இன்று 5-05-2012 காலை ஆறு மணி அளவில் கள்ளழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடந்தது. கள்ளழகர் தங்கபல்லக்கில் வலம் வந்ததை புதூர் ஐயப்பன் கோவில் அருகில் தரிசனம் செய்து எடுத்த படங்கள், உங்களின் தரிசனத்திற்காக...
கோவில் யானை வலம் வருதல் |
புதூர் கற்பகநகரில் |
கள்ளழகருக்கு விளக்கு பூஜை செய்கிறார் ஒரு பக்தர் |
புதூர் ஐயப்பன் கோவிலுக்கு முன்பு கள்ளழகர் |
இதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர்
வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து
அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார்.
முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு
முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும்
தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார்.
கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே
வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில்
எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு
பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர்
மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட
கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு
மூன்றுமாவடிக்கு வந்தார்.
அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை
எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும்,
மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம்
அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும்
கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம்
பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம்
நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும்.
திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும்.
பின்பு
தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில்
கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து
புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள்
இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும்
வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார்.
செய்திகள் தொகுப்பு: http://maduraipost.com/2012/05/kallalagar-festival/
புகைப்படங்கள் என் மொபைல் மூலம்
22 கருத்துரைகள்:
அருமை..அத்தனையும்
புரபசனால் போட்டோ கிராபர் போன்ற படங்கள்
நல்லா இருக்கு
பல வருஷங்கள் ஆச்சுப்பா மதுரையில கள்ளழகரை தரிசனம் பண்ணி,, ஒவ்வொரு வருஷமும் வரணும் வரணும்னு திட்டம் போட்டும் ஏதோ இடைஞ்சல் வந்து தள்ளிட்டே போகுதுன்னு ஒரு மனக்குறை எனக்குண்டு, இந்தப் பதிவும் படங்கள் மூலமும் தரிசனம் பண்ண முடிஞ்சதுல மிகுந்த மனநிறைவு எனக்கு, அடுத்த வருஷ தரிசனத்துல நிச்சயம் உங்ககூட நானும் இருப்பேன்... நன்றி பகிர்விற்கு.
வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
vanakkam plz add your post in http://www.valaiyakam.com/
சூப்பர்யா..மக்கா! சைட் அடிக்க போயிட்டீரோ?
@வீடு சுரேஸ்குமார்
உன்மைய பப்ளிக்க பேசக் கூடாது
பலதடவைகள் மதுரைக்கு வந்திருந்தாலும் திருவிழா நேரத்தில் வந்ததில்லை. அடுத்த தடவையாவது பார்ப்போம். படங்களுக்கும் பதிவுக்கும் நன்றி.
@வீடு சுரேஸ்குமார்
சூப்பர்யா..மக்கா! சைட் அடிக்க போயிட்டீரோ?///
ஏன்யா இந்த கொலைவெறி...
வணக்கம் தோழர்..எப்படியிருக்கீங்க?.. திருவிழாவை நேரில் கண்டது போல இருந்தது.
மீதி நிகழ்ச்சிகளையும் படமெடுத்து போடுங்க!
பகிர்வுக்கு நன்றி தல
இன்று
கண்டபடி E-Mail அனுப்பி தொல்லை செய்பவர்களை தடுப்பது எப்படி ?
கண்களுக்கு விருந்து ...! பகிர்கிக்கு நன்றி தல ..!
படங்கள் அருமை!
வாழ்க்கையில ஒரு உருப்படியான காரியம் செய்திருக்கீர்...நன்றி.
அருமை.. செம படங்கள்...
அழகரை நேரில் பார்த்து தரிசனம் பண்ணியது போல ஒரு மன நிறைவைக் கொடுத்தது உங்கள் போட்டோக்கள்...
நன்றி தமிழ்...
அருமை பிரகாஷ்.
அருமையான படத்தொகுப்புகள்.
நேரில் தரிசனம் செய்த உணர்வு.
இந்த பதிவை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
படங்கள் அருமை!தங்கள் பதிவு
ஒருமுறையாவது நேரில் பார்க்கும்
ஆசையைத் தூண்டுகிறது!நன்றி!
புலவர் சா இராமாநுசம்
புதூர் ஐய்யப்பனை பாத்தேன் ஆனால் இன்னும் வைகை ஆற்றில் கள்ளகர் இறங்கும் காட்சிதான் கான முடியாமல் தவிக்கிரேன்! அருமை படங்கள் வாசி வாழ்த்துக்கள் பதிவுக்கு!
திருமஞ்சனம் என்ற சொல் பதிவில் வருகிறது. அப்படியென்றால் என்ன பூஜை? தெரிந்தால் சொல்லுங்கள். இல்லாவிட்டால் வேறெவராவது சொல்லுங்கள்.