மதுரையில நாலஞ்சு நாளா ஹாட் டாபிக் என்னான்னு தெரியுமா? இங்க மதுரையில பவர் கட் இல்லைங்கோ, இங்க மட்டும் தானா, இல்ல தமிழகம் முழுதும் பவர்கட் இல்லையா? இங்க மதுரையில மட்டும் பவர்கட் இல்லைன்னா. அதுக்கு காரணம் இங்க சித்திரை திருவிழா நடந்துகிட்டு இருக்கு. மீனாட்சி திருக்கல்யாணம், சாமி தேர்கள் வீதி உலா, அழகர் வைகை ஆற்றில் இறங்குதல், எதிர்சேவை என மதுரை களை கட்டியுள்ளது. இதனால தான் பவர் கட் இல்லைன்னு நினைக்கிறேன்.
எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு. எல்லாம் அந்த மீனாட்சி அருள் தான் போல. இப்படியே பவர்கட் இல்லாம மத்த நாட்களும் இருக்குமா? மீனாட்சியம்மனே அருள் தாங்க. இப்படியே மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.
இந்த போஸ்ட் எழுதிகிட்டே நியூஸ்பேப்பரை படிச்சேன். அதுல காற்றாலை மூலமா தயாரிக்கப்படும் மின்சார அளவு கூடியிருக்காம். அதனால மதுரை, நெல்லை, கோவை மாவட்டங்களில் பவர்கட் நேரம் கொறஞ்சிருக்குன்னு போட்டிருக்காங்க. அப்புறம் இன்னொரு நியூஸில் நெல்லையிலும் நாலஞ்சு நாளா பவர்கட் இல்லைன்னு போட்டிருக்காங்க. இந்த நிலை இப்படியே தொடருமா?
எப்படியோ, மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும். எப்படி இருந்தாலும் தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி..
28 கருத்துரைகள்:
அப்படியா.. நல்லது நடந்தா சர்தான்
பிரகாஷ் அண்ணா சித்திரை திருவிழாவிற்க்காகதான் இந்த ஏற்பாடு, சாமி புறப்பாடை காண வரும் மக்களுக்களின் பாதுகாப்பை கருதி அழகர் ஆற்றில் இறக்கும் வைபவம் வரையில் மதுரையில் தடையற்ற மின்சாரம் கிடைக்கும் என்று செய்தித்தாளில் படித்தேன், எது எப்படியோ மீனாட்சி அம்மனுக்கு நல்ல நேரம்............ :)
Yowwwww...
Athu amman arul...
Illai.......
Naan madurai,,,.nellai.....
Vantheen-la....
Athuthaan........
@மனசாட்சி™
சர்தான் ....
@ரேவா
அப்போ, வடை ஒரு வாரத்துக்கு மட்டும் தானா ரேவா?
@NAAI-NAKKS
யோவ்..........????
//தமிழனோட தலைவிதி இதுதான்னா நடந்தே தீரும். ஹி..ஹி.//
கட் இல்லாத பவர் வரும் நாள் எந்நாளோ??(கிராம புரங்களில் 10 மணி நேரத்திற்கும் அதிகமாக மின்வெட்டு உள்ளது.)
உங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா
அண்ணே கோவையிலும் இரண்டு நாள் பவர் கட் இல்லை...
காரணம் காற்றாலை மின்சாரமும், தற்போது மழை பெய்துள்ளதால் விவசாயிகளின் மின்சராமும் இருக்குதாம்..அதனால் தான் பவர் கட் இல்லை..
காற்றாலை மின்சாரம் அதிகரித்ததே மின் வெட்டு குறைக்கப் பட்டுள்ளதற்கு காரணம் என்று இன்று தினத்தந்தியில் செய்தி வந்துள்ளது ....எங்கள் ஊரிலும் பவர்கட் முற்றிலும் நீங்கியுள்ளது
மாப்ள நாய் நக்ஸ பிடிச்சு தமிழகம் பூரா சுத்த வையுங்கப்பா.!! ;-)
engu thanjavurilum appadithhan!
எல்லா இடங்களிலும் பரவலாக மின்வெட்டு நிறுத்தப்பட்டுள்ளது. அதற்க்கான காரணம் என்னவாக இருந்தாலும் அந்த காரணம் தொடரவேண்டும் என்பதே என் ஆசை.
வணக்கம்,பிரகாஷ்!///மதுரையில பவர்கட் இல்லைங்கோ, இருக்குற வரை கரண்ட் காத்த சுவாசிக்க வேண்டியது தான். இல்லைனாலும் கரண்ட் இல்லா காத்தை சுவாசிச்சு தான் ஆகணும்.////கரண்ட் இல்லாத காத்து தானே ஒடம்புக்கு நல்லது????
அன்பை தேடி,,அன்பு said...
உங்க ஊர்லமட்டும்தானா ,எங்க சிங்கப்பூர்லேயும் பவர் கட் ஆனதே இல்ல தலைவா!////அவங்க "சிங்க்க்கக்க்க...ப்பூர்ல"இருக்காங்களாம்!
தமிழ் நாட்டில எங்கேயும் இடைத்தேர்தல் வருதா, இல்லை ஒரு டவுடுக்கு கேட்டேன் .., ஹி ஹி ஹி ...!
மதுரையில பவர்கட் இல்லாத மாதிரி தமிழகம் முழுதும் பவர்கட் இல்லா நிலை வரணும். அரசே, உங்களை தூற்றாம போற்றுவாங்க.
//எத்தனை மாசம்(வருஷம்) கழிச்சு புல் டே கரண்ட் இருக்கு.//
ச்சே ..நம்மள எப்படியெல்லாம் புலம்ப வச்சிடாங்க பாத்தீங்களா....ஆனா பவர் கட் ஆகாததுக்கு காரணம் எனக்கு தெரிஞ்சிப் போச்சி.. இது நம்ம 'இளைய ஆதீனம்' மதுரைக்கு வந்ததாலதான?
அன்பரே திருச்சியிலும் பவர் கட் இல்லை காற்றாலை உற்பத்தி தான் காரணம்
ஆகா இதானா விடயம் இலங்கையில ஞாயிற்று கிழமை மாத்திரம்தான் சில வேளை பவர் கட்
Tenkasi layum power cut ila
இங்கேயும் இரண்டு நாளா அதே அதிசயம் தான் !
நண்பரே எங்கள் ஊர் விருதுநகரிலும் நான்கு நாட்களாக பவர் கட்டே இல்லை. என்ன நடக்குதுன்னே தெரியல.
எங்க ஊருலயும் பவர் கட் இல்ல. நிறைய பிளாக் போய் மொய் வைக்கலாம்.
இங்கயும் கரண்ட் கட் இல்ல :-) ஆத்தாடி இந்த அதிசயத்த என்னனு சொல்லுவேன்
ஆமா, எனது மனைவி போன வார இறுதியில் அங்கதான் இருந்தாங்க! பவர் அவ்வளவா கட் ஆகலேன்னு அம்மணிக்கு ஒரே குஷி! :)
அனையிற வௌக்கு பிராகாஸமா எரியுதோ? எதுக்கும் மெழுகுவர்த்தி வாங்கி வச்சுக்கலாம்...அப்பு!
வணக்கமுங்கணே! எங்க ஊர்லயும் கரண்ட் கட் கொஞ்சம் குறைஞ்சிருக்கு! எல்லாம் வாயு பகவான் அருள்!