CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



கணக்குல புலியாகனுமா? கரண்ட் ஷாக் கொடுங்க....

      

    மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடமாக,  லேசாக மின்சாரம் பாய்ச்சப்பட்டால் கணித அறிவு தூண்டப்படுகிறது என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
         (பிள்ளைகளே, இதைப் படித்துவிட்டு நேரடியாக பிளக்கிலிருந்து மின்சாரத்தை தலையில் பாய்ச்சி விஷப் பரிசோதனை செய்ய வேண்டாம், மேற்கொண்டு படியுங்கள்).
             கணிதம் படிப்பதில் மந்தமாக இருக்கும் 15 மாணவர்களை (வயது 20 முதல் 21 வரை) குழுவாகத் தேர்வு செய்து, புதிய கணிதக் குறியீடுகளை அவர்களுக்கு அறிமுகப்படுத்தி மூளையின் குறிப்பிட்ட பகுதியில் வலமிருந்து இடம் செல்லும் வகையில் லேசாக மின்சார அதிர்ச்சி அளித்தார்கள். பிறகு குறியீடுகளைக் கொண்டு விடை அளிக்குமாறு சில புதிர் கணக்குகளை வீட்டுப்பாடமாக அளித்தார்கள். 


                 அவர்கள் வெகு விரைவாகவும் சரியாகவும் அந்த கணக்குகளுக்கு விடைகளைக் கண்டுபிடித்தார்கள்.அதே வேளையில் அந்தக் குழுவிலேயே மற்றொரு பகுதியினருக்கு மூளையின் இடது புறத்திலிருந்து வலதுபுறமாக மின்சாரம் செல்லுமாறு செலுத்தினார்கள். பிறகு அவர்களுக்கும் அதே கணக்குப் புதிர்களைக் கொடுத்தார்கள். அவர்களால் வேகமாகவோ துல்லியமாகவோ கணக்குப் போட முடியவில்லை. 
               அவர்களுடைய கணித ஆற்றல் 6 வயதுக் குழந்தைக்குச் சமமாகவே (குறைவாக) இருந்தது. அவர்களுக்கு ஸ்ட்ரூப் சோதனையும் நடத்தினார்கள்.அதாவது சிவப்பு என்ற வண்ணத்தை பச்சை மையில் எழுதிக் காட்டி வாசிக்கச் சொல்வார்கள். பெரிய மதிப்புள்ள எண்களை மிகச் சிறிய வடிவிலும் சிறிய மதிப்புள்ள எண்களை மிகப் பெரிய எழுத்துகளிலும் எழுதிக்காட்டி விடை கேட்பார்கள். (சுருக்கமாகச் சொன்னால் குழப்புவார்கள்). 
                 மின்சாரத்தை வலமிருந்து இடமாகச் செலுத்தியவர்களின் கணித ஆற்றல் 6 மாதங்களுக்கு அப்படியே நீடித்தது. (கேரண்டி அவ்வளவுதான் போலிருக்கிறது!)இதிலிருந்து மூளை சிறப்பாக இயங்க மின்சாரம் பாய்ச்ச வேண்டும் என்ற தவறான முடிவுக்கு வந்துவிடாதீர்கள். 
             மூளையின் ஒரு பகுதி கணித அறிவுக்கு ஏற்றது, அதை சரியான வகையில் தூண்டிவிடலாம் என்பதே ஆய்வின் முடிவு. இந்த ஆய்வு தொடர்கிறது, அதுவரை வாய்ப்பாடுகளை ஒழுங்காகப் படித்து கணக்கு போட்டுக்கொண்டிருங்கள்.


மேலும் வாசிக்க... "கணக்குல புலியாகனுமா? கரண்ட் ஷாக் கொடுங்க...."



முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்...



நல்ல முறையில் வேலை செய்து கொண்டிருந்த நம்ம கம்ப்யூட்டர், நம் அறிவை கூர்மையாகிக்கொள்ள நோண்டிக் கொண்டிருக்கும் போதோ, அல்லது வைரஸ் பதிப்பினாலோ, வேறு ஏதோ காரணத்தினாலோ operating system corrupt ஆனால் நாம் பதிந்து வைத்துள்ள பல மென்பொருட்களும், corrupt ஆகும்..

பின்னர் புதுசா os install செய்த பின் நமக்கு தேவையான மென்பொருட்களை இன்டர்நெட்டில் தேடிப்பிடித்து டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்ய வேண்டும், இல்லையேல் நாம் முன்னெச்சரிக்கையாக backup எடுத்து வைத்திருந்தால் கவலையில்லாமல் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

Backup எடுத்து வைக்காமல் இருந்தும், ஒவ்வொரு வெப்சைட் தேடிப் பிடித்து டவுன்லோட் செய்வதற்குள் போதும் போதும்ன்னு ஆயிரும்.
 
நமக்கு தேவையான, முக்கியமான சாப்ட்வேர் அனைத்தும் ஒரே இடத்தில இருந்தால் எவ்வளவு நல்ல இருக்கும். 

அப்படி ஒரு வெப்சைட் ஒன்று உள்ளது. அதுவே Ninite Easy PC Setup...
இதில்  அப்டேட் செய்யப்பட்ட தொகுப்பாக உள்ளது...


இந்த வெப்சைட் - இல் நமக்கு தேவையானவற்றை கிளிக் செய்து  Get installer கொடுத்தால் போதும். தேவையான எல்லா  சாப்ட்வேர்  நம்ம  computer  - இல் இன்ஸ்டால் ஆகும்..


  Ninite Easy PC Setup... தேவைக்கு இங்கு கிளிக்கவும்...
 
மேலும் வாசிக்க... "முக்கிய software backup எடுத்து வைக்கவில்லையா? கவலை வேண்டாம்..."



தீபாவளி என்பதிலேயே...

 தமிழ்வாசியின்


தீபாவளி என்பதிலேயே அதன் பொருள் அடங்கியுள்ளதே. தீபங்களை வரிசையாக ஏற்றி வைத்து வணங்குதல் தீபாவளி ஆகும். தீபம் என்றால் வெளிச்சம். ஒவ்வொருத்தர் மனதிலும் ஒரு சில இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம் போன்ற எதையாவது ஒன்றை தூக்கிப்போட வேண்டும். ஒரு தீய குணத்தை எரித்துவிட வேண்டும்.


     சங்க காலத்தில் மகான்கள் எல்லாம் சூசகமாக சில தகவல்களை கூறிவிட்டுச் சென்றுள்ளனர். நரகாசுரன் என்றால் ஒரு அரக்கன், அவனை எரித்தோம், அன்றைய தினம் தீபாவளி என்பதெல்லாம் வேறு.







எண்ணெய் தேய்த்துக் குளிப்பது என்றால் என்ன? சனீஸ்வரன் கோயிலுக்குச் சென்றால் அங்கு எண்ணெய் வைத்து தலைக்குக் குளிக்கிறோம். சனி விட்டுவிட்டால் எண்ணெய் தேய்த்து தலைக்கு குளிக்கிறோம்.


தீபாவளி அன்று எண்ணெய் தேய்த்துக் குளிப்பதற்குக் காரணம், அன்றைய தினம் நமது தீய குணங்கள் எதையாவது ஒன்றை விட்டுவிட வேண்டும். அதை முன்னிட்டே எண்ணெய் தேய்த்துக் குளிக்கிறோம்.


நம்மிடம் இருக்கும் கெட்ட பழக்க வழக்கம் ஏதேனும் ஒன்றையாவது அன்றைய தினம் விட்டுவிட வேண்டும். புகைத்தல், குடிப்பழக்கம், பொய் சொல்வது, எதிரி மீது வழக்குத் தொடுத்திருப்பது, பக்கத்து வீட்டுக்காரனுடன் சண்டை இருக்கும், அதனை தீபாவளி அன்று ஒரு இனிப்பு கொடுத்து சமரசம் ஆகிவிடலாம். இதற்குத்தான் தீபாவளியேத் தவிர வெடி வெடித்து, முறுக்கு, சீடை, இனிப்பு சாப்பிடுவது மட்டும் தீபாவளி அல்ல.


தீபாவளி நமக்கு சொல்லும் ஒரே விஷயம் இதுதான். மனதில் இருக்கும் இருட்டை விலக்குவதற்கு வெளிச்சம் கொண்டு வருவதுதான் தீபாவளி. வீட்டை சுற்றி தீபம் ஏற்றி வெளிச்சம் கொண்டு வந்துவிட்டு மனதை இருட்டாக வைத்துக் கொள்ளக் கூடாது. அதற்குப் பெயர் தீபாவளி அல்ல. மனதில் இருக்கும் அழுக்கை அகற்றி மனதிற்குள் தீபம் ஏற்றுவதுதான் தீபாவளி.


அகத்தில் (உள்ளத்தில்) ஏற்றுவதுதான் தீபாவளியேத் தவிர புறத்தில் ஏற்றுவது அல்ல.





கங்கா ஸ்நானம் என்று அழைப்பதற்கும் அதுதான் காரணம். அன்றைய தினம் குளிப்பதன் மூலம் நாம் புனிதமடைகிறோம் என்றால், நமது மனதில் இருக்கும் கசடுகள் போய் நாம் தூய்மையடைவதால்தான் அதனை கங்கா ஸ்நானம் என்கிறார்கள்.


நாம் புனிதமாவதற்குத்தான் வெடி வெடிக்கிறோம். அதாவது சில பொருட்களை அழிப்பதற்கு அதனை கொளுத்துகிறோம் அல்லவா அதுபோன்றுதான் நமது மனதில் இருந்த தீய எண்ணங்களை வெடி வெடிப்பது போல் சிதறடித்துவிட வேண்டும் என்பதற்காக வெடி வெடிக்கிறோம்.


ஜோதிட ரத்னா முனைவர் க.ப. வித்யாதரன்
மேலும் வாசிக்க... "தீபாவளி என்பதிலேயே..."



அட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி

நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி இமயமலையில் ரொம்ப சிம்பிளா இருக்காரு...

இங்கு படங்கள் மட்டுமே... 











எப்படி நம்ம எந்திரன் ஹீரோ...
மேலும் வாசிக்க... "அட இவரு நம்ம சூப்பர் ஸ்டார் ரஜினி"

வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!



விஞ்ஞானமும், தொழில்நுட்பமும் எந்த அளவிற்கு வளர்கிறதோ அதற்கேற்ப மோசடி செய்பவர்களும் தங்களது மோசடி முறைகளை மாற்றிக்கொள்கிறார்கள்.

அந்த வகையான மோசடிகளில் ஒன்றுதான் வேலை தருவதாக கூறி வரும் மோசடி இ மெயில்கள்.

வங்கியிலிருந்து கேட்பதாக கூறி வங்கி கணக்கு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்பது, "உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது; அதனை அனுப்பி வைப்பதற்கான கூரியர் செலவு மற்றும் டாக்குமெண்ட் கட்டணமாக இவ்வளவு தொகையை கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் செலுத்துங்கள்..." என்பதுமாதிரியான மெயில்களை அனுப்பிக்கொண்டிருந்தவர்கள், அவை மோசடியானது என்பது தெரியவந்துவிட்டதால், தற்போது தங்களது யுக்தியை மாற்றிக்கொண்டு, வேலை தேடுபவர்களை குறிவைக்கிறார்கள்.

இதுநாள் வரை பேருந்துகளிலும், ரயில்களிலும் பிட் நோட்டீஸ் அடித்து ஒட்டி, அதில் " பிரபல அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களுக்கு படித்த மற்றும் படிக்காத ஆட்கள் தேவை. மாதச் சம்பளம் 10,000 முதல்..." என்று வாயை பிளக்க வைக்கும் தொகையை குறிப்பிட்டு, முகவரி எதையும் தெரிவிக்காமல், செல்போன் எண்ணை மட்டும் தெரிவித்திருப்பார்கள்.

அதைப்பார்த்து ஏமாந்து தொடர்புகொள்பவர்களிடம், ஏதாவது ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரச்சொல்லி, 10,000 சம்பளத்திற்கு 10,000 டெபாசிட் கட்ட வேண்டும், 20,000 என்றால் அதற்கேற்ற தொகை என்று கூறி, லம்பாக ஒரு தொகையை கறந்துகொண்டு கம்பி நீட்டி விடுவார்கள்.

இத்தகைய நபர்கள்தான் இப்பொழுது புது அவதாரம் எடுத்து, தங்களது மோசடிகளை அரங்கேற்ற தொடங்கியுள்ளனர்.

ஏதோ ஒரு வகையில், எப்படியோ இ மெயில் முகவரிகளை திரட்டிக்கொள்ளும் இத்தகைய மோசடி பேர் வழிகள், பிரபலமான கம்பெனி பெயரில் , ஏகப்பட்ட பதவிகளின் பெயர்களை குறிப்பிட்டு, வேலைக்கு ஆட்கள் தேவை என்றும், உங்களுக்கு ஏற்ற வேலைக்கு விண்ணப்பிக்க கல்வி தகுதி சான்று, வேலை அனுபவம் முகவரி அத்தாட்சி, சம்பள பட்டியல் போன்றவற்றை அனுப்புங்கள் என்று கூறி ஒரு போலியான தனிநபர் மெயில் ஐடி கொடுத்திருப்பார்கள்.

கூடவே மிக முக்கியமாக, வேலைக்கான நேர்முக தேர்வுக்கு வருவதற்கு செக்யூரிட்டி டெபாசிட் தொகை கட்ட வேண்டும் என்று கூறி ஒரு தொகை குறிப்பிடப்பட்டிருக்கும். அத்துடன் அதை செலுத்துவதற்கான வங்கி கணக்கும் கொடுக்கப்பட்டிருக்கும்.

அதை உண்மையென நம்பி பணம் போட்டால் அவ்வளவுதான்.பணத்தை எடுத்துக்கொண்டு, அந்த வங்கிக்கணக்கையே "குளோஸ்" செய்துவிட்டு கம்பி நீட்டிவிடுவார்கள்.

பொதுவாகவே இத்தகைய மெயில்கள் மோசடியானவை என்பதை, அதில் காணப்படும் சில பொதுவான ஏமாற்று வேலைகளிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முதலில் பிரபல கம்பெனி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதற்காக, குறிப்பிட்ட பிரபல நிறுவனத்தின் பெயரோடு துணை வார்த்தைகளையும் சேர்த்திருப்பார்கள். 

உதாரணமாக Tata என்பதை " Tata Group of Industries Limited" என்றோ அல்லது "Samsung Electronics India Ltd" என்றோ பெயரில் பொடி வைத்து அனுப்பப்பட்டிருக்கும்.அதை பார்த்து அது மோசடியானது என்று உஷாராகிக் கொள்ளலாம்.

அடுத்ததாக இத்தகைய மெயில்கள், முன்பே குறிப்பிட்டதுபோல் சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் பெயரில் வராமல், தனிநபரின் போலி முகவரியில் இருந்து வந்திருக்கும்.

அடுத்ததாக 100 க்கு 99.99 விழுக்காடு, வேலைக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் எந்த ஒரு நிறுவனமும், விண்ணப்பதாரர்களிடம் நேர்முக தேர்வுக்காக முன் பணம் கட்டுமாறு கோராது. அப்படி கோரினால் அது நிச்சயம் "டுபாக்கூர்" தான் (மிக மிக அரிதான விலக்கு இருக்கலாம்).

ஒருவேளை இது உண்மைதான் என தெரிந்துகொள்ள வேண்டுமெனில் அந்த நிறுவனத்தின் இணைய தளத்திற்கு சென்று, அதன் தொடர்பு முகவரியிலோ அல்லது அந்த நிறுவனத்தின் HR பிரிவையோ தொடர்புகொண்டு மெயில் அனுப்பியதும்,பணம் கட்டக்கோருவதும் உண்மைதானா என்று கேட்டு தெரிந்துகொள்ளலாம்.

மேலும் இதுபோன்று வரும் இமெயில்களில் உள்ள கடித வாசகம், எழுத்து மற்றும் இலக்கண பிழைகளுடன அபத்தமானதாக இருக்கும். அதிலிருந்தும் அந்த மெயில் போலியானது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

அத்துடன் அந்த இமெயிலில் கொடுக்கப்பட்டிருக்கும் நிறுவனத்தின் தொடர்பு முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் நிச்சயம் போலியானதாகவோ அல்லது தவறானதாகவோ இருக்கும்.
உதாரணமாக பெங்களூரு முகவரிக்கு மும்பை தொலைபேசி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

எனவே அடுத்தமுறை இதுபோன்று அதிக சம்பள ஆசை காட்டி வரும் மெயில்களை பார்த்தால், உஷாராகிக் கொள்ளுங்கள் !

நன்றி: tamil webdunia
மேலும் வாசிக்க... "வேலைக்கு அழைக்கும் மோசடி இ மெயில்கள்!"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1