CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!

Showing posts with label கள்ளழகர் எதிர்சேவை. Show all posts
Showing posts with label கள்ளழகர் எதிர்சேவை. Show all posts


மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற விழாக்களில் ஓன்று, மதுரை சித்திரை திருவிழா. சைவமும் வைணவமும் இணைந்து நடத்தும் விழாவாக இது கொண்டாடப்படுகிறது. இதில் முதலில் வருவது மீனாட்சி அம்மனின் சித்திரை திருவிழா.

இந்த விழா நிறைவு பெற்றதும் அழகர் கோவில் விழா தொடங்குகிறது. இந்த ஆண்டும் மீனாட்சி அம்மனின் பட்டாபிசேகம், திக்குவிஜயம், திருக்கல்யாணம், தேரோட்டம் போன்றவை விமரிசையாக நடைபெற்று முடிந்துள்ளது.










இதனைத் தொடர்ந்து வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக அழகர் கோவிலில் இருந்து சுந்தரராஜ பெருமாள், கள்ளழகராக மாறி நேற்றுக் காலை கண்டாங்கி பட்டுடன் தங்கபல்லக்கில் புறப்பட்ட கள்ளழகர் கள்ளந்திரி, அப்பன் திருப்பதி, கடச்சனேந்தல் உள்ளிட்ட பல பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மண்டகப்படிகளில் அமர்ந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார்.

மேலும் வாசிக்க... "மதுரை கள்ளழகர் எதிர்சேவை 2014 - படங்கள், சிறப்புப்பார்வை"



மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012

இன்று 5-05-2012 காலை ஆறு மணி அளவில் கள்ளழகர் எதிர்சேவை மூன்றுமாவடியில் நடந்தது. கள்ளழகர் தங்கபல்லக்கில் வலம் வந்ததை புதூர் ஐயப்பன் கோவில் அருகில் தரிசனம் செய்து எடுத்த படங்கள், உங்களின் தரிசனத்திற்காக...
கோவில் யானை வலம் வருதல்
புதூர் கற்பகநகரில்

கள்ளழகருக்கு விளக்கு பூஜை செய்கிறார் ஒரு பக்தர்

புதூர் ஐயப்பன் கோவிலுக்கு முன்பு கள்ளழகர்

வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகருக்கு மதுரை மூன்று மாவடியில் எதிர்சேவை நடந்தது .மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சி கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் விழாவாகும். 

இதில் பங்கேற்க அழகர்கோவிலிருந்து சுந்தரராஜ பெருமாள் கள்ளழகர் வேடத்தில் நேற்று மாலை 5.21 மணிக்கு தங்கப்பல்லக்கில் அழகர்கோவிலில் இருந்து அதிர்வேட்டு முழங்க பக்தர்களின் கோவிந்தா கோஷத்துடன் கோயிலை விட்டு வெளியே வந்தார். முதலில் வெள்ளையன்குன்றம் சண்முகராஜா, கூட்டு வண்டியில் முரசு அடித்து கொண்டு முன்னே செல்ல குட்டி யானை சுந்தரவள்ளி, அதனை தொ டர்ந்து 20 உண்டியல்கள் மற்றும் தனது பரிவாரங்களுடன் மதுரை நோக்கி புறப்பட்டார். 

கோயில் கோட்டை வாசலை விட்டு வெளியே வந்த கள்ளழகர் பின்பு கருப்பணசாமி கோயில் அருகேயுள்ள கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளினார்.அங்கு சிறப்பு பூஜைக்கு பின்பு இரவு 7 மணி அளவில் புறப்பட்டு பொய்கைகரைப்பட்டி, கள்ளந்திரி, அப்பன் திருப்பதி வழியாக சுந்தர்ராஜன்பட்டி மறவர் மண்டபத்தில் நள்ளிரவு 1 மணிக்கு எழுந்தருளினார். மீண்டும் 2 மணி அளவில் புறப்பட்ட கள்ளழகர் காதக்கிணறு, கடச்சனேந்தல், சர்வேயர்காலனி வழியாக இன்று அதிகாலை 6 மணிக்கு மூன்றுமாவடிக்கு வந்தார்.

அங்கு காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கள்ளழகரை எதிர்கொண்டு எதிர்சேவை செய்தனர். காலை 9 மணிக்கு புதூர் மாரியம்மன் கோயிலிலும், மதியம் 12 மணிக்கு ஆயுதப்படை குடியிருப்பிலும், மாலை 5 மணிக்கு தல்லாகுளம் அவுட்போஸ்ட் மாரியம்மன் கோயிலிலும், மாலை 5.20 மணிக்கு அம்பலகாரர் மண்டபத்திலும் கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வணங்கி வரவேற்பார்கள்இரவு 9.30 மணிக்கு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் எழுந்தருளுகிறார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெறும். திருமஞ்சனமான பின்னர் தங்க குதிரை வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். திருவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை பெருமாளுக்கு சாத்தப்படும். 

பின்பு தங்க குதிரை வாகனத்தில் இரவு 12 மணிக்கு புறப்படும் கள்ளழகர் 2.30 மணி அளவில் கருப்பணசாமி கோயிலில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருகிறார். அங்கிருந்து புறப்படும் கள்ளழகர் வைகை ஆற்றில் காலை 5.45 மணி முதல் 6.15 மணிக்குள் இறங்குகிறார்.வைகை ஆற்றில் இறங்கும் கள்ளழகரை வெள்ளி குதிரை வாகனத்தில் வரும் வீரராகவ பெருமாள் எதிர் கொண்டு வரவேற்பார். 
செய்திகள் தொகுப்பு: http://maduraipost.com/2012/05/kallalagar-festival/
புகைப்படங்கள் என் மொபைல் மூலம்
மேலும் வாசிக்க... "மதுரையில் கள்ளழகர் எதிர்சேவை (புகைப்படங்கள்): சித்திரை திருவிழா 2012"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1