வணக்கம் நண்பர்களே..
டிஸ்கி: தமிழ்வாசி தளத்தில் முன்னொரு காலத்தில் சின்ன பாப்பா.. பெரிய பாப்பா என்ற தலைப்பில் இரு நண்பிகளின் அரட்டை கச்சேரி உரையாடல் பதிவாக வந்தது.. சில காலம் இடைவெளிக்கு பிறகு இன்று மீண்டும் இரு பாப்பாக்களின் அசத்தல் அரட்டை கச்சேரி களை கட்டுகிறது...
(பெரிய பாப்பா வீட்டுக்கு சின்ன பாப்பா வருகிறாள்)
"அடியே சின்ன பாப்பா.... என்னடி ரொம்ப நாளா ஆளவே காணோமே.. எங்கடி போயிருந்த...?"
"அத ஏனக்கா கேட்கறிங்க... என் வீட்டுக்காரரை அம்மாவுக்கு ஸ்பெஷல் போலீஸா போட்டதுல இருந்து அவரு எப்ப பார்த்தாலும் போயஸ்கார்டன்ல அம்மா வீடே கதின்னு இருக்காரு.. அவரு எப்ப வீட்டுக்கு வருவாரு... நல்ல சாப்பாடு சாப்பிடுவாருன்னு காத்துகிட்டே இருந்தேனா... உங்கள, அக்கம் பக்கத்தையே மறந்துட்டேன்க்கா..."
"ஏண்டி... அவருக்கு பதிலா வேற யாராச்சும் அங்க போக வேண்டியது தான... உன் வீட்டுக்காரரு கிட்ட சொல்ல வேண்டியது தானே?"
"அக்கா... அங்க டூட்டி பார்க்கறதுனால சம்பளம் கொஞ்சம் அதிகமா வருதுல,.,, அஹி விட முடியுமா???"
"அதானே பாத்தேன்.. அம்மிணி வீட்டுக்குள்ள பதுங்கிக்கிடக்கறத... ஏண்டி... அம்மாவுக்கு கஷ்டப்பட்டு தூண்டில் போட்டு மீனை புடிசிருக்காங்களே... மீன் நழுவுமா? நழுவாதா?..."
"அக்கா.... நானேன்னமோ அரசியல்ல புலியாக்கும்ன்னு நெனச்சுட்டு கேட்கறிங்களா? அதப்பத்தி எனக்கு தெரியாது.... நான் செஞ்ச வெளக்கு பூஜையும், எடுத்த பால் கொடமும் வீனாப்போகல... அது தான் எனக்கு தெரியும்.. "
"சரிடி சாக்கடையை விட்டுத் தள்ளுவோம்... ஏண்டி... உம் பையன் எப்ப பார்த்தாலும் மொபைலை நோன்டிட்டு இருக்கான்னு சொல்லிட்டு இருப்ப.. இப்ப என்னடி செய்றான்..?"
"அக்கா... மொபைலு வந்தாலும் வந்துச்சு... அதுவும் டச்சு ஆண்ட்ராய்டு வந்துச்சு.... ஸ்கூல்ல இருந்து வந்தவொடனே தூக்கி வச்சுட்டு கேம்சு வெளையாட ஆரம்பிச்சிறான்... அவரும் சொல்லிப் பார்த்துட்டார்.. கேட்க மாட்டிங்கறான். "
"சரி வுடிடி... சின்ன வயசுல அப்படித்தான் இருப்பான்.. அவனுக்கு கம்ப்யூட்டர் வாங்கித் தாங்க... அதுல படிப்பு சம்பந்தமா யூஸ் பண்ற மாதிரி அவனுக்கு கத்துத் தாங்க... அப்படியே கம்ப்யூட்டர்ல புலியாயிருவான்...டீ... "
"ஏண்டி... இந்த பொண்ணு டிடி இருக்காளே... இன்னமும் விஜய் டிவில காப்பித்தண்ணி ஆத்திட்டு இருக்காளே... அவ அக்கா மாதிரி குடும்பத்த கவனிக்க மாட்டாளா?"
"அக்கா... பணம் காய்க்கர மரத்தை வுட்டுட்டு போண்னு சொன்னா யாராச்சும் போவாங்களா? என்ன அவளுக்கு குறை...??? இன்னும் கொஞ்ச நாளுக்கு காப்பி ஆத்தட்டுமே..."
"ஆமாண்டி.. அவள நீ வுட்டுத்தர மாட்டியே... அவ பேன் ஆச்சே நீ..."
"அக்கா...ஆங்... மாட்டுனிங்களா... உங்க தோஸ்து பேன்ஸ் எப்படி இருக்காங்க... அவங்களுக்கு வேண்டிய சாப்பாடு போடறிங்களா?"
"அடியே.... வம்ப ஆரம்பிச்சுட்டியா? பேன்ல்லாம் இப்ப அவ்வளவா இல்ல... அதுக்கு நெட்ல இயற்கை மருந்து டிப்ஸ் போட்டிருந்தாங்க.. அதை பாலோ செஞ்சேன்.. பேன் கொறைய ஆரம்பிச்சிருக்கு... "
"அக்கா...எப்படியோ.. உங்க மண்டைல இருக்கற மண்ணு மக்கி போகாம இருந்தா சரி... ம்ம்ம்ம்..... அக்கா.... நம்பள ஆண்டவன் கைவிட்டர மாட்டான் அக்கா..."
"அடியேய் பேனுக்கும் ஆண்டவனுக்கும் என்னடி சம்பந்தம்??"
"அயோ..அக்கா... இந்த வருஷம் பேஞ்ச மழைய சொன்னேன்... விஞ்ஜானியெல்லாம் மழை குறையும்னு சொல்லி இருந்தாங்க.. ஆனா, செம்ம மழை பெஞ்சிருக்கு... அதான் நம்பள ஆண்டவன் கைவிட மாட்டான்... நம்ம போர்ல தண்ணி பஞ்சம் வாராது அம்புட்டு சீக்கிரமா..க்கா..."
"ஏண்டி சின்ன பாப்பா... மழைன்னு சொன்னதும் ஞாபகம் வருது.. ஏதோ ரோஸ் வாடர்னு என் வீட்டுக்காரரு ஒரு பாட்டில் வாங்கிட்டு வந்தாரு. அதை கொஞ்சமா மொகத்துல தேச்சா மொகம் பளபளன்னு மாறிருமாமே? அப்படியாடி....?"
"அக்கா.... உங்க வீட்டுக்காரருக்கு உங்க மேல அம்புட்டு அன்புக்கா அன்பு... இந்த மூஞ்சிய அழகா பாக்கனும்னு அவருக்கு எப்படியக்கா நெனப்பு வந்துச்சு? அவரு பாவம் அக்கா..."
"அடியே... போறாமைல பேசாத... கேட்டக் கேள்விக்கு பதில மட்டும் சொல்லு..."
"அக்கா, ரோஸ் வாட்டர் தேச்சா மொகம் பளபளப்பு ஆகும்ங்கறது கொஞ்சம் நெசம் தான்... அதோட கத்தால சோற்றை கொஞ்சம் சேர்த்து மொகத்துல அப்ளை செஞ்சா பரு, கருப்பு புள்ளி எல்லாம் சீக்கிரம் மறைஞ்சி போயிரும். மோகமும் பளபளப்பா இருக்கும்க்கா..."
"அடியே... இந்த பாக்கியராச பார்த்தியா... எம்புட்டு பளபளப்பா விக் வச்சுட்டு கேரள நடிகை கூட சோடி போட்டு நடிச்சிருக்காப்ல.. படம் பேரு என்னமோ... துணை முதல்வராம்ல...."
"ஆமாக்கா... நானும் பேஸ்புக்ல பார்த்தேன்... நெறைய பேரு அந்த படத்தோட ஸ்டில்லை போட்டிருந்தாங்க.. அந்த நடிகை மேல கையை போட்டு பாக்கியராசு செம க்யூட்டா இருக்காருக்கா..."
"ஆமாண்டி... அந்த நடிகை பேரு என்னாது? "
"கேரளா நடிகைக்கா... பேரு ஸ்வேதா மேனன்..."
"ஏண்டி நம்ம சின்ன மேனன் எப்படி இருக்கா....? என்ன படம் நடிச்சுட்டு இருக்கா?"
"ஓ..ஓ...ஓய்...ஓய்.... லட்சுமி மேனனை கேட்கறிங்களா?"
"ஆமா ஓய்... "
"அவ ஜிகர்தண்டா படத்துக்கு அப்புறம் மலையாளத்துல ரெண்டு படம் நடிக்க போயிட்டா... அப்புறமா தமிழ்ல கார்த்தி, விஷால் கூட ரெண்டு படத்துல நடிச்சுட்டு இருக்கா... ஓய்...."
"என்னடி என்னமோ கிர்ர்ர்ர்ர்ர்ர்... கிர்ர்ர்ர்ர்ர்ர்ன்னு சத்தம் வருது... அதுவும் உன் ஹேன்ட் பேக்ல இருந்து வருது..."
"என் மொபைல் தான்... சைலன்ட் மோட்ல வச்சிருந்தேன்... யாரு கூப்பிடுராங்கனு தெரியலையே... "
(மொபைலை எடுத்து ஹலோ... சொல்கிறாள் சின்ன பாப்பா)
"ஹலோ... ஹலோ....
என்ன பாட்டு ஹலோ ட்யூன்னா வேணுமா?
போடா... "
எத்தனவாட்டி திட்டினாலும் இவிங்க போன் போட்டு டார்ச்சர் செய்றாங்க அக்கா...""
"யார சொல்ற?"
"இந்த மொபைல் கம்பெனிக்காரங்க தான்... டெய்லி நாலு போன் வந்திருது... அந்த பாட்டு வேண்டுமா? இந்த ஆபர் வேண்டுமான்னு டார்ச்சர் பண்றாங்க அக்கா..."
"ஏண்டி.. இதுக்கு ஏன் பொலம்பற... பிரச்சனைய உன்கிட்ட வச்சுக்கிட்டு அவங்கள திட்டி பிரயோசனம் இல்ல... அதுக்கு ஒரு வழி இருக்கு.."
"என்னக்கா வழி... அவிங்க போனு வராம இருந்தா சரி..."
"உன் மொபைல் நம்பர்ல இருந்து START 0 அப்படின்னு எஸ்எம்எஸ் டைப் பண்ணி 1909 நம்பருக்கு அனுப்பிரு... ஏழு நாளுக்குள்ள உனக்கு வர்ற விளம்பர போன் கால்ஸ், எஸ்எம்எஸ் எதுவும் வராது... இதுக்கு பேரு DND - DO NOT DISTRUB-ன்னு பேரு.."
"அக்கா.. ரொம்ப யூஸ்புல் மெசேஜ் சொல்லியிருக்கிங்க.. இதோ.. இப்பவே எஸ்எம்எஸ் அனுப்பிறேன்.. ரொம்ப தாங்க்ஸ்க்கா..."
(சின்ன பாப்பா மெசேஜ் டைப் பன்னுகையில் இன்னொரு போன் வருகிறது)
"அதுக்குள்ள இன்னொரு போனா? ஹை... அவரு கூப்பிடுறாரு... "
"ஹலோ... ஹலோ...
என்னங்க எப்படி இருக்கீங்க...?
என்ன ரெண்டு நாளு லீவுல வீட்டுக்கு வரீங்களா?
வாங்க... வாங்க....
சரிங்க... சரிங்க...
உங்களுக்கு பிடிச்ச மாதிரி டேஸ்ட்டா சமைச்சு வைக்கிறேன்..
வாங்கங்க... வாங்க....."
"அக்கா... அவரு லீவுல வராரு.. நான் கிளம்பறேன்... அவருக்கு பிடிச்சது எல்லாம் செய்யணும்... போயிட்டு வரேன் அக்கா..."
"அடியே மெதுவாடி... மெதுவா.... ".....
அரட்டை முடிந்தது..
6 கருத்துரைகள்:
ஹி..ஹி..ஹி..
சின்னப் பாப்பாவும் பெரிய பாப்பாவும் சிரிக்க மட்டும்தான் வைப்பாங்கன்னு பார்த்தா அரசியல் கூட பேச வெச்சுட்டீங்க..
இதற்கு முன்னர் படித்தது இல்லை! இப்போது படித்தேன்! சுவார்ஸ்யமாக பல தகவல்கள்! தொடருங்கள்! நன்றி!
சின்ன பாப்பா பெரிய பாப்பா ..அரட்டை நல்லா இருக்கு :)
ஆல்றவுண்டர்ஸ்தான் !! அரசியல் ஆரம்பிச்சி எல்லா விவரமும் சொல்றாங்க :)
DND ..நல்ல ஐடியா ..கற்றாழை ப்ளஸ் ரோஸ் வாட்டர் நல்ல ஐடியா
தொடர்ந்து எழுதி பக்கப் பார்வைகள் பத்து லட்சம் தொட வாழ்த்துகள்!
த ம 3
சின்ன பாப்பா - பெரிய பாப்பா ரொம்ப அருமை....
கலக்கல்... அடிக்கடி சின்ன பாப்பா பெரிய பாப்பா பேசட்டும்,...