வணக்கம் தமிழ் வலைப்பதிவர் நண்பர்களே,
நேற்று (26/10/2014) மதுரையில், மூன்றாவது தமிழ் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடந்து முடிந்தது.
விழாவிற்கு கலந்து கொண்டு சிறப்பித்த அனைத்து பதிவர்கள், சிறப்பு விருந்தினர்கள், விழா குழுவினர், மேடை நிர்வாக குழுவினர், நிகழ்ச்சி தொகுப்பாளர்கள், நிதியுதவி அளித்த பதிவுலக நண்பர்கள், குறும்பட வெளியீட்டுக் குழுவினர், புத்தகம் வெளியிட்ட பதிவர்கள், தொழில்நுட்ப பதிவர்கள், அரங்க அமைப்பாளர்கள், உணவு ஏற்பாட்டாளர்கள், நேரலை வழங்கியவர்கள், பத்திரிக்கை நிருபர்கள், தொலைகாட்சி செய்தியாளர்கள் மற்றும் கலந்து கொண்ட பதிவுலக உறவினர்கள், என அனைவருக்கும் மதுரை வலைப்பதிவர் திருவிழா நிர்வாகக்குழுவினர் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
|
எழுத்தாளர் திரு. இந்திரா சௌந்தர்ராஜன் உரையாற்றுகிறார் |
|
சில நொடி சிநேகம் - குறும்படம் வெளியீடு |
|
கரந்தை ஜெயக்குமாரின் "கரந்தை மனிதர்கள்" நூல் வெளியீடு |
|
கிரேஸ் பிரதிபாவின் "துளிர் விடும் விதைகள்" கவிதை நூல் வெளியீடு |
|
மு. கீதாவின் "ஒரு கோப்பை மனிதம்" கவிதை நூல் வெளியீடு |
|
ஜெயராஜனின் "நல்லா எழுதுங்க... நல்லதையே எழுதுங்க..." நூல் வெளியீடு |
விழாவை நேரலை செய்ய விரிவான ஏற்பாடுகள் (சோதனை நேரலை வெற்றியடைந்த நிலையில்) செய்திருந்த போதிலும், இணைய இணைப்பின் வேகம் எதிர்பாராத விதமாக குறைவாக இருந்ததால் பேசுபவர்களின் ஒலியில் பிரச்னை வந்தது. வருந்துகிறோம் நண்பர்களே...
மேலும், விரிவான பதிவுகள், புகைப்படங்கள் விரைவில் வெளியாகும்.
41 கருத்துரைகள்:
சாதித்து விட்டோம் செயல் வீரரே...!
வாழ்த்துக்கள்
தம இரண்டு
அமர்க்களமாய் அமைந்து விட்டது விழா ,பதிவர்கள் பலரையும் சந்திக்க முடிந்ததில் மிகுந்த சந்தோசம் !
த ம 3
வலைப்பதிவர் விழா மிகச்சிறப்பாக நடந்தேறிய செய்தி அறிந்து மிக்க மகிழ்ச்சி..
விழாவை மிகவும் சிறப்பாக நடத்திகாட்டினீர்கள்.
அனைத்தையும் ரசித்தேன்.
உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.
வலைப்பதிவர் விழாவுடன், வடையும் சேர்ந்து வடைப்பதிவர் விழாவாகிவிட்டது:-))))))
இனிய பாராட்டுகள் !
வாழ்த்துகள் தனபாலன். துளசி உங்களையும் மாநாட்டில் படத்துடன் பார்ப்பது சந்தோஷம். மிகவும் பளிச் படங்கள் . உங்கள் அருகில் இருக்கும் பெண்மணி கோமதியா.
விழா வெற்றிக்கு உழைத்த கரங்களை வணங்கி வாழ்த்துகிறேன். ஆனால், சென்னைப் மற்றும் முக்கியமான பகுதிகளைச் சேர்ந்த பிரபல பதிவர்கள் பலரைப் பார்க்கமுடியாமல் போனது வருத்தமே! எனினும் பதிவர்திருவிழா மறக்கமுடியாததாக அமைந்தது பிரகாஷ! வாழ்த்துகள். மற்ற நிகழ்வு மற்றும் புகைப்படப் பதிவுகளையும் வெளியிட வேண்டுகிறேன்.
வாழ்த்துக்கள் பிரகாஷ் ..பதிவர்கள் பலரையும் சந்தித்தது மகிழ்ச்சி. நிர்வாகக் குழுவினர்க்கு நன்றியும் வாழ்த்துகளும்!
மதுரை டீம் அசத்திட்டீங்க... பெரும் பொறுப்பைச் சுமந்து அலைந்த உன் முயற்சியையும், மூன்று இரவுகள் தொடர்ந்து தூக்கத்தை மறந்தும் களைப்பை வெளிக்காட்டாது அரங்கில் பம்பரமாய்ச் சுழன்ற உனக்கு ஒரு சல்யூட் பிரகாஷ். உணவு உபசரிப்பில் இருந்து நிகழ்ச்சி ஏற்பாடு வரை அனைத்தும் குறை சொல்ல இடமே இல்லாது சிறப்புடன் இருந்தது. நான் சந்திக்க விரும்பிய சிலரையும் எதிர்பாராத சிலரையும் சந்தித்து மேலும் நெருக்கமானது எனக்கு கூடுதல் மகிழ்ச்சி.
வேலைப்பளுவின் காரணமாக வரமுடியவில்லை.வெற்றிகரமாக நடந்ததற்கு மகிழ்ச்சியும்,வாழ்த்துகளும் நண்பர்களே...
வெகு சிறப்பாய் நடந்தது விழா வாழ்த்துக்கள் விழா குழுவினருக்கு. நேரலையில் கண்டு மட்டும் மகிழ்ந்தேன். ஒலி கேட்க முடியவில்லை. மனதெல்லாம் அங்கு தான் இருந்தது. வர இயலாமைக்கு வருந்துகிறேன்.
மிகக் குறைந்த அளவு புகைப்படங்களுடன் பதிவு இருந்தாலும், நண்பர்களை அதில் பார்க்க முடிந்தது சந்தோஷம்.
நண்பர் திரு.தமிழ் பிரகாழ் வாசி அவர்களுக்கும் திரு.திண்டுக்கல் தனபாலன் சார் அவர்களுக்கும் தாங்கள் 26/10/2014 அன்று வலைப்பதிவர் 3 ஆம் ஆண்டு மா நாடு சீரும் சிறப்பாக நடைபெற கடினமாக உழைத்தமைக்கு எனது உள்ளம் கனிந்த வாழ்துக்களையும்,நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.
மதுரை சித்தையன் சிவக்குமார்
இந்த திருவிழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்று மதுரைக்குப் போக வர உறுதி செய்யப்பட பயணசீட்டு எடுத்திருந்தும் வர முடியாமல் போனது வருத்தமாகத் தான் இருக்கிறது. நேரலையில் ஒலி சரியாக வரவில்லை. சரிசெய்து போட்டீர்களானால் ரசிக்கலாம்.
விழா சிறப்பாக நடைபெற உதவிய அனைத்துப் பதிவர்களுக்கும் பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்!
சிறப்புற நடைபெற்ற
சீரிய திருவிழாவுக்குப் பாராட்டுக்கள்..
மதுரைக்கு அரங்கத்திற்கு வந்து இருந்தபோது நீங்கள் ஆற்றிய பணியினை உங்கள கண்கள் காட்டிய அசதி மூலம் தெரிந்து கொண்டேன். எதனையும் பொருட்படுத்தாது வலைப் பதிவர்கள் சந்திப்பின் வெற்றி ஒன்றே உங்கள் நோக்கமாக இருந்தது.
கீழே விழுந்ததால் கையில் அடிபட்டும் வெளியே காட்டாமல் ஆர்வத்துடன் பணியாற்றிய திண்டுக்கல் தனபாலன் உறுதியையும் ஆர்வத்தையும் என்னவென்று சொல்வது?
செயல் வீரர்களுக்கு வாழ்த்துக்கள்!
Tha.ma.8
வாழ்த்துக்கள் மதுரை நண்பர்களே ...
அடுத்து எங்கே ?
நிகழ்சிகளை youtbue இல் தரவேற்ற முயுமா ? நாங்களும் பார்போம்ல ...
முக்கிய பணி இருந்ததால் மதுரைக்கு வந்து வலைப்பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளும் வாய்ப்பை தவறவிட்டுவிட்டேன். விழா சிறப்பாக நடைபெற்றமை அறிந்து மகிழ்ச்சி!
விழா அருமை நண்பரே.
காலை முதல் மாலை வரை தொய்வின்றி, நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டே இருந்தன. பார்ப்பவர்களுக்கு அலுப்புத் தட்டாத வகையில் நிகழ்வுகள் அமைந்திருந்தன. ஒரு நாள் முழுமையாகக் கரைந்து சென்றதே தெரியவில்லை.
தங்களின் உழைப்பு, விழாவின் ஒவ்வொரு செயலிலும், தெரிந்தது.
விழா வநிர்வாகக் குழவினர் அனைவரும் போற்றப்ப்ட வேண்டியவர்கள்
பாராட்டப்பட வேண்டியவர்கள்
தங்களின் உழைப்பிற்குத் தலை வணங்குகிறேன் நண்பரே
தங்கள் பெரும் முயற்சியில் தமிழ் வலைப்பதிவர்கள் திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்று முடிந்தது.
மிக்க மகிழ்ச்சி.
Nanri.
http://sattaparvai.blogspot.in/2014/10/2014.html
விழா மிகவும் அருமை...உங்கள் உழைப்பு மிகவும் பாராட்டுதற்குரியது..வாழ்த்துகள் ..அனைவரையும் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி...அனைவருக்கும் நன்றி..
அருமையாக நடந்து முடிந்தது பதிவர் திருவிழா... அரங்கமெங்கும் பம்பரம் போல் சுற்றிய உங்களால் தான் இந்த வெற்றி சாத்தியமானது....
விழா சிறப்புடன் நடந்ததை அறிந்து மிக மகிழ்ச்சி!
மிக மகிழ்ச்சி!
Vazthukkal
விழாவுக்கு ஒத்துழைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.நேரலையில் சில பேர் பார்க்ககிடைத்தது மகிழச்சி.உங்களின் கடும்பணிக்கு நன்றி சொல்லக்கடமைப்பட்டுள்ளோம்.
மதுரைப் பதிவர் திருவிழாவை
ஒளிப்படங்களுடன் பார்த்தேன்
அருமைான பதிவு
தொடருங்கள்
மதுரை வலைப்பதிவர் விழாவில்
தங்களையும் நண்பர்களையும் பார்த்ததில் மகிழ்ச்சி. ஒரு பெரிய நிகழ்வை அமைதியாகவும், அருமையாகவும் மேற்கொண்டு சாதனை படைத்துள்ளீர்கள். தங்களுக்கும் குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். வலையுலக நட்பைத் தொடர்வோம். நன்றி.
அனைவருக்கும் வாழ்த்துகள்!
மதுரையில் விழாவை சிறப்பாக நடத்திய அனைவருக்கும் வாழ்த்துக்கள் நன்றிகள்.
நேரடி ஒளி பரப்பு என் கணினியில் வரவில்லை. முயன்று பார்த்து விட்டு விட்டேன். வருத்தமாக இருந்தது. நினைவுகள் அங்கு தான் இருந்தது.
நன்றி
வாழ்க வளர்க
உமையாள் காயத்ரி
வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்..
படங்களும் பகிர்வும் நல்லா இருக்குங்க. நா வந்து கலந்துக்கனும்னு நெனச்சும் வர முடியலே ரொம்ப மிஸ்பன்ண்ணிட்டேன் அடுத்து எங்க?
மிகச் சிறப்பாக பதிவர் சந்திப்பினை நடத்திய உங்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்.
என்னால் தான் கலந்து கொள்ள இயலாமல் போய்விட்டது....
சந்திப்பை சிறப்பாக நடத்தியதற்கு வாழ்த்துக்கள்.
மிகப் பெரிய சாதனைதான் நண்பர்களே! விழாவை மிகச் சிறப்பாக நடத்திய உங்கள் அனைவருக்கும் எங்கள் சிரம் தாழ்ந்த வணக்கங்களும், பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்!
பரவாயில்லை நேரடி ஒளிபரப்புச் சரியாக கேட்காவிட்டாலும், காண முடிந்தது மட்டுமல்ல இத்தனை தூரம் நீங்கள் உழைத்து, ஏற்பாடுகளைக் கவனித்து, மிகச் சிறப்பாக வெற்றிகரமாக நடத்தியதே மாபெரும் விஷயம்தான்! அதற்கே ஒரு பெரிய பொக்கே உங்களுக்கு நண்பரே!
வாழ்த்துக்கள் பிரகாஷ். உடனிருந்த கவனித்த திண்டுக்கல் தனபாலன் அவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.
என்னால் சிறிது நேரமே அங்கு இருக்க முடிந்தாலும், விழாவின் சிறப்பை நேரில் கண்ட மகிழ்ச்சி என்னுள் உண்டு. சிறப்பாக செய்திருந்தீர்கள்..
வாழ்த்துக்கள்..
வெற்றிகரமாக விழாவினை நடத்திய தங்களுக்கும் சீனா ஐயா, தனபாலன் அண்ணா மற்றும் பதிவுலக நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்...
படங்கள் அருமை....
சகோதரர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களுக்கு வணக்கம்.
வலைப்பதிவர் சந்திப்பில், மேடையில் பொன்னாடை போர்த்தி எனக்கு நினைவுப் பரிசு வழ்ங்கிய காட்சியை நான் எனது கேமராவில் படமெடுத்துக் கொள்ளவில்லை. நீங்கள் விரிவான பதிவுகள், புகைப்படங்களை வெளியிட்டால் அதிலிருந்து எடுத்துக் கொள்வேன். நன்றி!
அனைவருக்கும் எனது பாராட்டுக்களும்
வாழ்த்துக்களும்
வாழ்க தமிழ்
Enakku vara mudiyaamal poy vittade,,,
"நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்" என்பதுபோல விழா மேடையில் நம்ம "கில்லர்ஜி" ஐயாவை காணோமே???...
கில்லர்ஜியை அழைக்காமல் விழாவை ஏற்பாடு செய்த விழாக்குழுவினரை எங்கள் நிறுவனம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்...