CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை

       மதுரையில் சித்திரைத் திருவிழா வெகு சிறப்பாக நடந்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று 23-04-2013  காலை 8:17 முதல் 8:41-க்குள் மேற்கு வடக்கு ஆடிவீதியில் உள்ள திருகல்யாண மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நன்றி: விகடன்

மேலும் வாசிக்க... "மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் 2013 - சிறப்புப்பார்வை"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12

வணக்கம் வலை நண்பர்களே,
இத்தொடரில் இதுவரை வலைப்பூ துவங்கி பதிவுகளை எழுதி வெளியிடுவது எப்படி என பார்த்தோம். இனி, வலைப்பூவிற்கு மிக முக்கியமான Template, Layout settings பற்றி பாப்போம்.

Template:

மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-12"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11

வணக்கம் வலை நண்பர்களே,
 இனி பதிவு எழுதும் பக்கத்தில் இருக்கும் post settings-இல் Shedule, Permalink, ஆகியவைகளைப் பற்றி பார்ப்போம்.

Shedule:
இதில் இரண்டு வகைகள் உள்ளன.
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-11"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-10

வணக்கம் வலை நண்பர்களே,
இனி பதிவை எப்படி வெளியிடுவது என பார்ப்போமா?

இத்தொடருக்காக பதிவை வெளியிடுவதை விளக்க இணையப்பூங்கா தளத்தில் ஒரு பதிவு எழுதியுள்ளேன். அதன் விளக்க படம் கீழே.

தலைப்பு, பதிவின் சாராம்சம், குறிச்சொற்கள் ஆகியவை சரியாக கொடுக்கப்பட்ட பின்னர் தலைப்பு கட்டத்திற்கு வலப்பக்கம் Publish என்பதை க்ளிக் செய்தால் பதிவு வெளியிடப்படும்.

பதிவை வெளியிடாமல் சேமித்து வைக்க விரும்பினால் Save என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

பதிவை வெளியிடும் முன் அந்த பதிவு வலைப்பூவில் எவ்வாறு தெரியும் என்பதை முன்னோட்டமாக பார்க்க விரும்பினால் Preview என்பதை க்ளிக் செய்யவும்,

பதிவு எழுதிய பக்கத்தை மூட விரும்பினால் Close என்பதை க்ளிக் செய்ய வேண்டும்.

அந்தப் பதிவை Publish - வெளியிட்டால் இணையப்பூங்கா தளத்தில் எவ்வாறு காட்டும் என்பதை கீழே படத்தில் பாருங்கள். நேரடியாக இணையப்பூங்கா தளத்தில் பார்க்க விரும்பினால் இங்கே க்ளிக் செய்யுங்கள்.

நண்பர்களே, பதிவை எழுதி வலைப்பூவில் எவ்வாறு வெளியிடுவது என பார்த்தோம். இந்த பத்தாவது தொடர் வரை நீங்கள் தொடர்ந்து வாசித்து அதன்படி செய்தால் உங்களாலும் புதிய வலைப்பூ துவங்கி பதிவுகளை வெளியிட முடியும். இந்த தொடர் இதோடு முடிந்து விடவில்லை. இன்னும் தொடர்ந்து எழுத நிறைய விஷயங்கள் உள்ளன. எனவே இத்தொடர் இன்னும் வளரும்.

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.

முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள். 
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-10"



வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-9


வணக்கம் வலை நண்பர்களே,

அடுத்து எழுதிய பதிவை வலைப்பூவில் வெளியிடுவதற்கு முன் முக்கியமாக நாம் கவனிக்க வேண்டியது பதிவிற்கான குறிச்சொற்கள் - LABELS. 

குறிச்சொல் - label என்றால் என்ன?
குறிச்சொல் என்பது பதிவிற்கு ஏற்ற சுருக்கமான வார்த்தைகள் தேர்ந்தெடுத்து கொடுப்பது என்றும் சொல்லலாம். இந்த குறிச்சொல் வார்த்தைகள் மூலம் இணையத்தில் தேடும் பொழுது உங்கள் பதிவின் குறிச்சொல் பொருந்தினால் உங்கள் பதிவு அந்த தேடுதலில் காட்டக்கூடிய வாய்ப்பு உள்ளது. அதன் மூலம் உங்கள் வலைப்பூவை அவர்கள் பார்வையிட வாய்ப்பு உள்ளது.

உதாரணமாக, கூகிள் தேடல் பகுதியில் ஜப்பான் சுனாமி என்றும், டயட் சார்ட் என்றும் தேடிப் பாருங்களேன். தமிழ்வாசி தளத்தில் பகிர்ந்த பதிவுகள் தேடுதல் வரிசையில் முதல் மூன்று இடங்களிலேயே காட்டும்.  அதற்கான படங்கள் கீழே:


மேற்கண்ட படத்தில் டயட் சார்ட் என்ற வார்த்தையை கூகிளில் தேடினால் தமிழ்வாசி தளத்தில் வந்த பதிவு முதல் மற்றும் மூன்றாவது பதிவாக காட்டுகிறது. இரண்டாவதும், நான்காவதும் அந்த பதிவை காப்பி செய்தவர்களின் தளத்தை காட்டுகிறது. என்ன செய்ய? காப்பி/பேஸ்ட் செய்பவர்களை நம்மால் தடுக்க இயலாது நண்பர்களே!!!

குறிச்சொல் தருவதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டுவது
1. பதிவிற்கு சம்பந்தமான வார்த்தைகள் தேர்ந்தெடுப்பது முக்கியம்.
2. நீளமாக இல்லாமல் சுருக்கமான வார்த்தைகள் அவசியம்.
3. திரட்டிகளுக்கு (திரட்டிகள் பற்றி பின்னர் ஒரு பாகத்தில் பாப்போம்) ஏற்ப குறிச்சொல் வார்த்தைகள் தேர்ந்தெடுத்தல்அவசியம்.
4. உங்கள் வலைப்பூ சம்பந்தமான வார்த்தைகளும் குறிச்சொல்லாக தரலாம்.
5. தமிழ், ஆங்கிலம் கலந்தும் குறிச்சொற்கள் தரலாம்.

பதிவிற்கான குறிச்சொல்லை எங்கு கொடுப்பது?

மேற்கண்ட படத்தில் பாருங்கள். பதிவு எழுதக் கூடிய பக்கத்தில் வலப்பக்கம் post settings என்ற option இருக்கிறதா? அதில் labels என்ற option இருக்கிறதா? அதுதான் குறிச்சொல் தரும் பகிரும் இடம். label என்பது குறிச்சொல் என்பதற்கான ஆங்கில சொல் அவ்வளவே. அந்தக் கட்டத்தில் சில குறிச்சொற்கள் கொடுத்துள்ளேன். அவை இந்த தொடரின் குறிச்சொற்கள் ஆகும். இதே போல உங்கள் பதிவிற்கும் பொருத்தமான குறிச்சொற்களை கொடுங்கள். 

ஒவ்வொரு பகுதியாக, முடிந்தளவு கூடுதல் விளக்கங்கள் பகிர விரும்புவதால் சில விஷயங்கள் உங்களுக்கு புரியாமல் இருக்கலாம். மேலும் விளக்கம் தேவையெனில் எனது மின்னஞ்சலை admin@tamilvaasi.com தொடர்பு கொள்ளவும்.

முந்தைய பாகங்களுக்கு இங்கே அழுத்துங்கள். 
மேலும் வாசிக்க... "வலைப்பூ துவங்கி எழுத ஆர்வமா? இதோ வழிகாட்டுதல் தொடர், பாகம்-9"

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1