
சண்டே எப்பவுமே லீவ் நாள் தான். அதனால என் சொந்த ஊருக்கு போயிருந்தேன். சண்டே காலையில் தான் போனேன். காலையிலும், மதியமும் நல்ல சாபிட்டுட்டு கொஞ்சம் நேரம் தூங்கிட்டு (முதல் நாள் கம்பெனியில் நைட் ஷிப்ட் டூட்டி பார்த்திருந்ததால் தூக்கம் உடனே வந்திருச்சு) மறுபடியும் மதுரைக்கு கிளம்பிட்டேன். சாயிந்தரம் ஆறு மணி இருக்கும், பஸ் ஸ்டாப்புக்கு வந்தேன். ஒரு அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு தனியார் பஸ் புல் கூட்டமா வந்து நின்னுச்சு. பயங்கர ஸ்பீடுல போறதுனால எப்பவும் கூட்டம் தான். கூட்டம் அதிகமா இருந்ததுனால நான் ஏறல. அடுத்து எப்படியும் கவர்மென்ட் பஸ் வரும். அதுல கூட்டம் இருக்காது. ஏன்னா அவங்க ஸ்பீட் கம்மி தான். எனக்கு எப்படி அடுத்த பஸ் கவர்மென்ட் பஸ் தான் வரும்னு தெரியும்னு கேட்கறிங்களா? நான் ஸ்கூல், காலேஜ் படிச்சா காலத்துல இருந்து அந்த டைம் எனக்கு பழகிப் போச்சு. வேற ஒன்னும் இல்லை.
நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. ரெண்டு மூணு பேர் ஸ்டான்டிங். நானும் கொடைரோட்டில் ஆட்கள் இறங்குவாங்க உட்கார்ந்துக்கலாம்னு நெனச்சு ஏறினேன். மதுரை, திண்டுக்கலுக்கு இடையில் இறங்குறவங்களை பஸ் கண்டக்டர் கடைசி ரெண்டு மூணு சீட்டுல உட்கார சொல்லுவாங்க. அதனால கொடைரோட்டில் இடம் கிடைக்கும்னு பின் படிக்கட்டு பக்கத்தில் நின்னுட்டேன். நான் நெனச்ச மாதிரியே பஸ் ரொம்ப ஸ்லோ டிக்கெட் எடுத்திட்டு காதுல மொபைல் ஹெட்போனை மாட்டிட்டு பாட்டு கேட்க ஆரம்பிச்சேன். பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல. நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க. நானும் புதுசா கல்யாணம் ஆனா ஜோடிகள்ன்னு நெனச்சிட்டு இருந்தேன். கொடைரோடு போகாம பஸ் பைபாஸ் மேம்பாலம் ஏறுச்சு . ஆகா, கொடைரோட்டில் சீட் கிடைக்கும்னு இருந்த நம்பிக்கை வீணா போச்சு.
அடுத்து வாடிப்பட்டி தான். அங்க யாராச்சும் இறங்கினா இடம் உண்டுன்னு நெனச்சிட்டு அந்த ஜோடியை பாக்க ஆரம்பிச்சேன். உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம். வேற வழி, எதையாவது வேடிக்கை பார்த்தாதானே பொழுது போகும். ஒருத்தர் மடியில ஒருத்தர் சாஞ்சுக்றதும், காதுக்கு பக்கத்துல ஏதோ குசுகுசுன்னு பேசிக்றதுமா இருந்தாங்க. மொபைலை வச்சு மாத்தி மாத்தி பிடிச்சு விளையாடுறதுமாய் இருந்தாங்க. நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . ஹி...ஹி…. நானும் என் வேலையை பார்த்துட்டு இருந்தேன். வாடிப்பட்டி வந்துச்சு. யாராச்சும் இறங்க எந்திரிப்பாங்களான்னு ஒவ்வொருத்தரா பார்த்தேன். நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க. அப்பாடா ஒரு வழியா உட்கார இடம் கிடைச்சுசுன்னு சந்தோசப்பட்டேன். மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன். அவ மடியில இவன் சாஞ்சுக்றதும், அப்புறம் இவன் மடியில அவ சாஞ்சுக்றதுமா இருந்தாங்க. பஸ்சும் ரொம்ப ஸ்லோவா போய்ட்டு இருந்துச்சு. பைபாஸ் ஒன் வேயா இருந்தும் ஸ்பீடா போகல. ஒரு வேளை அவங்களுக்காகவே ஸ்லோவா போகுதோ என்னவோ? ஒரு வழியா மதுரை என்டர் ஆச்சு. ஆனா அவங்க காதல் விளையாட்டை நிறுத்தல. ஒரு மணி நேரத்துல வர வேண்டியவன் ஒன்னே கால் மணி நேரம் எடுத்துகிட்டான். (உட்கார இடம் கிடைக்கும்னு தானே இந்த பஸ்ஸில் நீ ஏறுனேன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது )
குரு தியேட்டர் ஸ்டாப்பில் கொஞ்ச பேர் இறங்குனாங்க. அடுத்த ஸ்டாப் கிராஸ் ரோடு. அந்த ஜோடிங்க இறங்க பேக்கேல்லாம் எடுத்துட்டு இறங்க ரெடியாச்சு. நானும் அந்த ஸ்டாப்பில் தான் இறங்கனும். பஸ்ஸில் இருந்து இறங்கிட்டு திரும்பி பார்த்தா அவன் மட்டும் இறங்கியிருந்தான். அந்த பொண்ணு இறங்கல. பஸ்சும் கிளம்பிருச்சு. அவன் கை அசைக்க அந்த பொண்ணும் கை அசைத்தாள். அப்ப தான் எனக்கு ஒன்னு புரிஞ்சுச்சு. அவங்க புது தம்பதிகள் இல்லை (புது தம்பதிகள் தான் அப்படி இருப்பாங்களான்னு டவுட் கேட்க கூடாது), காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா?
அப்ப தான் எனக்கு இன்னொரு சம்பவம் ஞாபகம் வந்துச்சு. போன மாசம் லீவுல என் ஊருக்கு போயிருந்தப்ப ஒரு வேலையா திண்டுக்கல் போயிருந்தேன். அப்பவும் சீட் கிடைக்காம நின்னுட்டு இருந்தேன். பேகம்பூரில் ஒரு பையனும், பொண்ணும் இறங்கினாங்க. எனக்கு உட்கார இடம் கிடைச்சுச்சு. ஆட்கள் இறங்கியதும் பஸ் மெதுவா நகர ஆரம்பிச்சுச்சு. அப்ப கண்டக்டர் அவரா ஒரு வார்த்தை சொன்னாரு பாருங்க, மதுரையில் இருந்து அதுக ரெண்டு பெரும் ஒன்னு மன்னா சேர்ந்து உட்கார்ந்து வந்துச்சுக, இப்ப இறங்கி ஆளுக்கு ஒரு திசையில் போகுதுன்னு சொன்னாருங்க. இதுகல நம்பி வீட்டுல பெத்தவங்க நம்ம பொண்ணு நல்ல பொண்ணு, நம்ம பையன் நல்ல பையன்னு நம்பிக்கிட்டு இருப்பாங்க. ஆனா அவங்க நம்பிக்கையை இது மாதிரியான ஆட்கள் தூள் தூளாக்கிருவாங்க.
லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.
75 கருத்துரைகள்:
நல்லா சொன்னீங்க போங்க
எலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி!
தமிழ் மணம் இரண்டு
இந்த மாதிரி பஸ் பயணங்க
ளில் வெளியே வேடிக்கை
பார்க்க எத்தினியோ விஷயங்க
இருக்குமே. நீங்க ஏன் பஸ்ஸுக்
குள்ள வேடிக்கை பாத்தீங்க.
ஓசில படம் பார்த்துட்டு அதை விளக்கமா வேற சொல்றீங்களா??
ரொம்பவே கடுப்பாயிருக்கீங்க போல.
ஆனாலும் நீங்க சொல்றது சரிதான். இந்த மாதிரியான ஆட்கள் பொது இடங்களில் இருக்கோம்குறதையே மறந்துட்டு செயல்பட்றாங்க. கேட்டா நாகரிகம் வளர்ந்துடுச்சுனு வாய் கிழிய பேசுறாங்க.. எங்க போய் முட்டிக்கிறது.
//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. //
ஆஹா.. என்ன ஒரு அட்வைஸ்..
என்னா ஒரு வில்லத்தனம்..
ரெண்டு பேரு சந்தோசமா (அவங்க பாஷையில) உங்களுக்கு பிடிக்காதா!!??
உங்களுக்கு ஒண்ணே கால் மணி நேரம் ப்ரீ-யா படம் வேற போட்டு காமிச்சு இருக்காங்க!!??
எல்லாத்தையும் நீங்க அனுபவிச்சுட்டு அவங்களை குறை சொல்றீங்களா!!?? ஹி ஹி ஹி
லக்ஷ்மி அம்மா சரியா கேட்டு இருக்காங்க பாருங்க
ஆனா நம்ம ஊரு பையன் தெளிவாதான் இருக்கான்யா ரூ 50 செலவுல ஒரு 3 மணி நேரம் என்ஜாய் பண்ணி இருக்கான்...
//. நீங்க ஏன் பஸ்ஸுக்
குள்ள வேடிக்கை பாத்தீங்க.//
ஹா...ஹா...ஹா...
ஹா...ஹா...ஹா....
ஹா....ஹா....ஹா...
இருங்க சிரிச்சுட்டு வந்து கமெண்ட் சொல்றேன் :) :) :)
@M.R
கருத்துக்கு நன்றி எம் ஆர்
இப்படிலாம் நம்ம மேட்டர ஒருத்தன் அவன் ப்ளாக்ல பப்ளீக்கா போட்டு அசிங்கப்படுத்துறான்னு தெரிஞ்சாவது இனி திருந்தட்டும் ஜோடிகள்!!!!
நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துக்கள்
@விக்கியுலகம்
எலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி!>>
மாம்ஸ் பொது இடத்துல இப்பிடி நடக்க கூடத்துல... ஒரு ஆதங்கம் தான்...
@Lakshmi
நீங்க ஏன் பஸ்ஸுக்
குள்ள வேடிக்கை பாத்தீங்க.>>>
என்ன செய்ய? வேடிக்கை பாத்துட்டேன்... விடுங்க
@இந்திரா
//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. //
ஆஹா.. என்ன ஒரு அட்வைஸ்..>>>>
காதலிச்சாலும் பெத்தவங்களை மறக்க கூடாதுல..
@ஜ.ரா.ரமேஷ் பாபு
என்னா ஒரு வில்லத்தனம்..>>
ஒரு ஆதங்கத்தை வெளிப்படுத்தினா வில்லன்னு சொல்லறாங்க... என்ன உலகம் இது...
அடக் கொடுமையே
@ஆமினா
இருங்க சிரிச்சுட்டு வந்து கமெண்ட் சொல்றேன் :) :) :)>>>
என்ன சொல்ல போறாங்களோ???
@ஆமினா
நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துக்கள்>>>
நல்ல பதிவுன்னு வாழ்தியிருக்காங்க... நன்றிங்கோ..
தமிழ்மணம் - 7
ஊருக்கு போன நேரமே தெரிஞ்சிருக்காதே... பிறகு சீட் கிடைத்து இருந்தாலும் உட்கார்ந்து இருக்க மாட்ட வேடிக்கை பார்க்கறதுல அப்படி ஒரு சுகம்
இந்த மாதிரி பஸ் பயணங்க
ளில் வெளியே வேடிக்கை
பார்க்க எத்தினியோ விஷயங்க
இருக்குமே. நீங்க ஏன் பஸ்ஸுக்
குள்ள வேடிக்கை பாத்தீங்க.
அப்புடிக் கேளுங்கம்மா இதுக்குத்தான்
பெரியவங்க சொல்லக் கேக்கணும் எண்டுறது .உங்களுக்கு இது தேவையா ஹி....ஹி....ஹி....
மிக்க நன்றி சகோ உங்கள் தொடர் வரவு என் மனத்தைக்
குளிரவைத்தது.ஆனாலும்
ஓட்டுப்பெட்டிய மறந்திராதீங்க .கருத்துப் போடாட்டிக்கும்
என் ஒட்டு நிட்சம் உங்களுக்கு வரும் .(எத்தின கலியாணவீட்டில மொய்வச்ச அனுபவம் தெரியுமா ம்ம்ம்ம் ...ஹி...ஹி...ஹி...)
இன்னிக்கு தலா நாலு ஒட்டு .வேணுமுன்னா
செக் பண்ணிக்கோங்க சரீங்களா?......
@எம்.எஸ்.ரஜினி பிரதாப் சிங்
வருகைக்கு நன்றிங்கோ
@சசிகுமார்
பிறகு சீட் கிடைத்து இருந்தாலும் உட்கார்ந்து இருக்க மாட்ட >>>
சீட் கிடைச்சுச்சே...உட்கார்ந்தேனே
@அம்பாளடியாள்
உங்கள் வருகையே போதும் சகோ..
கலிகாலத்துல இதெல்லாம் சகஜமப்பா?
போது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். /
ஆதங்கப் பகிர்வு.
நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ரொம்ப நெருக்கமா உட்கார்ந்து ரொம்ப சுவாரஸ்யமா பேசிட்டு இருந்தாங்க.//
அவ்....அவங்களை ஏன்யா நீங்க பார்த்தீங்க..
பெற்றோர்களுக்கும், இளைஞர்களுக்கும் விழிப்பினைக் கொடுக்கும் நல்லதோர் பதிவு.
விக்கியுலகம் said... 2
எலேய் ஓசில படம் பாத்துட்டு வந்து இங்க விமர்சனம் பண்றியா...பிச்சிபுடுவேன் ஹிஹி!//
அது..
இந்த சீனை நம்ம நிரூ பார்த்திருந்தால்..?
இந்த காதல் கொசு தொல்ல தாங்க முடியல ஓசில சீன் பார்த்துல எடு 5 ருபாய்.
அவயங்களை பாக்கும்போது அப்படியே லைட்டா காதுல புகை வந்துருக்குமே ஹி ஹி ஹி
all voted thamil manam 11
ஓஹோ.. இட்துக்காகத்தான் நீ அடிக்கடி பஸ்ல போறியா?
மதுரை எல்லாத்துக்கும் ஃபேமஸ் தாய்யா
இது எல்லா ஊர் பஸ்லியும் நடக்குறதுதான்
////நல்லா காதல் காட்சி ஓடிட்டு இருந்துச்சு. பொது இடம்னு கூட பாக்காம யாரையும் கண்டுக்கிறாம அவங்க பாட்டுக்கு அவங்க வேலையை பார்த்துட்டு இருந்தாங்க . // ஒரு வேளை சினிமா சூட்டிங்கா இருந்திருக்க போது))
ஹேலோ பாஸ் , சுத்தி இருக்கிறவங்கள மனுசங்களா பாத்தாத்தானே கூச்சம் வரும் , சுத்தி இருக்குறவங்களை ஆடு மாடா நெனச்சிக்கிட்டா கூச்சமே இருக்காது , காதலுக்கு கண்ணில்லைனு சொல்றது இதைத்தான் .. பாவம் அவனுங்களே சேந்து இருக்க நேரம் இடம் இல்லாம பஸ்ல கொஞ்ச நேரம் சந்தோஷமா இருக்கானுக .. அதை வேடிக்கை பாத்துக்கிட்டு வந்துருக்கீங்களே ரொம்ப தப்பு பாஸ்
இந்த பதிவு எனக்கு மலரும் நினைவுகளை கிளறி விட்டது நண்பரே ... இதே மதுரை டூ திண்டுக்கல் பேருந்தில் எந்த கவலையும் இல்லாமல் சந்தோஷமாக காதல் செய்து திரிந்த நாட்கள் , எவ்வளவு கொடுத்தாலும் திரும்ப கிடைக்காத சந்தோஷமான காலகட்டங்கள் அவை .... இந்த பதிவின் மூலம் அதை திரும்ப உணர செய்ததற்க்கு நன்றி நண்பரே ...
இந்தப்பதிவுல லேசா ஒரு புகை வருது.
நல்ல பதிவு.
காலம் ரொம்ப கெட்டுகிடக்கு! நானும் இதே போல ஜோடிகளை பாத்துட்டுதான் இருக்கேன்! பாவம் பெற்றவர்கள்!
// பஸ்ல டிவி இருந்துச்சு. இருந்துச்சு மட்டும் தான். ஒன்னும் போடல.//
நோட் திஸ் பாய்ண்ட் மை லார்ட்!
லைவ் ஷோ காட்ட இருக்கிறவங்க , டி.வி.யில வேற போடுவாய்ங்களா?
//உனக்கு இது தேவையான்னு நீங்க கேட்கலாம்.//
சரி. கேட்கிறேன். உங்களுக்கு இது தேவையா?
// நல்ல வேளை நான் நின்னுட்டு இருந்ததுக்கு பக்கத்துக்கு சீட்டில் ரெண்டு பேரு இறங்கினாங்க.//
இதுவும் ஜோடி தானா?
//காதலர்கள்னு பஸ்ல சவுகார்யமா உட்கார்ந்துட்டு எப்படியெல்லாம் லவ் பன்றாங்கைய்யா? //
இருக்கிறவன் வெச்சிக்கிறான்; இல்லாதவன் வரைஞ்சிக்கிறான்.
உமக்கு ஏன் ஓய் வயிறு எரியுது?
//லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. //
அடுத்தவன் பெத்ததுகள நீங்க எப்பூடி வேணாம்னு சொல்லுவீங்க?
சரிங்க பாஸ்,
அடுத்தமுறை ஊருக்கு போய் வரும்போதும் , அரசு பேருந்துலயே பயணம் செய்யுங்க. இலவசமா எல்லா எழவையும் (பின்ன, நமக்கு வாய்க்கல இல்ல) பாத்துட்டு வந்து பதிவு போடுங்க.
இப்ப நான் வேற ஏரியா பக்கம் ஒரு ரவுண்டு போயிட்டு... வருவேன்.
மொத நின்னுட்டு படம் பார்த்த நான் இப்ப உட்கார்ந்து படம் பார்க்க ஆரம்பிச்சேன்.//
விளங்கிடும்!
நான் யூகிச்ச மாதிரியே கவர்மென்ட் பஸ் வந்துச்சு. என்னா ஒரு தீர்க்க தரிசனம்
ம்ம் சரிதான். பொது இடம் என்பதையே மறந்து விடுகின்றனர்.
லொள்ளு பார்யா
பாக்கறதையும் பாத்துப்புட்டு இப்ப பேச்ச பாரு?
உங்களை வளைகுடாவில் போட்டு காய வைச்சா சரியாயிடுவீங்க:)
அடிக்கடி இந்த மாதிரி கிளுகிளுப்பா எழுதுங்கய்யா.........
இனி நானும் பஸ்லயே போகலாம்னு முடிவு பண்ணிட்டேன்..
நல்ல வேல நான் லவ் பண்ணல
போனப்போட்டும் விடுங்க பாஸ்.
தியேட்டர்ல பார்த்திருந்தா இவ்வளவு நெருக்கமா இருக்கிறத, நீங்க இவ்வளவு நெருக்கத்துல பாத்து இருக்க முடியாது. அடுத்த தடவை ஊருக்கு போகும்போதும் அரசுப் பேருந்து தானா சார்.
தவறுதான் ....ஆனால்...வயசு கோளாறு ????
இதுக்கே இப்படி சொல்றிங்கலே....தியேட்டர்ல கல்யாணம் ஆன ஜோடிஐ பார்திருக்கிரேன்...
பெட்ரூம் தான் .தியேட்டர்....
தம்பி...உங்களுக்கு 30 வயசுன்னு நினைச்சேன்...இப்பதான் தெரியுது...பிறந்த வருஷம் 30 ன்னு...அவ்வ்வ்வவ்வ்வ்வவ்...
இப்ப உள்ள காதல் ஜோடிகளில் பலர் தெரு நாயைவிட கேவலமாகத்தான் நடந்து கொள்கிறார்கள்.
ஆதங்கப் பகிர்வுக்கு வாழ்த்துக்கள்.
அட போப்பா.... உனக்கு பொறாமை.... நானும் ஒரு முறை இதை விட மோசமான படத்தை திருச்சி - சென்னை பேருந்தில் பார்த்தேன்... எனக்கு பொறாமையா தான் இருந்தது... கோவம் வரவில்லை... ஹிஹிஹி
ஓசில படம் பார்த்ததைக் கூட கூச்சமில்லாம பதிவு ஆக்குறீங்களே..பெரிய ஆளுதான்யா நீங்க..
மடில சாஞ்சாங்க-ன்னு 10 தடவை எழுதி இருக்கீரு..அவ்ளோ தானா? நாங்க உங்க கிட்ட நிறைய எதிர்பார்க்கிறோம் தமிழ்வாசி!
// லவ் பண்ணுங்க, ஏன் ஓடிப் போய் கல்யாணம் பண்ணிட்டு அப்புறமா பெத்தவங்க கால்ல விழுங்க. நான் வேணாம்னு சொல்லல. ஆனா இது மாதிரியான பொது இடங்களில் நாலு பேர் பாக்கிற மாதிரி மோசமா நடந்துக்க வேணாம். என்னை மாதிரி எத்தனை பேர் இவங்க பண்ணின செய்கைகளை பார்த்திருப்பாங்க? அவங்க என்ன நெனச்சிருப்பாங்க? ஆகவே காதலர்களே காதலியுங்கள். அந்த காதல் பொது இடங்களில் உங்கள் இருவருக்கு மட்டுமே தெரியட்டும். மற்றவர்களுக்கு தெரியும்படி காதலிக்க வேண்டாம்.//
அடேங்கப்பா...பெரிய சாக்ரடீசு...........சொல்லிட்டாருய்யா மெசேஜு...இனிமே எல்லாரும் திருந்திடுவாங்க!
அப்புறம் அந்த ஸ்டில்லு.......ம்..ம்!
நல்லா சொன்னீங்க போங்கநல்லதொரு பதிவுஉலகம் பெரியது நண்பரேசிவகுமார் க madurai
சரி ஃப்ரீ ஷோ பார்த்துட்டீங்க.... சென்னை பக்கம் வந்தீங்கன்னா இதுபோல நிறைய பார்க்கலாம்...
நீங்க சொல்றது சரி அண்ணா ஆனா இப்படியான இடங்கல்ல லைவ் பண்ணினாத்தான் ஒரு கிக் இருக்கே நாங்க என்ன செய்ய
நீங்கள் பார்த்த கருமத்தை எழுதீட்டீங்க நான் பார்த்த கருமத்தை எழுதமுடியாது ஏன்னா அந்த ஜோடிக்கு வயசு 60க்கு மேலே.
ஓட்டு போட்டாச்சு
நல்ல பதிவு.
http://egaruda.blogspot.com/2012/03/i-hate-love.html
நல்ல பகிர்வு! இன்றைய இளசுகள் பொது இடத்தையும் விட்டு வைப்பதில்லை!
நாங்களும் இதே மாதிரி வெட்கம் கெட்ட நிறைய ஜோடிகளை பார்த்திருக்கோம். ஆனால் உங்கள் விவரணம் அருமை!