உணவுகள் தயாரிப்பில் உயர்ந்த தொழில்நுட்பம், நவீன வசதிகள் எவ்வளவு தான் வந்தாலும் நம்ம மக்கள் விலை குறைந்த உணவு பொருட்களையே நாடி செல்கிறார்கள். விலை குறைந்த உணவுகளை உட்கொள்வதால் பலவித நோய்களை விலை கொடுத்து வாங்குகிறார்கள். இந்த நோய்களுக்கு ஆகும் மருத்துவ செலவோ மிக அதிகம்.
சரி இப்ப என்ன சொல்ல வர்றேன்னு நினைக்கிறிங்களா?
விலை குறைந்த உணவுகளில் தரம் எந்த அளவுக்கு இருக்கும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? நம் உயிரையே எடுக்கும் அளவுக்கு ஸ்லோ பாய்சனாக இருக்கும். ஆமாம், ஏனெனில் விலை குறைந்த, ரோட்டோர உணவுகளில் கலருக்காக சேர்க்கப்படும் சாய பொடிகள், தரம் குறைந்த மசாலாக்கள், பல முறை பயன்படுத்திய எண்ணெய்கள் என இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்.
சென்னையில் தரம் குறைந்த உணவு பொருட்கள் தெரு ஓரங்களில் விற்கப்படுவதாக (சென்னையில மட்டுமா?) சுகாதார துறைக்கு புகார் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்ததால் ரெய்டு நடத்தியிருக்கார்கள். இதில் அதிகம் சிக்கிய பொருட்களாக ஐஸ்கிரீம் வகைகளும், குளிர்பானங்கள், பாக்கிங் உணவுகளும் தான். சுமார் ரெண்டு டன் எடையுள்ள தரம் குறைந்த பொருட்கள் பிடிபட்டுள்ளன.
புரூட் மிச்சர் என ஒரு ஜூஸ் எங்கள் ஊரில் பேமஸ். எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?
எல்லா வித அழுகிய பழங்களை வெறும் கைகளால் பிசைந்து, தரம் குறைந்த தண்ணீர் சேர்த்து, சுவையை கூட்ட எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப் படுகிறது. மேலும் சுகாதாரமற்ற முறையில் தயாரித்த ஐஸ் கட்டிகள் உபயோகித்து குளிர வைக்கப்படுகிறது.மேலும் முதல் நாள் மீந்து போன ஜூஸ் களை புதிய ஜூஸ் களுடன் கலப்பதும் நடக்கிறது. இந்த பழ ஜூஸை நாம் அருந்துவதால் முதலில் இருமல் சளி என ஆரம்பித்து புட் பாய்சனாக மாறி பல நாட்கள் டாக்டரை பார்க்க வைக்கிறது. ஒரு பத்து ருபாய் புருட் மிச்சருக்கு ஆசைப்பட்டு பல ஆயிரங்கள் செலவு செய்ய வேண்டி வருகிறது.
இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் வகைகள் தான். வென்னிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ, காசாலட், என பலவித சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்க படுகிறது. இந்த விதவிதமான பிளேவர்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா? கலருக்காக சாய ஆசிட்களும், சுவைக்காக தரம் குறைந்த ஜெல்லி, ஜாம் என கண்ணை கவரும் பொருட்களும் சேர்க்கப்படுகிறது. இதனால் கான்சர் முதல் மஞ்சள்காமாலை, டைபாய்டு என உடலை பாதிக்கும் நோய்களின் பட்டியல் நீளுகிறது.
நம்ம ஏதாவது பொருட்கள் வாங்கனும்னு கடைக்கு போறோம். நம்ம வீட்டுல இருந்து அந்த கடை இருக்கும் இடம் வரை கொஞ்சம் ரோட்டோரத்தில் பாருங்களேன். ஒவ்வொரு போஸ்ட் மரத்துக்கும் ஒரு தள்ளுவண்டி கடை இருக்கும். ஒவ்வொரு கடையிலும் ஈ மொய்க்கிற மாதிரி மக்கள் கூட்டம் இருக்கும். அப்படி மொய்க்க அங்க தரமான உணவு பண்டங்களா இருக்கும்? இல்லை. விலை குறைவாக இருப்பதே அந்த மொய்ப்புக்கு காரணம்.
வடை, பஜ்ஜி, போண்டா எல்லாமே ஒரு ருபாய் தான், இந்த குறைவான விலைக்கு அடக்கம் ரொம்ப குறைவு. ஆமாம், ரேசன் பருப்பு, பல முறை உபயோகிக்கப்பட்ட எண்ணெய்கள், என இன்னும் நிறைய சொல்லலாம். பத்து ரூபாய்க்கு வாங்கினால் வீட்டில் எல்லோருக்கும் கிடைக்குமே. நல்ல தரமான கடைகளில் விலை ஐந்து முதல் கிடைக்கும். அங்கே வாங்கினால் நம் வரவு செலவுக்கு கையை கடிக்கும். நமது இந்த நினைப்பே ரோட்டோர கடைகளுக்கு முதலீடு.
தரமான உணவை நாடி சென்றோமானால் நம் ஆரோக்கியம் குறையாது. விலையை பார்த்தோமானால் டாக்டரிடம் விலை போக வேண்டி வரும்.
58 கருத்துரைகள்:
/வடை, பஜ்ஜி, போண்டா எல்லாமே ஒரு ருபாய் தான்,இல்ல ரெண்டு ருபாய்
அடடடா வடை போச்சே...
போண்டா போச்சே...
மாப்ள நல்ல விழிப்புணர்வு பதிவுய்யா...தொடரட்டும் உன் பணி!
பஜ்ஜி போச்சே...
இவ்வளவுச் சொல்லியும் இந்த மனோ பாரு வடை கேக்றாறு...
// சென்னையில் தரம் குறைந்த உணவு பொருட்கள் தெரு ஓரங்களில் விற்கப்படுவதாக (சென்னையில மட்டுமா?) சுகாதார துறைக்கு புகார் அடுக்கடுக்காக வந்து கொண்டே இருந்ததால் ரெய்டு நடத்தியிருக்கார்கள். //
என்னய்யா, உணவு உலகம் இப்பமே ரெய்டு வாராராம்....
//எல்லா வித அழுகிய பழங்களை வெறும் கைகளால் பிசைந்து, தரம் குறைந்த தண்ணீர் சேர்த்து, சுவையை கூட்ட எசன்ஸ் சேர்த்து தயாரிக்கப் படுகிறது.//
சரிதான் மக்கா நானும் பார்த்துருக்கேன்....
புரூட் மிக்சர் உண்மையில் அப்படித்தான் நடக்கிறது...
பயன்படுத்தும் எதாவது ஒரு பழத்தில் குறை இருந்தாலும் அந்த அது அருந்துவருக்கு பெரிய தீங்காக ஆகிவிடும்..
இந்த காலத்திற்கு ஏற்ற பதிவு...
//ஒவ்வொரு கடையிலும் ஈ மொய்க்கிற மாதிரி மக்கள் கூட்டம் இருக்கும்.//
அங்கே சாப்பாட்டு மேல ஈ'யும் உக்காந்துட்டு இருக்கும்....
//தரமான உணவை நாடி சென்றோமானால் நம் ஆரோக்கியம் குறையாது. விலையை பார்த்தோமானால் டாக்டரிடம் விலை போக வேண்டி வரும்.///
ரிப்பீட்டேய்.....
//கவிதை வீதி # சௌந்தர் said...
இவ்வளவுச் சொல்லியும் இந்த மனோ பாரு வடை கேக்றாறு...///
உமக்கும் கிடைக்கலை என்கிற கடுப்பா ஹே ஹே ஹே ஹே ஹே.....
விழிப்புணர்வு பதிவு ...
ஆம் உணவுப்பொருட்கள் சுகாதாரமானதாக இருக்க வேண்டியது அவசியம்.
காலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு பதிவு ..
வலைப் பதிவில் வடை கேட்போருக்கான பதிவென்று ஆவலுடன் ஓடி வந்தேன், ஏமாற்றி விட்டீர்களே சகா.
(சென்னையில மட்டுமா?)//
நம்ம ஊரிலும் தான் சகோ...
ஹி...ஹி...
புரூட் மிச்சர் என ஒரு ஜூஸ் எங்கள் ஊரில் பேமஸ். எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா?//
என்ன அழுகின புரூட்ஸிலையா?
ஹி...
நம்ம ஊரிலை ஒரு கடைக்குப் போனேன்.
பரோட்டா, ரொட்டி எப்பூடிச் சுட்டார் என்று தெரியுமா?
நெற்றியில் இருந்து வழியும் வியர்வையை லுங்கியில் துடைத்து விட்டு, கையால் மாப் பிசைந்து ரொட்டி குழைத்தார்...
அவ்..........
எல்லா வித அழுகிய பழங்களை வெறும் கைகளால் பிசைந்து//
நினைக்கவே வாந்தி வருதய்யா..
ஆரோக்கியமான உணவுகளை உண்பதற்கேற்ற தகவல்.
நாம்லாம் எத்தனைதான் விழிப்புணர்வு
பதிவு போட்டாலும் இந்தரோட்டோரக்கடைகளில் கூட்டம்
குரைவதே இல்லியே?
////இன்றைய குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் வகைகள் தான். வென்னிலா, ஸ்ட்ராபெரி, சாக்லேட், மேங்கோ, காசாலட், என பலவித சுவைகளில் ஐஸ்கிரீம்கள் தயாரிக்க படுகிறது. இந்த விதவிதமான பிளேவர்கள் எப்படி தயாரிக்கப்படுகிறது என தெரியுமா? கலருக்காக சாய ஆசிட்களும், சுவைக்காக தரம் குறைந்த ஜெல்லி, ஜாம் என கண்ணை கவரும் பொருட்களும் சேர்க்கப்படுகிறது/// விலைப்பட வேண்டும் என்றால் விசத்தை கூட கலப்பார்கள்.. நல்ல பதிவு நண்பரே
நல்ல பதிவு விலை குறைவு நம் ஆய்ளையும் குறைக்கும்..
தேவையான பதிவு,
வைத்தியனுக்கு கொடுப்பதை விட, வணிகனுக்கு கொடுக்கலாம் என்பது தமிழ் சொல்வழக்கு.
நானும் ஏற்கனவே அனுபவப்பட்டு விட்டதால் இப்போதெல்லாம் சாலையோர கடைகளை தவிர்க்கிறேன்.
//ஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!//ஆமா, ஏன் வாங்கிக் கொடுக்கப் போறீங்களா?
மிருகம் படத்தில் வரும் ஆதிக் கணக்கா - எனக்கு ஒன்னும் வராது என்று சொல்வதைப் போலவே.. கண்டதையும் தின்றுவிட்டு நான் வைரம் பாஞ்சக் கட்டைனு சொன்னவன் எல்லாம் ஒன்னு மருத்துவமனைக் கட்டிலில் கிடக்கிறான் - இல்லை கட்டையில கிடக்கிறான் .............. என்னப் பண்ண >
அது சரி இன்னுமா ஒரு ரூபாய்க்கு பஜ்ஜி, வடைக் கிடைக்குது, கொஞ்சம் இடத்தைச் சொல்லுகிறீர்களா? இவ்ளோ சீப்பா கிடைக்குதுனா விடுவோமா.. ( தமிழேண்டா )
@பிரபாஷ்கரன்
/வடை, பஜ்ஜி, போண்டா எல்லாமே ஒரு ருபாய் தான்,இல்ல ரெண்டு ருபாய்>>>
நான் சொல்றது ஒரு ருபாய் குட்டி வடை, போண்டா வகைகளை
@MANO நாஞ்சில் மனோஅடடடா வடை போச்சே...>>>
இனி வடை சாப்பிடுறதை குறச்சிக்காங்க
@விக்கி உலகம்மாப்ள நல்ல விழிப்புணர்வு பதிவுய்யா...தொடரட்டும் உன் பணி!>>>
மாம்ஸ், உங்க ஊர்ல உணவுகள் தரமா இருக்குமா?
# கவிதை வீதி # சௌந்தர்,
இவ்வளவுச் சொல்லியும் இந்த மனோ பாரு வடை கேக்றாறு...>>>>
விடுப்பா, மனோ வடைக்காக பொறந்தவர். அப்படித்தான் கேட்பார்
@இராஜராஜேஸ்வரிகாலத்திற்கு ஏற்ற விழிப்புணர்வு பதிவு ..>>>>
ஆமாங்க ராஜேஸ்வரி
@நிரூபன்சென்னையில மட்டுமா?)//
நம்ம ஊரிலும் தான் சகோ...
ஹி...ஹி...>>>>>
அப்படியா? உலகமே அப்படிதான் போல
@Lakshmiநாம்லாம் எத்தனைதான் விழிப்புணர்வு
பதிவு போட்டாலும் இந்தரோட்டோரக்கடைகளில் கூட்டம்
குரைவதே இல்லியே?>>>
அங்க விலை குறைவு, காத்திருக்க வேண்டியது இல்லை
@கந்தசாமி.விலைப்பட வேண்டும் என்றால் விசத்தை கூட கலப்பார்கள்.. நல்ல பதிவு நண்பரே>>>>
விஷத்திற்கு இவை வேறு பெயர்கள் நண்பரே
@மணி (ஆயிரத்தில் ஒருவன்)நல்ல பதிவு விலை குறைவு நம் ஆய்ளையும் குறைக்கும்..>>>> சொல்லி தான் தெரியனுமா
@FOODஎன்ன இன்னைக்கு நம்ம மேட்டருல கை வைச்சிட்டீங்க!
மிக அருமையாக தொகுத்துள்ளீர்கள், நண்பரே!>>>>
நீங்க ரைடு பண்ணி நிறைய வடை சாப்டிருப்பிங்களே
@பாரத்... பாரதி...வைத்தியனுக்கு கொடுப்பதை விட, வணிகனுக்கு கொடுக்கலாம் என்பது தமிழ் சொல்வழக்கு.
நானும் ஏற்கனவே அனுபவப்பட்டு விட்டதால் இப்போதெல்லாம் சாலையோர கடைகளை தவிர்க்கிறேன்.>>>>
நல பாலிஸி. ஹி..ஹி...
@செங்கோவிஒரு ருபாய் வடை, பஜ்ஜி சாப்பிடுபவரா நீங்கள்?!//ஆமா, ஏன் வாங்கிக் கொடுக்கப் போறீங்களா?>>>
நம்ம ஊருக்கு வாங்க நிறைய வாங்கி தரேன்
@இக்பால் செல்வன்அது சரி இன்னுமா ஒரு ரூபாய்க்கு பஜ்ஜி, வடைக் கிடைக்குது, கொஞ்சம் இடத்தைச் சொல்லுகிறீர்களா? இவ்ளோ சீப்பா கிடைக்குதுனா விடுவோமா.. ( தமிழேண்டா )>>>>
வடை சைஸ் சின்னதா இருக்கும், கோலி குண்டு சைஸில்
அன்பின் பிரகாஷ் - சிந்தனை நன்று - தவிர்க்க வேண்டும் இக்கடைகளை. சுகாதாரத் துறை எவ்வளவு தான் நடவடிக்கை எடுத்தாலும் இக்கடைகள் விலை குறைவு காரணமாக ஏழை மக்களால் நாடப்படுகின்றன. என்ன செய்வது ... நல்வாழ்த்துகள் பிரகாஷ் - நட்புடன் சீனா
எல்லாம் ஓகே நண்பா ஆனா காசு இல்லாதவங்க என்ன பண்ணுவாங்க?இதை விட்டா வேற வழி இல்ல..மதுரையில் ராமு என்பவர் ஆறு ரூபாய்க்கு புல் மீல்ஸ் போடுற மாதிரி எல்லாரும் இருப்பாங்களா?
அப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...தாமதத்துக்கு மன்னிக்கவும்
சமீபத்தில் சென்னையில் ஒரு டீக்கடையில் ஒரு ரூபாய்க்கு வடை, பஜ்ஜி கொடுத்தார்கள்...எப்படி இவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகுதுன்னு நினைச்சேன்....இப்போதுதான் விஷயம் புரிகிறது...
மிகச்சிறந்த பதிவு...
அடப்பாவிகளா
ராயப்பேட்டையில் ஒரு கடையில் காலைமுதல் மாலை வரை வடை, பஜ்ஜி, போண்டா
வியாபாரம் ஜோராக நடக்கும். விலை முன்பு ஒரு ரூபாயாகத்தான் இருந்தது. சமீபத்தில்தான்
இரண்டு ரூபாயாக மாற்றிவிட்டார்கள். சில ஓட்டல்காரர்கள்கூட இங்கு வந்து
வாங்கிச்செல்வதை பார்த்திருக்கிறேன். (இங்கு வாங்கி அங்கே அதிக விலைக்கு விற்பார்களோ?)
பயனுள்ள பகிர்வு வாழ்த்துக்கள்
வடை நம்ம கலாச்சாரத்தோட ஐக்கியமான ஒன்று.. உதாரணம்.. பாட்டி சுட்ட வடை கதை.. ம்ம்.. திருந்தட்டும் சிலராவது இனி..
நன்றி பிரகாஷ்.. :)
http://karadipommai.blogspot.com/
இப்படியும் கூட பதிவுலகம் பக்கம் நடக்குதா?... வியப்பாக உள்ளது...ஒரு பின்னோட்டத்திற்காக ஒருவர் இத்தனை மெனக்கெடுவாரா சகோ....உங்கள் திறமை வியக்கவைக்கிறது....நமக்கான கருத்தை நயமாகச் சொல்வோம்......முடிந்தவரை அனைவரோடும் நட்போடு இருப்போம்....இல்லையேல் நாசுக்காய் நகல்வோம்..பதிவுலகை முடிந்தவரை நலமாக வைப்போம்.சகோ உன் உழைப்புக்கும், மெனக்கெடலுக்கும் வாழ்த்துக்கள்....அதோடு உன் 50 பதிவுக்கும் வாழ்த்துக்கள் சகோ....
@டக்கால்டிஅப்புறம் இன்னொரு முக்கியமான விஷயம்...வலைச்சரத்தில் என்னை அறிமுகப்படுத்தியதற்கு மிக்க நன்றி...தாமதத்துக்கு மன்னிக்கவும்>>>>
ஓகே....ஓகே..
@ரஹீம் கஸாலிசமீபத்தில் சென்னையில் ஒரு டீக்கடையில் ஒரு ரூபாய்க்கு வடை, பஜ்ஜி கொடுத்தார்கள்...எப்படி இவர்களுக்கு மட்டும் கட்டுபடியாகுதுன்னு நினைச்சேன்....இப்போதுதான் விஷயம் புரிகிற>>>>>>
எல்லா ஊரிலும் இப்படிதான் நண்பா
@கே.ஆர்.பி.செந்தில்மிகச்சிறந்த பதிவு...>>>>
அண்ணே வாங்க.....
@சி.பி.செந்தில்குமார்அடப்பாவிகளா>>>>>
ஐயய்யோ...சி.பி. என்னாச்சு
@குடந்தை அன்புமணி(இங்கு வாங்கி அங்கே அதிக விலைக்கு விற்பார்களோ?)>>>>>>
இல்ல பின்ன....
@Speed Master
தாங்க்ஸ் ஸ்பீட்
@Lali
ம்ம்ம்....பார்க்கலாம்.
@ரேவா ரேவா, பதிவு மாறி கமென்ட் போட்டிருக்கிங்க.....எனிவே...தாங்க்ஸ்
It totally disagree with you..
All the costliest food items are not good for health and not hygienic. Most of the road side hotels serve even better quality and hygienic food than big/medium size hotels.
இனி வடை சாப்பிடுறதை குறச்சிக்காங்க...........