CNC PROGRAM BASIC TIPS FOR MECHANICAL, CAD-CAM STUDENTS

CNC PROGRAMMING & OPERATIONS Basic - புத்தகம் தமிழில் கிடைக்கும்!!



யார் இந்த பிரபலங்கள்? ஏமாற்றும் தமிழ் சேனல்! வீடியோ இணைப்பு.

part 1 photo PARTIMAGE.jpg part 2 photo PARTIMAGE2.jpg part 3 photo PARTIMAGE3.jpg part 4 photo PARTIMAGE4.jpg part 5 photo PARTIMAGE5.jpg part6 photo PARTIMAGE56.jpg part 7 photo PARTIMAGE7-1.jpg
part 8 photo PARTIMAGE8.jpg part 9 photo PARTIMAGE9.jpg part 10 photo PARTIMAGE10.jpg part 11 photo PARTIMAGE11.jpg part 12 photo PARTIMAGE12.jpg part 13 photo PARTIMAGE13.jpg part 14 photo PARTIMAGE14.jpg
part 15 photo PARTIMAGE15.jpg  photo PARTIMAGE16.jpg

    டி வி சேனல்களால் எப்படிஎல்லாம் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள். இன்று மாலை ராஜ் டி வி யில் யார் இந்த பிரபலங்கள் என்ற நிகழ்ச்சி நடந்தது. அதில் இரண்டு திரைப்பட நடிகர், நடிகைகளின் பாதி முகம் ஒரே படமாக இணைத்து ஒரு போட்டி நடத்தப்படுகிறது.  போட்டி என்னவோ ரொம்ப ஈசிதாங்க. அந்த [படத்தில் உள்ள நடிகர், நடிகைகள் யார என போன் செய்து சொல்ல வேண்டும். சரியான பதில் சொல்பவர்களுக்கு ருபாய் முப்பதாயிரம் பரிசாக தரப்படும் என அறிவிப்பு செய்கிறார்கள். மொபைல் போனிலிருந்து மட்டுமே கால் செய்ய வேண்டுமாம்.
      ஒருவர் போன் செய்து மீரா ஜாஸ்மின் மற்றும் ஸ்ரீகாந்த் என்று சொல்கிறார். இன்னொருவர் சினேகா மற்றும் லாரன்ஸ் என்கிறார். இப்படியே மாறி மாறி ஒவ்வொருவரும் ஒவ்வொரு பெயர்கள் சொல்கிறார்கள். போட்டியை நடத்துபவர் தவறான பதில் என்கிறார். நேயர்களை மீண்டும் மீண்டும் போன் செய்யுமாறு தூண்டுகிறார். ஆனால் போன் செய்பவர்கள் தவறான பெயர்களையே சொல்கிறார்கள். விக்ரம், விக்ராந்த், பரத், ஷ்ரேயா, என தவறாகவே சொல்கிறார்கள். நிகழ்ச்சி முடிய கொஞ்சம் நேரம் இருக்கையில் ஒருவர் ஜோதிகா என சொல்கிறார், நிகழ்ச்சியை நடத்துபவர் சரியான விடை என்கிறார். ஆனால் அவருக்கு நடிகர் யாரென்று தெரியவில்லை என்கிறார். இப்படியே ஒரு அரை மணிநேரம் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
       என்ன ஏமாற்றுகிறார்கள் என கேட்கிறீர்களா? நம் பணம் தான் அவர்களுக்கு தேவை. போன் கால் ஒரு நிமிடத்துக்கு ரூபாய் பத்துக்கும் குறையாமல் வசூல் செய்கிறார்கள். அதிலும் நாம் போன் செய்த உடனே லைன் கிடைக்காது. வெய்ட்டிங் இருங்கள் என சொல்வார்கள். அப்போதிருந்தே நம் பணம் அவர்களால் பிடுங்கப்பட ஆரம்பிக்கும். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம். நமக்கு லைன் கிடைக்கவே கிடைக்காது. ஆமாங்க, நிகழ்ச்சி தயாரிப்பவர்கள் அவர்களாகவே போன் செய்த மாதிரி தவறான விடையை சொல்வார்கள். இதனால் மக்கள் போன் செய்யும் போது வெய்ட்டிங் கால் ஆகும். ஆனால் நம்முடைய கால்கள் நிகழ்ச்சி முடியும் வரை வெய்ட்டிங்லேயே இருக்கும். அதற்குள் நாம் பல நூறுகளை இழந்திருப்போம். இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.
வீடியோ பாருங்கள் உங்களுக்கே புரியும்.
மேற்கண்ட பிரபலங்கள் யாரென்று நீங்களே சொல்லுங்கள்.


27 கருத்துரைகள்:

இராஜராஜேஸ்வரி said... Best Blogger Tips

இது போல ஏமாற்றுபவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள். நாம் கவனமாக இருக்க வேண்டும்.//

விழிப்புணர்வு தரும் பகிர்வுக்கு நன்றி.

Ram said... Best Blogger Tips

யாருக்கும் தெரியாது.. கண்டுபுடிச்சாட்டாரு விஞ்ஞானி..

பன்னிக்குட்டி ராம்சாமி said... Best Blogger Tips

இன்னுமா இத நம்புறாய்ங்க....?

ஆகுலன் said... Best Blogger Tips

இதைபற்றி கனக்க கேள்விப்பட்டேன்....

Unknown said... Best Blogger Tips

மாப்ள இப்போ தான் டிவி பாக்குற போல இது ரொம்ப நாளா நடக்குதுய்யா.......!

Ashwin-WIN said... Best Blogger Tips

ஏமாறுறவங்க இருக்கிறவரைக்கும் எமாத்துரவங்களும் இருக்கத்தான் செய்வாங்க. ஒண்ணுமே பன்னேலாதுயா..
மனம் போல் வாழ்க்கை. வீரியமா? விபரீதமா?

கவிதை வீதி... // சௌந்தர் // said... Best Blogger Tips

நான் ஒரு முறை போன் செய்து பேலன்ஸில் 20 ரூபாய் போனதுதான் மிச்சம்...

எல்லாம் ஏமாத்து வேலை..

குறையொன்றுமில்லை. said... Best Blogger Tips

அதாங்க, ஏமாறுகிரவர்கள் இருக்கும்வரை ஏமாற்றுகிறவர்களும்
இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.

தமிழ்வாசி பிரகாஷ் said... Best Blogger Tips

@இராஜராஜேஸ்வரி
கருத்துக்கு நன்றி

NKS.ஹாஜா மைதீன் said... Best Blogger Tips

நானும் பலமுறை சேனல் மாற்றும்போது அந்த நிகழ்ச்சியை பார்த்து இருக்கிறேன்....இதுதான் விசயமா?

Unknown said... Best Blogger Tips

ஹிஹி பாயின்ட்ட பிடிச்சிட்டீங்க பாஸ்

Anonymous said... Best Blogger Tips

இப்படி எல்லாம் கொடுமை நடக்குதா ...

MANO நாஞ்சில் மனோ said... Best Blogger Tips

மக்களை சூப்பரா தெளிய வச்சிட்டீங்க...!!!

Prabashkaran Welcomes said... Best Blogger Tips

இது ராஜ் டிவி யில் மட்டும் அல்ல பல சேனல்களில் நடக்கிறது கிரிக்கெட் வீரர்கள் பற்றியும் படம் போட்டு ஏமாற்றுகிறார்கள் .இவ்வளவு எளிதாக கேள்வி கேட்டு யார் பரிசு கொடுப்பார்கள் நாம் தான் சுதாரித்து
கொள்ள வேண்டும் ஏன் எல்லோரும் ராஜ் டிவி யை மட்டும் திட்டுகிறீர்கள்

கடம்பவன குயில் said... Best Blogger Tips

இது ரொம்பநாளா நடக்குதுங்க. இது மட்டுமா? போட்டி நடத்தி ஜெயிச்சவங்களுக்கு பரிசும் அறிவிப்பார்கள் பாருங்க..... வீடு தேடி பரிசு 1 மாதத்தில் வந்துடும்பாங்க.. அதுபாட்டுக்கு வரும் வரும் வரும்.....வரும்....வந்துட்டே இருக்குங்க 1 வருடமாக.. பாவம் அந்த பரிச அவங்க ஆமை முலமாக அனுப்புவாங்க போல. இதில் பொதிகையில் ஸ்போர்ட்ஸ் குவிஸ்ஸில் ”சார் நான் 4 மாதம் முன் சரியான விடைசொன்னேன் பரிசு இன்னும் வந்து சேரலயேனு வேற லைன் கிடைச்சவங்க கேட்பாங்க. வந்துடும் சார் வந்துடும்சார்”னுட்டு அடுத்த காலரை பார்க்க ஓடுவார்பாருங்க ..... ஒரே காமெடியா இருக்கும்

SUPRAJA KALYANARAMAN said... Best Blogger Tips

இது ராஜ் டிவியில் மட்டுமின்றி ss மியூசிக்கிலும் வருவதை அவ்வப்பொழுது கவனித்து வருகிறேன் :) யாரையும் மாத்த முடியாது! நாமே உனர்ந்து செயல்பட்டால் தான் உருப்பட முடியும் :) நல்லதொரு பகிர்வு! வாழ்த்துக்கள்!

Anonymous said... Best Blogger Tips

இந்த மாதிரி நிறைய நடக்குது. சரியான பதில் சொன்னாலும் உடனேயே கட் பண்ணிவிட்டு, சரியாக் கேட்கல, லைன் போச்சுனு பொய் சொல்லுவானுங்க..

இந்த ராஜ் டிவி 30,000 ரூபாய் பரிசுக் கொடுக்கிறது இருக்கட்டும், முதலில் அங்கே வேலை செய்யிறவங்களுக்கு ஒழுங்கா மாத மாத சம்பளம் கொடுக்க சொல்லுங்க.. பலருக்கு சம்பளம் கொடுக்காமல் கலட்டி விட்ட கம்னாட்டிப் பசங்க இந்த ராஜ் டிவி ...

ஷர்புதீன் said... Best Blogger Tips

ச்சே, அப்ப எனக்குதான் பல்பா., இது குறித்து அரைமணி நேரமா நோங்கோ நொங்கு என்று டைப் அடித்து வைத்திருக்கிறேனே , என்ன செய்ய?
( தலைப்பை மாத்தி வச்சிரவேண்டியதுதான் )

நிரூபன் said... Best Blogger Tips

பாஸ், விஜய், ஜோதிகா என்று தான் நான் நினைக்கிறேன். சரியோ தவறோ தெரியாது. ஆனால் ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் இருப்பார்கள் என்பதற்கமைவாக இத்தகைய மக்களை ஏமாற்றிப் பிழைப்போரும் வரத் தான் செய்வார்கள். ஆகவே மக்களாகிய நாம் தான் இந்த நிலையினை உணர்ந்து இவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

cheena (சீனா) said... Best Blogger Tips

இது மாதிரி எத்தனை எத்தனை - நாம் எல்லாவ்ற்றிலும் ஏமாறுகிறோம் - காரணம் ஆசை மட்டுமல்ல - ஒரு திரில்லும் கூட. நட்புடன் சீனா

Speed Master said... Best Blogger Tips

இப்ப கலைஞர் டீவியும் ஆராம்பிச்சுட்டாங்க

=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
Charlie Chaplin “City Lights” சாப்ளின் காதல்
http://speedsays.blogspot.com/2011/06/charlie-chaplin-city-lights.html

சக்தி கல்வி மையம் said... Best Blogger Tips

லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்டுட்டோமில்ல..

Erode senthil said... Best Blogger Tips

உங்க சொந்த அனுபவமா ? உங்க balance எவ்ள காலி ?

sathish said... Best Blogger Tips

யாருக்கும் தெரியாது.. கண்டுபுடிச்சாட்டாரு விஞ்ஞானி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said... Best Blogger Tips

இங்கேயும் இப்படி நிகழ்ச்சிகள் பல உண்டு. ஒன்றும் ஒன்றும் எவ்வளவு என்ற அளவில் தான் அவர்கள்
கேள்வி இருக்கும். அத்துடன் ஒரு அழைப்புக்கு இவ்வளவு பணம் அறவிடப்படும் எனும் தகவலும் காட்டுவார்கள். இப்போது .56 யூரோ, அறவிடுகிறார்கள். பரிசு கிடைத்ததென ஒரு பெயரும் இறுதியில்
போடுவார்கள். எனக்குத் தெரிந்தவர்கள் இதுவரை பெறாததால் இதன் உண்மை பொய் தெரியாது.
ஆனால் பலர் வெறும் .56யூரோ தானே என அழைக்கிறார்கள். காக்கவைத்துப் பணம் கறப்பதும் உண்டு.
அப்போட்டியில் கொடுக்கப்படும்;பரிசு, அந்நிகழ்ச்சிச் செலவு யாவும் கறந்துவிடுவார்கள் போல் தான் உள்ளது.
குறிப்பாக மிஸ் பிரான்சு; சிறந்த பாடகர் தெரிவு போன்ற நிகழ்ச்சிகளில்; அதை நடத்தத் தேவையான பணத்துக்கு மேல் இந்த தொலைபேசி வாக்கால் கறந்து விடுவார்கள். அதிலும் இந் நாட்டு வந்தேறு குடிகளின் வாரிசில் ஒன்றைக் கடைசிவரையும் கூட்டி வந்து வந்தேறிகளை உசுப்பேத்திக் கறப்பது பெருங் கொடுமை.(ஒரு நாளும் தேர்வாகார்கள்)
ஏமாளிகள் இருக்கும் வரை உலகம் பூராகவும்; ஏமாற்று வோர் இருக்கத்தான் செய்வர்.

பாண்டியன் said... Best Blogger Tips

இதையும் பாருங்கள் நண்பரே...! http://tamizyan.blogspot.com/2011/04/blog-post_26.html

Naseem said... Best Blogger Tips

இது போன்ற பல நிகழ்ச்சிகள் மக்களை ஏமாற்றி அவர்கள் மத்தியில் வரவேற்பபையையும் அடைகின்றன. எத்தனையோ சாதனைகள் படைக்கும் நம் மக்களுக்கு இடையில் இது போன்று போலிகளைக் கண்டு ஏமாறும் மக்களும் இருக்கிறார்கள் என்பது வேதனைக்குரிய செய்தி...

தொலைக்காட்சிகளைப் பார்த்து ஏமாறுபவர்கள் என்று திருந்துவார்கள் என்று தெரியவில்லை !!!

தொடர்புக்கு: admin@tamilvaasi.com
TAMILVAASI PAGE RANK Check Google Page Rank
Best Blogger TipsBest Blogger Tips UA-18786430-1