CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்!

நீங்கள் பிரதமரானால்....



நாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு.

இப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.

பிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்க‌ள் ம‌ட்டு‌ம் கீழே விழ வே‌ண்டு‌ம். அதை தாங்கும் சாதாரண மக்க‌ள் கீழே விழுந்து விடக்கூடாது.

சாதாரண ம‌க்க‌ள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து.

பலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அ‌ப்படி அ‌ந்த பொரு‌ள் ‌விழு‌ம்போது ம‌னித‌ன் ‌நிலைதடுமாறுவா‌ன். ஆனா‌ல் அவனை நடு‌நிலையா‌க்‌கி‌வி‌ட்டு பொரு‌ட்க‌ள் ம‌ட்டு‌ம் ‌கீழே ‌விழ வே‌ண்டு‌ம். பொரு‌ள் ‌‌கீழே விழு‌ந்தா‌ல் உ‌ங்களு‌க்கு பு‌ள்‌ளிக‌ள். ஆனா‌ல் ம‌னித‌ன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.

இப்போது நீங்கள் விளையாட தயாரா? பார்க்கலாம் உங்கள் சாமர்த்தியத்தை!

எப்படி விளையாடுவது?

அம்புகுறியை (கர்சரை) கிடைமட்டமாக வலது, இடதாக நகர்த்தவும். உதாரணமாக:

* பலகையை வலப்பக்கம் உயர்த்துவதற்கு ---- அம்புகுறியை வலதுபுறம் நகர்த்தவும்.

*பலகையை வலப்புறம் கீழ் நோக்கி நகர்த்த-- அம்பு குறியை இடதுபுறம் நகர்த்தவும்.

த‌ற்போது நா‌ட்டி‌ல் பெ‌ரிய ‌பிர‌ச்சனையாக உருவெடு‌த்து இரு‌ப்பது ‌விலைவா‌சி உய‌ர்வு. இதை மையமாக வை‌த்து த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம் ஒரு ‌விளையா‌ட்டை உருவா‌க்‌கி உ‌ள்ளது. இ‌ந்த ‌விளையா‌ட்டி‌ல் ‌‌‌நீ‌ங்களு‌ம் ப‌ங்குபெறு‌ங்களே‌ன்... 


‌விலையே‌ற்ற ‌விளையா‌ட்டு ‌விளையாட...கிளிக் செய்யுங்கள்.




நன்றி: த‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்
மேலும் வாசிக்க... "நாட்டின் பிரதமராக விலையேற்ற விளையாட்டு விளையாடுங்கள்!"



ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது!





காலை ஆறரை மணி : 
சென்னை பூங்கா ரயில் நிலையத்தில் வந்து நின்ற மின்சார ரயிலில் இருந்து இறங்கிய நூற்றுக்கணக்கான பயணிகள் ஒரே திசையை நோக்கி ஒரு சேர நடந்து சென்றனர். காலைப் பொழுது புலர்ந்து கொண்டிருக்கிற வேலையில் இவ்வளவு மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதி சென்னையிலேயே பூங்கா ரயில் நிலையத்திற்கும், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும் இடைப்பட்ட பகுதியாகத்தான் இருக்க முடியும்.

அந்த அளவிற்கு வேலைக்குச் செல்லும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒவ்வொரு நாளும் இப்படி அதிகாலை எழுந்து ஒரு ரயிலை பிடித்து பூங்கா வந்திறங்கி, பிறகு அங்கிருந்து ஓட்டமும் நடையுமாக ஓடிச் சென்று சென்னை புறநகர் ரயில் நிலையத்தில் புறப்படக் காத்துக் கொண்டிருக்கும் மின் ரயிலைப் பிடிக்கச் செல்வதும், இதே போல சென்னையின் புறநகர் பகுதிகளான திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி, ஆவடி, அம்பத்தூர் பகுதிகளில் இருந்து அதிகாலை ரயில்களைப் பிடித்து சென்ட்ரலுக்கும், சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கும் வந்து அங்கிருந்து மற்றொரு ரயிலைப் பிடித்து அல்லது பேருந்தைப் பிடித்து தங்களுடைய பணியிடத்திற்குச் செல்வதும்....

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் ஆகிய இடங்களில் இருந்தும் இப்படி பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்...

இப்படி 30-40 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து மட்டுமல்ல, வடஆற்காடு மாவட்டம் திருப்பத்தூரில் இருந்து சென்னைக்கு வரும் ஏலகிரி விரைவு ரயிலில் சில ஆயிரம் மக்கள் ஒவ்வொரு நாளும் சென்னைக்கு வந்து பணியாற்றிவிட்டு திரும்புவதும்....

இந்த மக்களுக்கு ஒவ்வொரு நாளும் பயணம் என்பதே ஒரு பெரும் அவஸ்தையாகும். ஒவ்வொரு வாரமும் ஆறு நாட்களுக்கு இந்த வதை தொடர்கிறது. இப்படி ஒரு இயந்திரம் போல ஒவ்வொரு நாளும் 2, 3 மணி நேரம் காலையில் ஒரு தடவையும், மாலையில் ஒரு தடவையும் பயணம் செய்துவிட்டு வீடு திரும்பும் மக்களின் வாழ்க்கை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நினைத்துப் பார்த்தால் வேதனையானது மட்டுமல்ல, வாழ்க்கைக்காக வேலை என்பது மாறி, வேலைக்காகவே உயிர் வாழ்வது என்றாகிவிட்டது.

பொருளாதார வாழ்க்கை என்பதே அன்றாட வாழ்க்கையாகிவிட்ட இந்த கால கட்டத்தில் இதையெல்லாம் ஏற்றுக் கொண்டு ஒரு அன்றாட இயந்திரமாகி வரும் மானுட வாழ்க்கைக்கு ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் தான் அவர்களும் தங்களை மனிதர்கள் என்று நினைத்துப்பார்க்க வாய்ப்பு அளிக்கும் ஒரே நாளாகிறது. அன்றும் அவர்கள் தங்களுடைய குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக கழிப்பார்கள் என்று கூறுவதற்கில்லை.

அடுத்த ஒரு வாரத்திற்கான ஆயத்த வேலைகளுக்கே அந்த நாள் போய்விடுகிறது. வீட்டிலேயே இருக்கும் மனைவிக்கு அன்று மட்டும் வீட்டில் இருக்கும் கணவனுக்கு சமைத்துப் போடுவதில் நேரம் போய்விடுகிறது. ஆறு நாள் வேலை + களைப்பு அந்த ஒரு நாளை முற்றிலுமான ஓய்வு நாளாகவே கழிக்கச் செய்கிறது. இதில் எந்த விதத்தில் அவர்கள் அந்த நாளை விடுமுறை நாளாக கழிக்கிறார்கள். 
 
இப்படிப்பட்ட வாழ்க்கை வாழும் மனிதர்களால் எவ்வாறு அவர்களுடைய அன்றாடப் பணிகளை (அலுவலகப் பணிகளை) செவ்வனே, திறம்படச் செய்ய முடியும். அவர்களுடைய உற்பத்தித் திறன் நிச்சயம் எதிர்பார்த்த அளவிற்கு இராது. அவர்களின் பணி தரமும் எதிர்பார்த்த அளவிற்கு கிட்டாது.

ஒரு மனிதனின் பணித் திறன், பணித் தரம் ஆகிய காரணிகளை எல்லாம் நன்கு சீர்தூக்கி பார்த்ததன் காரணமாகத்தான் அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட முன்னேறிய நாடுகளில் 5 வேலை நாட்கள் கொண்ட வாரத்தை முறையாக வைத்துள்ளனர். இதனால் வெள்ளிக்கிழமை மாலை முதலே `அனுபவிக்க வேண்டும்' என்ற எண்ணம் ஏற்பட்டு, மகிழ்ச்சியைத் தரும் விதத்தில் கேளிக்கைகள், விளையாட்டுக்கள், பொழுதுபோக்குகளில் ஈடுபடுகின்றனர்.

சனிக்கிழமை அனுபவிக்கும் ஒரு நாளாகவே கருதப்படுகிறது, அவ்வாறே வாழ்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை நம்மைப் போலவே அடுத்த வாரத்திற்கான ஆயத்தங்களில் ஈடுபடுகின்றனர். அந்த நாடுகளில் எல்லாம் வேலையை வாங்குவதும் சரி, பெறப்படும் வேலை அதற்குரிய மதிப்புடன் இருப்பதை உறுதி செய்வதிலும் சரி பெருவெற்றி பெறுகின்றனர். தரமும் சிறப்பாக உள்ளது.

இதற்குக் காரணம், நன்கு ஓய்வெடுத்த உடலும், புத்துணர்வு பெற்ற உள்ளமும், அந்த இரண்டு நாள் விடுமுறையில் கிடைத்துவிடுகிறது. எனவே திறனும் தரமும் எதிர்பார்த்த அளவிற்கு அங்கு பெற முடிகிறது.

ஆனால், நமது நாட்டில் ஒரு பணியை முடிப்பதற்கான ஆட்கள் எண்ணிக்கைதான் இன்றளவும் பெரிதாக கவனிக்கப்படுகிறதே தவிர, திறனும், தரமும் கவனிக்கப்படுவதுமில்லை, பொருட்படுத்தப்படுவதுமில்லை. சில ஏற்றுமதி தொடர்பான பணிகளை மட்டும் விதிவிலக்காகக் கொள்ளலாம். மற்றபடி நமது பணி வாழ்க்கையில் திறனுக்கும், தரத்திற்கும் குறைவான இடமே உள்ளது. அதனை வற்புறுத்திப் பெற முடியாது. காரணம் இயந்திரத் தனமான ஒரு வேலைக் கட்டமைப்பை நாம் வைத்துக் கொண்டு மாரடித்துக் கொண்டிருக்கிறோம்.

அரசுப் பணியானாலும் தனியார் பணியானாலும் திறனை, தரத்தை முக்கிய அம்சமாக மதிப்பிடப்படுவதில்லை. இதனால் குறித்த நேரத்தில் பணிகளும் முடிக்கப்படுவதில்லை. அதில் இருக்க வேண்டிய அளவிற்கு தரமும் இருப்பதில்லை. இதற்கெல்லாம் மிக அடிப்படையானது பணியில் ஈடுபடுத்தப்படும் மனிதர்களின் மன, உடல் நிலைதான்.

வலிமையான, நலமான உடல், உற்சாகத்தின் ஊற்றாக மனம், திறம்பட வேலையை செய்து முடிப்பதற்கான பணியிட கட்டமைப்பு ஆகிய 3 அம்சங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும். அதற்கு முன்னோடியாக முதலில் இந்த ஆறு நாட்கள் கொண்ட வேலை வாரத்தை பழக்கத்தில் இருந்து முற்றிலுமாக - சட்டம் போட்டாவது - அகற்றிட வேண்டும்.

ஐந்து நாட்கள் கொண்ட வேலை வாரத்தை அறிமுகம் செய்ய வேண்டும். சனி, ஞாயிற்றுக் கிழமைகள் விடுமுறை நாட்களாக இருந்தால் பணிக்காக மட்டுமே மக்கள் பயணம் செய்யும் நிலை மாறி, தங்களது கேளிக்கை, பொழுதுபோக்கு, வாங்கல், உறவினர்களை சந்தித்தல் போன்ற பல்வேறு தேவைகளுக்காக பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். நாட்டில் ஒரு நெகிழ்ந்த உற்சாகமான ஒரு சூழல் நிலவும்.

பணி வாழ்வில் நாம் கடைபிடிக்கும் இயந்திரத் தனம் ஒழிய வேண்டும். அதற்கு அடிப்படையானத் தேவை 5 நாள் கொண்ட வேலை வாரம்.
மேலும் வாசிக்க... "ஐந்து நாள் வேலை வாரமே சிறந்தது!"



கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)


`எலே, என்னல செய்த? அங்க பார், அவுகளுக்கு என்னவேணும்னு கேப்பியா?' - மளிகைக்கடை அண்ணாச்சி பாலுவைப் பார்த்து பொறிந்தார்.

``இந்த வந்துட்டேங்க -'' என்றவாறே சிந்தனையைக் கலைத்து விட்டு பாலு அன்றைய வாடிக்கையாளர்களின் சாமான்களுக்கு கம்ப்யூட்டர் பில்லைப் போட எத்தனித்தான்.

ஆம். ஊரில் அப்படித்தான் அவன், சொல்லி வைத்திருந்தான். கணினி முன்தான் தனக்கு வேலை என்றும், தனக்காக 1 முதல் 10ஆம் தேதி வரை நூற்றுக்கணக்கானவர்கள் வரிசையில் காத்திருப்பார்கள் என்று.


ஓஹோ, அப்படியா ராசா - என்றவாறு, மூக்கில் விரலை வைத்து தனது தாய், கேட்பதை பார்த்திருக்கிறான் பாலு.

என்ன செய்வது, பி.எஸ்சி. கணினி அறிவியலில், பட்டத்தைப் பெறுவதற்கு இந்த ஆங்கிலம் - அந்நிய மொழியில் மட்டும் தேற வேண்டியுள்ளதே.

முதலாமாண்டில் ஃபெயில் ஆனது, பட்டப்படிப்பு 3 ஆண்டு முடித்து வெளியே வந்ததும், தாயைக் காப்பாற்ற வேண்டும் என்ற தவிப்பில், எப்படியும் வேலைபார்த்துக் கொண்டே அந்த பேப்பரை எழுதி பாஸ் செய்து விடலாம் என்ற நினைப்பில், ஊரில் வீட்டிற்கு அருகேயிருந்த நண்பர் மூலமாகக் கிடைத்த மளிகைக் கடை வேலையில் சேர்ந்து கொண்டான்.

தங்குவதற்கு இடம், சாப்பாடு போட்டு ஆயிரத்து 500 ரூபாய் கிடைக்கிறதே, இந்தப் பணத்தையாவது வீட்டிற்கு அப்படியே அனுப்பலாம் என்றெண்ணிய பாலு, சென்னைப் பட்டணம் வந்து ஓராண்டு ஓடி விட்டது.

வாரத்திற்கு ஒருநாள் அண்ணாச்சி சினிமாவிற்காக தரும் 50 ரூபாயை பாலு, பிரவுசிங் சென்டருக்குப் போய் வேலைக்குப் பதிவு செய்வதை வாடிக்கையாக்கிக் கொண்டான்.

எப்படியும், இங்கிலீஷ் பேப்பர் (அரியர்) ரிசல்ட் ஓரிரு மாதத்தில் வந்துவிடும், அப்போது பார்த்துக் கொள்ளலாம், தனி மனிதனுக்கு சிந்திக்கக் கூட சுதந்திரம் அளிக்க விரும்பாத, இந்த அண்ணாச்சியை என்று மனதில் நினைத்துக் கொண்டே அன்றிரவு தூங்கிப் போனான்.

அடுத்நாள் ஊரில் இருந்து போன்.

``ஹலோ, மினி டெமரிஸ்-ங்களா, மூலக்கரைப்பட்டில இருந்து பேசறோம். பாலுகிட்ட குடுங்க அண்ணாச்சி''.

``எல, இந்தா பாலு, வேலைக்கு வந்தவுடனே போன், இந்தால பேசு. ஊரில இருந்து பேசறாக '' - அண்ணாச்சி.



ரிஸிவரை வாங்கிப் பேசிய பின் போனை வைத்தவன் முகத்தில் பேயறைந்தது போல் இருந்தது.

``எல, என்னா, எதாவது சொல்லு'' - அண்ணாச்சி.

`இல்ல, அண்ணாச்சி, அம்மாவ ஆஸ்பத்திரிலே சேர்த்திருக்காகளாம் - நான் உடனே போகணும்''

``சரில, அதுக்கென்ன, இந்தா பணத்தைப் பிடி'' என்று கூறி ஐயாயிரம் ரூபாயை பாலுவிடம் கொடுத்து, ``போய்ட்டு வா,'' என்றார்.
மேலும் வாசிக்க... "கார்ப்பரேட் சுதந்திரம் (சிறுகதை)"



திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்


வைகுண்ட ஏகாதசி ராபத்து நாட்களில் மட்டுமே பக்தர்கள் பார்வையிட திறக்கப்பட்ட திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம், ஆண்டுமுழுவதும் பார்வையிடும் வகையில் நேற்று திறக்கப்பட்டது.வெளிநாட்டினர், பக்தர்கள் பார்வையிட வசதியாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம் நேற்று முதல் திறக்கப்பட்டது.
பூலோக வைகுண்டம் என்றழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் உலக பிரசித்தி பெற்றது. இங்குள்ள கலை சிற்பங்கள், கட்டிட கலை ஆகியவற்றை பார்வையிட தினமும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கோயிலுக்கு வருகின்றனர்.

இங்குள்ள ஆயிரங்கால் மண்டபத்தின் எதிரே சேஷராய மண்டபத்தில் உள்ள அரிய சிற்பங்களை மட்டுமே பக்தர்களும், பயணிகளும் இதுவரை பார்த்து சென்றனர். வைகுண்ட ஏகாதசியையொட்டி நடைபெறும் ராபத்து நிகழ்ச்சியின்போது 10 நாட்களுக்கு மட்டுமே ஆயிரங்கால் மண்டபம் திறந்திருக்கும். அப்போதும் மண்டபத்தின் உள்ளே உள்ளூர் பக்தர்கள்தான் அனுமதிக்கப்படுவர்.

வெளிநாட்டு பயணிகளுக்கு அனுமதி கிடையாது. இந்த 10 நாட்கள் தவிர ஆண்டு முழுவதும் ஆயிரம்கால் மண்டபம் மூடப்பட்டிருக்கும்.
கடந்த மார்ச் மாதம் ஆயிரங்கால் மண்டபத்தின் முன்பக்கம் மணல்வெளியில் உள்ள 3 நான்கு கால் மண்டபத்தின் தரை தளத்தை காண மணல்களை அகற்றியபோது, ஆயிரங்கால் மண்டபத்தில் முகப்பில் 11 படிகளும், 2 அடி உயரமுள்ள நடன சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த சிற்பங்களை பாதுகாக்க 6 அடி அகலம், 140 அடி நீளத்தில் கருங்கல் தளம் அமைக்கப்பட்டது.


கடந்த வாரம் ஆயிரங்கால் மண்டபத்தில் மேற்கு திசையில் நிரம்பி இருந்த மணல்களை அகற்றியபோது, பெருமாளின் திருவடி கண்டுபிடிக்கப்பட்டது.
ஆயிரங்கால் மண்டபத்தின் முகப்பில் அமைக்கப்பட்டிருந்த கிரில்கேட், பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் மண்டபத்தை பார்வையிட வசதியாக நேற்று அகற்றப்பட்டது. மொத்தம் 800 அடிநீள மண்டபத்தில் திருமாமணி மண்டபம் வரை 200 அடி உள்ளேசென்று அழகிய தூண்களை நேற்று ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

இனி தினமும் மண்டபத்தை பார்வையிட பக்தர்கள், வெளிநாட்டினருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க... "திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் ஆயிரங்கால் மண்டபம்"



கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்! - டாக்டர் அப்துல் கலாம்

    விண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
  1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....

படித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.

4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.

5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.

இந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்
நோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.


இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.

1.எவையெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.
2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.
3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.
4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.
5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.


நமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.

குறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

பூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.

சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்’ என்று கூறினார்.

இதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’


நோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.

இந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன் அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.

- மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம் -

இக்கட்டுரை இணைய தளத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்தது...
மேலும் வாசிக்க... "கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்! - டாக்டர் அப்துல் கலாம்"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1