கோபாலு: அண்ணே! அண்ணே! தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா?
தனபாலு: மடையா ஏண்டா? இப்படி கத்தற, வீட்டுல தாண்டா இருக்கேன். வா அப்படி முக்குல நின்னு பேசுவோம்.
கோபாலு: இல்லைண்ணே, ஒரு வாரமா வீடு பூட்டியிருந்துசே, அதான் கேட்டேன்.
தனபாலு: ஓ...ஓ... அதுவா, சகலை ஊருக்கு குடும்பத்தோட போயிருந்தேன்டா..
கோபாலு: அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே.
தனபாலு: டேய்... தம்பி வம்பு இழுக்கற மாதிரி தெரியுது. ஒழுங்கா பேசுடா.
கோபாலு: சரிண்ணே, கொவப்படாதிங்க. எதாவது புதுசா மேட்டர் இருக்கா?
தனபாலு: என்னது? மேட்டரா? செய்தி இருக்கான்னு கேளுடா தம்பி.
கோபாலு: சரிண்ணே. ஏதாவது செய்தி இருக்கா?
தனபாலு: அப்படி கேளுடா தம்பி. நம்ப ரஜினி உடம்பு சரியிலாம ஆஸ்பத்திரில இருக்காருல்ல. இப்ப கொஞ்சம் கொஞ்சமா முன்னேற்றமா இருக்காம். இருந்தாலும் மேல் சிகிச்சைக்காக அடுத்த வாரம் லண்டன் போறாராம்.
கோபாலு: ஆமாண்ணே! எப்படியாவது தலைவரு உடம்பு சரியாகி மறுபடியும் படத்துல நடிக்கணும். அதான் இந்த ரசிகனின் ஆசை.
தனபாலு: ஆமாண்டா, நானும் அப்படிதான் ஆசை படறேன்.
கோபாலு: அண்ணே! ஒரு விஷயம் தெரியுமா? ஜெயலலிதா முதல்வரா உட்கார்ந்துட்டாங்கல்ல, அதுக்காக நாக்கை அறுத்துக்கிட்டா கவர்மென்ட் வேலை உறுதியா கிடைக்கும். அப்படிதான் ஒரு பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்கு.
தனபாலு: அடப்பாவிகளா, இப்படியெல்லாம் கூத்து நடக்குதா?
கோபாலு: ஆமாண்ணே, அந்த பெண்ணுக்கு உறவினர் யாரும் இல்லையாம், அதனால பரிதாப பட்டு வேலை போட்டு கொடுத்திருக்காங்க. அதோட அவங்க தங்குற வீட்டு வாடகை செலவையும் அரசே ஏத்துக்கிட்டதாம்.
தனபாலு: டேய்... நம்ம நாட்டுல இருக்கற சிங்கத்துல சீனியர் சிங்கம் நேத்து இறந்து போயிருச்சு. பாவம்டா...
கோபாலு: எப்படி அண்ணே இறந்துச்சு.... விளக்கமா சொல்லுங்கண்ணே!
தனபாலு: பொதுவா சிங்கத்தோட ஆயள் வயசு பதினாலு வருஷம். ஆனா இந்த சிங்கம் மொத்தம் பத்தொன்பது வருஷம் வாழ்ந்திருக்கு. அதோட உடம்பு பாகங்கள் ஒண்ணொண்ணா பலவீனம் ஆகி சாப்பிடாம பட்டினியா இருந்து தன்னோட உயிரை விட்டிருக்குது.
கோபாலு: அண்ணே! சுமாரா உங்களுக்கு டெலிபோன் பில் எவ்வளவு வரும். சொல்லுங்க.
தனபாலு: ஹி...ஹி...நான் போனே பண்றது இல்லை. எப்பவுமே மிஸ்டு கால் தான். நம்ம ஏமாந்த பயலுக இருக்கிற வரை மிஸ்டு காலு தான் கொடுப்பேண்டா.
கோபாலு: அண்ணே! உங்களுக்கு சிரிப்பா இருக்கு. பாவம்ண்ணே சென்னையில ஒருத்தருக்கு 41 லட்சம் பில் தோகை வந்திருக்குது. பாவம் அவருக்கு கண்ணே கட்டி போச்சு. அரண்டு போய் கமிசனர் ஆபீசுல புகார் கொடுத்திருக்காரு.
தனபாலு: எப்படிடா... இம்புட்டு தொகை பில்லா வந்துச்சு?
கோபாலு: அண்ணே! எவனோ ஒரு பயபுள்ள அவர் நம்பர யூஸ் பண்ணி வெளிநாட்டுக்கு சாட்டிலைட் மூலமா பேசியிருக்காங்க. ஏதோ தீவிரவாதிகள் சதி செய்ததா மொத என்குயரி ல கண்டுபிடிச்சிருக்காங்க.
தனபாலு: சரிடா... யாருன்னு கண்டுபிடிச்சா சரி... சினி நியூஸ் இருந்தா சொல்லு.
கோபாலு: அண்ணே! இவ்வளவு நேரம் நீங்க பொறுமையா இருந்ததே பெரிய விஷயம். தமண்ணா முத்த மேட்டர் இருக்கு கேளுங்க....
தனபாலு: டேய் சொல்லுடா...சொல்லுடா...
கோபாலு: அண்ணே! அம்மணிக்கு தமிழ் சினி பீல்டு கொஞ்சம் டவுன் ஆயிருச்சு. அதனால் தெலுங்கு தேசம் போயிருக்காங்க, அங்க ஜூனியர் என் டி ஆர் கூட ஒரு லிப் முத்த காட்சியில நடிக்க சுமார் ஒண்ணேகால் கோடி சம்பளமா கேட்டிருக்காங்க.
தனபாலு: ஆமாண்டா, தமண்ணா லிப்புக்கு கோடி ரூபா கொஞ்சம் ஓவரு தாண்டா. நம்ம ஹன்சிகாவுக்கு வேணா கோடி கொடுக்கலாம்டா... நம்ம ஹன்சிகா ..
கோபாலு: அண்ணே! வழியாதிங்க, ஜொள்ள கொஞ்சம் தொடச்சிக்குங்க.
தனபாலு: சரிடா தம்பி... ஹன்சிகா பேர சொன்னதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டுட்டேன். டேய்... நம்ம கஞ்சா கருப்பு ஒரு படத்துல ஹீரோவா நடிக்ராராம். அதுவும் மீனவ வேசத்தில. படம் பேரு மன்னார் வளைகுடா, அந்த படத்தோட டைரக்டர் கஞ்சா கருப்பு தான் ஹீரோவா வேணும்னு அடம்பிடிச்சு கேட்டிருக்காரு. ம்ஹும்... தயாரிப்பாளர் என்ன சொல்றதுன்னு தெரியாம முழிச்சுட்டு இருக்காரு.
கோபாலு: அண்ணே! அசின் மேட்டர் ஒண்ணு இருக்கு, சொல்லவா?
தனபாலு: டேய் சொல்லுடா... அசினுக்கு நான் ஒரு காலத்துல நான் பிசின் மாதிரி இருந்தேன் சொல்லுடா....
கோபாலு: அம்மணி இந்த வெய்ய காலத்துக்கு வெளிநாட்டுக்கு சுற்றுலா போகாம கேரளாவுல டென்ட் போட்டிருக்காங்க. அங்க அவங்களுக்கு ஒரு படகு வீடு இருக்காம். அங்க அசின் தன்னோட பிரண்ட்ஸ்களோட பல நாட்டு மீன்களை வறுத்து வறுத்து சாப்பிட்டிட்டு இருக்காங்களாம்.
தனபாலு: பிரண்ட்ஸ்ன்னா கேர்ள் பிரண்டா, இல்லை பாய் பிரண்டா?
கோபாலு: உங்களுக்கு எப்பவுமே சந்தேகம் தான்...கேர்ள் பிரண்ட்ஸ் மட்டும் தான். ரொம்ப தான் கவலைப்படுறிங்க.
தனபாலு: சரி விடுடா... நம்ம இடையழகி ஸ்ரேயா சகுனி கூட டூயட் பாட போறாங்க. கொடுத்து வச்ச சகுனிடா....
கோபாலு: அண்ணே! சகுனினா யாருண்ணே. புரியற மாதிரி சொல்லுங்க.
தனபாலு: அட சகுனி வேற யாருமில்ல... நம்ம பருத்திவீரன் கார்த்தி தான். புதுசா சகுனி ன்னு பேர் வச்ச படத்துல ஸ்ரேயா கூட ஜோடி போடுறார்.
கோபாலு: கார்த்திக்கு ஒவ்வொரு படத்திலயும் செம பிகரா மாட்டுதேண்ணே, கொடுத்து வச்ச மகராசன் தான். அண்ணே...?அண்ணே...? அண்ணே...?அண்ண்ண்ணேணே.....ண்ண்....ணே...?
தனபாலு: டேய் கோவாலு...என்னடா ஆச்சு? ஏண்டா முகம் கோணலா போகுது. வாய் குளறுது. டேய்..டேய்...தம்பி...டேய்...??
கோபாலு: அண்ணே! உங்களுக்கு சனி வந்திருச்சு. உங்க பின்னாடி திரும்பி பாருங்க.... அக்கா கோவமா நிக்கறாங்க.
தனபாலு: அக்காவா.... உனக்கு தான் அக்காவே இல்லையே, யாருடா புதுசா?
கோபாலு: அண்ணே! நான் அக்கான்னு சொன்னது உங்க பொண்டாட்டிய... அண்ணே! நான் எஸ்கேப் ஆயிடுறேன்... நீங்க எப்படியோ சமாளிச்சுக்கங்க.
தனபாலு: அய்யோ...எம் பொண்டாட்டியா. டேய் மவனே உன்கிட்ட பேசிட்டே அவ கடையில அரிசி வாங்கிட்டு வர சொன்னதையே மறந்துட்டேனே.... அடப்பாவி உன்னால நான் திட்டு வாங்க போறேனே... டேய் எஸ்கேப் ஆகாதடா... நீயும் எங்கூட சேர்ந்து திட்டு வாங்குடா.....
44 கருத்துரைகள்:
முதல் முதலாக முதல் முதலாக...
பரவசமாக பரவசமாக வா...
ஆஹா....அரசியல் இங்கேயும் சூடு பிடிக்குதா.
முதல் வடையை சௌந்தர் கவ்விட்டாரே.. மீ பாவம்.
அண்ணே! அண்ணே! தனபாலு அண்ணே.... வீட்டுல இருக்கிங்களா?//
வூட்டிலை இல்லாம பின்னாடி ஆகாயத்திலையா பறப்பாங்க...
ஆரம்பமே நக்கல் ஓவரா இருக்கே.
அப்படியாண்ணே, கொழுந்தியா வீட்டுக்கு போயிருந்தேன்னு சொல்ல வேண்டியது தானே//
ஏன் அங்கிட்டு ஏதாச்சும் விசேசமா. அவ்...
அதுக்காக நாக்கை அறுத்துக்கிட்டா கவர்மென்ட் வேலை உறுதியா கிடைக்கும். அப்படிதான் ஒரு பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்கு.//
ஆய்.....உச்சியிலை அம்மாக்கு அடிச்சிட்டீங்களே மாப்பு.
டேய்... நம்ம நாட்டுல இருக்கற சிங்கத்துல சீனியர் சிங்கம் நேத்து இறந்து போயிருச்சு. பாவம்டா...//
யாரையோ குத்துறீங்க பாஸ்...
நமக்குத் தான் புரியமாட்டேங்குது.
# கவிதை வீதி # சௌந்தர் said...
முதல் முதலாக முதல் முதலாக...>>>
வாங்க வாங்க... மொத ஆளா தான் வந்திருக்கிங்க.
நக்கல் நையாண்டி குசும்பு எகத்தாளம் எல்லாம் நிறைந்த ஒரு கமர்சியல் அரசியல் தர்பார்...
கண்ணக்கட்டுதுப்பா....
@நிரூபன்
முதல் வடையை சௌந்தர் கவ்விட்டாரே.. மீ பாவம்.>>>>
விடு நிரு... உங்களுக்கும் ஒரு வடை கிடைக்காமலா போகும்?
///
நிரூபன் said...
முதல் வடையை சௌந்தர் கவ்விட்டாரே.. மீ பாவம்.////
விடுங்க நிருபன் 50 50 எடுத்துக்களாலம்...
ஹி...ஹி...நான் போனே பண்றது இல்லை. எப்பவுமே மிஸ்டு கால் தான். நம்ம ஏமாந்த பயலுக இருக்கிற வரை மிஸ்டு காலு தான் கொடுப்பேண்டா.//
அதான் உண்மையை வெளிப்படையா சொல்லிட்டீங்க எல்லே, இனிமே ஒரு பயலும் போன் பண்ண மாட்டான். அவ்...
# கவிதை வீதி # சௌந்தர் said...
///
நிரூபன் said...
முதல் வடையை சௌந்தர் கவ்விட்டாரே.. மீ பாவம்.////
விடுங்க நிருபன் 50 50 எடுத்துக்களாலம்...//
உங்கள் அன்பே போதும் தல..
நீங்களே சாப்பிடுங்க.
அண்ணே! எவனோ ஒரு பயபுள்ள அவர் நம்பர யூஸ் பண்ணி வெளிநாட்டுக்கு சாட்டிலைட் மூலமா பேசியிருக்காங்க. ஏதோ தீவிரவாதிகள் சதி செய்ததா மொத என்குயரி ல கண்டுபிடிச்சிருக்காங்க.//
அடிங் கொய்யாலா...இப்புடியா மேட்டரு. நம்ம போனுக்கு இனி யார் ஆப்படிக்கப் போறாங்களோ.
@நிரூபன்
யாரையோ குத்துறீங்க பாஸ்...
நமக்குத் தான் புரியமாட்டேங்குது.>>>>
நிரு... யாரையும் குத்தல... அது உண்மை செய்தி.
அண்ணே! வழியாதிங்க, ஜொள்ள கொஞ்சம் தொடச்சிக்குங்க.
அரசியல் அலப்பறை,சினிமா அரட்டை, காமெடி வசனங்கள், நையாண்டி நக்கல் எல்லாம் அருமையாக, காலத்திற்கேற்றாற் போல சம கால நிகழ்வுகளைத் தாங்கி வந்திருக்கிறது.
தனபாலு, கோபாலுவுன் உரையாடலை. இருவர் பெயரையும் வெவ்வேறு கலரில் கொடுத்திருந்தால், படிக்கும் போது இன்னும் பரவசமாக இருக்கும்.
@இராஜராஜேஸ்வரிஅண்ணே! வழியாதிங்க, ஜொள்ள கொஞ்சம் தொடச்சிக்குங்க.>>>>>
டேய் கோவாலு... அக்கா சொல்றாங்க... ஜொள்ள தொடச்சுக்க
கலக்கல் மாப்ள!
அன்பின் பிரகாஷ் - நல்லதொரு அலசல் - நன்று - ஆமா - அதென்ன சகல - கொழுந்தியா - மேட்டரு - தம்ன்னா - ஹன்ஸிகா - அசின் - ஸ்ரேயா - சகுனி - செம மூட்ல எழுதினியா இந்த இடுகைய - ம்ம்ம்ம்ம்ம் - நலல்ருப்பா - நட்புடன் சீனா
தனபாலு கோபாலுவோட ஒரு ரவுண்டா. ,நல்ல அலசல்கள் பாஸ்
இந்த உரையாடல் அருமையாக நகைச்சுவையாக உள்ளது. இதுபோல அடிக்கடி தொடருங்கள். பல விஷயங்கள் சுவையுடன் ருசிக்க ஏதுவாகும்.
ஹே ஹே ஹே ஹே ஹே கலக்கல் மக்கா...
இந்த தனபாலும் கோபாலும் நல்லா தான் அரட்டை அடிக்கராங்க.எதைப்பத்தி வேணாலும் பேசுவாங்களா?
காமெடி தான் ..
நண்பா கலக்கிட்டே! ரெண்டுபேரும் சூப்பரா பேசினாங்க! கடைசியில பொண்டாட்டிக்கு இப்புடி பயப்படுறாரே!
@கந்தசாமி.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி பாஸ்
@வை.கோபாலகிருஷ்ணன்
சார்... இவிங்க அடிக்கடி பேசுவாங்களே...
@MANO நாஞ்சில் மனோ
மக்கா....வருகைக்கு தாங்க்ஸ்
@Lakshmi
இந்த தனபாலும் கோபாலும் நல்லா தான் அரட்டை அடிக்கராங்க.எதைப்பத்தி வேணாலும் பேசுவாங்களா?>>>>
வேற எதை பத்தி பேசனும்னு சொல்றிங்க?
@சி.பி.செந்தில்குமார்
அண்ணே! தாங்க்ஸ்
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
நண்பா கலக்கிட்டே! ரெண்டுபேரும் சூப்பரா பேசினாங்க! கடைசியில பொண்டாட்டிக்கு இப்புடி பயப்படுறாரே!>>>
அப்ப தான் சுவாரஸ்யமா இருக்கும்.
@FOOD
கருத்துக்கு தாங்க்ஸ் உணவு...
எங்கள் அடுத்த தலைவர்.. ஜெ., வை கிண்டல் செய்வது பெரும் கண்டனத்துக்குரியது..
உங்களுக்கும் அதே மாதிரி போன் பில் வந்தா என்ன சார் பண்ணுவீங்க.? அந்த போனுக்கும் எனக்கும் சம்பந்தமில்லனு எழுதிகொடுத்துடுவீங்கல..
அப்பரம் சினி மேட்டர்ஸ் எனக்கு தெரியாது.. ஸோ.. அதுல தான் வரல..
என்னா ஒரு அலசல்....
இம் காமெடியா எல்லா செய்தியையும் சொல்லிட்டிங்க நல்லாருக்கு வாழ்த்துக்கள்
ஓவரா வறுக்கிரான்களே...
வடைய அம்பது அம்பதா பிரிச்சுக்கிரான்களே ரெண்டு பய புள்ளைங்க...
இவனுக ரெண்டு பெரும் ஓட்டவடைகிட்ட அனுமதி வாங்கினவங்களா??
அரசு வேலை வாங்க இப்படி எல்லாம் வழ் இருக்கா?
//ஜெயலலிதா முதல்வரா உட்கார்ந்துட்டாங்கல்ல, அதுக்காக நாக்கை அறுத்துக்கிட்டா கவர்மென்ட் வேலை உறுதியா கிடைக்கும். அப்படிதான் ஒரு பொண்ணுக்கு வேலை கிடைச்சிருக்கு.//அரசாங்கம் வேலை வாங்க கொஞ்சம் வித்தியாசமான லஞ்சம் போல ....
ரைட்டு
அடி பலமோ
=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
USB செல்லும் பாதை
http://speedsays.blogspot.com/2011/05/usb.html
ஆஹா என்னா அழகு நடிகைகளின் பார்வை என்னை அப்படியே இழுக்கிறது!!!!!!!!!