஷ்!பெருமூச்சு விடுவது தவிர வேறென்ன முடியும்?இப்படியும் அப்பாக்கள்!

துரைடேனியல் said... Best Blogger Tips

நெகிழவைக்கும் ஒரு கதை. அப்பாத்துரையும் கேசவனும் மறக்கமுடியாத பாத்திரங்கள்.

தமஓ 6.

மதுரை சரவணன் said... Best Blogger Tips

eppadi nanbaa kathaiyum elutha varuthee... vaalththukkal..

Starjan (ஸ்டார்ஜன்) said... Best Blogger Tips

மனதை கனக்க வைத்த சிறுகதை. ஏழ்மையும் இயலாமையும் போட்டிதான் போடுகின்றன. என்ன செய்ய?.. கதை ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள் பிரகாஷ்.

Starjan (ஸ்டார்ஜன்) said... Best Blogger Tips

இதே கான்செப்டை ஜென்டில்மேன் படத்தில் ஷங்கர் யூஸ் பண்ணிருப்பார்.

திண்டுக்கல் தனபாலன் said... Best Blogger Tips

நெகிழ வைத்தது கதை! நன்றி நண்பா !

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

கதை ரொம்ப நெகிழ்ச்சியா இருந்தது. சொன்னவிதம் நல்லா இருக்கு.

RAMA RAVI (RAMVI) said... Best Blogger Tips

அப்பாதுரையின் முடிவு வருத்தமாக இருக்கு. நெகிழவைக்கும் கதை.

Unknown said... Best Blogger Tips

கதை மனதை தொட்டது மட்டுமல்ல
சுட்டது!

புலவர் சா இராமாநுசம்

Rathnavel Natarajan said... Best Blogger Tips

மனதை நெகிழ வைத்து விட்டது பிரகாஷ்.

aalunga said... Best Blogger Tips

இன்று தான் கதையைப் படித்தேன்..
கதையின் இறுதியில் மனதை ஏதோ ஒன்று அழுத்துகிறது..

உங்களுக்குள் ஒரு நல்ல கதாசிரியரும் ஒளிந்திருக்கிறார்.
இன்னும் பல நல்ல கதைகள் எழுத வாழ்த்துகள்!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1