மதுரையில் சித்திரை மாதத்தில் தமுக்கம் மைதானத்தில் நடைபெறும் சித்திரைப் பொருட்காட்சி கோலாகலமாக ஆரம்பித்து ஒரு மாதமாக போகிறது. எங்களுக்கு இன்று தான் பொருட்காட்சிக்கு செல்ல நேரம் கிடைத்தது. கோரிப்பாளையதில் இருந்தே டிராபிக் அதிகமா இருக்கு. அங்க இருந்து தமுக்கம் போகவே எப்படியும் பத்து நிமிஷம் ஆச்சு. கூட்டம் ரொம்பவே அதிகம். மைதானத்தின் முன் பக்கம் கவுண்ட்டர் பக்கத்துல ஆரம்பிச்ச கியூ ராஜாஜி பார்க் இருக்குற ரோட்டுக்கு திரும்பி ரொம்ப நீளமாவே இருந்துச்சு. ஆனாலும் கியூ வேகமா மூவ் ஆச்சு, ஒரு டிக்கட் பத்து ரூபாய் மட்டுமே.
|
நுழைவுச்சீட்டு வழங்கும் இடத்தில் மக்கள் கூட்டம் |
|
பெண்களுக்கான பேன்சி பொருட்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு சாமான்கள் |
மைதானத்திற்கு உள்ளே எங்க பாத்தாலும் கடைகள், கலர் கலர் லைட், பெரிய விளம்பர ஆர்ச் என ரொம்ப பிசியா களை கட்டி இருந்துச்சு. பஞ்சு மிட்டாய், பாப்கார்ன் என சாப்பிடும் அயிட்டங்களும், லேடிஸ்களுக்கான ஸ்டிக்கர் பொட்டு, ஹேர் பேன்ட், சமையல் அறைகளுக்கான சின்ன சின்ன பொருட்கள், என கடைகள் வரிசையாவே இருந்துச்சு, எல்லா கடைகளும் கியூவால் நிரம்பி இருந்துச்சு. ஒரு கடைக்கு பேரு வெங்காய வெட்டர் அப்படின்னு போட்டிருந்தாங்க. என்னான்னு நுழைஞ்சு பார்த்தா வெங்காயம் வெட்டுற கட்டருக்கு தான் அப்படி வெட்டர்ன்னு போட்டிருக்காங்கன்னு புரிஞ்சுச்சு. அப்படியே ஒவ்வொரு கடைகளா வேடிக்கை பார்த்துட்டு போனோம்.
|
கைத்தறி ஆடைகளின் ஸ்டால் |
|
அம்மாவின் பெருமையை விளக்கும் ஸ்டால் |
இன்னொரு பக்கம் அம்மா படங்கள் பொட்டு ரெண்டு மூணு ஸ்டால் போட்டிருந்தாங்க. வீட்டு வசதி வாரியம், அரசின் விலையில்லா பொருட்கள் உதவி, வடிகால் வாரியம் என அம்மா படங்கள் பொட்டு அவரது சாதனைகள் மற்றும் மக்களுக்கு வழங்கிய நலத்திட்ட உதவிகளை பிளக்ஸ் பேனரில் போட்டிருந்தாங்க.கலையரங்கத்தில் ஆடல் பாடல் நடந்துட்டு இருந்துச்சு. ஆனா நிகழ்ச்சியை பாக்க கூட்டம் தான் இல்லை.
|
ஜெயின்ட்வீல் ராட்டினம் |
|
அப்பளம், மிளகாய் பஜ்ஜி ஸ்டால் |
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்களை கவரும் விதவிதமான ராட்டினங்கள் நிறைய இருந்துச்சு. வனத்துறை சார்பா ஒரு ஸ்டாலும், பயங்கர பாம்பு திகில் செய்யும் ஸ்டால் என சில இருந்துச்சு. பானிப்பூரி, பாவபஜ்ஜி, சோலாபூரி, மசாலா பூரி, ஐஸ்க்ரீம், பால்கோவா, கூல்ட்ரிங்க்ஸ் என ஏகப்பட்ட கடைகள். எனக்கென்னமோ இந்த வருட பொருட்காட்சியில் நிறைய மிஸ் ஆனது போல இருந்துச்சு. பொதுவா கடைகள் குறைவாகவே இருந்துச்சு. வீட்டு உபயோக பொருட்களின் ஸ்டால்களும் குறைவே.
|
எந்தப்பொருள் எடுத்தாலும் ஏழு ருபாய் |
எந்தப் பொருள் எடுத்தாலும் அஞ்சு ரூபான்னு இருந்தது எல்லாம் இந்த வருஷம் ஏழு ரூபாயா விலை ஏறி இருந்துச்சு. அடுத்த வருஷம் இந்த பொருட்கள் எப்படியும் பத்து ரூபாய்க்கு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை. மதுரை மக்களுக்கு பொழுபோக்க சில இடங்களே இருப்பதால் தமுக்கம் மைதானத்தில் எந்த பொருட்காட்சி, கண்காட்சி போட்டாலும் கூட்டம் அலை மோதும். அதிலும் ஞாயிறு என்றால் சொல்லவே வேண்டாம். பயங்கர கூட்டம் இருக்கும். பொதுவாக பொருட்காட்சி, கண்காட்சி என தமுக்கத்தில் குடும்பத்துடன் நன்றாக என்ஜாய் செய்து பார்க்க திங்கள் முதல் வெள்ளி வரையிலான நாட்களில் போகணும்.
15 கருத்துரைகள்:
மதுரைக் காரவிங்க என்ஜாய் பண்ணுங்கோ...
நல்லா அழகா ரசித்து தேவையான விவரங்களுடன் விவரிச்சிருக்கீங்க பாஸ்! மதுரை மக்களுக்கு உதவும்!
நாங்களெல்லாம் போனமா பொருளை வாங்கினோமா வந்தோமான்னு இருப்போன்.நீங்க படம்புடிச்சி பதிவா போட்டு நிறையப் பேருக்கு தெரியப்படுத்துரீங்க....கலக்குங்க பிரகாஷ்....
ரொம்ப வருஷம் ஆகிருச்சு தல தமுக்கம் மைதான கண்காட்சியை பார்த்து .. !
enathu madurai porutkarchiyai intha varudam izhanthu vitten...
நான் எப்ப பொருட்காட்சிக்கு போனாலும் ஜெயிண்ட்வீல், டோரா டோராதான் என் ஃபேவரிட். பசங்களுக்கும், எங்க வீட்டு ரங்க மணிக்கு டெல்லி அப்பளம்தான்ஃபேவரிட்
கண்காட்சியை கண்டு கொண்டேன் உங்களின் படங்கள் மூலம்
கல்லூரி நாட்களில் சென்னை தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடக்கும் பொருட் காட்சிக்குக் கூட்டமாகச் சென்று ’கண்காட்சி’
பார்த்தது ’ஞாபகம் வருதே’!
பொருட்காட்சி என்பது மார்கெட்ல கிடைக்கிற விலைய விட மூனு நாலு மடங்கு விலை அதிகமா பொருள் விற்பனையாகும் இடம்!
சிறுவயதில் நான் சென்று வந்த இடத்திற்கு மீண்டும் 10 ரூபாய்கூட டிக்கெட் செலவுகூட இல்லாமல் அழைத்து சென்று சந்தோசபபடுத்திய உங்களுக்கு நன்றி.
எனக்கு ஒரு சந்தேகம் அப்படி ஜெயலலிதா என்ன பெரிய சாதனை செய்திட்டாங்கண்னு அதையும் பார்க்க அவங்க அமைத்த செட்டிற்கு சென்று பார்க்கும் தமிழக மக்களை என்ன வென்று சொல்லவது.
அந்த செட்டில் நாம் பார்க்க கூடிய சாதனை என்பது தமிழகம் பவர்க்ட்டில் இருக்கும் போது அவர்கள் செட் மட்டும் எப்படி பளிச்சென்று இருக்கிறது பார்க்க போய் இருப்பார்களோ??
உங்கள் வலைத்தளம் மூலம் நேற்று சென்னையில் நடந்த பதிவர் கூட்டத்தை பார்க்க முடிந்தது உங்களின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்
என்னையும் மதுரைக்கே கூட்டி சென்றிவிட்டிர்கள்
ஓகே... என்ஜாய்... பிரகாஷ் !
வர விருப்பமாதான் இருக்குது எங்க சந்தர்ப்பம் கிடைக்குது...
வாழ்த்துகள் பிரகாஷ்.
hii.. Nice Post For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in