வணக்கம் வலைப்பதிவர் நண்பர்களே,
கடந்த இரண்டு ஆண்டுகள் சென்னையில் பதிவர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது தாங்கள் அறிவீர்கள். அதே போல இவ்வருடம் மதுரையில் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக திட்டமிட்டும், மிக விரைவாகவும் நடைபெற்று வருகிறது.
இவ்விழாவின் நிகழ்ச்சி நிரல் வரும் நாட்களில் உங்களின் பார்வைக்கு வைக்க இருக்கிறோம். அதற்கு முன்னோட்டமாக என்னென்ன நிகழ்ச்சிகள் பதிவர் விழாவில் இருக்கும் என இப்பதிவில் பார்ப்போம்.
சிறப்பு விருந்தினர் பேச்சு:
பதிவர் சந்திப்பில் பட்டிமன்ற முன்னணி பேச்சாளர் ஒருவரும், பிரபல எழுத்தாளர் ஒருவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க இருக்கிறார்கள். அவர்கள் யாரென்று மிக விரைவில் அறிவிக்கின்றோம். அவர்கள் யாரென அறிந்து கொள்ளவும், அவர்களின் சிறப்பு பேச்சை கேட்கவும் காத்திருங்கள் நண்பர்களே!
தொழில்நுட்ப பதிவர்களை கௌரவப்படுத்துதல்:
நமது வலைப்பூவை அழகாக செதுகிடவும், தேவையான வசதிகளை இணைக்கவும் நம்மில் பெரும்பாலானோர் வலைப்பூ கட்டமைக்க தெரிந்த தொழில்நுட்ப பதிவர்களை சார்ந்தே இருக்கிறோம். அவர்களால் தான் நமது வலைப்பூ சிறப்பான தோற்றத்தைப் பெறுகிறது. நம்முடைய வலைப்பூவுக்கு தங்களின் நேரத்தை செலவிட்டு இலவசமாக செய்து தரும் அவர்களுக்கு நாம் "நன்றி" சொல்வோம், அல்லது நமது பதிவில் அவரது பெயரைக் குறிப்பிட்டு ஓரிரு வரிகள் எழுதுவோம். அவ்வளவுதான்.
ஆகையால், தொழில்நுட்ப பதிவர்களை பாராட்டி கௌரவப்படுத்த நமது பதிவர் விழாவில் முடிவெடுத்துள்ளோம். உங்கள் வலைப்பூவை அமைத்துக் கொடுத்த அல்லது உங்களுக்கு தெரிந்த தொழில்நுட்ப பதிவர்கள் பெயரை இப்பதிவின் கருத்துரையில் தெரிவியுங்கள் நண்பர்களே, அந்த தொழில்நுட்ப பதிவர்கள் கீழ்கண்ட சில விதிமுறைகளுக்கு உட்படிருக்க வேண்டும். அவ்வளவே!
1. தொழில்நுட்ப பதிவர்கள் அவர்களது வலைப்பூவில் வலைப்பூ பற்றிய தொழில்நுட்ப பதிவுகள் குறைந்தது மூன்று எழுதியிருக்க (31/08/2014-க்குள்) வேண்டும்.
2. மற்றவர்களின் வலைப்பூக்களை தேவையான நிரலிகள் சேர்த்து கட்டமைப்புகள் (TEMPLATE, HTML and WIDGET) செய்து கொடுத்திருக்க வேண்டும்.
பதிவர்களின் சுய அறிமுகம்:
கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற பதிவர்களின் சுய அறிமுகம் இந்த ஆண்டும் உண்டு. விழாவிற்கு வருகை தரும் பதிவர்கள் அனைவரும் மேடையில் தங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ளலாம். இதனால் உங்களைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
புத்தகம் வெளியீடு:
நடக்கவிருக்கும் பதிவர் சந்திப்பில் பதிவர்கள் எழுதிய இரண்டு புத்தகங்கள் வெளியிட தயாராய் உள்ளது. அதன் விவரங்கள் விரைவில் அறிவிக்கின்றோம். காத்திருங்கள் நண்பர்களே!
குறும்படம் வெளியீடு:
பதிவர்கள் தயாரித்த, இயக்கிய, நடித்த குறும்படங்கள் இரண்டு விழாவன்று வெளியிட ஏற்பாடுகள் செய்து வருகிறோம். விரைவில் குறும்படங்கள் பற்றிய விவரங்களை அறிவிக்கிறோம்.
இவை தவிர இன்னும் சில நிகழ்ச்சிகள் உங்கள் முன் வைக்க ஏற்பாடுகள் செய்து வருகிறோம். அனைத்து நிகழ்ச்சிகள் அடங்கிய நிகழ்ச்சிநிரல் விரைவில் அறிவிக்கிறோம் நண்பர்களே, காத்திருங்கள், தவறாது வருகை படிவத்தில் தங்களது வருகையை பதிவு செய்து கொள்ளுங்கள்...
வலைப்பதிவர் நிர்வாகக் குழு - மதுரை
நண்பர்களே, இப்பதிவு தமிழ்வாசியின் 600வது பதிவு என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நன்றி.
22 கருத்துரைகள்:
விழா சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!
600வது பதிவு 60கோடிதாண்டி வர வாழ்த்துக்கள் அண்ணாச்சி!
பட்டிமன்றப் பேச்சாளர் உள்ளூரில் மட்டுமல்ல, உலக அளவில் புகழ் பெற்ற திரு சாலமன் பாப்பையா அவர்களா?
மச்சி ஆடலும் , பாடலும் நிகழ்ச்சி இல்லையா?
சும்மா கேட்டேன் மச்சி.. நீங்க கலக்குங்க.. விரைவில் சந்திப்போம்..
விழா ஏற்பாடுகள் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.
தொழில்நுட்பப் பதிவர்களை கௌரவிக்க முனைவது நல்ல முயற்சி வாழ்த்துக்கள்
சந்திப்போம்
விழா சிறக்க வாழ்த்துகள் சகோ:)
விரைவில் நிகழ்ச்சி நிரல் வெளியிடுவோம்...
தகவலுக்கு நன்றி நண்பரே,,,,
கடந்த இரு ஆண்டுகளில் பதிவர்களின் சுய அறிமுகம் எப்படி இருந்ததோ தெரியவில்லை. ஒரு பதிவருக்கு இத்தனை நொடிகள் என்று முன்பே அறிவிக்கப்பட்டால் நலமாயிருக்கும். மேலும் அவர்களை அகர வரிசைப்படி அனுமதிப்பதும் சரியாயிருக்கும். எல்லா நிகழ்ச்சிகளுக்கும் time management மிகவும் அவசியம் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷ்யம் இது. உங்களது 600-வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.
600 க்கு வாழ்த்துகள் அண்ணே :)
எனக்கு உதவிய தொழில் நுட்ப பதிவர், 'பிளாக்கர் நண்பன்' அப்துல் பாசித்
விழா சிறுப்புற நடைபெற எனது வாழ்த்துக்கள்.
600வது பதிவிற்கு வாழ்த்துக்கள் நண்பரே
மதுரையில் தங்களைச் சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்
வாழ்த்துகள்.
600 வது பதிவு!!!!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு வெற்றி நடை போட எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
வலைத்தள தொழில் நுட்பத்தில் எங்களுக்கு உதவியவர், த க்ரேட் வலை சித்தர், பிசி பீ, நண்பர் திண்டுக்கல் தனபாலன்! அவர்கள். அவரின் இடுகைகளிலிருந்தும் கற்றுக் கொண்டோம்.
விரைவில் சந்திப்போம்! வாழ்த்துக்கள் நண்பரே!
600 வது பதிவு!!!!! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! வாழ்த்துக்கள்! நண்பரே! இன்னும் பல்லாயிரம் பதிவுகள் இட்டு வெற்றி நடை போட எங்கள் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்!
வலைத்தள தொழில் நுட்பத்தில் எங்களுக்கு உதவியவர், த க்ரேட் வலை சித்தர், பிசி பீ, நண்பர் திண்டுக்கல் தனபாலன்! அவர்கள். அவரின் இடுகைகளிலிருந்தும் கற்றுக் கொண்டோம்.
விரைவில் சந்திப்போம்! வாழ்த்துக்கள் நண்பரே!
விழா சிறக்க வாழ்த்துக்கள்!
நடக்கட்டும்... வாழ்த்துக்கள்
விழா சிறக்க வாழ்த்துக்கள்/
600ஆவது பதிவிற்கு வாழ்த்துக்கள்
அன்பின் பிரகாஷ்
600வது பதிவினிர்க்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
விழா சிறப்பாக அமைய வாழ்த்துகள்