உலகக் கோப்பை போட்டிக்கான இந்திய உத்தேச அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) சனிக்கிழமை அறிவித்துள்ளது.தமிழக வீரர்கள் தினேஷ் கார்த்திக், அஸ்வின், முரளி விஜய் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.ராகுல் திராவிட், இர்பான் பதான் ஆகியோருக்கு உத்தேச அணியில் இடம் கிடைக்கவில்லை. மற்றபடி பெரிய அளவில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை. திராவிட் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்தே ஒருநாள் போட்டிக்கான அணியில் இடம்பெறவில்லை. இர்பான் பதான் கடந்த ஆண்டு பிப்ரவரிக்கு பிறகு அணியில் சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.மும்பையில் சனிக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ கூட்டத்துக்குப் பின் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த் 30 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்தார்.
உத்தேச அணி விவரம்: மகேந்திர சிங் தோனி, வீரேந்திர சேவாக், சச்சின் டெண்டுல்கர், கெüதம் கம்பீர், விராட் கோலி, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, ஹர்பஜன் சிங், ஜாகீர்கான், ஆசிஷ் நெஹ்ரா, ஸ்ரீசாந்த், முனாப் பட்டேல், இஷாந்த் சர்மா, வினய் குமார், முரளி விஜய், ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, அஜிங்க்யா ரெஹானே, சௌரவ் திவாரி, யூசுப் பதான், பார்த்திவ் பட்டேல், அஸ்வின், ரித்திமான் சாஹா, தினேஷ் கார்த்திக், ஷிகார் தவாண், அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, சேதேஷ்வர் புஜாரா, பிரக்யான் ஓஜா, பிரவீண் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இன்றைய பொன்மொழி:
வெற்றி என்பது பெற்று கொள்வது, தோல்வி என்பது கற்று கொள்வது,
முதலில் கற்று கொள்வோம் பிறகு பெற்று கொள்வோம்
இன்றைய விடுகதை:
ஊசி போட்ட வைத்தியர்ஊமை போல போகிறார் – அவர் யார்?
முந்திய பதிவின் விடுகதைக்கான விடை:கொதிக்கும் குளத்தில் குதிப்பான், குண்டுப் பையனாய் மிதப்பான்- அவன் யார்? விடை: பூரி
3 கருத்துரைகள்:
பதினைந்து பேர் கொண்ட அணியை அறிவித்த பின்னரே எதையும் தீர்மானிக்க முடியும்...
@philosophy prabhakaran
சரியா சொன்னீங்க... நம்மளுக்கு தேவை உலகக் கோப்பை வெற்றி.
பொருத்திருந்து பார்ப்போம்