மதிப்புமிக்க தமிழக அரசே....
நலமா இருக்கிங்களா? நீங்க நல்லாத்தான் இருப்பீங்க, என்ன மாதிரி பாமரன்கள் ஏதோ இருக்கோம். இருந்த வேலையும் போச்சு. ஆமாங்க அரசே, உங்கள நம்பி இருந்ததுக்கு என்ன போல நிறைய பேருக்கு வேலை இல்லாம போனதுதான் மிச்சம். இரும்பு பட்டறையில வேல பார்த்துட்டு தான் இருந்தேன். ரெண்டு மூணு மணி நேரம் கரண்ட் கட் ஆனா பரவாயில்லை. நாள் முழுதும் கட் ஆச்சுனா எப்படிங்க அரசே வேலை பாக்க முடியும்? நான் வேல பாத்த கம்பெனிக்காரங்க சின்னதா தொழில் செஞ்சுட்டு இருந்தாங்க. அவங்களால கரண்ட் கட் சமாளிக்க முடியல. அங்க என்னை மாதிரி பத்து பேரு வேலை பார்த்திட்டு இருந்தோம். சம்பளம் கொடுத்து கட்டுபடியாகலைன்னு வேலையை விட்டு நிறுத்திட்டாங்க. வேற பக்கம் போயி வேல பாக்கலாம்னா அங்கேயும் அதே பிரச்னையை சொல்லி வேலை தர மறுக்குறாங்க. வேற பொழப்பு பொழைக்கலாம்னா என்னோட வறுமை தடுக்குது.
எம் பொண்டாட்டியும் மிசின்தறி வேலைக்கு போயிட்டு இருந்தா... அங்கயும் கரண்ட் பிரச்னையை காரணம் காட்டி அவளுக்கும் வேலை போச்சு. எப்பவுமே ஆர்டர் கம்மி, மிசின் ரிப்பேர் அதனால வேலை கம்மியா இருக்குன்னு கேட்டு பழகிப் போன எங்களுக்கு கரண்ட் இல்லை அப்படின்னு முதலாளிக சொல்றது புதுசா இருக்கு. எங்க பொழப்புக்கு எமனா கரண்ட் கட் இருக்கு. வீட்டுல பாதி நேரத்துக்கும் மேல கரண்ட் இல்லை. அத எப்படியாச்சும் சமாளிச்சுக்குவோம். ஆனா வேலை இல்லையே, எங்க போயி என் கஷ்டத்த சொல்ல. அதான் அரசுக்கு கடிதமா எழுதறேன்.
மழை இல்லை, ஆத்துல தண்ணி வரல, அதான் கரண்ட் கட் இருக்குதுன்னு இதுநாள் வரை சொல்லிட்டு இருந்திங்க. ஆனா இப்போ அதெல்லாம் சொல்லாம கூடங்குளம் தொறக்கல, அதான் கரண்ட் கட் ஆகுதுன்னு சொல்றிங்க. என்னமோ தொறங்க. எங்கள போல இருக்கறவங்க வேலைக்கு ஒரு வழி சொல்லுங்க.
சரிங்க அரசே, உங்கள நம்பி ஒட்டு போட்ட எங்கள எப்படியாவது வாழ வழி செய்யுங்க. இந்த கடிதம் என்னைப் போல வேலை இழந்து வாடும் அனைவரின் சார்பில் எழுதியுள்ளேன். நன்றிங்க...

இப்படிக்கு,
தமிழ்ப் பாமரன்.
19 கருத்துரைகள்:
உங்க முகவரி அரசுக்கு அனுப்பி வைத்தால் மாதம் தோறும் உதவி தொகை வரும்...ஹி ஹி .ஒரு நப்பாசை தான்
துண்டு போடறது அப்படின்னா இது தானா?
உண்மை! உண்மை!
பாமரன் உள்ளக்குமுறல்!
உள்ளங்கை நெல்லிக் கனிபோல் தெரியும் கடிதம்!
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
correct sir!
அட இஒப்படி ஒரு பிரச்னை இருக்குதா ? சரி சரி - எல்லோரும் ஒரு கடதாசி அரசுக்கு தட்டுங்களேன் -
உண்மை தான் அன்பரே 6 மாதத்தில் மின்தடையை போக்குவோம் என சொல்லி ஆட்சிக்கு வந்ததை இந்த அரசு மறந்து விட்டதோ !
அய்யா...நீங்க தேர்தல் அறிக்கையை நல்லா படிச்சீங்களா...?
மின்வெட்டு இல்லாத மாநிலம் ஆக்குவோம்னு சொன்னாங்களா?
மின்சாரம் இல்லாத மாநிலமாக்குவேன்னு
சொன்னாங்களா?
சரி
கரண்ட் விடு தூது ஹி ஹி....
கரண்ட் கட்னால ரொம்ப நொந்து போய் இருக்கீங்க போல.
கடிதம் நல்லா இருக்கு.. இதை எழுதினபோது எத்தனை தடவை பவர் கட் ஆச்சுன்னு போட்டிருக்கலாம்.
அதான் தோரந்துட்டோம்ல. இனி 24 மணி நேரம் கரண்ட் வரும் பாருங்க
வணக்கம் பிரகாஷ்!நொந்து நூலாகிப் போயிட்டீங்கன்னு தெரியுது.பேசாம கூடங்குளத்த தெறவுங்க,உசிரா முக்கியம்?அப்புடீன்னு இன்னொரு லெட்டர் போடுங்க!கரண்டு கட்டு இல்லாமையே?!போயிடும்!!!!
புலம்ப வச்சிட்டீங்களே பிரகாஷ் !
பாமரனின் வார்த்தைகளை அழகாக வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.. ஆதங்கம் புரிகிறது.
@Kovai Neram
உங்க முகவரி அரசுக்கு அனுப்பி வைத்தால் மாதம் தோறும் உதவி தொகை வரும்...ஹி ஹி .ஒரு நப்பாசை தான்////
ஒட்டு மொத்த தமிழக அட்ரசும் அனுப்பி வைக்கணும்...
@புலவர் சா இராமாநுசம்
வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி ஐயா
@cheena (சீனா)
அட இஒப்படி ஒரு பிரச்னை இருக்குதா ? சரி சரி - எல்லோரும் ஒரு கடதாசி அரசுக்கு தட்டுங்களேன் -///
இதான் இப்போ பிரச்சனையே...
அருமை பிரகாஷ்.
எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.