CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



மதுரை அழகர் எதிர்சேவை - படங்களுடன்

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg
சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அழகர் வைகை ஆற்றில் இருக்கும் விழா நாளை நடக்கிறது. இதற்கு முன்னதாக இன்று அழகருக்கு எதிர் சேவை நடக்கிறது.

கடந்த 5ம் தேதி அழகர்கோவிலில் சித்திரை விழா துவங்கியது. மறுநாள் 6ம் தேதி அங்கு வரதராஜ பெருமாளுக்கு பூஜைகள் நடந்தன. இதையடுத்து நேற்று மாலை 6 மணிக்கு பட்டுடுத்தி, கையில் வேல்கம்புடன் கள்ளழகர் வேடம் கொண்டு அழகர்கோவிலில் இருந்து மதுரை நோக்கி கிளம்பினார்.



காவல் தெய்வமான கருப்பண்ணசாமி விற்றிருக்கும் கொண்டப்பநாயக்கர் மண்டபத்தில் எழுந்தருளிய கள்ளழகர் 7 மணிக்கு தங்கப்பல்லக்கில் பக்தர்கள் புடைசூழ புறப்பட்டார். பொய்கைகரைப்பட்டி, கள்ளக்குறிச்சி, அப்பன் திருப்பதி வழியாக பக்தர்களுக்கு அருள்பாலித்த கள்ளழகரை பக்தர்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது.

இன்று மதுரை வந்த அவருக்கு காலை 6 மணிக்கு மூன்றுமாவடியில் பக்தர்களின் எதிர்சேவை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் எழுந்தருளும் கள்ளழகர் மாலையில் தல்லாகுளம் அவுட்போஸ்ட்டில் எழுந்தருளுகிறார். அங்கும் அவருக்கு எதிர்சேவை நடத்தப்பட இருக்கிறது.

பின்ன்ர் அவர் இரவு தல்லாகுளம் பெருமாள் கோயிலை வந்தடைகிறார். அங்கு இரவு 12 மணிக்கு திருமஞ்சனம் நடக்கிறது.

நாளை ஆண்டாள் சூடிக் கொடுத்த திருமாலையை ஏற்றுக்கொண்டு தங்கக்குதிரை வாகனத்தில் ஆயிரம் பொன் சப்பரத்தில் மதுரை கருப்பண சுவாமி கோவிலில் இருந்து அதிகாலை 3 மணிக்கு வைகை ஆற்றுக்கு புறப்படும் கள்ளழகர் காலை 7 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார்.

பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மதியம் 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் நடக்கும் அங்கப்பிரதட்சணம் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். தொடர்ந்து வண்டியூர் செல்லும் கள்ளழகர் அங்குள்ள வீரராகவ பெருமாள் கோவிலில் இரவு 11 மணிக்கு எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.

நாளை மறுநாள் மே 10ம் தேதி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிக்கிறார். 11ம் தேதி இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. 12ம் தேதி கள்ளழகர் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுகிறார்.


எங்கள் பகுதியில் அழகர் வலம் வந்தபோது எடுத்த படங்கள்:





அழகர்  எதிர் சேவை (படங்கள் - Media TV)

















20 கருத்துரைகள்:

செங்கோவி said... Best Blogger Tips

பிரசாதம் எனக்கே!

Unknown said... Best Blogger Tips

நன்றிங்க!

Ram said... Best Blogger Tips

அட அருமையான பதிவு மக்கா.. படங்கள இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. இருந்தாலும் பகிர்ந்தமைக்கு நன்றி..

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

படங்கள் அருமையா இருக்கு...

Ram said... Best Blogger Tips

உங்கட ஏரியாவில் அழகர் தான் வந்தாருன்னு நான் எப்படி நம்புறது.. அதில் தான் அழகரே தெரியலையே.!! கள்ள ஆட்டம் ஆடாதீங்க.!! ஹி ஹி

பிரபாஷ்கரன் said... Best Blogger Tips

உடனடியாக up செய்திருகிறீர்கள் நாளை அழகர் ஆற்றில் இறங்கும் படத்தையும் விரைவாக எதிர்பார்க்கிறோம்

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@செங்கோவி
எடுத்துக்க..வடை தான் பிரசாதமே

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@விக்கி உலகம்
OK...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்

சரி...சரி... இந்த படங்கள எடுக்றதே பெரிய விஷயம் மக்கா

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@MANO நாஞ்சில் மனோ

தாங்க்ஸ் மனோ..

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@தம்பி கூர்மதியன்
///உங்கட ஏரியாவில் அழகர் தான் வந்தாருன்னு நான் எப்படி நம்புறது.. அதில் தான் அழகரே தெரியலையே.!! கள்ள ஆட்டம் ஆடாதீங்க.!! ஹி ஹி///

யோவ் நான்தான் சொல்றேனுல்ல... நம்பி தான் ஆகணும்...

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@பிரபாஷ்கரன்
///உடனடியாக up செய்திருகிறீர்கள் நாளை அழகர் ஆற்றில் இறங்கும் படத்தையும் விரைவாக எதிர்பார்க்கிறோம்///

முயற்சி செய்கிறேன்

நிரூபன் said... Best Blogger Tips

போட்டோக்களும், அழகரின் எதிர்ச் சேவை, ஆற்றில் இறங்கும் வைபவம் பற்றிய வர்ணனைகளும் மதுரை அழகரைத் தரிசிக்க வேண்டும் எனும் எண்ணத்தை அதிகரிக்கிறது சகோ,

நிரூபன் said... Best Blogger Tips

தங்கள் பொன்னான ஓட்டை எனக்கு அளித்து இந்த பதிவை வெற்றி பெற செய்யும் ஒவ்வொருவருக்கும் அடுத்த பதிவு இலவசம்...இலவசம்...//

பதிவுலகத்திலும் இலவசமா....

ஹி..ஹி....

Rathnavel Natarajan said... Best Blogger Tips

நல்ல பதிவு. படங்கள் நிறைய. இந்த மாதிரி நல்ல முயற்சிகளாக செய்யுங்கள். நடிகைகள் படங்களையெல்லாம் paththirikkaararkaL பார்த்துக் கொள்வார்கள்.வாழ்த்துக்கள்

maruthu said... Best Blogger Tips

சின்னாலப்பட்டியரே ! படங்கள் நன்றாக இருந்தது . மேலும் தொடர வாழ்த்துக்கள் .

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

கலக்கல் படங்கள்..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

19..

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

20 -- பிரசாதம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said... Best Blogger Tips

பயங்கரமா வேல பாக்குறீங்களே தம்பி! வலைச்சரம் ஆசிரியருக்கு வாழ்த்துகள்.

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1