கரன்ட்டுக்கும் லீவ் முடிஞ்சிருச்சு:
ஆமாங்க, ஸ்கூல் பசங்கள எக்ஸாம்க்கு கூட படிக்க முடியாம கரண்ட் கட் ரொம்ப இருந்துச்சு. சுமாரா பத்து மணிநேர வரை... கரண்ட் கட். அதுலயும் நைட்டுல அடிக்கடி போயிட்டு இருந்துச்சுல. பசங்களுக்கு எக்ஸாம் முடிஞ்சு லீவ் விட்டதும் கரண்ட் கட்டுக்கும் லீவ் விட்டுட்டாங்க. அதுக்கு காரணம் காற்றாலை மின்சாரம் தேவையான அளவுல கெடச்சதுனால கரண்ட் கட் ஆகறது இல்லைன்னு அரசு அறிக்கை சொல்லுச்சு. இப்ப ஸ்கூல் ஆரம்பிச்சுருச்சு. கரண்ட் கட்டும் ஆரம்பிச்சுருச்சு.
நித்யானந்தரின் விதிமுறை மீறல்?
நம்ம நித்தி மதுரை ஆதீனமா ஆனாலும் ஆனாரு. பிரச்சனை மேல பிரச்சனை தான். இப்ப என்ன பிரச்சனைன்னா, அவர கடவுளா பாவித்து பூஜை செய்யணுமாம். அபிஷேகம் செய்யணுமாம். அப்புறமா பகவத்கீதை உபதேசம் செய்வாராம். இப்படி அவரை மையமா வச்சு என்னனமோ செஞ்சுட்டு இருக்காரு. இவரு செய்றத மடாதிபதியும் கண்டுக்க மாட்டிங்கறாரு, என்ன செய்றது????
தமிழக செயலைக் கண்டு கேரளா வியப்பு:
கேரளா வியப்புக்கு காரணம் என்னான்னா, பெரியார் அணையில ஏகப்பட்ட ஓட்டைகள் செக் பண்றதுக்காக கேரளா போட்டாங்கல! அந்த ஓட்டைகளை அடைக்க கோர்ட் அனுமதி தந்தத யூஸ் பண்ணி நம்ம பொதுப்பணித்துறை நுட்ப வல்லுனர்கள் செம ஸ்ட்ராங்கா ஓட்டையை அடைச்சுகிட்டு இருக்காங்க. அதாவது சிமென்ட், கான்கிரீட் கலைவையை அதிக அழுத்த கம்ப்ரசெரில் அதி வேகத்துல அந்த ஒட்டைக்குள்ள விடுறதுனால சைடுல ஏதாவது சின்ன சின்ன ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சுக்கிருமாம். இதனால அணை இன்னும் ஸ்ட்ராங்கா மாறிரும். இதனால அணை பலவீனமா இருக்குன்னு கேரளாவால சொல்ல முடியாது.
நடிகை அஞ்சலிக்கு இம்சை:
நம்ம கலகல அஞ்சலிக்கு நம்ம ரசிகர்கள் போன்ல மணிக்கணக்கா பேசுராங்கலாம். ரசிகர்கள் ரொம்ப ஆர்வமா இப்படி பேசுறத அஞ்சலி இம்சையா எடுத்துக்கறாங்க. என்ன காரணம்னா, பேசுற எல்லாரும் லவ் பண்ற ரேஞ்சுக்கு பேசுராங்கலாம். அம்மணிக்கு அது பிடிக்கலையாம். சினிமான்னு வந்துட்டா ரசிகர்கள் அன்பு வேணும் அம்மிணி. ஹி..ஹி... அம்மிணி போனை ஆப் பண்ணாம இருந்தா எல்லா பயபுள்ளைகளும் வழியத்தானே செய்வாங்க. யாராச்சும் அஞ்சலி நம்பர் கொடுங்கப்பா?






Best Blogger Tips
UA-18786430-1