CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



சொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை

ஒரு ஊர்ல ஒரு துறவி இருந்தார். அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் போயி மக்களுக்கு நீதிக்கதைகள், போதனைகள் செஞ்சும் இறை பணியாற்றி வந்தார். அவர் இப்படியே இறைப்பணிக்காக நல்லாம் பட்டி அப்படிங்கற ஊருக்கு வந்தார். அங்கு சுமார் ஒரு மாதம் வரை தங்கி இறைப் பணியாற்றி விட்டு வேறு ஊருக்கு செல்ல தனது மாட்டு வண்டியை தயார் செஞ்சுட்டு இருந்தார். அப்போது அவர் பக்கதில் ஒருவன் வந்து, அவரின் இறைப் பணியில் மிகுந்த ஈடுபாடாகி அவருடனே ஊர் ஊராக வந்து விடுவதாக சொன்னான். இதைக் கேட்டதும் அவனைப்பற்றி அக்கம் பக்கம் விசாரித்த துறவி அவனை அனாதை என அறிந்து அவன் மேல் அனுதாபப்பட்டு அவனையும் சேர்த்துக் கொண்டும், பொருட்களைக் கட்டிக் கொண்டு அடுத்த ஊருக்கு அவர்கள் பயணமானார்.

துறவி வண்டியில் முன்னால் அமர்ந்திருந்தார். அவன் வண்டிக்கு பின்னால் அமர்ந்திருந்தான். துறவி அவனிடம், தம்பி பின்னாடி உட்கார்ந்திருக்க, பொருட்கள் கீழ விழுகுதான்னு பார்த்துட்டே வா'ன்னு சொன்னார். கொஞ்ச தூரம் பயணம் செய்த பின் ஓரிடத்தில இளைப்பாற நிறுத்தினார்கள். அப்போது வண்டியின் பின் பக்கம் வந்த துறவி சில பொருட்களைக் காணாது விக்கித்து நின்றார். அவனிடம் பொருட்கள் எங்கே என கேட்க, அவன் சில பொருட்கள் கீழ விழுந்திருச்சு என சொன்னான். இவர், கீழ விழுந்தா எடுத்து வைத்திருக்க வேண்டியது தானே என துறவி கேட்க, அதற்கு அவன் நீங்க பொருட்கள் விழுகுதான்னு பாக்க தானே சொன்னிங்க என சொன்னான். ஆக, அவன் அவர் சொன்னதை அப்படியே செய்ததாக சொன்னான். துறவி கீழ விழுந்தா பத்திரமாக எடுத்துட்டு வா என்பதை அவன் அப்படி குறுகிய மனப்பான்மையில் எடுத்துக் கொண்டான்.

அடுத்து அவர்கள் பயணத்தை தொடங்கினார்கள். துறவி அவனிடம் எது கீழ விழுந்தாலும் பிடிச்சு எடுத்து வை என சொல்லி அவனை வண்டி ஏற்றினார். சிறிது தூரம் சென்ற பின் ஒரு இடத்தில் இளைப்பாற மறுபடியும் நிறுத்தினார். இறங்கி வண்டிக்கு பின்னால் பார்த்தால் வண்டி பின்பக்கம் முழுதும் மாட்டு சாணமாக இருந்தது. அவன் கையிலும் சாணம் இருந்தது. துறவி, என்ன தம்பி வண்டியில இவ்ளோ சாணி இருக்கு, என்ன விஷயம் என கேட்க, அதற்கு அவன், நீங்க தான ஐயா எது கீழ விழுந்தாலும் எடுத்து வைன்னு சொன்னிங்க அதான் எடுத்து வச்சுட்டு வரேன் என பதில் சொன்னான். அவன் பதில் கேட்டு துறவி அவன் அறியாமையை நினைத்து கவலைப்பட்டார். சொல்வதை அப்படியே அர்த்தம் எடுத்துக் கொள்கிறானே, கொஞ்சம் கூட பகுத்து ஆய்ந்து பொருள் விளங்கி சமயோசித்தமாக செயல்பட மாட்டிங்கறானே என மிகவும் வருத்தமுற்றார். அவன் சிறுபிள்ளைத்தனமான புத்தியை மாற்றி அவனை நல்ல அறிவாளியாக மாற்ற வேண்டும் என அவர் தனக்குள் நினைத்துக் கொண்டு அருகிலிருக்கும் ஊரை நோக்கி பயணமானார் அவனையும் கூட்டிக் கொண்டு....
கற்றுக் கொள்வது:
  • சொல்கிற சொல்லை அப்படியே அர்த்தம் கொள்ளாமல், அதனை பகுத்து உள்ளர்த்தத்தை அறிந்து அதற்கேற்ப சமயோசித்தமாக செயல்பட வேண்டும்.
  • சொன்னதை செஞ்சேன் என்கிற மனப்போக்கை தவிர்த்தால் நிறைய சாதிக்கலாம்.
மேலும் வாசிக்க... "சொன்னதைத் தான் செய்தேன் - அறியாமை நீதிக்கதை"



மகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்!

வணக்கம் மகா பொது ஜனங்களே....
நான் தான் மதுரைக்காரன் விஜயகாந்த் பேசறேன். (ஐயா மதுரைக்காரன்னு சொல்றிங்களே, ஏதும் உள்குத்து இருக்கா?) இந்தம்மாவை நம்பி நான் மோசம் போயிட்டேன். நீங்க அன்பா, ஆசையா என்னைய அவங்க கூட கூட்டணி வைக்க சொன்னிங்க. மக்கள் ரொம்ப ஆசைப்படறாங்களேன்னு நானும் கூட்டணி வச்சேன். அவங்க புண்ணியத்துல செவப்பு கறுப்பு கட்சிய விட அதிகமா சீட்டு வாங்கி மொத தடவையா தமிழகத்துல எதிர்க்கட்சி தலைவரா வந்தேன்யா. நல்ல பொறுப்பா எதிர்க்கட்சி தலைவரா இருக்கலாம்னு நெனச்சா, அவங்க தரப்புல இருந்து என்  வாயை தொறக்கக் கூடாதுன்னு கண்டிசன் போட்டுட்டாங்க. பெருசா கை வேற எனக்கு மாறுச்சு. அதான் நானும் வாயை தொறக்கல. வாயைத் தொறக்காம இருந்து மக்கள் கிட்ட கெட்ட பேரு வாங்கினாலும் எதிர்க்கட்சி தலைவர்ன்னு மப்புல ச்சே..ச்சே.. கெத்துல இருந்துப்புட்டேன். 

ஆனாலும் சட்டசபையில அவங்க பண்ணுன அட்டகாசம் தாங்க முடியல. என்னால சும்மா உட்க்கார்ந்து இருக்க முடியல. அதான் கையை நீட்டி, நாக்கை மடக்கி என்னன்னம்மோ பேசிப்புட்டேன். அந்தப் பேச்சுல உடன்புறப்புகளும் ஆடிப் போயிட்டாங்க. ஆனாலும் அவங்க ரேஞ்சுக்கு என்னால முடியாட்டியும், என் ரேஞ்சுக்கு எதிர்க்கட்சி தலைவரா பேசுனேன்னு ரொம்ப தெனாவெட்டா இருந்தேன். ஆனா நான் பேசுனது குத்தம்னு எல்லா டிவியிலும் மாத்தி மாத்தி போட்டுக் காட்டிட்டாங்க. அப்படி என்னத்த பேசிட்டேன். கையை நீட்டி... நாக்கை சுத்தி.. சரி விடுங்க. நான் பேசுனது தப்புன்னு வச்சுகிட்டாலும், அதுக்காக சட்டசபையில இருந்து என்னை சஸ்பென்ட் பண்ணினது ரொம்ப ஓவர்யா.. அத்திப் பூத்த மாதிரி சட்டசபைக்கு போயிட்டு இருந்த என்னை தூக்கி வெளியில போட்டது ரொம்ப தப்புங்க. மெதுவா என்கிட்டே சொல்லி இருந்தா நானே அடுத்தநாள் வராம இருந்திருப்பேன்ல. சரி, விடுங்க நடந்ததை கெட்ட கனவா நெனச்சு மறந்துட்டேன். 

கொஞ்ச நாளுக்கு முன்னாடி மஞ்சத்துண்டு தலைவர் புள்ளைங்க ரெண்டு பேரும் அடிச்சு புடிச்சுக்கிட்டதுல ஏதாச்சும் எனக்கு சாதகமா கிடைக்கும்னு பார்த்தா ஒண்ணுமே கிடைக்கல. சரி, அவங்க குடும்பம் ரெண்டுபட்டா நமக்கு ஏதாச்சும் கிடைக்கும்னு நெனச்சது என் தப்பு தானே. இந்த விலைவாசி ரொம்ப ஏறிட்டே போகுதேன்னு அம்மா கிட்ட போயி நின்னா பேச்சே வர மாட்டிங்குது. ஏன்னா, அவங்க சொல்ற ரீசன் கரெக்ட்டா இருக்குதா, அதனால பேச முடியல. அங்க இருந்து வந்து மக்கள் கிட்ட மேடை போட்டு பேசினா அவங்க விலையேத்துனது தப்புன்னு தோணுது. அங்க ஆவேசமா பேசிடுறேன். ஆனா, எதிர்க்கட்சி தலைவர் சும்மா விமர்சனம் செயறார்னு பேப்பர்ல போட்டுடறாங்க. உண்மையில விலை ஏறிப்போச்சுனு சொன்னாலும் என்னமோ நான் பேசுறது காமெடியாவே இருக்குது போல அவங்களுக்கு. 

இதோ, இப்ப புதுக்கோட்டை தேர்தல் பிசியில இருக்கேன், ஆனா மஞ்சள் துண்டு தலைவர் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லுங்கன்னு ஏகப்பட்ட மனு வந்துச்சு அவங்க தரப்புல இருந்து. ம்ஹும், நான் தலை வளைஞ்சு தரவே இல்லையே. ஏன்னா, நான் எதிர்க்கட்சி தலைவர்ல்ல. என்னை விட ஓட்டு கம்மியா வாங்குன கட்சி தலைவர் கிட்ட தலவணங்குறதா? நியாயம் இல்லையேன்னு வாழ்த்து சொல்ல முடியாதுன்னு கம்முன்னு இருந்துட்டேன். இந்த இடைத்தேர்தல்ல நான் அவங்க கூட கூட்டணி வைக்கணும்னு ரொம்பவே தூது விட்டாங்க. நான் சிக்கவே இல்லையே. ஏன்னா எப்பவுமே நான் மக்கள் கூட்டணி மகேசன் கூட்டணின்னு நினைக்கிறவன் நான்.

மக்களே, என்னமோ உங்க கிட்ட கொஞ்சமா மனசு தொறந்து பேசனும்னு நினைச்சேன். பேசிட்டேன். வரட்டுமா.. அக்காங்க்க்க்க்ங்...
மேலும் வாசிக்க... "மகா ஜனங்களே, நான் விஜயகாந்த் பேசறேன்!"



எம்மாம் பெரிய கொழுகொழு எலி?

எம்மாம் பெரிய எலி? கொழுகொழுன்னு சும்மா ஒரு மாசமா தண்ணி காட்டுன எலி. டிவிக்கு பின்னாடி, பீரோவுக்கு பின்னாடி, கட்டிலுக்கு பின்னாடி, இப்படி வீட்டுல எல்லாத்துக்கு பின்னாடியும் போயி ஒளிஞ்சுக்கிட்டிருந்த எலி, நேத்து எலிப் பொறிக்கு உள்ளேயும் ஒளிஞ்சுக்கிருச்சு. அட, ஆமாங்க... எலிப் பொறி வச்சு எலிய பிடிச்சுட்டோம்ல.
 இந்த எலி புடிச்ச கதையை கேளுங்க, மக்கா... இந்த எலி பகல்ல எங்க இருக்குன்னு தெரியல. நைட் ஆச்சுன்னா கரெக்டா வந்திரும். அங்க தாவும், இங்க தாவும், என்னத்தையாவது கர்க்.. கர்க்... கர்க்...ன்னு கடிச்சுகிட்டு இருக்குற சத்தம் மட்டும் கேட்கும். அந்த எலியை எப்படியாவது பிடிச்சே தீரனும்னு நானும் முடிவு பண்ணினேன். எலியை பிடிக்கறதுக்கென்னே மரக்கட்டையில செஞ்ச பொறி வீட்டுல இருந்த ஞாபகம். ரொம்ப நாளுக்கு முன்னாடி வாங்குனது. எங்க இருக்குன்னு தெரியாம அதை எடுக்க முடியல. ஆனாலும் இந்த எலி இம்சையினால அந்த பொறியை தேடி எடுக்க வேண்டி பரண் மேல தேடினேன். ஒரு மூலையில அது இருந்துச்சு. ஆகா, எலி மாட்டுச்சுன்னு சந்தோசப்பட்டு பொறியை எடுத்து தொடச்சு ஒரு தேங்காய்ச்சிள் வச்சு டெஸ்ட் பண்ணிப் பார்தேன். டெஸ்ட் ஓகே ஆச்சு. சரி, பொறியை எங்க வைக்கலாம்னு தேடி, அதாவது எலி வர்ற இடம் பாத்து வைக்கனும்ல, எப்படியோ ஒரு இடத்துல வச்சேன். அடுத்த நாள் பாத்தா ம்ஹும்... எலி நம்மள விட புத்திசாலி, அன்னைக்கு மாட்டல. அடுத்த நாள் வேற இடத்துல வச்சேன். அப்போதும் மாட்டல. இப்படியே ஒரு வாரம் நானும் பல இடத்துல பொறியை வச்சு வச்சுப் பார்த்தேன். சிக்கவே இல்லைங்க.

அதனால நானும் எலி புடிக்க முடியாதுன்னு சோர்ந்து போயிட்டேன். ஆனா அங்க அங்க எலி மட்டும் கண்ணுல படும். அப்ப மறுபடியும் வந்துச்சு வேகாளம். இந்த எலியை விடக்கூடாதுன்னு மறுபடியும் ஒவ்வொரு இடமா வச்சு வச்சுப் பார்த்தேன். மாட்டவே இல்லை. நேத்து நைட்டு பரண் மேல கர்க்.. கர்க்...ன்னு ஒரு சத்தம். ஒரு ஸ்டூலை போட்டு என்னான்னு ஏறிப் பார்த்தா ஒரு அட்டைப் பெட்டி மட்டும் லேசா ஆடிட்டு இருந்துச்சு. அங்க தான் எலி இருக்குன்னு கன்பார்ம் பண்ணினேன். அப்புறமா அந்த எடத்துல எலிப்புளுக்கையா இருந்துச்சு. ஒரு வேளை அந்த இடம் தான் எலி டெய்லியும் தங்குற இடமா இருக்கும்னு முடிவு பண்ணி, இதுவரைக்கும் தரையில வச்ச பொறியை அந்த இடத்துல வச்சேன். பொறி கொக்கியில தேங்காச்சிள் மாட்டி வச்சேன். 
 நைட்  டப்புன்னு அந்த பொறி மூடுன சத்தம் கேட்டுச்சு. எலி மாட்டுச்சா, இல்லையான்னு தெரியலையே...? காலையில மொத வேலையா அந்த பரண் மேல ஏறிப் பார்த்தேன். சக்சஸ்..சக்சஸ்... எலி உள்ளார மாட்டியிருந்துச்சு. ஆனா தேங்காய்சிள் எல்லாத்தையும் தின்றுச்சு போல. கொஞ்சம் கூட இல்லை. அந்த எலியை மெதுவா ஒரு சின்ன சாக்குல பிடிச்சு வீட்டுல இருந்து கொஞ்சம் தூரத்துல கொண்டு போயி முள்ளு காட்டுக்குள தூக்கி எறிஞ்சுட்டேன். மறுபடியும் வீடு தேடி வராதுன்னு ஒரு நம்பிக்கை தாங்க. 

எப்படியோ ரொம்ப நாளா தண்ணி காட்டிட்டு இருந்த எலியை புடிச்சாச்சு. ம்ஹும்... இதுல இருந்து என்னா சொல்றேன்னா முயற்சி செய்யணும். செஞ்ச முயற்சி வீண் போகாது.

அப்புறமா ஒண்ணு சொல்றேனுங்க, இந்த பதிவு எழுதிட்டு இருந்தப்போ ஒரு ஓரமா குட்டி எலி ஒண்ணு ஓடுச்சு. அடங்கோ, மறுபடியும் எலி வேட்டையை ஆரம்பிக்கணுமா?
மேலும் வாசிக்க... "எம்மாம் பெரிய கொழுகொழு எலி?"



கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!

ரெண்டு மாசத்துக்கு முன் நண்பர் செங்கோவி கிட்ட இருந்து ஒரு மெயில் வந்துச்சு, இந்தியாவுக்கு வர்றேன்யா அப்படின்னு. வாங்க,,,, மாம்ஸ் வாங்க, ரொம்ப சந்தோசம், மீட் பண்ணுவோம் சீக்க்ரமா'ன்னு ரிப்ளை அனுப்பினேன். அப்ப இருந்து செங்கோவி எப்படி இருப்பார்னு ஒரே யோசனையா இருந்துச்சு. ஹன்சி, பத்மினி ரசிகரா இருக்காரே, நல்லா கலரா செம ஹான்ட்சம்மா இருப்பாரா? இல்ல, கருப்பா? இருப்பாரான்னு டவுட் மாறி டவுட் வந்துச்சு.

அவரும் இந்தியா வந்ததும் டெய்லியும் போன் செஞ்சு எப்ப பிரகாஷ் பிரீயா இருப்பிங்க? மீட் பண்ணனும்னு கேட்க, மாம்ஸ், நீங்க எப்ப பிரீயா இருபிங்கன்னு நானும் கேட்க? சரிய்யா, குவைத் போறதுக்கு முந்தின வாரம் மீட் பண்ணலாம்னு ஓரு வழியா முடிவு செஞ்சோம். சும்மாவே கூகிள் வாய்ஸ் சாட்ல மணிக்கணக்கா பேசுவோம்.  இப்ப போன்லையும் தெனமும் அரட்டை தான். பிளைட் விட்டு இறங்கியதுல இருந்து மாமனார் வீட்டுல செம கவனிப்பாம். ஆடு, கோழி, மீன் என ஒரே நான்வெஜ் அயிட்டமா வயிறு முட்ட சாப்பிடுவதாக சொன்னார். சரிய்யா, மாமனார் வீடுன்னா சும்மாவா, என்ஜாய் பண்ணுங்கன்னு சொன்னேன்.

ஒருவழியா எங்க ரெண்ட பேருக்கும் ஒரு நாள் ஈவினிங் டைம் கெடச்சுசு. பெரியார் பஸ்ஸ்டாண்டுக்கு ஆறு மணிக்கு வந்திருவேன்னு சொன்னார். வாங்க மாம்ஸ் நானும் கரெக்டா வந்திருவேன்னு சொல்லிட்டேன். ஆனா நான் கம்பெனியில இருந்து வீட்டுக்கு வந்து சேரவே ஆறு மணியாச்சு. அடாடா, செங்கோவி வந்திருவாரேன்னு நெனைக்க அவர் கிட்ட இருந்து போன், பெரியார் வந்துட்டேன் எங்க வெயிட் பண்ண என கேட்க, பர்மா பஜார் பக்கத்துல சர்ச்க்கு முன்னாடி வெயிட் பண்ணுங்கன்னு சொன்னேன். நானும் ரெப்ரெஷ் பண்ணிட்டு ஜங்சன் பக்கத்துல தங்கரீகல் தியேட்டர் பக்கத்துல பைக் பார்க் பண்றப்போ மணி ஆறு முப்பது. செங்கோவிக்கு போன் பண்ண மொபைலை எடுக்க அவரே கூப்பிட்டார். இதோ நீங்க நிக்கிற இடத்துக்கு பக்கத்துல வந்துட்டேன்னு சொல்ல ஒரு உருவம் என்னைப் பார்த்து கை அசைத்தது. ஆகா, கண்டேன் செங்கோவியை என மனசுக்குள் ஒரு சந்தோஷம். (நான் பதிவுலகிற்கு வந்து முதலில் எனக்கு நண்பரானவர் செங்கோவி. அப்போ அவரது பிளாக்கில் மன்மத லீலை தொடர் செம இன்ட்ரஸ்ட்டா போயிட்டு இருந்துச்சு. பிளாக்கிலும் கமென்ட் போட்டு, மெயில்லும் அனுப்பி அப்படியே சாட் செய்து நண்பரானோம். இப்போ இந்த நட்பு கதையை ஒத்தி வச்சுட்டு சந்திப்பு எப்படி இருந்துச்சுன்னு பார்ப்போம்) செங்கோவி எப்படி இருப்பார்னு கீழ இந்த போட்டோவை பாத்துக்கங்க.

இருவரும் பரஸ்பர விசாரிப்புக்கு பின், வெயிலுக்கு இதமா கரும்புச்சாறு சாப்டுட்டு பேசிட்டே பைக் இருக்குற இடத்துக்கு வந்தோம். செங்கோவி அங்க தங்கரீகல் தியேட்டரை பார்த்துட்டு, சிரிச்சார். என்ன மாம்ஸ், தியேட்டரை பார்த்து சிரிக்கறிங்க'ன்னு கேட்க, அதுவாயா, நான் காலேஜ் படிக்கிறப்போ இங்க தான்யா படங்கள் பாப்போம்ன்னு சொன்னார். அதாவது அப்போ தங்கரீகல் சகிலா நடிகையின் தியேட்டராக இருந்துச்சாம். இப்போ அப்படியே டோட்டலா மாறி நல்ல படங்கள் போடறாங்களேன்னு ஆச்சர்யப்பட்டார். தியேட்டர் நல்ல படத்துக்கு மாறி ஏழெட்டு வருஷமாச்சு என சொன்னேன். சரிய்யா, நல்லது நடந்தா சரிதான்யா... அப்படின்னு சொல்லிட்டே ஏதோ கடையை தேடினார். மாம்ஸ், என்ன கடையை தேடுறிங்க'ன்னு கேட்க, இங்க தியேட்டருக்கு பக்கத்துல ஒரு இலக்கிய புத்தக கடை இருந்துச்சே' என அவரின் பழைய ஞாபகத்தில் கிளறினார். இதோ இங்க இருக்குன்னு கடைக்கு கூட்டிட்டு போனேன். செங்கோவி கலகல காவியம் படைப்பவராச்சே, ஆனா உண்மையிலஇலக்கிய புழுவா இருக்காரே'ன்னு நினைச்சு ரொம்பவே ஆச்சர்யப்பட்டேன் (ஏன்னா அவரது பதிவுகளை தொடர்ந்து படிப்பவர்களுக்கு தெரியும், அவரது எழுத்து பற்றி). 

புத்தக கடையில ஏதேதோ புத்தக பேரை சொல்லி செங்கோவி கேட்க கடைக்காரர் இல்லைன்னு தலையாட்டிட்டே வந்தார். அட, கடையில் இல்லாத புக்கா கேட்கறாறேன்னு  ராணிமங்கம்மாள் சத்திரத்தில் இருக்குற வேற புத்தக கடைக்கு கூட்டிட்டு போனேன். அங்கேயும் அவர் கேட்ட புத்தகங்கள் இல்லை, அப்புறம் அவரா ரேக்ல தேடி ரெண்டு மூணு புத்தகங்கள் வாங்கிகிட்டார். நம்மளையும் இலக்கிய ஆளா மாத்த பரிசா ஒரு புத்தகத்தை வாங்கித் தந்தார். ரொம்ப நன்றிங்கோ மாம்ஸ்.

புக் வாங்கிட்டு, சாப்பிட நல்ல வெஜிட்டேரியன் கடைக்கு போலாம்ன்னு சொன்னார். நான் அதிர்ச்சியாகி என்ன மாம்ஸ், அன்னைக்கு போன்ல நல்ல பிரியாணி கடையை சூஸ் பண்ணி வையுங்க, நாம மீட் பண்றப்ப போலாம்னு சொன்னிங்களே, அத நம்பி நாலஞ்சு கடையில பிரியாணி சாப்ட்டு ஒரு கடையை சூஸ் பண்ணி வச்சிருக்கேன், இப்படி பொசுக்குன்னு வெஜ் தான் வேணும்னு சொல்லிடிங்களே'ன்னு கேட்க, இந்தியா வந்ததுல இருந்து இப்ப வரைக்கும் மாமனார் வீட்டுல போதும் போதும்ங்ற அளவுக்கு நான்வெஜ் சாப்பாடுதான், நைட் தூங்குறப்போ கூட சாப்பிட்ட ஆடு, கோழி எல்லாம் வந்து மிரட்டுது. அதான், ஒரு சேஞ்சுக்கு வெஜ் சாப்பிடலாம்னு சொன்னேன்,ன்னு அவர் சொல்ல, டவுன்ஹால் ரோட்டில் இருக்குற மீனாட்சிபவன் ஹோட்டலுக்கு கூட்டீட்டு போனேன். ஆளுக்கு சப்பாத்தி, சில்லி பரோட்டா சாப்பிட்டே பேசிட்டு இருந்தோம். எனது பதிவுகள், அவரது பதிவுகள், எழுதும், எழுதிய தொடர்கள், நாட்டுநடப்பு பற்றி பேசினோம். 

அப்போ நாய்நக்ஸ் பத்தி ரொம்பவே விசாரிச்சார். (எந்த பதிவரா இருந்தாலும் நாயநக்ஸ் பத்தி ஒரு முன்னேச்சரிகையாவே பேசுறாங்க? அவர்கிட்ட அப்படி என்ன தான் இருக்கோ?) ரொம்ப விசாரிக்கறாரேன்னு நக்ஸ்க்கு போனை போட்டேன். செங்கோவியும் நானும் இருக்கோம்னு சொல்ல, அந்தாளு எந்த பார்ல என்னென்ன சரக்கு அடிச்சுட்டு இருக்கிங்கய்யா?ன்னு சட்டுன்னு கேட்டார். யோவ், அவர் கிட்ட போனை தரேன், நீங்களே கேளுங்க எங்க இருக்கோம்னு என சொல்லிட்டு செங்கோவி கிட்ட போனை தந்தேன். செங்கோவி எங்க இருக்கோம்னு சொல்ல, என்கிட்ட பேசனும்னு நக்ஸ் சொல்றார்னு என்கிட்ட போனை தந்தார். நான் ஹலோ, சொன்னது தான் மிச்சம், யோவ், ஏன்யா சரக்கடிக்கலன்னு கேட்க, செங்கோவிக்கு பழக்கம் இல்லையா, அதான் சாப்பிடலன்னு சொன்னேன். அதுக்கு நக்ஸ், தண்ணி அடிக்காதவரெல்லாம் ஒரு பதிவரா? இனிமே இந்த மாதிரி பச்சப் புள்ள பதிவருங்க கூட சேராதிங்கன்னு (பதிவர்களே நக்ஸிடம் கவனம் தேவை) சொல்ல, நான் நக்ஸ் அண்ணே, நாம அப்புறம் பேசுவோம்னு போனை கட் பண்ணிட்டேன்.

செங்கோவி புக்ஸ் வாங்குறப்போ அவருக்கு தெரியாம ஒரு போட்டோ எடுத்தேன். அதை அவர்கிட்ட காட்டி யாருன்னு கேட்டேன், அவரு யாரா இருக்கும்னு யோசிக்க ஆரம்பிச்சார். அட, நீங்க தான் அது. புக்ஸ் வாங்குறப்போ எடுத்தேன்னு சொன்னேன். அப்புறமா நல்லா உத்து பார்த்துட்டு அட ஆமாயா நான்தான்னு அசடு வழிஞ்சார். அப்புறமா சாபிட்டதுக்கு பில் பே பண்ணிட்டு கடைக்கு வெளியே வந்தோம். அங்க என் பைக்கை சுத்தி நாலஞ்சு லேடி கான்ஸ்டபிள்ஸ் நின்னுட்டு இருந்தாங்க. ஐயோ, நோ பார்க்கிங்ல நிறுத்திட்டோமான்னு வேகமா போனேன். ஆனா, அங்க பார்க்கிங்ன்னு தான் போட்டிருந்துச்சு. அப்புறம் ஏன் அங்க அவங்க நிக்கறாங்கன்னு யோசிச்சா, நான் அங்க நிறுத்தும் போது நிறைய பைக் இருந்துச்சு. இப்போ அந்த இடத்துல என்பைக் மட்டும் இருந்ததால கொஞ்சம் இடம் விலாசமா இருந்துச்சு. அதனால அங்க நின்னு அரட்டை அடிச்சிட்டு இருந்தாங்க போல.

செங்கோவியும் ஊருக்கு கிளம்பறேன்னு சொல்ல, அடுத்து எப்ப இந்தியா வருவிங்க?ன்னு கேட்டேன். அடுத்த வருசம்ன்னு சொன்னார். அப்போதாச்சும் ரெண்டு நாள் இங்க தங்குற மாதிரி பிளான் பண்ணிட்டு வாங்கன்னு சொன்னேன். அவரை மாட்டுத்தாவணி பஸ்ஸ்டாண்டில் பஸ் ஏற்றி விட கூட்டிச் சென்றேன். அன்னைக்குன்னு பாத்து ரொம்ப ட்ராபிக், ட்ராபிக்ல ஊர்ந்து பஸ்ஸ்டாண்ட் போகவே அரை மணிநேரம் ஆச்சு. அவரை பஸ் ஏற்றி விட்டதுடன் எனக்கு இன்னும் கொஞ்ச நேரம் பேச மாட்டோமா என மனம் நினைத்தது. ஆனாலும் சாட்டில் எப்பவேணாலும் பேசிக்கலாமே என நினைக்க, அப்போது பஸ் கிளம்பியது. இருவரும் கையசைத்து விடை பெற்றோம். இனிதே எங்கள் சந்திப்பு நிறைவுற்றது.

நாய்நக்ஸ் கவனிக்க: தலைப்பில் ப்யூர் பதிவர் சந்திப்புன்னு இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்ன்னா? டாஸ்மாக் கலந்துக்காத சந்திப்புன்னு அர்த்தம்.
மேலும் வாசிக்க... "கண்டேன் செங்கோவியை! ப்யூர் பதிவர் சந்திப்பு!"



நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!


கரன்ட்டுக்கும் லீவ் முடிஞ்சிருச்சு:
ஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும்  நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.

நித்யானந்தரின் விதிமுறை மீறல்?
 நம்ம  நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது????

தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:
கேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல! அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.

நடிகை அஞ்சலிக்கு  இம்சை:
நம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா?
மேலும் வாசிக்க... "நித்யானந்தா, அஞ்சலி, மின்சார ரகளைகள்!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1