நம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது.. அதிலும், நாலணா, ஐம்பது பைசா, இருவது பைசா, பாத்து பைசா போன்ற நாணயங்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. அப்படியே அந்த நாணயங்களை கடைகளில் கொடுத்தாலும் அவற்றை வாங்குவதில்லை, மேலும் அவை செல்லாக் காசுகள் என்றும் கூறுகின்றார்கள்.
மேலும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நோட்டுகளை பார்ப்பதும் இக்காலத்தில் அரிதாகவே உள்ளது. அப்படியே இருந்தாலும் கிழிந்த நோட்டுகளே கிடைக்கின்றன. வங்கிகளிலும் கூட இந்த ருபாய் நோட்டுகள் அரிதே.
வருங் காலத்தில் நம் சந்ததியினர் நாணயங்கள் என்றால் என்ன? எப்படி இருக்கும்? எனக் கேட்டால் நாம் இப்படித்தான் இருக்கும் என்று சொல்வதற்கு நம்மிடம் ஒரு நாணயங்கள் கூட இருக்காது. எனவே இன்றிலிருந்து நமக்கு கிடைக்கும் நாணயங்களை சேகரித்து வைக்கும் பழக்கத்தை கற்றுக் கொள்வோம்.
உங்களுக்காக இந்தியாவில் புழக்கத்தில் இருந்த நாணயங்களின் படங்கள் தொகுப்பாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இப்படங்களையாவது சேகரித்து வையுங்களேன்.
பத்து பைசா, இருபத்தைந்து பைசா / நான்கு அண, ஐம்பது பைசா / எட்டு அணா, ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், பத்து ருபாய் நாணயங்கள் படங்களாக தொகுக்கப்பட்டுள்ளது.
படங்களின் எண்ணிக்கை கொஞ்சம் அதிகமாத் தான் இருக்கும், பொறுமையா பாருங்க,
பத்து பைசா நாணயங்கள்
இருபத்தைந்து பைசா / நான்கு அணா நாணயங்கள்
ஐம்பது பைசா / எட்டு அணா நாணயங்கள்
ஒரு ரூபாய் நாணயங்கள்
இரண்டு ரூபாய் நாணயங்கள்
ஐந்து ரூபாய் நாணயங்கள்
பத்து ருபாய் நாணயங்கள்
வலைச்சரத்தில் பிசியாக இருப்பதால் இன்றும் மீள்பதிவு....
12 கருத்துரைகள்:
வருங் காலத்தில் நம் சந்ததியினர் நாணயங்கள் என்றால் என்ன? எப்படி இருக்கும்?//
வணக்கம் சகோ, என்னைப் பொறுத்த வரை, இது புதுப் பதிவே, இந்தியாவின் நாணயங்கள் பற்றிய வரலாற்று ரீதியான தொகுப்பினை அறிந்தேன். இதே போல நோட்டுக்களையும் தொகுத்தால் நன்றாக இருக்குமலாவா. அதனையும் செய்வீர்கள் என நினைக்கிறேன். இன்னொரு விடயம், நம்ம நாட்டுப் பொருளாதார அடிப்படையில் நாணயங்களைச் சேகரிப்பதென்றால் அதிக பணம் முடியும். ஏன் தெரியுமா?
நம்ம நாட்டின் ஐயாயிரம் ரூபா நோட்டும் அறிமுகப்படுத்தி விட்டார்களல்லாவா.

அன்பின் பிரகாஷ்
மீள் பதிவு - ம்ம்ம் - சில சமயங்களில் தவிர்க்க இயலாது. நல்லதொரு இடுகை நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா.
உண்டியல் திறந்து காசுகளைப் பார்த்த உணர்வு. பகிர்வுக்கு நன்றி. பாராட்டுக்கள்.
நடக்கட்டும்..நடக்கட்டும்!
நல்ல தொகுப்பு
செல்வி ஜெ.ஜெயலலிதா பற்றி சிறு குறிப்புகள்
http://speedsays.blogspot.com/2011/04/blog-post_16.html
idukku romba kastappatu irukkinga pola
கலக்கல் பதிவு..
//, என்னைப் பொறுத்த வரை, இது புதுப் பதிவே, இந்தியாவின் நாணயங்கள் பற்றிய வரலாற்று ரீதியான தொகுப்பினை அறிந்தேன்.//
இப்போது புழக்கத்தில் இல்லை என்றாலும், எப்போதும் காசே தான் கடவுளடா?
ஓல்ட் ஈஸ் கோல்ட்..
கலக்கிட்டய்யா மாப்ள!
//நம் நாட்டில் உபயோகப்படுத்தும் நாணயங்கள் படிப்படியாக குறைந்து வருகிறது..//
நாணயம் உள்ள தலைவர்களும்தான்..