CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கண்களை திறங்கள்... கனவுகள் நிஜமாகட்டும்! - டாக்டர் அப்துல் கலாம்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
    விண்ணில் செயற்கைக்கோளை கொண்டு சேர்ப்பது ஒரு காலத்தில் இந்திய தேசத்தின் கனவாக இருந்தது. அந்த கனவை நிறைவேற்றி வைத்தவர் டாக்டர் அப்துல் கலாம்.
  1980ல் எஸ்.எல்.வி., 3 ராக்கெட் ரோஹிணி செயற்கைக்கோளை விண்ணில் ஏவிய போது அவர் அடைந்த அதே மகிழ்ச்சியை - இன்று இந்திய தேசத்தில் உள்ள இளைஞர்கள் அனைவரும் சாதனைகள் புரிந்து மகிழ வேண்டும் என்று விரும்புகிறார். தன் எண்ணங்களை இளைஞர்களுக்காக வண்ணம் தீட்டித் தருகிறார்....

படித்து முடித்து மாணவர்கள் வெளியில் செல்லும் போது, அவர்கள் என்ன கொண்டு செல்கிறார்கள் என்பதை ஆசிரியர்கள் ஒவ்வொருவரும் உணர வேண்டும். மாணவர்கள் அறிவு எனும் பொக்கிஷத்தை தங்களுடன் எடுத்து செல்ல வேண்டும். நமது கல்வித் திட்டம் ஐந்து அறிவுகளை வளர்க்க வேண்டும். ஹோவர்ட் கார்னர் எழுதிய எதிர்காலத்துக்கான ஐந்து அறிவு என்ன என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

1. ஒழுக்கமான மனம்: அறிவியல், கலை மற்றும் வரலாறு என்று பல்வேறு துறைகளில் சிந்தனைகளை வளர்க்கக்கூடிய மனம். இவற்றில் ஏதாவது ஒன்றில் நாம் மிகச்சிறந்து விளங்க வேண்டும்.

2. ஒருங்கிணைக்கும் மனம்: பல்வேறு துறைகளில் உள்ள அறிவுகளை ஒருங்கிணைத்து சிந்திக்கும் மனம் கொண்டவர்களாக நாம் இருக்க வேண்டும். இதை மற்றவர்களுக்கும் தகவல்தொடர்பு மூலம் எடுத்துரைக்க வேண்டும்.

3. கற்பனை மனம்: புதிய பிரச்னைகளுக்கும் கேள்விகளுக்கும் கருத்துக்களுக்கும் தீர்வு சொல்ல வேண்டும்.

4. மரியாதைக்குரிய மனம்: மனிதர்களுக்குள் உள்ள வேறுபாட்டுத் தன்மையை புரிந்து விழிப்புணர்வு பெறுதல்.

5. அறவழியிலான மனம்: குடிமகனாகவும் பணியாளராகவும் ஒவ்வொருவரும் பொறுப்புணர்வை நிறைவேற்றுதல்.

இந்த குணாதிசயங்களை பெறுவதற்குயாரும் பாடத்திட்டத்தையோ அல்லது படிப்பையோ மாற்ற வேண்டியதில்லை. கல்வி நிறுவனத்தின்
நோக்கமும், ஆசிரியரின் நடத்தையும் சரியாக இருந்தாலே போதுமானது.


இஸ்ரோவின் விண்வெளி திட்டங்கள், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டி.ஆர்.டி.ஓ.,)அக்னி திட்டம் மற்றும் நகர்ப்புற வசதிகளை கிராமங்களுக்கு அளிக்கும் புரா திட்டம் ஆகியன கனவுகளாக இருந்து லட்சியங்களாக மாறி நனவானவை.

1.எவையெல்லாம் கனவு காண்பவைகளாக உள்ளனவோ அவையெல்லாம் லட்சியங்களாக மாறி பின்னர் செயல்திட்டங்களாக உருவெடுக்கின்றன.
2.கனவுகளை செயல்திட்டங்களாக மாற்ற உயர் அளவிலான சிந்தனை மிக அவசியம்.
3.எல்லாதரப்பிலிருந்து அறிவை தேடிப் பெறுவது அவசியம்.
4.கனவுகள் கைவரப் பெற வரம்புகளைத் தாண்டி சிந்திப்பதும் செயல்படுவதும் அவசியம்.
5.தோல்விகள் ஏற்படும் போது அதை தனக்குரியதாக தலைவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். வெற்றி ஏற்படும் போது அதை தனது அணிக்கு பகிர்ந்து அளிக்கிறார்கள்.


நமது விஞ்ஞானிகள் சந்திரயான் திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்தியிருக்கின்றனர். சந்திரயானை ஏவியது, அதன் சுற்றுப்பாதையை உயர்த்தியது, மூன் இம்பாக்ட் பிராப் எனும் சந்திரனில் மோதி ஆய்வு செய்யும் கலனை அனுப்பியது என்று பல்வேறு விஷயங்களில் இஸ்ரோ தனது திறமையை நிரூபித்துள்ளது.

குறுகிய காலத்தில் இதற்கான சாப்ட்வேர் மற்றும் பிற பணிகளை விஞ்ஞானிகள் மேற்கொண்டுள்ளார்கள். இது பிற்காலத்தில் பூமி - சந்திரன் - செவ்வாய் கிரக ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையில் அமைந்துள்ளது.

பூமிக்கும் செவ்வாய்க்கும் 5 கோடியே 50 லட்சம் முதல் 40 கோடி கி.மீ., வரை தூரம் உள்ளது. இது இரண்டு கோள்களும் தங்கள் சுற்றுப்பாதையில் இருக்கும் இடத்தைப் பொறுத்து வேறுபடும். கடந்த சில ஆண்டுக்கு முன் நான் கிரீஸ் சென்றிருந்தேன். அங்கிருந்த அக்ரபோலிஸ் நினைவிடத்தில் கிரீஸ் நகரத்தை சேர்ந்த மாணவர்களை சந்தித்தேன்.

சாக்ரடீஸ், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் போன்ற அறிஞர்கள் உருவான நாடு அது. பிளேட்டோ சொன்ன வரிகள் என் ஞாபகத்துக்கு வந்தது. ஒரு நாட்டின் அடிப்படை ஒரு குறிப்பிட்ட வகுப்பினரின் சந்தோஷத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டது அல்ல. எல்லோருடைய ஒட்டுமொத்த மிகச்சிறந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடுதான்’ என்று கூறினார்.

இதையே நம் வள்ளுவரும் கூறியிருக்கிறார்.

‘பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற்கிவ் வைந்து’


நோயில்லாத, நல்ல வருவாய் ஈட்டக்கூடிய, உயர் உற்பத்தி செய்யக் கூடிய, இசைவான சூழலில் வாழக்கூடிய மற்றும் நல்ல பாதுகாப்பில் இருக்ககூடியதுதான் ஒரு நாடு என்று வள்ளுவர் கூறினார்.

இந்த எண்ணங்களுடன் கிரீஸ் மாணவர்களுக்கு நான் என்னுடைய வழக்கமான மாணவர்களுக்கான உறுதிமொழியை ஏற்க வைத்தேன் அவர்களும் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டனர்.

அவர்கள் மட்டுமல்ல அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகளும் கூட, அந்த உறுதிமொழியை திரும்பக்கூறி மகிழ்ந்தனர். இந்த பூமியில் மிக உயரிய சக்தி என்பது, இளைஞர்களின் சக்திதான். இளைஞர்களின் சக்தியை சரியான பாதையில் திருப்பினால் நம் வாழ்க்கையில் பல மாற்றங்களைக் காணலாம்.

- மீண்டும் சந்திப்போம்
உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்...


- டாக்டர் அப்துல் கலாம் -

இக்கட்டுரை இணைய தளத்தில் ஒரு பத்திரிக்கையில் வந்தது...


3 கருத்துரைகள்:

Praveenkumar said... Best Blogger Tips

மிகவும் சிந்திக்க வைக்கும் பயனுள்ள பதி..!

THOPPITHOPPI said... Best Blogger Tips

நீங்கள் எழுதிய விதம் படிக்க அருமையாக உள்ளது

♫வாழ்த்துக்கள்♫

தமிழ் உதயம் said... Best Blogger Tips

மறக்க முடியாத மனிதரின் மறக்க கூடாத கருத்துக்கள்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1