ஆமையும் , முயலும்
முயல் தனது வேகத்தில் பெருமை கொண்டு, ஆமையை போட்டிக்கு அழைத்தது. போட்டி ஆரம்பித்தது. முயல் வேகமாக முன்னேறியது. ஆமையோ மேதுவாக ஊர்ந்தது. எனவே முயல் சிறிது ஓய்வு எடுத்து கொண்டு ஆமை இந்த இடத்துக்கு வருவதற்குள், கிளம்பி விடலாம் என எண்ணி கண் அயர்ந்து விட்டது. விழித்து பார்க்கும் போது ஆமை வெற்றி கோட்டை அடைந்து போட்டியை வென்று விட்டது.
இதனால் கிடைக்கும் நீதி:
நிதானமாக தொடர்ந்து செயல்படுதல் வெற்றியை கொடுக்கும்.
இந்தக் கதையை இன்னும் வேறு சில கோணங்களில் மாற்றி அமைத்து பார்ப்போமா?
முயல் தோற்று போனதை நினைத்து வெட்கம் அடைந்தது. சுய ஆராய்ச்சி செய்து கொண்டது. அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும், அதனால் காரியம் ஆற்றுவதில் ஏற்ப்பட்ட தொய்வும் தான், தன் தோல்விக்கு காரணம் என்பதை உணர்ந்தது. அதனால் ஆமையை மீண்டும் போட்டிக்கு கூப்பிட்டது. ஆமையும் ஒப்புக் கொண்டது. இம்முறை முயல், முழு தூரத்தையும் ஒரே சமயத்தில் ஓடி, ஆமையை வென்றது.
இதனால் கிடைக்கும் நீதி:
இடைவிடா முயற்சியும், வேகமான செயல் திறனும், நிச்சயம் நிலையான, மெதுவான செயல்பாட்டை வெல்லும்.
அடுத்து முயலைப் போலவே, ஆமையும் வேறு வழிகளை யோசனை செய்தது. இந்த மாதிரி போட்டியில் தன்னால் முயலை கண்டிப்பாக வெல்ல முடியாது என்பதை உணர்ந்தது. எனவே நன்கு ஆராய்ந்து, வேறொரு பாதையில் போட்டியை வைத்துக் கொள்ளலாம் என முயலை கூப்பிட்டது. முயலும் ஒப்புக் கொண்டது. வழக்கம் போல முயல் வேகமாக ஓடியது. ஆனால் இடையே அகன்ற ஆறு ஒன்று குறுக்கிட்டது. அதை தாண்டி சில மைல் தூரம் ஓடினால் தான் போட்டியை வெல்ல முடியும். ஆற்றை கடக்கும் வழியறியாது, கரையில் முயல் உட்கார்ந்து விட்டது. ஆமை மெதுவாக வந்தது. ஆற்றை நீந்தி கடந்தது, வெற்றி பெற்றது.
இதனால் கிடைக்கும் நீதி:
நம்முடைய தனித் திறமையை உணர்ந்து, அறிந்து அதற்கேற்ற முறையில் விளையாடும் களத்தை மாற்றியமைத்தால், வெற்றி நிச்சயம்.
முயலும் ஆமையும் எதிரிகளா? முயல் என்றாலே வேகமான ஓட்டமும், ஆமை என்றாலே நிதானமான ஊர்ந்து செல்லுதல் தானே இயல்பு? எனவே இவர்களிடையே வேகத்தில் போட்டி என்பது ஒரு மல்யுத்த வீரனுக்கும் ஒரு பலமில்லாத ஆளுக்கும் நடக்கும் போட்டி போல தானே? எனவே, முயலும்,ஆமையும் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக எண்ணாமல், வெற்றி இலக்கை சீக்கிரம் அடைவது என்பது இருவரது குறிக்கோளாக இருந்தால், இந்த கதை எப்படி இருக்கும்? முயலும், ஆமையும் இப்போது நண்பர்களாகி விட்டன.
இருவரும் சேர்ந்து யோசிக்க ஆரம்பித்தனர், இருவருக்கும் சேர்ந்து ஒரு குழுவாக செயல்பட்டால், வெற்றி இலக்கை விரைவில் வெற்றிக்கரமாக அடைய முடியும் என்று புது வழியை கண்டனர். அது எப்படி? நிலப்பகுதியில் முயல், ஆமையை சுமந்து கொண்டு வேகமாக ஓடியது. ஆற்றை அடைந்ததும், ஆமையின் முதுகில் முயல் அமர்ந்து கொள்ள, ஆமை ஆற்றை நீந்தி கடந்தது. மீன்டும் கரையில் முயல், ஆமையை சுமந்து சென்று, வெற்றி இலக்கை தொட்டனர். இருவரும் சேர்ந்து செயல்பட்டதால் இருவருக்கும் மிக்க மனத் திருப்தியும், மகிழ்ச்சியும் கிடைத்தது.
இதனால் கிடைக்கும் நீதி:
தனித் திறமைகள் இருந்தாலும் ஒரு குழுவாக இணைந்து, வேலைகள் செய்தால், பலன் பன்மடங்கு அதிகமாகும்.
இப்போது நமக்கு, சிந்திக்க பல விஷயங்கள் கிடைக்கின்றன.
- தோல்வியை கண்டு இருவரும் மனம் தளரவில்லை.
- தாங்கள் உத்திகளை மாற்றி முயற்சி செய்தனர்.
- ஒருவருடைய திறமை மற்றவர்க்கும் பயன்படும் படி இணைந்து செயல்பட முனைந்தார்கள்.
இந்தக் கதைகளினால் கிடைக்கும் நீதியை புரிந்து கொண்டால், தொழில் துறையானாலும், குடும்ப சிக்கல்கள் ஆனாலும் திறம்பட செயல்பட்டு, வெற்றி கொள்ள முடியும் என்ற நம்பிக்கை நமக்குள் ஏற்படுகிறது தானே!
34 கருத்துரைகள்:
சூடான வடை எனக்கே.
மனசுக்குள்ள குழந்தைன்னு நினப்பு ராஸ்கல்ஸ் ஹா ஹா
மாப்பு, என்னமா யோசிச்சு கதையை பல கோணங்கள்ல, பல கருத்துக்களோட சொல்லி இருக்கீங்க..சூப்பர்!
@செங்கோவி
ஹே...ஹே... செங்கோவி வடை வாங்கியிருக்காரு... உங்க மகனுக்கு கொடுதிங்களா....?
@சி.பி.செந்தில்குமார்
எனக்கு குழந்தை மனசு சி.பி.
வர வர காமிக் கதையெல்லாம் வச்சு கருத்து சொல்லுவதால் பிரகாஷ் சகோக்கு கருத்து கந்தசாமி னு பேரு வச்சுறலாம் ( சகோ கமெண்ட் ஓகே வா )
@கல்பனா
எத்தனை காமிக் கதை சொன்னேன்?... நீங்களும் படிச்சிங்க...
Voted 3 to 4 in Indli
ஏற்கனவே தெரிந்த கதையே என்றாலும், அதை நீங்கள் அழகாகச் சொல்லியுள்ள விதம் வெகு அருமை.
ஆமையைப்போன்று பொறுமையாகவும் இருக்கலாம்.
முயலைப்போன்று சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்.
ஆனால் இரண்டும் சேர்ந்த வார்த்தையான
“முயாலாமை” யைத்
தவிர்த்து எப்போதும் வெற்றியை நோக்கி நாம் முயன்றுகொண்டே இருக்க வேண்டும்.
அன்பின் பிரகாஷ் - நீதிக் கதை அருமை - உண்மையில் இறுதியில் சொல்லப்பட்ட அனைத்துமே நாம் சிந்திக்க வேண்டியவை தான். நல்வாழ்த்துகள் - நட்புடன்சீனா
முடியல.....!
ஒரு பழைய கதையை பல
விதங்களில் யோசிச்சு இருக்கீங்க
அதுகூட நல்லாதான் இருக்கு.
ஆனா இப்போ நம்ம நாட்டுல இருக்கிற ஆமை முயலெல்லாம் Match fixing பண்ணுது .....பட் அருமையான கற்பனை ..
சிந்தித்துப் பார்த்து
சிறப்பாய் இருக்க கற்கலாம்.பாராட்டுக்கள்.
பாஸ் அருமையா சிந்திச்சு எழுதியிருக்கீங்க .
சின்னபிள்ளையில கேட்ட கதைய
கதைக்குள்ளே கதை...
கதைக்குள்ளே கதை...
கதைக்குள்ளே கதை...
கதைக்குள்ளே கதை...
கதைக்குள்ளே கதை...
கதைக்குள்ளே கதை...
ஆமையும் முயலும் நல்லாத்தான் மாத்தியோசிக்குது...
சபாஷ்...
அப்புறம் நரி காக்கா கதை..
சிங்கம் எருமை கதை...
இதெர்ல்லாம் மாத்தியோசிச்சா எப்படியிருக்கும்ன்னு விரைவில் எதிர்ப்பார்க்கிறோம்..
ரைட்டு...
அடேங்கப்பா கருத்துகள் பலமாஇருக்கே ம்ம்ம்ம் சரிதான்
@வை.கோபாலகிருஷ்ணன்
உங்கள் கருத்துக்கு நன்றி
@cheena (சீனா)
தாங்க்ஸ் ஐயா
@விக்கியுலகம்
முடியல.....!>>>>
முடிச்சிட்டேன், கதை அவ்வளவு தான்
@Lakshmi
கருத்துக்கு நன்றி அம்மா
@koodal bala
இது பிக்சிங் பண்ணாத முயல், ஆமை கேம்
@இராஜராஜேஸ்வரி
வருகைக்கு நன்றி...
ஏற்கனவே தெரிந்த கதையே என்றாலும், அதை நீங்கள் அழகாகச் சொல்லியுள்ள விதம் வெகு அருமை.
நல்ல கற்பனை பிரகாஷ்! முயல் முதுகில் ஆமை ஏறினால் ரொம்ப கஷ்டம். நட்சத்திர ஆமையாக இருந்தால் பிரச்னை இல்லை!
பாரம்பரியக் கதையையே மாத்திபுட்டானே... கதையின் உள் கருத்துக்கள் அருமை பிரகாஷ் வித்தியாசமான சிந்தனை.
என்னாச்சு வாத்யாரே. இனி உங்களை அப்படித்தான் கூப்பிடவேண்டும் என்று நினைக்கிறேன். பின்ன கதையெல்லாம் சொல்லி லைப்ஸ்கில் கிளாஸ் எடுக்கிறீங்க. ஆனாலும் உங்க கிளாஸ் ஃபர்ஸ்ட் கிளாஸ். ரியலி சூப்பர்ப்.
நல்ல தான் மாத்தி ஜோசிக்கிறீங்க ...
முயலுக்கு நீந்த தெரியாதா ??
எனினும் சொல்ல வந்த கருத்துக்கள் சூப்பர் பாஸ்
ஹிஹி நல்ல நீதி பாஸ்
என் பதிவில் கூறியதை திருத்தி விட்டேன் பாஸ்
ஒரு கதையினை அடிப்படையாக வைத்துப் பல்வேறு கோணங்களில் சிறிய சிறிய தத்துவக் கதைகளைத் தந்திருக்கிறீங்க.
அருமை சகோ.
தேவையான கருத்துக்கள். உன்னையறிந்தால்.... என்பதன் சிறப்பும் இதுதான்.
முயல் போல திறமை இருந்தும், ஊதாரித் தனமாக இருந்தால் நீ அவுட்டு, ஆமை போல குறைந்த திறமை இருந்தாலும் அயராது பாடுபடுபவனாக இரு, வெற்றி பெறுவாய் என்ற தத்துவத்தை நமக்குச் சொல்லி ஆமையும், முயலும் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டன.