
உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம். மாயாஜாலமில்லை, மந்திரமில்லை. கீழே கொடுக்கப்பட்ட டயட் உணவை சரியாக கடைபிடித்தாலே கண்டிப்பாக எடையை குறைக்கலாம். இதற்கு உங்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு மிகவும் அவசியம் தேவை.
6.00 AM
GREEN TEA - யை பால், சர்க்கரை இல்லாமல் காய்ச்சிய சுடு நீரில் போட்டு 10 நிமிடம் கழித்து பருக வேண்டும்.
8.00 AM
வேக வைத்த பாசிப்பயிறு (அ) கொண்டைகடலை, சுண்டல் (அ) காணப்பயிறு + ஒரு கப் பச்சை காய்கறிகள்.
11.00 AM
முட்டைகோஸ் சூப் (அ) காய்கறி சூப்.
1.00 PM
ஒரு கப் சாதம் + ஒரு கப் காய்கறிகள் + ஒரு கப் கீரை.
4.00 PM
GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.
7.30 PM
கம்பு (அ) கேப்பை (அ) கேழ்வரகு தோசை (2 NOS) + தக்காளி சட்டினி மட்டும்.
தவிர்க்க வேண்டிய உணவு பொருட்கள்:
கோதுமை, ஓட்ஸ், மண்ணிற்கு அடியில் விளையும் காய்கறிகள், மற்றும் கிழங்குகள், இனிப்பு வகைகள், பேக்கரி வகைகள், பொறித்த உணவுகள், தேங்காய், மட்டன், முட்டை, சிக்கன், மீன், பால் பொருட்கள், இனிப்பு வகையான பழங்கள் ( வாழை, சப்போட்டா, திராட்சை, மாம்பழம், பலாப்பழம்), பேரிட்சை, பருப்பு ( முந்திரி, பாதாம், பிஸ்தா), கூல்ட்ரிங்க்ஸ், சாக்கலேட்ஸ், பிஸ்கட்ஸ், ஐஸ்கிரீம், பார்லி, எண்ணெய் பண்டங்கள் மற்றும் பலகாரங்கள்.
எளிமையான உடற்பயிற்சிகள்:
ரொம்ப கடினமான உடற்பயிற்சிகள் தேவையில்லை. வெறும் கயிற்றை வைத்தே உடற்பயிற்சி செய்யலாம். அதுதான் POCKET ROPE GYM. வெறும் 250 ரூபாய்க்கு கடைகளில் கிடைக்கிறது. அதோடு, உடற்பயிற்சி எப்படி செய்ய வேண்டும் என்ற குறிப்பும் இணைக்கப்பட்டுள்ளது. அதில் கொடுத்துள்ள உடற்பயிற்சிகளை மட்டும் செய்தால் போதுமானது.
கண்டிப்பாக இரண்டே வாரத்தில் சுமார் மூன்று கிலோ எடையை குறைத்து விடலாம். மேற்கண்ட உணவு கட்டுப்பாடும், உடற்பயிசியும் கடைபிடிப்பதால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. இருந்தாலும் மிக மிக அதிக எடை உள்ளவர்கள் கண்டிப்பாக OBESITY DOCTOR மூலம் ஆலோசனை செய்த பின்னர் இம்முறைகளை கடைபிடிக்கவும். ஏனெனில் அவர்களுக்கு அதிகப்படியான எடையை குறைக்க மாத்திரைகளும், மருந்துகளும் கொடுப்பார்கள்.
உடல் எடையை குறைத்த பின்னர் சரிவிகித உணவும், சீரான உடற்பயிசியும் அவசியம் தேவை. அப்பொழுது தான் குறைத்த எடையை கூடாமல் சீராக வைத்துக் கொள்ள முடியும்.
இப்பதிவு மீள்பதிவு....
38 கருத்துரைகள்:
பிரகாஷ் அண்ணே, நீங்க எவ்ளவ் வெயிட்? ஹி ஹி
//
GREEN TEA + ஒரு ஆப்பிள் (அ) ஒரு ஆரஞ்சு (அ) ஒரு கொய்யா (அ) ஒரு கீத்து பப்பாளி.///
இதுலாம் சாப்பாட்டுக்கு முன்பா ? பின்பா ?
அருமையான சுருக்கமான தெளிவான பதிவு
நல்ல டிப்ஸ் பாஸ்... பகிர்வுக்கு நன்றி
தேவையான பதிவுதான்
ஆனா நம்மால முடியாதப்பா
நன்றி!
புலவர் சா இராமாநுசம்
வெயிட்டான பதிவுதான்........
//// C.P. செந்தில்குமார் said...
பிரகாஷ் அண்ணே, நீங்க எவ்ளவ் வெயிட்? ஹி ஹி/////
தெரிஞ்சா காம்ப்ளான் வாங்கி கொடுப்பீங்களா?
ஹா ஹா ஹா நானும் கொஞ்சம் எடை குறைக்க வேண்டும்! எனக்கு மிகவும் பயனுள்ள பதிவு பிரகாஷ்!
மச்சி இது உனக்கா? எனக்கா?
நன்றி நண்பரே ....
வணக்கம் சாரே எடையை கூட்ட ஏதும் டிப்ஸ் உண்டா?
ஓங்க பதிவு அருமை சாரே
நன்றி...
சூப்பர் டிப்ஸ்...
மாப்ள உங்க பதிவுக்கு நன்றி...இருந்தாலும் என் தனிப்பட்ட கருத்தை சொல்றேன்...ஒவ்வொருவர் உடலுக்கும் மிகப்பெரிய மருத்துவர் அவர் அவரே...அதுவும் நீங்க சொல்லி இருக்க டயட் எனப்படுவது அனைவருக்கும் சரியானதல்ல...உடல் இயக்க சுழற்சி மாறுபடுமேயானால் விளைவுகள் கடுமையாக இருக்கும்...நன்றி!
இவ்வளவும் வீட்டிலிருந்து சாப்பிட்டால் சம்பளம் தருவாயிங்களா # டவுட்டு கோவாலு....
நல்ல உபயோகமான பதிவுய்யா...!!!
@விக்கியுலகம்
உடல் எடை அதிகமாக இருப்பவர்களுக்கு சரியான அளவு கலோரி, மற்றும் சிறிது உடற்பயிற்சி தேவை. என்ற நோக்கில் பதிவிடப்பட்டுள்ளது.
பெரும்பாலான டாக்டருங்க ஒல்லியாத்தான் இருக்காங்க...இந்த ஒபேசிட்டி டாக்டர் ரொம்ப குண்டா இருப்பாரோ...டவுட்டு....
நல்ல பதிவுதான்.
அசத்தலான ஐடியா பாஸ்
அருமையான மற்றும் உபயோகமான பதிவு நண்பரே
கோதுமையும் ஓட்ஸும் சாப்பிட கூடாத லிஸ்ட்ல சேர்ந்திருக்கே........????
அதுவுமா?
http://kobirajkobi.blogspot.com/2011/10/2011.html
2011-டாப் படம் எது?
நன்றி, அருமையான மீள் பதிவு
ரைட்டு = கொறைக்க வேண்டியவங்க கொறைச்சிக்கட்டும். அப்புறம் - ம்ம்ம்ம்ம்
உண்மையிலேயே உபயோகமான பதிவு
பயனுள்ள பகிர்வு....
கொண்டைகடலை வேகவைக்காம அப்படியே ஊறவைத்து சாப்பிட்டால் கண்டிப்பா எனர்ஜி ஃபுட் அது....
அன்பு நன்றிகள் பகிர்வுக்கு...
யோவ், இதெல்லாம் ஆஃபீஸ் போனா எப்படி ஃபாலோ பண்ண?
நல்ல பதிவுதான் இவையோடு ஆபீசுக்கு சைக்கிலிக் சென்று வந்தால் நல்லது.. ஹி ஹி
படிக்க நல்லாத்தான் இருக்கு. படித்ததும் உடம்பு ஸ்லிம் ஆகிவிட்டது போல ஒரு உணர்வு ஏற்பட்டது. ஆனால் பதிவைப் படிக்கும்போதே அது மண்டையில் ஏற ஏதாவது [வெங்காய தூள் பக்கோடா போல]கரமுரா என்று தேவைபடுகிறதே, ஸ்வாமி. நான் என்ன செய்ய?
ஆனாலும் நான் 3 கிலோ குறைவாகவே உள்ளேன்.
[100 minus 3] 97 மட்டுமே.
எஸ்கேப்!
வெயிட்டான பதிவு!
சூப்பர் இன்று முதல் பின் பற்ற வேண்டியது தான்!
நல்ல பதிவு. ஆனால் அப்படியே உடல் எடை கூடுவதற்கும் ஒரு பதிவு போடலாமே.
நல்ல டிப்ஸ்.
நல்ல பயனுள்ள தகவல்.நன்றி பகிர்வுக்கு.
hii.. Nice Post For latest stills videos visit ..
www.ChiCha.in
www.ChiCha.in
பயன் உள்ள பதிவு ,,,,
நன்றி சகோ
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/06/blog-post_20.html) சென்று பார்க்கவும்... நன்றி...
http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_20.html
இன்று வலைச்சரத்தில் இந்த இடுகையை பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.