வணக்கம் தமிழ் வலைப்பதிவர்களே,
நாளை மதுரையில் வலைப்பதிவர் திருவிழா கோலாகலமாக நடைபெற உள்ளது. விழாவிற்கு உலகின் பல பகுதியில் இருந்தும் பதிவுலக நண்பர்கள் வருகை தர இருக்கிறார்கள். சிறந்த பேச்சாளர்களும் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்கள். இத்தகைய மாபெரும் விழாவில் பதிவர்களாகிய நாம் கடைபிடிக்க வேண்டிய விஷயங்களாக சிலவற்றை இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. அரங்க மேடையானது நடனம் பயிற்றுவிக்கும் மேடை. அதோடு மேடைக்கு பின்புறம் சுவாமி சன்னதி இருப்பதால் மேடையில் ஏறுபவர்கள் காலணிகள் அணித்து ஏற வேண்டாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். கீழேயே கழற்றி வைத்து விடவும்.
2. நாம் சந்திக்க விரும்பும் பதிவர்களின் பெயரை மறக்காமல் இருக்க ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் இணையத்தில் முகம் பாரா நண்பர்களாக இருப்பவர்களை மறக்காமல் சந்தித்து நட்புறவை வளர்க்க முடியும்.
3. விழா அரங்கில் நமக்கு அறிமுகமில்லாத பதிவர்களும் இருப்பார்கள். அவர்களிடம் நாமாக சென்று நம்மைப் பற்றி அறிமுகம் செய்வதோடு மட்டுமில்லாமல், அவர்களைப் பற்றிய சிறு குறிப்புகளையும் ஒரு தாளில் எழுதி வைக்கலாம். இதனால் பின்னாளில் அவர்களின் வலைப்பூவை வாசிக்கவும், அவர்களிடத்தில் நட்புறவை ஏற்படுத்தவும் உதவியாய் இருக்கும்.
4. நம்மைப் பற்றி, வலைப்பூவைப் பற்றி பிறரிடத்தில் அறிமுகம் செய்கையில் அவர்கள் நம்மை முழுமையாக அறியும் வண்ணம், தெளிவாக குறிப்பிட வேண்டும்.
உதாரணமாக: நண்பர் சீனிவாசன் பாலகிருஷ்ணன் தனது வலைப்பூ தலைப்பாக "திடங்கொண்டு போராடு" என்றும், வலைப்பூ முகவரியாக "சீனுகுரு" என்றும், பிறரது வலையில் கருத்துரை இடும் போது சீனு என்ற பெயரிலும் இருப்பார்.
இவ்வாறு பல பெயரில் இருந்தால் பெயரில் குழப்பமாக இருக்கலாம். இதனால் நாம் நம்மைப் பற்றி கூடுதல் தகவல்களை குறிப்பிட்டால் மற்றவர்கள் அறிய எளிதாக இருக்கும்.
5. முக்கியமாக விழா நடைபெறும் நாளன்று யாரும் மது அருந்தி வரக் கூடாது. இதனால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. நமது வீட்டு விழா என்பதை நினைவில் கொள்ளவும்.
6. பொதுவில் முகம் காட்டா பதிவர்களையும், முக்கியமாக, பெண் பதிவர்களையும் அவர்கள் அனுமதியில்லாமல் புகைப்படம் எடுக்க வேண்டாம். தவறி எடுத்திருந்தாலும் பதிவில் வெளியிட வேண்டாம் நண்பர்களே.
7. மேடையில் பங்கேற்று உரை ஆற்றுபவர்களை விசிலடித்தோ, கை தட்டியோ உற்சாகப்படுத்த வேண்டும். அதே சமயம் முடிந்தவரை அமைதி காக்கவும் தவறக் கூடாது.
8. புதிய பதிவர்களை வரவேற்று, விழா அரங்கில் அவர்களுக்கு தேவையான வசதிகளையும், உதவிகளையும் செய்ய வேண்டும். இதனால் அவர்களுக்கு பதிவுலக புரிதலும், பதிவர்களின் நட்பும் கிடைக்கப் பெறும்.
நன்றி நண்பர்களே.....
தொடர்புடைய பதிவுகள்:
வலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!
மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!
மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!
வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014
மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!

மதுரை வலைப்பதிவர் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு வருவதற்கான பேருந்து வழித்தடம் விவரங்கள்!!!
வலைப்பதிவர் சந்திப்பு திருவிழா-மதுரை-26.10.14 சந்திப்புவலைப்பதிவர் சந்திப்பு மதுரை - 2014, நன்கொடை அளிக்க விரும்புவோர் கவனத்திற்கு!!!
மதுரை பதிவர் சந்திப்பிற்கு வருகையை உறுதி செய்திருக்கும் பதிவர்களின் முதல் பட்டியல்!
மதுரை வலைப்பதிவர் சந்திப்பு 2014 நிகழ்ச்சிகள் - ஓர் முன்னோட்டம்!!!
வருகையை உறுதி செய்த பதிவர்களின் இரண்டாம் பட்டியல் - மதுரை வலைப்பதிவர் திருவிழா 2014
மதுரை வலைப்பதிவர் திருவிழாவில் கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் யார்? யார்!!
நிகழ்ச்சிநிரல் அறிவிப்பு - மூன்றாம் ஆண்டு வலைப்பதிவர் சந்திப்பு மதுரை 2014!!!
9 கருத்துரைகள்:
tks
சரியாக சொல்லியுள்ளீர்கள் !
எனது பக்கத்தில் பகிர்கிறேன். நண்பர்கள் படிக்க வேண்டுகிறேன். அதன் பிரகாரம் கடைப்பிடிக்க வேண்டுகிறேன்.
நன்றி நண்பர்களே.
நல்ல குறிப்புகள்
வாழ்த்துக்கள் மச்சி..
விழா சிறக்க வாழ்த்துக்கள் .... நான்தான் கலந்துகொள்ள இயலவில்லை
அன்புக் கட்டளைகள்!?!
அருமை சார்!
சரியான நேரத்தில் வெளியிட்ட தேவையான இடுகை.
விழா சிறக்க வாழ்த்துக்கள்.
அருமை...