நான் டீக்கடை வைக்கலாம்னு இருக்கேனுங்க. டீக்கடையோடு குட்டியா ஒரு பங்க் கடையும் சின்னதா ஒரு பேக்கரி சேர்த்து வைக்கலாம்னு இருக்கேன். நமக்கு விதவிதமான டீ போட தெரிஞ்சா தானே நம்ம கடை பக்கம் கூட்டம் வரும். கிழே தரப்பட்டுள்ள டீ வகைகள் நம்ம கடையில் கிடைக்கும். டீ தயாரிக்க கூடிய முறைகளையும் உங்களுக்கு சொல்லியிருக்கேன். டீ தயாரிக்க தெரிஞ்சுக்கிட்டிங்க, அதனால நம்ம கடை பக்கம் வராம இருந்தராதிங்க. கண்டிப்பா வந்து டீயை ருசிங்க.
சூடான கொதிக்க வைத்த டீயில் பாலுக்கு பதிலாக சிறு துளி எலுமிச்சை சாற்றை பிழிந்து அதில் சர்க்கரை போட்டு நன்றாக கலந்து குடிக்கவும்.
சூடான கார டீ
தேவையான பொருட்கள்:தண்ணீர்: 2 லிட்டர்
சர்க்கரை: 30 ml
கிராம்பு: 1/2 டீ ஸ்பூன்
ஆரஞ்ச் ஜூஸ்: 1/4 pint (1 pint - 500 ml)
2 எலுமிச்சைபழம் சாறு.
பட்டை
செய்முறை:
பட்டை, கிராம்பு இவற்றை தண்ணீரில் கலந்து கொதிக்க விடவும். டீ தூளை போட்டு 5 நிமிடம் கொதிக்க விடவும். சர்க்கரை போடவும், பழச்சாறுகளை போடவும், தேவையான சூடுக்கு ஆற்றிக் கொள்ளவும். சுமார் 12 பேருக்கு கார டீ பரிமாறலாம்.
மசாலா டீ
கிராம்பு, பட்டை, நட்மெக், இஞ்சி, ஏலக்காய் மற்றும் மிளகு ஆகியவற்றை கொதிக்கின்ற தண்ணீரில் போட்டு கொதித்தவுடன் டீ தூள் ஒரு டீஸ்பூன் போட்டு சிறிது நேரம் கொதித்தவுடன் வாடி கட்டவும்.ஐஸ் மின்ட் டீ
ஒரு தம்ளரில் உடைத்து வைத்துள்ள ஐஸ் கட்டியில் டீ டிக்காசனை ஊற்றவும். அதில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்ச் துண்டுகளை போடவும். சிறிது புதினா இலைகளை தண்ணீர் கலந்து மிக்ஸ்யில் அடித்து அதில் போடவும், பின்னர் பரிமாறினால் சுவையாக அருந்தலாம்.ஆப்பிள் அபரிடிஃப்
ஒரு தம்ளரில் டீ டிகாஷன் மற்றும் ஆப்பிள் ஜூஸ் இரண்டும் சம அளவில் ஊற்றவும். அதில் சிறிது ஐஸ் கட்டிகளை உடைத்து போடவும். அதில் ஒரு டீஸ்பூன் சீனி மாற்று மேலுமிச்சை பழ சாறுகளை ஊற்றவும். நன்றாக கலந்த பின் பரிமாறினால் நன்றாக இருக்கும்.டீ டிக்காஷன் செய்முறை
1/2 லிட்டர் பச்சை தண்ணீரில் 2 டேபிள்ஸ்பூன் டீ தூளை கலந்து 12 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பின்பு வடிகட்டினால் டீ டிக்காஷன் ரெடி.
23 கருத்துரைகள்:
கடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா?
டீ கடை வைக்க ஆலோசனை தரப்படும் ன்னு தலைப்பு வெச்சிருக்கலாம்.
இப்பத்தான் உருப்படியான ஒரு முடிவெடுத்திருக்கேன்னு நினைக்கிறேன்...
சூப்பர்..
கப் டீ பார்சல்....
hehe!
டீ குடிச்சு இரண்டு வருசமாயிடிச்சு பாஸ் ... அந்த டீயில ஒன்ன எடுத்துக்கிறன் ...
ஐயோ ....எனக்கு டீன்னாலே அலர்ஜி ...கொஞ்ச முன்னாடி இருந்துதான் .
டீ பார்க்க ரொம்ப அழகாக நாக்கில் நீர் வரவழைப்பதாக இருந்தது. ஆனால் எடுத்துக்குடிக்க முடியவில்லை. இப்போ டீ சாப்பிடக்கிளம்பிட்டேன். வரட்டுங்களா...
ஹேய் பிரகாஷ் - எங்கேய்யா பிடிக்கற - படங்களோடு கூடிய தகவல்கள ? எல்லா வகை டீயும் போட்டுக் கொண்டு வா - நாளை மாலை ( 15 ஜூன் 2011 ) ஆறு மணிக்கு வரலாறு காணாத மதுரைப் பதிவர் சந்திப்பு வழக்கம் போல் எங்க வூட்ல நடக்குது - எல்லோருக்கும் கொடுக்கலாம் - சிறப்பு விருந்தினரா மூணு பிரபல பதிவர்கள் வருகின்றனர். நட்புடன் சீனா
வணக்கம் பிரகாஷ்! விதம் விதமான டி வகைகள் சொல்லி இருக்கீங்க! எல்லாமே சூப்பர்/
நான் மசால டி குடிச்சிருக்கேன்!
நீங்கள் டி கடை போட பொருத்தமான ஆள்தான்!
எலுமிச்சை டீ - பெல் ஹோட்டல் போட்டியா? மசாலா டீ கொடைக்கானல் அல்லது மூனார். இஞ்சி டீயை விட்டாச்சு? 1/2 லிட்டர் தண்ணிய 12 மணி நேரம் கொதிக்க விட்டால் என்ன ஆகும்? அப்புறம் டீக்கடை வாசலில் புரொஃபைல் போட்டொவை வைக்கவும் . தப்பித்து ஓட வசதியாக இருக்கும். நன்றி பிரகாஷ்.
அப்பிடியே ரெண்டு வடை பார்சல் ஹிஹி
//* வேடந்தாங்கல் - கருன் *!said...
கடைசியில இந்த லெவலுக்கு வந்தாச்சா//
ஹிஹி ப்ளாக் வைச்சிருந்தா பின்னே!!
காபி கிடைக்காதா
@Softy
மனசு ரெண்டும் புதுசு ஜில் ஜில் ஜிலேபி மாங்கனி நாட்டு சரக்கு >>>>
இந்த மாதிரியான கீழ்த்தரமான பதிவுகளின் விளம்பரங்களுக்கு என் தளத்தில் இடம் இல்லை. இந்த எச்சரிக்கை முதலும் கடைசியுமாக சொல்கிறேன். இனியும் இது மாதிரியான விளம்பரங்கள் என் தளத்தில் தொடர்ந்தால் உனக்கு நல்லதல்ல.
மாஸ்டர் ...எனக்கு ஒரு சாயா....ஹி ஹி...
டீ வகைகளைப் பற்றி டீப்பான பதிவு... கட எப்போ ஓப்பனிங்?? :))
இன்றைய வலைச்சரத்தில் தங்களுடைய இந்தப் பதிவினைப் பகிர்ந்துள்ளேன்..
நேரமிருந்தால் வருகை தாருங்களேன்..
http://blogintamil.blogspot.com/2011/08/4.html
அன்புள்ள நண்பருக்கு,என் வணக்கத்துக்குரிய வேண்டுகோள் யாதெனில் எனக்கு டீக்கடைக்கான பயிற்சி அளிக்க முடியுமா? சிவகுமார் க.மதுரை - ௯9360144199
12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க
12 மணிநேரம் ஊரவைக்கனும் நல்லா பாருங்க
சூப்பர் டீ சார்
சூப்பர் டீ சார்