விஜயகாந்த் பேச்சு:
கருணாநிதி இதுவரை ஒரு ஏழை மாணவனுக்கு உயர் கல்வி கொடுத்திருப்பாரா; ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஆக்கியிருப்பாரா; உங்களுக்கு கிடைத்திருக்கும் வேட்பாளர், உங்கள் பிள்ளைகளின் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., கனவுகளை நிறைவேற்றுவார். கொளத்தூர் தொகுதி இனி, கல்வியாளர்கள் தொகுதியாக மாறிவிடும் மகத்தான வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. ஊழல் விவகாரத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க 60க்கும், 63க்கும் பேரம் பேசி, காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். அது குடும்பத்தை காப்பாற்றிக் கொள்ளும் கூட்டணி. அதற்கு கொள்கை கிடையாது.
அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி மக்களுக்கான கூட்டணி. தமிழகத்தை ஊழல் மாநிலமாக மாற்றி கொள்ளை அடித்து வரும் தி.மு.க., கூட்டணியை தோல்வி அடையச் செய்யவும், நமது கூட்டணியை மாபெரும் வெற்றி பெறச் செய்யவும் நாம் ஒற்றுமையாக உழைக்க வேண்டும்.
அ.தி.மு.க.,வுடனான கூட்டணி, ஆட்சியில் பங்கு கேட்பதற்காக வைத்த கூட்டணி இல்லை. மக்கள் நன்மைக்காகவும், ஊழல் ஆட்சியை ஒழிக்கவும் அமைத்த கூட்டணி. என் மானசீகக் குருவான எம்.ஜி.ஆர்., வளர்த்த கட்சியுடன்தான் கூட்டணி வைத்துள்ளேன். தேர்தல் கமிஷன் ஒரு சாராருக்காக செயல்படுகிறது என்று கூறும் தி.மு.க., தலைவருக்கு, தேர்தல் கமிஷனையே ஆட்டி வைக்கும் சக்தி காங்கிரசிடமே உள்ளது என்பது தெரியும். கடந்த முறை நீங்கள் வெற்றி பெற்றதற்கு தேர்தல் கமிஷன் உதவியாக இருந்ததா? கடந்த ஆட்சிக் காலத்தில் முன்னாள் அமைச்சர்கள் மீது வேட்டி, சேலை, சுடுகாட்டு உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டதாக வழக்கு தொடுத்த தி.மு.க., அரசு, அந்த குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டவர்கள் தற்போது தி.மு.க.,வில் இணைந்தவுடன் ஊழல் மறைந்துவிட்டதா? எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று கூறும் அரசு, ஒரு இனமே அழிந்த போது, அமைதியாக இருந்தது. தற்போது எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்றாகிவிட்டது. ஊழல் ஆட்சி ஒழிய, அ.தி.மு.க., கூட்டணி கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும்' என்று பேசினார்.
டிஸ்கி: எனக்கென்னவோ, விஜயகாந்த் போதையில பேசுற மாதிரி தான் தெரியுது.
பிரேமலதா பேச்சு:
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, விஜயகாந்த் ஆகியோருக்கு சினிமாவில் மட்டுமே நடிக்கத் தெரியுமே தவிர நாட்டு மக்களிடம் நடிக்கத் தெரியாது.
ஆனால் திமுக கூட்டணியில் உள்ளவர்கள் நாட்டு மக்களிடம் நன்கு நடிக்கத் தெரிந்தவர்கள். இதனால்தான் கருணாநிதி இது எனக்கு கடைசி தேர்தல் என கூறி ஒவ்வொரு முறையும் தேர்தலில் நிற்கிறார்.
கட்சியில் இருந்து விலகி விடுவதாக கூறுவாறே தவிர விலகமாட்டார். ஆட்சியில் இருக்க வேண்டும் என்பதற்காக எதையும் துணிந்து செய்வார்.
கருணாநிதியின் குடும்பமே கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகம் ஒரு குடும்பத்துக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? அல்லது தமிழக மக்களுக்கு சொந்தமாக இருக்க வேண்டுமா? என வாக்காளர்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.
நாட்டு மக்களுடனும், கடவுளுடனும் தான் கூட்டணி என கூறிய நமது கேப்டன் விஜயகாந்த், அதிமுகவோடு கூட்டணி சேர காரணம் உண்டு.
கேப்டன் விஜயகாந்த தனித்து நின்று போட்டியிட்டு வாக்குகளை பிரித்தால் எளிதாக வெற்றி பெற்று குளிர்காயலாம் என திமுக நினைத்தது. அதனால்தான் திமுகவுக்காக தனது நிலையை மாற்றி அதிமுக கூட்டணியில் சேர்ந்துள்ளார் கேப்டன் விஜயகாந்த்.
நெல்லிக்குப்பத்தில் அமைத்த பஸ் நிலையம் கூட பயன்படவில்லை. பண்ருட்டியில் தேமுதிக வேட்பாளர் சிவக்கொழுந்தை வெற்றி பெற செய்தால் சொந்த செலவில் பெண்கள் கல்லூரி, கிராமப் பகுதியில் மருத்துவ வசதி, சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி வகுப்பு அளித்து இலவச தையல் இயந்திரம் அளிக்கப்படும்.
மாணவர்களுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி, முந்திரி, பலா தொழிற்சாலைகளை நிறுவி வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படும் என்றார் பிரேமலதா.
இன்றைய பொன்மொழி:
மற்றவர்கள் உன்னை புகழ வேண்டும்,உன்னையே நீ புகழ கூடாது.
இன்றைய விடுகதை:
தலையை வெட்ட, வெட்டக் கருப்பு நாக்கை நீட்டுது. அது என்ன?
முந்தைய பதிவிற்கான விடுகதையின் விடை: மிளகாய்
முந்தைய விடுகதையின் பதிவை பார்க்க: நல்வாக்கு நாட்டின் செல்வாக்கு
8 கருத்துரைகள்:
எல்லாம் சரிதான் சார்.இலவசங்களை அள்ளிக் கொடுக்க தயாராக இருக்கிற யாரும் இந்த நாட்டின் கல்வி,பொருளாதாரம்,வேலை வாய்ப்பு,விலைவாசி,வாழ்க்கையின் நிலையற்ற தன்மை போன்ற பல விஷயங்களை நினைத்துப் பார்ப்பது இல்லையே அது ஏன் என்பது இன்னும் விளங்காத புதிராகவே/
எல்லா அரசியவாதிகளும் நன்றாக தான் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி கொள்கின்றனர் . இது எலோருக்கும் பழகி போச்சு .இம் விஜயகாந்த் கல்யாண போட்டோவை பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த உங்களுக்கு நன்றி
இவரும் தேர்ந்த அரசியல் வாதியாக வளர்ந்து வருகிறார். ஜனங்களுக்கு நல்லது செய்தால் யாரானாலும் வரவேறகலாம்.
அவர் சாதாரணமாப் பேசினாலே, போதையில பேசுர மாதிரி தான் இருக்கு பாஸ்!
வீடியோஸ் பகிர்வுக்கு நன்றி....
போதைன்னா என்னங்க?தண்ணி போட்டுகிட்டா நின்று கொண்டு இவ்வளவு நேரம் பேச முடியுமுன்னா இது போதைதான்:)
தமிழக முதல்வர் குரல் கூடத்தான் கர கரன்னு இருக்குது!அப்ப அவருமா!
எனக்கென்னமோ பிரேமலதா பேசுறத விட விஜயகாந்த் பேசுவதுதான் நல்லா கேட்குது!எனக்கு காது மந்தமோ:)