CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - இரண்டு

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg


இனிய  நண்பர்களே!
          வலைச்சரம் ஆசிரியர் சீனா அவர்கள் பேட்டியின் இரண்டாம் பாகம் இது. இப்பேட்டியின் முக்கிய அம்சமான விஷயம் என்னவென்றால் கேள்விகள் உங்கள் மூலமாக கேட்கப்பட்டது தான். பலரும் பல கேள்விகள் கேட்டுள்ளீர்கள். இக்கேள்விகள் அனைத்தும் நீங்கள் கேட்ட தேதியின் அடிப்படையில் வரிசைப் படுத்தப்பட்டுள்ளது.  

முதல் பகுதி இங்கே... வலைச்சரம் ஆசிரியர் சீனா சிறப்புப் பேட்டி - 1 

         கேள்விகள் கேட்ட அனைத்து நண்பர்களுக்கும் சீனா ஐயா அவர்களின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். 


        அனைவரின் கேள்விகளுக்கும் சிறப்பாக பதிலளித்த சீனா ஐயா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.



ம.தி.சுதா; www.mathisutha.blogspot.com
என்னுடைய கேள்வி என்னண்ணா உங்களுக்கு வலைச்சரம் என்ற ஒரு தரமான வலை பதிவை தொடங்கும் ஐடியா எப்படி தோன்றியது? 
  
          வலைச்சரம் காலஞ்சென்ற நண்பர் சிந்தாநதியால்  துவங்கப்பட்டு 11.11.2006  - இல் முதல் இடுகை இடப்பட்டது.
வலைச்சரத்தின் முதல் ஆசிரியராக பொன்ஸ் பொறுப்பேற்றிருக்கிறார். பிறகு பணிச்சுமை காரணமாக சிந்தாநதி ஆசிரியர்கள் குழுவாக பொன்ஸையும்       முத்துலெட்சுமியையும் சேர்த்துக் கொண்டார்.   பிறகு என்னிடம் பொறுப்பாசிரியர் பணி வந்தது.
*************************************************************** 
 
ரஹீம் கஸாலி; http://ragariz.blogspot.com/

ஒரு வாரத்திற்கு வலைச்சரத்தில் ஆசிரியராக பணியாற்ற எதன் அடிப்படையில் பதிவர்களை தேர்ந்தெடுக்கிறீர்கள் என்று அறிந்து கொள்ளலாமா? 
       குறிப்பிட்டுச் சொல்லும் படியாக விதி முறைகள் இல்லை. எல்லோருடைய இடுகைகளையும் படித்துக் கொண்டே போகும் போது, இவர் ஆசிரியப் பொறுப்பேற்க தகுதியானவர் என மனதில் படும் பொழுது அவரை அழைத்து விடுவோம். அவ்வளவுதான். 

***************************************************************
நா.ஜானகிராமன்; http://podhujanam.wordpress.com/
பதிவுகளின் பின்னுட்டத்தில் டெம்ப்ளேட் கமெண்ட்களை (மீ த பர்ஸ்ட், முத வடை, முத வெட்டு, ரைட்டு, இன்ன பிற) போடுபவர்களை தடுக்க என்ன செய்யலாம்? 
        மட்டுறுத்தல் வைக்கலாம். வெளியிடாமல் இருக்கலாம். போனாப்போறாங்களே! போட்டுட்டுப் போறாங்களே!  

இன்னும் 5 வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்?
        பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும். 
 
புதிதாக எழுத வரும் புதுப்பதிவர்களை ஆக்கப்பூர்வமாக உற்சாகப்படுத்தி வழிநடுத்துவதில் பிரபல பதிவர்களின் பங்கு என்ன? (இப்பல்லாம், பதிவர்கள் பிரபலமாய்டாலே அவருக்கென்று ஒரு குழுவை சேர்த்துக்கொண்டு சுருங்கிவிடுகிறார்கள் / புதுப்பதிவர்களின் பதிவுகளுக்கு கமெண்டிடுவதை நேர விரயம் என்று நினைக்கிறார்கள்)
         உண்மை தான் - நேரமின்மை என்பது உண்மையான காரணம். இருப்பினும் எல்லோருடைய இடுகைகளையும் படிப்பவர்கள் அனேகம் பேர். நாம் எழுதும் எழுத்துகள் மற்றவர்களைச் சுண்டி இழுக்க வேண்டும். பிரபல பதிவர்கள் என்று ஒருவரும் பிறப்பது கிடையாது. நட்பு வட்டம் குழுக்கள் - இவை எல்லாம் தவிர்க்க இயலாது. புதுப் பதிவர்களிடையேயும் குழுக்கள் உள்ளனவே!  
***************************************************************
லக்ஷ்மி - echumi; http://www.echumi.blogspot.com/
நான் ப்ளாக்குக்கு புதுசு. கடந்த 5 மாதங்களாகத்தான் பதிவு எழுதி வருகிறேன். வலைச்சரத்தில் என்னை இதுவரை, 4-பேர்கள் அறிமுகம் செய்திருக்கிறார்கள். நானும் நிறைய ப்ளாக் போயி, மத்தவங்க பதிவெல்லாம் படிச்சு பின்னூட்டமும் கொடுத்து வருகிறேன். எல்லாரும் கலக்கலா எழுதராங்க. அவங்களுக்கு முன்னாடி நான் u,k,g.  l,k,g. கூட இல்லை. ஆனாகூட நிறைய நிறைய எழுதனும்னு ஆர்வம் மட்டும் நிறையவே இருக்கு. உங்ககூட அறிமுகமும் இல்லை .இப்பதான் முதல் முதலா பேசரேன். எந்தவிதத்தில் என்ப்ளாக்கை இன்னமும் சிறப்பாக வைக்க
முடியும். தகுந்த ஆலோசனை தருவீர்களா. கம்ப்யூட்டரைப் பற்றியும் அதிகம் தெரியாது. முகம் தெரியாத பல நண்பர்கள் சமயத்தில் தகுந்த ஆலோசனைகள் சொல்கிரார்கள். ப்ளாக் எழுத ஆரம்பித்த பிறகு தான் எனக்கு நல்ல பல நட்புகள் கிடைத்திருக்காங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. பாக்கப்போனா எனக்கு வயது கொஞ்சம் அதிகம் தான். என் சொந்தபந்தங்களே நான் கம்ப்யூட்டரில் எழுதுவதற்கு எகைன்ஸ்டதான் இருக்காங்க. எங்கரேஜ் மெண்டே கிடையாது. என்பதிவுக்கு வரும்
பின்னூட்டம்தான் எனக்கு எனர்ஜி. நான் எழுதுவது என்பக்கம் யாருமே படிச்சுகூட மாட்டாங்க. எனக்கு அதைப்பத்தியெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லைதான். முடிந்தால் டைம் கிடைத்தால் என் ப்ளாக் வந்து என் ப்ளாக் படிச்சு எனக்கு தகுந்த ஆலோசனை சொல்லுங்க
     கலங்க வேண்டாம். - தொடர்பு கொள்க - cheenakay@gmail.com
(9840624293) படிக்கிறேன்.

***************************************************************

குண்டு(ராஜகோபால்); http://enpakkangal-rajagopal.blogspot.com/
வலைபூ வரமாசாபமா?

கூகுள் இலவசமாக அனைவருக்கும் ஒரு இடம் கொடுத்தது நல்லது தான் இதனால் பலர் தமது  படைப்புகள் உலகத்தில் உள்ள அனைவர் பார்வைக்கும் கட்டுபாடுகளின்றி  வழி கிடைக்க செய்தது மற்றும்  நண்பர்கள் வட்டம் பெருக செய்தது  சரி, அது போல  பல ஆபாச தளங்கள் பெருக செய்வதர்க்கும் துணை புரிகிறதே உங்கள் கருத்து என்ன?
       கத்தியின் இருபக்கம் கூர்மையாகத்தான் இருக்கும். பயன்படுத்துபவர்கள் சாக்கிரதையாக பயன் படுத்த வேண்டும். அதே தான் இங்கும் (இரண்டு கேள்விகளுக்கும்)

வலைச்சரத்தில் பன்னிக்குட்டியின் (ராம்சாமி) பின்னூட்ட  சாதனை பற்றி உங்கள் கருத்து?
       பன்னிக்குட்டி ராமசாமி ஒரு விளையாட்டிற்காக - ஏற்கனவே இருந்த ரெகார்ட், பிரேக் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தில் அவரது நண்பர்கள் செய்தது அது. தவறென்று கூற மாட்டேன். தவிர்க்கலாம். இனி தவிர்ப்போம். 
***************************************************************

ஆசியா உமர்; http://asiyaomar.blogspot.com/
குடும்பத்தலைவிகள் பதிவர்களாவது பற்றி உங்கள் கருத்து. அவர்கள் இணையத்தில் நேரங்களைச் செலவழிப்பதால் ஏற்படும் நன்மை தீமை என்ன
       அது அப்பெண்கள் தீர்மானிக்க வேண்டிய நிகழ்வு. பதிவர்களாகி வெற்றிகரமாக நடத்துகிறார்கள். குடும்பச் சுமைகளையும் அவர்கள் தான் தீர்மானிக்க வேண்டும். 


பதிவுலக அரசியல் என்றால் என்ன? தகுதியிருந்தும் பதிவுலக அரசியல் பின்பலம் இருந்தால் தான் பிரபலமாகலாம் என்று சொல்கிறார்களே உண்மையா? இந்த அரசியலில்  சிக்காமல் பிரபலமாவது எப்படி?
       பதிவுலக அரசியல் என்பது என்ன என்று எனக்கும் புரியவில்லை. ஆனால் தவிர்க்க வேண்டும். பிரபலமாவதற்கும் இதற்கும் தொடர்பு கிடையாது 


சமையல் வலைப்பூ வைத்திருப்பவர்களுக்கு தாங்கள் கூறும் ஆலோசனை என்ன? வெஜ்,நான்வெஜ் இருவகையினரையும் திருப்திபடுத்த தனித்தனி வலைப்பூ வைத்திருப்பது நல்லதா?அல்லது ஒரே வலைப்பூவில் இரண்டும் கலந்து கொடுக்கலாமா? தாங்கள் எல்லா மக்களுடன் கலந்து பழகுபவர் என்பதால் இந்த கேள்வி,சுத்த சைவப்பிரியர்களுக்கு ஒரே வலைப்பூவில் இரு வகையான குறிப்புக்கள் கொடுப்பதால் அவர்களின் மனநிலை எவ்வாறு இருக்கும்? அவர்கள் வந்து செல்வதில் தடை ஏற்படுமா?
      சமையல் கலை பற்றி எழுதுபவர்கள் இரண்டையும் கலந்தே எழுதலாம். யார்க்கு எது வேண்டுமோ அவர்கள் அதனை எடுத்துக் கொள்வார்கள்.  வந்து செல்வதில் தடை இருக்காது.

உணவுப் பழக்கத்தில் உங்கள் வரையறை என்ன?
        புரிய வில்லை. உணவுப் பழக்கத்தில் வரையறை என்று ஒன்றும் இல்லை. 


ஒன்றிற்கு மேற்பட்ட  வலைப்பூக்கள்  வைத்துக்கொள்வது பற்றி  தங்கள் கருத்து. எப்பொழுதும் பரபரப்பாக செயல்படும் வலைப்பூவினரை கண்டு ஆச்சரியப்படுவதுண்டு, அவர்களின் வேலைச் சிரமங்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள்? எப்பொழுதும் வலைப்பூவில் இருந்தால் குடும்பத்தையும், தங்களையும் அவர்களால் கவனிக்க முடியுமா?
      எத்தனை வலைப்பூக்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். எழுதும் திறமையும் நேரமும் இருப்பின் செய்யலாம். குடும்பத்தையும் கவனிக்க வேண்டும். திட்ட மிட வேண்டும். 

****************************************************************
 
ரத்தினவேல்; http://rathnavel-natarajan.blogspot.com/
தமிழில் வெளிவரும் வலைப்பதிவுகளில் அதிகம் படிக்கப்படும் 'முதல் பத்து வலைப்பதிவுகள்' எவை என்ற விபரங்கள் அளிக்க வேண்டுகின்றேன்.
      தமிழ் மணத்தில் தற்பொழுது ரேங்க் வருகிறதே!

 ***************************************************************

Speed Master;www.speadsays.blogspot.com
1 Japanese yen = 0.552670994 Indian rupees
1 Vietnamese dong = 0.00217855036 Indian rupees
 நம் பணமதிப்பு அந்த நாடுகளை விட அதிகமாக உள்ளது ஆனால் பொருளாதாரத்தில் நாம் அவர்களை விட பின்தங்கியுள்ளோம். மக்கள் வாழுவதற்கான சிறந்த நாடுகளில் நம்மளை விட பணமதிப்பில் குறைவாக உள்ள வியட்நாம் 5 வது இடத்தில் உள்ளது. யாரேனும் விளக்கவும்?
      இது தனிப்பட்ட முறையில் விவாதிக்கலாம். பல காரணங்கள் உண்டு. ஊழல் முதலான காரணம்.  
 
பன்னிக்குட்டி ராமாசாமி அவர்கள் : ஜப்பானில் 100யென் தான் ஒரு பணம் என கூறினார்கள். அப்படி என்றால் நாம் கூறும் 100 பைசாக்கள் போலதான் அந்த 100யென் மதிப்பா யாரேனும் விளக்கம் கூறுங்கள். 
       இல்லை - யென் என்பது தான் கடைசி ஜப்பானில். ஒரு யென் என்பது இந்திய மதிப்பில் ஐம்பத்து ஐந்து பைசா என நினைக்கிறேன். 

வண்ணங்களுக்கு Colour என்று சொல்லுவோம் ஆனால் கணினியில் COLOR என்றுதான் கூறிகிறோம். ஏன் என்று காரணம் சொல்லவும்?
      ஆங்கிலம் -  அமெரிக்க ஆங்கிலம், பிரிட்டீஷ் ஆங்கிலம் என வேறுபாடுகள் உள்ளன. கலர் என்றால் color என்பதும் colour என்பதும் இந்தியாவில் வண்ணம் என்பதற்கு பயன்படுத்துகிறோம்.  


பெரிய பெரிய நிறுவன்ங்களுக்கு 24 மணி நேரம் மின்சார இணைப்பு கொடுத்து ஏழைகளையும், நடுத்தர மக்களையும் கஷ்டப்படுத்துவது ஏன்?

       இதற்கெல்லாம் ஆயிரம் காரணங்கள் உள்ளன. விவாதிக்க இயலாது. நிறுவனங்களின் தயவு அரசிற்கு வேண்டும்.  


வெயில் அதிகமாக இருக்கும் நம் நாட்டில் சோலர் சிஸ்ட்த்தை குறைந்த பட்சம் பெரிய பணக்கார நிறுவனங்கள் கூட கண்டுகொள்ளாதது ஏன்?
       பலர் பயன்படுத்துகின்றனர். பெரிய அளவில் தொடர்ச்சியாக இல்லை. இதற்கும் பல காரணங்கள் உண்டு.  

***************************************************************

அமைதி அப்பா; www.amaithiappa.blogspot.com
       நான் சமூக சீர்திருத்தம் பற்றி மட்டுமே எழுத விரும்புகிறேன். எனது மகன், எல்லா விஷயங்களையும் எழுது என்கிறான். ஆனால், நான் எப்படி ஆரம்பித்தாலும் சமுக விழிப்புணர்வை விட்டு என்னால் வெளியில் வர முடியவில்லை. மற்ற விஷயங்கள் குறித்துதான் அனைவரும் எழுதுகிறார்களே, நாம் இந்த ஒரு விஷயத்தோடு நிறுத்திக் கொள்வோமென்று முடிவு செய்து விட்டேன். இது சரியா
       இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய செய்தி. தவறென்றோ சரியென்றோ யாரும் கூற இயலாது. 
 
நான்  எழுதுவதை ஒரு சிலர் தவிர படிப்பதில்லை. இருந்தும் ஆளில்லா கடையில் டீ ஆத்துவது போல் எழுதிக் கொண்டிருக்கிறேன். இது எவ்வளவு நாள் சாத்தியமாகும்?
       இது நீங்கள் கொஞ்ச நாட்கள் பல வலைப்பதிவுகளுக்கும் சென்று படித்து மறுமொழி போடுங்கள். அவர்களை உங்கள் வலைப்பூவினிற்கு அழையுங்கள். ஆனால் தொடர்ந்து செய்ய வேண்டாம். முடிந்த வரை தமிழ் மணத்தில் வரும் அத்த்னை பதிவுகளுக்கும் சென்று மறு மொழி இடுங்கள் - தன்னால் உங்கள் வ்லைப்பூவினிற்கு அவர்கள் வருவார்கள். எழுதுவது கொஞ்சம் கவர்வதாக எழுதுங்கள்.   


எந்த மாதிரி கேள்விகள் கேட்டால் நாம் சிறப்பாக பதில் சொல்லலாம் என்று இருந்தீர்கள். அந்த மாதிரியான ஒரு கேள்வியும், அதற்குரிய பதிலையும் வாசகர்களுக்கு தெரிவிப்பீர்களா
       அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.

***************************************************************

C.P. Senthil kumar; www.adrasakka.blogspot.com
நான் கடந்த 6 மாதமாக பார்த்ததில் வலைச்சரத்தில் ஃபிலாசபி பிரபாகரனின் உழைப்பு பிரம்மிக்க வைத்தது. அவருக்கு எதாவது ஸ்பெஷல் கிஃப்ட் கொடுத்தீங்களா?
       வாய் நிறைய வாழ்த்துகளும் மனம் நிறைய பாராட்டுகளூம் தான். 

வலைச்சரம் ஆசிரியர் பணிக்கு எந்த அடிப்படையில் ஆட்களை செலக்ட் பண்றீங்க?
       இரண்டாம் கேள்விக்கான பதில். 


வலைத்தளத்தை அறிமுகப்படுத்தும் படலமே போதும்ங்கற தைரியமான எண்ணம் உங்களுக்கு எப்படி வந்தது?
       முதல் மற்றும் இரண்டாம் கேள்விக்கான பதில். 

***************************************************************


முனைவர் இரா. குணசீலன்; www.gunathamizh.blogspot.com 
தமிழ் வலையுலகில் கல்விப்புலம் சார்ந்தவர்களின் பங்கு  எவ்வாறு உள்ளது?
       அவரவர்கள் அவரவர்கள் துறையில் சிறப்புடன் பணியாற்றுகின்றனர். 
 
ஒரு சிறந்த வலைப்பதிவுக்கு என்ன தகுதிகள் இருக்கவேண்டும்?
(
பார்வையாளர் எண்ணிக்கையா? நிறைய இடுகைகளா? ....????)
        இதற்கென்று தனித் தகுதி கிடையாது. பொதுவாக மறுமொழிகள் / இடுகைகள் / பின் தொடர்பவர்கள் இவைகளை வைத்தும் தமிழ மணத்தின் ரேங்க் படியும் சிறந்த வலைப்பதிவென கூறலாம்.  
 
தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?

        கேள்வி புரியவில்லை. வலையுலகம், இணையத் தொடர்பு உள்ள அனைவருக்கும் செல்கிறது. கொஞ்சம் ஈடுபாடு வேண்டும். தமிழில் எழுத, படிக்க ஆர்வம் வேண்டும். பிளாக் பற்றிக் கொஞ்சம் தெரிந்து கொள்ள வேண்டும். சராசரி மக்கள் என்பவர்கள் யார்? இணையத் தொடர்பு இல்லாதவர்களா? தமிழில் படிக்க ஆரவமில்லாதவர்களா? 

         மதுரைப் பதிவர்கள் கல்லூரிகளில் தமிழ் வலைப்பூக்கள் ( பிளாக் ) பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு வகுப்புகள் எடுக்கிறோம். கல்லூரி அனுமதியுடன் - இரு வகுப்புகள் எடுக்கிறோம். பிளாக் துவங்குவது, தமிழில் எழுதுவது இவை பற்றி வகுப்பெடுக்கிறோம். ஈரோடு பதிவர்கள், திருப்பூர் பதிவர்கள் பல கல்லூரிகளில் வகுப்பெடுக்கிறார்கள். 
(ஆலோசனைகள் வரவேற்கப்படுகின்றன). 
 
***************************************************************
 
பிரபாஷ்கரன்; http://writerprabashkaran.blogspot.com/
இன்றைய வளர்ச்சி என்பதன் மூலம் எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? 
        அறிவியல் வளர்ச்சி - தொழில் நுடப் வளர்ச்சி அனைவருக்கும் கிடைக்கும். அதனை பெறுவதற்கான வசதிகள் உள்ளவர்களுக்கு,
*************************************************************** 
முடிந்தது. 

அப்புறமா ஒரு முக்கியமான விஷயம், பிரபலமான வலைப்பூ ஆசிரியர்களின் பேட்டி நம் தமிழ்வாசியில் அடுத்தடுத்து வலம் வர இருக்கிறது. அவர்களிடமும் கேள்விகள் கேட்கப் போவது நீங்கள் தான் நண்பர்களே... ஒருவர் அதிகபட்சமாக மூன்று கேள்விகள் வரை கேட்கலாம். 
கேள்விகள் வந்து சேரவேண்டிய மின்னஞ்சல்: palsuvaitamil@gmail.com 

அடுத்த  பிரபலம் யார்ன்னு கேட்கறீங்களா, "மதி சுதா" அவர்கள் தான்...


25 கருத்துரைகள்:

எல் கே said... Best Blogger Tips

கேள்வி பதில்கள் அனைத்தும் அருமை

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அருமையான கேள்விகள்... சுவாரஸ்யமான பதில்கள் அருமை..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

அருமையான கேள்விகள்... சுவாரஸ்யமான பதில்கள் அருமை..

செங்கோவி said... Best Blogger Tips

நல்ல கேள்விகள்..பதில்கள்!

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தமிழ் வலையுலகம் இன்னும் சராசரி மக்களுக்கும் சென்றடைய எது
தடையாக உள்ளது?
கேள்வி புரியவில்லை.

செல்போனைப் போல தமிழ் வலைப்பதிவுகளும் அதிகமான மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் என்ன தடையுள்ளது என்றுதான் கேட்டிருக்கிறேன் ஐயா..

Asiya Omar said... Best Blogger Tips

கேள்விகளும் பதில்களும் சுவாரசியம்.

என் கேள்விகளுக்கு பதில் அளித்தமைக்கு மிக்க நன்றி.

அமைதி அப்பா said... Best Blogger Tips

அணைத்து கேள்வி பதில்களும் நன்று.எனது கேள்விகளுக்கு பதிலளித்தமைக்கு நன்றி.
தமிழ்வாசி -பிரகாஷ் அவர்களின் இந்த முயற்சியைப் பாராட்டுகிறேன்.

Unknown said... Best Blogger Tips

ஓகே ஓகே

Geetha6 said... Best Blogger Tips

சூப்பர்

RMS said... Best Blogger Tips

சீர்காழி------->இது நம்ம ஏரியா
http://sirkaliarea.blogspot.com/

cheena (சீனா) said... Best Blogger Tips

அன்பின் குணசீலன்


//செல்போனைப் போல தமிழ் வலைப்பதிவுகளும் அதிகமான மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் என்ன தடையுள்ளது என்றுதான் கேட்டிருக்கிறேன் ஐயா..//

தடை ஒன்றுமில்லை. இணையத் தொடட்ர்பும் கணினித் தொடர்பும் உடைய யார் வேண்டுமானாலும் எளிதில் வலைப்பூ துவங்கலாம். சற்றே செலவாகும் பொழுது போக்குதான் எனினும் - சொந்தத்தில் அடைய இயலாதவர்கள் கணினி மையங்களீல் சென்று பயன் படுத்தலாம். குறைந்த செலவில்.

நல்வாழ்த்துகள் குணசீலன் - நட்புடன் சீனா

Unknown said... Best Blogger Tips

தெளிவான கேள்விகள், அதற்கு நிறைவான பதில்கள்..
அய்யா அவர்களுக்கு எம் நெஞ்சார்ந்த வணக்கங்கள்..

Unknown said... Best Blogger Tips

வலைப்பூ தொடங்கும் எல்லோரும் நிலைத்துநிற்பதில்லையே...ஆசைக்காக வலைப்பூ தொடங்கி தொடர நேரமும் விஷயமும் இல்லாமல் போய் விடுவதால் தான் வலைப்பூக்களின் எண்ணிக்கை இன்னும் மிக அதிக அளவில் உயரவில்லை என்பது எம் கருத்து..

Unknown said... Best Blogger Tips

பகிர்வுக்கு நன்றி நண்பா

நேசமித்ரன். said... Best Blogger Tips

நல்வாழ்த்துகள் குணசீலன் ,சீனா சார் :)

முனைவர் இரா.குணசீலன் said... Best Blogger Tips

தங்கள் கருத்துரைக்கு நன்றி ஐயா

மதுரை சரவணன் said... Best Blogger Tips

பதில்களின் முதிர்ச்சி உங்களை ஒரு பிரபலமான ஆளாக காட்டுகிறது.சீனா அய்யா அவர்களின் தனித்தன்மை பதில்கள் வெளீப்படுத்துகின்றன. வாழ்த்துக்கள்

டக்கால்டி said... Best Blogger Tips

அன்பு நண்பர்களே...
எனது பழைய தளமான HTTP://DAKKALTI.BLOGSPOT.COM யாரோ ஒரு அன்பரால் அழிக்கப் பட்டுவிட்டது. அதை எவ்வளவோ முயற்சித்தும் மீட்க முடியவில்லை. எனவே அனைவரும் தங்களது ஆதரவை தொடர்ந்து http://dagaalti.blogspot.com/
எனும் தளத்துக்கு வந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

நன்றி,
டக்கால்டி.

சிந்தையின் சிதறல்கள் said... Best Blogger Tips

நான் கேள்விகள் கேட்டிருக்கவில்லை ஆனால் என்மனதில் இருந்த பல கேள்விகளுக்கு பதி்ல் கண்டேன் மகிழ்ச்சியே....
நன்றிகள் உரித்தாகட்டும்

CS. Mohan Kumar said... Best Blogger Tips

பலரும் கேள்வி கேட்டதால் அருமையான பல கேள்விகள் கிடைத்தன. சீனா சார் தனக்கே உரித்தான பாணியில் பதில் கூறி உள்ளார். அருமை. தொடர்க

எஸ்.கே said... Best Blogger Tips

கேள்விகளும் பதில்களும் அருமையாக உள்ளன!

ம.தி.சுதா said... Best Blogger Tips

ஐயா என் கேள்விக்கு விளக்கமாக பதிலளித்தமைக்கு மிக்க நன்றிகள்...

ம.தி.சுதா said... Best Blogger Tips

என்னையும் தங்கள் பேட்டிப் பட்டியலில் இணைத்தமைக்கு மிக்க நன்றி சகோதரம்...

Sivakumar said... Best Blogger Tips

//இன்னும் 5 வருஷம் கழிச்சி தமிழ் பதிவுலகம் எப்படி இருக்கும்? பதிவர்களின் எண்ணிக்கை பன்மடங்கு பெருகி இருக்கும். தரமான இடுகைகள் வெளி வரும். ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெறும்//அனைவரின் விருப்பமும் அதுவே. தமிழ்வாசி, சீனா இருவருக்கும் நன்றி.

நிரூபன் said... Best Blogger Tips

வணக்கம் சகோதரம், எனது தாமதமான கருத்துக்களுக்கு மன்னிக்கவும். இந்த வாரம், வாசகர்களின் கேள்விகளுக்கு சீனா ஐயாவின் பதில்கள் சிறப்பாக இருநது. அதிலும் மதுரை, ஈரோடு போன்ற இடங்களில் பாடசாலைகள் மூலமாக வலைப்பதிவு பற்றி அறிமுகம் கொடுப்பதும் அறிந்து கொண்டேன். இம் முயற்சி வரவேற்கத்தக்கதே.

தனது பொன்னான நேரத்தை எமக்காக ஒதுக்கிப் பதில்களை வழங்கிய சீனா ஐயாவிற்கும், அவரைப் எங்களுக்காக, வலைப் பதிவின் மூலமாக பேட்டி கண்ட உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களின் முயற்சி பாராட்டுதற்குரியது!
நன்றிகள் சகோதரம்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1