நாளை பிறந்தநாள் கொண்டாடும் நம்ம தல அஜித் அவருக்கு வாழ்த்துக்கள்.
அவரைப் பற்றி தெரிந்துக்கொள்வோம்.
அஜித் குமார், (பி. மே 1, 1971) தென்னிந்திய தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். அமர்களம் திரைப்படத்தில் நடிக்கும் போது நடிகை ஷாலினியை காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அனோஸ்கா என்ற பெண் குழந்தை உள்ளது.
காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல் போன்ற பல வெற்றிப் படங்களில் அஜித்குமார் நடித்துள்ளார். அஜித் குமாரின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட் ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள். அஜித் குமார், கார் பந்தய வீரராகவும் அறியப்படுகிறார்.
அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகும் முன்னரே, 1992 இல் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அறிமுகமானார். இந்தப் படத்தில் இவருக்கு சிறந்த புதுமுகத்திற்கான விருது கிடைத்தது.
இதன் பின்னர் தான் அமராவதி என்ற தமிழ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. முதல் படம் வெற்றி இல்லை இருப்பினும் அவர் மனம் தளரவில்லை. அடுத்த ஆண்டில் பாசமலர்கள், பவித்ரா, ராஜவின் பார்வையிலே படங்களில் நடித்தார். இதில் பவித்ரா படம் அஜித்க்கு பெயர் சொல்லும் படம் போல அமைந்தது.
அஜித் குமாரின் முதல் வெற்றிப் படம் ஆசை. இடையில் மோட்டார் பந்தயம் ஒன்றில் போட்டியிட்டு படுகாயமடைந்தார். இதனால் நடிப்பில் தடை ஏற்பட்டது. அதன் பின்னர் சரணின் காதல் மன்னன் வெற்றிப்படத்தில் நடித்தார்.
பிப்ரவரி 06 2010 அன்று நிகழ்ந்த கலைஞர் கருணாநிதி பாராட்டுவிழாவில் நடிகர் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறு சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாக புகார் கூறினார். இதனால் அஜித்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியது. இந்த நிகழ்ச்சிகளால் மன வருத்தம் அடைந்த அஜித் மீண்டும் கார்பந்தயத்தில் கலந்து கொள்ள ஆர்வம் காட்டியுள்ளார்.
அஜித் குமார் தாம் நடித்த முதல் தெலுங்கு படத்திற்காக (பிரேம புஸ்தகம்) பரத்முனி ஆர்ட் அகாடமியின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதைப் பெற்றுள்ளார்.
1999 ஆம் ஆண்டு அஜித் குமார் வாலி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது, சினிமா எக்ஸ்பிரஸ் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
2000ஆம் ஆண்டு முகவரி படத்தில் நடித்ததற்காக சிறந்த நடிகருக்கான சினிமா எக்ஸ்பிரஸ் விருதைப் பெற்றுள்ளார்.
2001 ஆம் ஆண்டு சிறப்பு நடிகருக்கான மாநில விருதை பூவெல்லாம் உன் வாசம் படத்திற்காக வென்றுள்ளார்.
2002ஆம் வருடம் வில்லன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருது மற்றும் தினகரன் சினிமா விருதைப் பெற்றுள்ளார்.
தென் இந்திய சிறந்த நடிகருக்கான பிலிம்பேர் விருதை இருமுறைப் பெற்றுள்ளார். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான பிலிம்பேர் விருதைப் பெற்றுள்ளார்.
12 கருத்துரைகள்:
தலயோட பதிவு போட்டு அசத்தியிருக்கிங்க... நன்று..
அஜித் அவர்களுக்கும் என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்...
மன்றத்தை கலைத்து விட்டு சாதனை செய்ய அஜித்திற்கு ஒரு சல்யூட்...
வடயா தவற விட்டுடேன்;
தலையோட பதிவு சுப்பர் தல
//அஜித் குமார், இந்தியாவின் ஹைதராபாத் நகரில் ஒரு தமிழ் தந்தைக்கும் ,ஒரு சிந்தி தாயிற்கும் இரண்டாவது மகனாகப் பிறந்தார். ///
மலையாளின்னு சொன்னாங்க பத்திரிக்கை'காரங்க.....!!!!????
எனது வாழ்த்துக்களையும் சொல்லிருங்க....
தலை சொல்லிட்டார் ரசிகர்கள் கேட்ப்பார்களா
தல அஜித்தா? அப்படின்னா யாரு?//
தலையங்கம்....ஏதோ உள் குத்து என்று சுண்டி இழுக்கிறது சகோ. ஆனாலும்
உள்ளே வந்தால், பதிவினுள் அஜித்தின் வரலாறோடு இணைந்த பிறந்த நாள் வாழ்த்து தகவல்!
நாங்களும் வாழ்த்துகிறோம்!
Thala always rocks . . He is a gentleman
தல-க்கு வாழ்த்துகள்!
அஜித்-க்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
அனைவருக்கும் இனிய ”மே”தின வாழ்த்துகள்
நம்ம தல அஜித் வாழ்க ...