3G என்பது 3 வது தலைமுறையினர் என்பதை குறிப்பதாகும். அதாவது 3 ம் தலைமுறையினருக்கான அதிநவீன வசதிகளை அளிக்கும் தொலை தொடர்பு சேவை என்பதாகும். இந்தியாவில் 3 G சேவை கடந்த ஆண்டு தொடங்கப்பட்டு பயனில் உள்ளது. ஆனால், உலகில் முதல் முறையாக கடந்த 2001 ம் ஆண்டே ஜப்பானில் 3G சேவை வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து 2002 ல் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் இந்த சேவை வழங்கப்பட்டது. தற்போது பழ நாடுகளில் 3G சேவை கடந்தாண்டு தான் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்தியாவில் 3 G சேவையை வழங்கும் உரிமம் முதலில் BSNL நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. மற்ற தனியார் தொலை தொடர்பு நிறுவனங்களும் ஏலம் மூலம் 3G அலைவரிசைக்கான ஒதுக்கீட்டை இந்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளன. ஏலம எடுத்த நிறுவனங்கள் கடந்த செப்டம்பர் மாதம் தான் 3G வசதியை வழங்கியுள்ளது. நாம் தற்போது 3G சேவையில் நுழைந்து இருக்கும் காலகட்டத்தில் அமேரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில் 4G சேவை வழங்கப்பட உள்ளது. 2013 ம் ஆண்டுக்குள் அந்த நாடுகளில் 5G சேவையும் வளம்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
5G சேவையில் INTERNET SPEED நொடிக்கு 5 ஜிகா பைட்ஸ் ஆகும். அதாவது 600 மெகா பைட்ஸ் (சுமார் ஒரு திரைப்படத்தின் முழு அளவு) கொண்ட ஒரு திரைப்படத்தை ஒரு நிமிடத்தில் செல்போனில் டவுன்லோட் செய்து விடலாம். இந்த 5G சேவை கிடைக்க நாம் இன்னும் எத்தனை ஆண்டுகள் காத்திருக்கக் போறோமோ? இப்பதானே 3G யில் காலடி வைத்துள்ளோம்.
ஹி....ஹி.... 3G லயே நாட்டுல இம்புட்டு பிரச்சனை நடக்குது... இன்னும் 5G வந்தா????
16 கருத்துரைகள்:
5க் சேவையில் இணைய வேகம் அதிகரிப்பதால் two way transmission வேகமாக நடைபெறும். இது CAD-CAM தொழில் நுட்பத்திற்கு மிகவும் பயன்படும் . தொலவிலிருந்தே இயந்திரத்தை ஆப்ரேட் செய்வது, சீர் செய்வது போன்றவையும் எளிதாகும். அப்புரம் வழக்கம்போல ADDED serviceகளும் உண்டு. செலவு?
முதல்ல 2G ஊழல் வழக்கு முடியட்டும்.
அருமையான தகவல்.. பகிர்வுக்கு நன்றி பாஸ்
5G எம்மை வந்துசேர எப்பிடியும் 20 வருடம் செல்லும்...
இன்னும் 3G யே முழுமையா வரல....? என்னதான் 3G-ன்னாலும், ப்ராக்டிகலா DSL ப்ராட்பேண்ட் ஸ்பீட் வர்ரதில்லை!
ஆமா 3G க்கப்புறம் 4G தானே வரனும், அதென்ன 5G ?
முதல்ல அவங்க 3ஜியை ஒழுங்க எல்லா இடத்துக்கும் கொடுக்கட்டும்..அப்புறம் 5ஜி பத்திக் கவலைப்படுவோம்..நல்ல தகவல் பகிர்வு பிரகாஷ்.
தகவல் பகிர்வினிற்கு நன்ற் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா
3G யே போதும் பாஸ் .. நாட்டில கொள்ளையடிக்க இனி என்ன தான் இருக்கு .....))
5g க்கு நம்மாளுங்க எத்தனை கோடிக்கு ஊழல் செய்ய காத்திருக்காங்களோ..
இன்னும் 2G பிரச்சனை முடியல்ல
ஓக்கே ஜி ஜி
ஜி ன்னா சோனியாஜி, ராகுல்ஜி ராசாஜி வச்சாங்க ஆப்புஜி!..இத சொல்றீங்களா மாப்ள!
5G சேவை எதிர்பார்ப்பினைக் கூட்டுகிறது வெகு விரைவில் இந்தச் சேவை கிடைத்தால் சந்தோசமாக இருக்கும்.
பொறுத்திருப்போம். எமது சந்ததியின் காலத்திலாவது இந்தச் சேவை கிடைத்தால் சந்தொசமே,
useful post..
ரொம்ப ஸ்பீடா போனால் ஆபத்து இதை கருத்தில் கொண்டு இந்தியா இன்னும் 5G சேவையை வழங்கவில்லை #இந்தியா (எப்படில்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு)