நாட்டின் பிரதமராக வேண்டும் என்று எப்போதாவது நீங்கள் கனவு கண்டதுண்டா. நல்லது. இதோ, அந்த பதவியில் அமர்ந்து செயல்பட உங்களுக்கு ஓர் வாய்ப்பு.
இப்போது நீங்கள் பிரதமர் மன்மோகன் சிங் இருக்கையில் அமர்ந்திருக்கிறீர்கள். சாதாரண மக்களை பட்ஜெட் பாதிக்காத வகையில் சமாளிப்பதுதான் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சவாலான பணி. அதை எப்படி சிறப்பாக செய்வது என இந்த விளையாட்டு மூலம் நீங்கள் முயற்சித்து பார்க்கலாம்.
பிரதமர் மன்மோகன் சிங் ( அதாவது நீங்கள்) தாங்கி நிற்கும் இந்த பலகை மீது தான் சாதாரண மக்கள் நின்று கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் மீது பொருட்கள் மீதான விலையேற்றம் சுமத்தப்படுகிறது. அப்போது, அந்த பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். அதை தாங்கும் சாதாரண மக்கள் கீழே விழுந்து விடக்கூடாது.
சாதாரண மக்கள் கீழே விழாமல் சமாளிப்பது உங்கள் சமர்த்து.
பலகை மீது நிற்கும் மனிதர் மீது, மேலிருந்து கீழ் நோக்கி ஒவ்வொரு பொருளாக இறங்கும். அப்படி அந்த பொருள் விழும்போது மனிதன் நிலைதடுமாறுவான். ஆனால் அவனை நடுநிலையாக்கிவிட்டு பொருட்கள் மட்டும் கீழே விழ வேண்டும். பொருள் கீழே விழுந்தால் உங்களுக்கு புள்ளிகள். ஆனால் மனிதன் விழுந்துவிட்டால் விளையாட்டு முடிந்துவிடும்.
இப்போது நீங்கள் விளையாட தயாரா? பார்க்கலாம் உங்கள் சாமர்த்தியத்தை!
எப்படி விளையாடுவது?
அம்புகுறியை (கர்சரை) கிடைமட்டமாக வலது, இடதாக நகர்த்தவும். உதாரணமாக:
* பலகையை வலப்பக்கம் உயர்த்துவதற்கு ---- அம்புகுறியை வலதுபுறம் நகர்த்தவும்.
*பலகையை வலப்புறம் கீழ் நோக்கி நகர்த்த-- அம்பு குறியை இடதுபுறம் நகர்த்தவும்.
தற்போது நாட்டில் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து இருப்பது விலைவாசி உயர்வு. இதை மையமாக வைத்து தமிழ்.வெப்துனியா.காம் ஒரு விளையாட்டை உருவாக்கி உள்ளது. இந்த விளையாட்டில் நீங்களும் பங்குபெறுங்களேன்...
விலையேற்ற விளையாட்டு விளையாட...கிளிக் செய்யுங்கள்.
நன்றி: தமிழ்.வெப்துனியா.காம்
0 கருத்துரைகள்: