CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மொய்க்கு மொய் அவசியமா?

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
        மொய்க்கு மொய், இது பதிவுலகத்துக்கான மொய்க்கு மொய், அதாவது பதிலுக்கு பதில் கமென்ட் போடுவது, ஓட்டு போடுவது, ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது, என்ற வகையான மொய்க்கு மொய் பத்தி இந்த பதிவுல நான் சொல்ல வரல. நெஜமாலுமே விஷேசதுக்காக வர்ற மொய்க்கு மொய் பத்தி கொஞ்சமா சொல்ல போறேன்.
        ஒரு பங்ஷன்காக  இன்விடேஷன் ஊரெல்லாம் வைப்ப்போம். ஊரைக் கூட்டி பங்ஷன் வைக்கார்யா என நாலு பேரு நல்ல விதமா சொன்னா ஓகே தான். ஆனா இப்போ சில பங்ஷன்கள் வெறும் காசை பிடுங்கவே நடக்குது. மத்தவங்க விஷேசத்துக்கு மொய்க்கு மேல மொய் செஞ்சு சோர்ந்து போயிருப்பாங்க. பின்ன இவங்களால விசேஷமே வைக்க சான்ஸ் இருக்காது. அதனால மொய் வரவை எதிர்பாக்க முடியாது. 

          அதாவது ஒரு பையன் மட்டுமே இருக்கான்னு வைங்க, சின்ன வயசுல காது குத்து விழா மட்டுமே வைக்க முடியும். அதுல மொய் வாங்கிரலாம். அதுக்கப்புறம் அவங்க வீட்டுல அவனுக்கு கல்யாணம் வரை எந்த விசேஷமும் வைக்க முடியாது. வீடு, கீடு கட்டுனா கிரகப்பிரவேசம் வைக்கலாம். அதுவும் இன்னைக்கு இருக்குற விலை வாசியில் அதுவும் யோசிக்க வேண்டிய விஷயம் தான். 

    இதே ஒரு பொண்ணு இருக்குன்னு வைங்க, காது குத்து, பெரியவளானதுக்கு ஒரு விழா. சடங்கு, அப்புறமா கல்யாணம்ன்னு வைப்பாங்க. ஓரளவு மொய் வாங்கலாம். ஆனா, அதுவும் அந்த பொண்ணு கல்யாணத்துக்கு நகை, சீர்வரிசை சேர்க்கறதுக்கே போயிரும். கல்யாணத்துக்கும் பெருசா அமௌன்ட் எதிர்பாக்க முடியாது. ஏன்னா, முந்தின விசேஷத்துக்கு மொய் வந்ததுனால கல்யாணத்துக்கு ஓரளவு மட்டுமே எதிர்பாக்க முடியும். 
       சரி, இப்போ என்ன சொல்ல வரேன்னா இந்த மாதிரி குடும்ப விசேஷங்கள் வச்சு மொய் கனிசமா வாங்க முடியாத ஆட்கள் புதுப்புது ட்ரெண்ட் கண்டுபிடிச்சிருக்காங்க. பையனுக்கு காது குத்து விழான்னு பத்திரிகை வச்சு அழைப்பாங்க. ஆனா, பங்க்சனுக்கு போயி பார்த்தா பையனுக்கு இருபது வயசுக்கு மேல இருக்கும். காதும் குத்தியிருக்க மாட்டாங்க, அட, மொட்டை கூட போட்டிருக்க மாட்டாங்க. நாமளும் பொறுக்க முடியாம ஏங்க, காது குத்து விழான்னு சொன்னிங்க, காதே குத்தலன்னு கேட்டா, அவிங்க ஹி..ஹி... ஒரு பையன் வச்சிருக்கோம். மொய் வாங்க காது குத்து விழான்னு பத்திரிகை அடிச்சுட்டோம். வேற ஒண்ணுமில்லைங்க, நல்லா சாப்பிட்டு மொய் செஞ்சுட்டு போயிருங்கன்னு சொல்வாங்க பாருங்க. ம்ஹும்... வேறவழி நாம மொய்க்கு மொய் வச்சுட்டு வர வேண்டியதுதான்.
        அப்புறமா ஏதாவது கோயில் பேரை போட்டு கிடா வெட்டு அழைப்புன்னே பத்திரிகை ஊர் ஊரா தருவாங்க. பத்திரிகை வச்சும் போகலைன்னா மதிப்பு இல்லையில. அதனால அங்கேயும் போயி நல்லா நான்வெஜ் சாப்டுட்டு மொய் வச்சுட்டு வர வேண்டியது தான்.
 
      போன மாசம் எனக்கு ஒரு காது குத்து விழா பத்திரிகை வந்துச்சுங்க. எப்படியும் எட்டு பக்கம் இருக்கும். பக்கத்து வீட்டுக்காங்க பேரெல்லாம் போட்டிருந்தாங்க. மாமன், மச்சான், என உறவு முறைகளில் போட முடியாத பேர்களை வரவேற்பாளர்கள் லிஸ்டில் சேர்த்திருந்தாங்க. அந்த பத்திரிக்கையில கடைசி பக்கம் ஒரு வரி போட்டிருந்தாங்க. ரொம்பவே டச்சிங் வரி அது. 
பின்குறிப்பு: 2003க்கு பின் உள்ள உங்கள் மொய் நோட்டை தயவுசெய்து பார்க்கவும்.
இதாங்க அந்த வரி. படிச்சுட்டு மிரண்டு போயிட்டேன். அந்த ஆளுங்க 2003இல் கடைசியா விசேசம் வச்சிருந்திருப்பாங்க போல. அதான் இன்னைக்கு 2012 வரை நிறைய மொய் செஞ்சு ஓஞ்சு போயி போட்ட காசை வசூல் பண்ண இப்படி யோசனை பண்ணியிருக்காங்க. அந்த காது குத்து விழாவுக்கு போயி ஏமாந்து வந்தேனுங்க. கறி சோறுன்னு நெனச்சு போனா சாம்பார் சாப்பாடு போட்டு மொய் வாங்கிட்டாங்க. அவ்வ்வ்வ்வ்....
     ஆக, இப்படி மொய் வாங்க எத்தனையோ ட்ரெண்ட்களை சொல்லிட்டே போகலாமுங்க. மக்கள் புதுசுபுதுசா யோசிச்சு பத்திரிக்கை அடிச்சு மொய் வாங்கிடுவாங்க... அதாவது மொய்க்கு மொய் வாங்கியே தீரனும்கறது மட்டுமே அவங்க குறிக்கோள்.


16 கருத்துரைகள்:

Unknown said... Best Blogger Tips

மொய்க்கு மொய், இது பதிவுலகத்துக்கான மொய்க்கு மொய், அதாவது பதிலுக்கு பதில் கமென்ட் போடுவது, ஓட்டு போடுவது, ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது, என்ற வகையான மொய்க்கு மொய் பத்தி இந்த பதிவுல நான் சொல்ல வரல.

>>>>>>>>

எப்படி சொல்ல முடியும் அப்புறம் வியாபாரம் பூடுமே ஹெஹெ!

ப.கந்தசாமி said... Best Blogger Tips

இப்படி மொய் வாங்கி, மொய் வச்சு ஓட்டாண்டியான குடும்பங்கள் அநேகம். நான் வாங்கறதுமில்லை, வைக்கிறதுமில்லை. மீறி யாராவது வச்சாங்கன்னா அது அவங்க தலைவிதி.

கூடல் பாலா said... Best Blogger Tips

ரொம்ப நொந்துட்டீங்க போல...

Unknown said... Best Blogger Tips

யோவ்! ஒரு பதிவர் திருமணத்திக்கு போய் நல்லா புல் கட்டுகட்டிட்டு தமிழ்மணம்-1அப்படின்னு எழுதி மொய் கவர்ல வெச்ச ஆளுதாய்யா நீரு!

Unknown said... Best Blogger Tips

மக்கா! அவரு உன்னைதாம்ல தேடிகிட்டு இருக்காரு சொல்லிபுட்டேன் ஆமா!

மகேந்திரன் said... Best Blogger Tips

கொடுக்கல் வாங்கலில் ஒரு சுகம் தான் நண்பரே...

MaduraiGovindaraj said... Best Blogger Tips

நான் மொய் வாங்குவதும் இல்லை கொடுப்பதும் இல்லை மொய்க்கு மொய் நல்ல பழக்கமும் இல்லை

பதிவு அருமை

சென்னை பித்தன் said... Best Blogger Tips

//மத்தவங்க விஷேசத்துக்கு மொய்க்கு மேல மொய் செஞ்சு சோர்ந்து போயிருப்பாங்க. பின்ன இவங்களால விசேஷமே வைக்க சான்ஸ் இருக்காது. அதனால மொய் வரவை எதிர்பாக்க முடியாது.//
அதுதான்!அதேதான்!!

CS. Mohan Kumar said... Best Blogger Tips

//வீடு சுரேஸ்குமார் said...

யோவ்! ஒரு பதிவர் திருமணத்திக்கு போய் நல்லா புல் கட்டுகட்டிட்டு தமிழ்மணம்-1அப்படின்னு எழுதி மொய் கவர்ல வெச்ச ஆளுதாய்யா நீரு! //

:)))

”தளிர் சுரேஷ்” said... Best Blogger Tips

நல்லா சொன்னீங்க! இப்பல்லாம் மொய் ரேட் கூடிடிடுத்து தெரியுமா உங்களுக்கு?

MARI The Great said... Best Blogger Tips

தலைவரை எங்கேயோ கூப்பிட்டு வச்சு கும்மியிருக்காங்க ...? ஹி ஹி ஹி

ANBUTHIL said... Best Blogger Tips

ஓட்டு போட்டதை தனியா ஒரு கமென்ட் போட்டு சொல்வது,நான் கூட இப்படியெல்லாம் செஞ்சிருக்கேன்

முத்தரசு said... Best Blogger Tips

எப்படில்லாம் அடிக்கிறாங்க

கோவை நேரம் said... Best Blogger Tips

என்னோட கல்யாணம் அன்னிக்கு நான் ரொம்ப எதிர்பார்த்தது இதை தான்...அப்படி ஒரு சூழல்.பணம் இருக்கிறவங்ககிட்டே இது ஒண்ணும் பெரிய விஷயம் இல்லை.இதை மட்டுமே நம்பி இருக்கிற எத்தனையோ பேர் இன்னும் இருக்காங்க..கடைசி நிமிசத்துல கை கொடுக்கிறது இந்த மொய் பணம் தான் ...பதிவுக்கு நன்றி///

aalunga said... Best Blogger Tips

//காது குத்து விழாவுக்கு போயி ஏமாந்து வந்தேனுங்க//

அங்க தான் உங்களுக்கு காது குத்திட்டாங்களே!!

கவி அழகன் said... Best Blogger Tips

Aha ipadiyum nadakkutha

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1